Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

ஒரு வேலை, ஒரு பதவி, ஒரு நிறுவனம், ஒரு பாத்திரம், ஒரு சம்பளம் ஆகியவைத் தேடிக் கல்லூரிக்குப் போகாதீர்கள்.

Do Epic Shit Tamil flashbooks.lk

உங்களைத் தேடிக் கல்லூரிக்குச் செல்லுங்கள். “நான் எதில் சிறந்தவன்?” “எது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது?’

கல்லூரியின் நோக்கம் வெறும் கல்வி அல்ல. கல்வி இன்று சுலபமாகவும் ஏராளமாகவும் இணையத்தளத்தில் மலிந்து கிடைக்கிறது. நீங்கள் எதை இரசித்துச் செய்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிப்பதுதான் கல்லூரியின் நோக்கம்.

ஏதோ ஒரு வேலையைப் பெற்று அதிலேயே வாழ்நாள் முழுவதும் சிக்கிக் கிடப்பதற்குப் பதிலாக, பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்வதுதான் கல்லூரியின் நோக்கம். உங்களை நீங்கள் கண்டறிவதுதான் கல்லூரியின் நோக்கம்!

ஆன்லைன் வகுப்புகளில் சேர்ந்து கொள்ளுங்கள். ஏதோ ஒரு நிறுவனத்தில் வேலைப் பயிற்சியில் சேருங்கள். தொடர்புகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொள்ளுங்கள். ஆன்லைன் சமூகங்களுடன் சேருங்கள். ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்குங்கள். தனியாக உலகப் பயணம் மேற்கொள்ளுங்கள்.

எந்த நாற்காலி உங்களுக்குரியது என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறதோ, அதுவரை உங்களால் முடிந்த அளவு அதிக எண்ணிக்கையிலான நாற்காலிகளில் அமர்ந்து பாருங்கள்.

புத்தகம்: பெருங்கனவு காணத் துணியுங்கள்! (Tamil Translation of Do Epic Shit by Ankur Warikoo )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *