Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: மன ஆரோக்கியம்

Showing all 14 results

 • Life is what you make it Tamil flashbooks.lk

  ஆக்கப்படுவதே வாழ்க்கை

  Rs. 1,790.00
  or 3 X Rs.596.67 with

  பிரீத்தி ஷெனாய்

   

  நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் பாதையை விதி வளைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வது? நீங்கள் போராடுவீர்களா, ஓடுவீர்களா அல்லது ஏற்றுக் கொள்வீர்களா?

   

  எண்பதுகளின் முற்பகுதியில் இந்தியாவின் இரண்டு நகரங்களில் அமைக்கப்பட்ட வாழ்க்கை என்பது அங்கிதாவின் சில குறிப்பிடத்தக்க வருட வாழ்க்கையின் ஒரு பிடிப்புக் கணக்கு. அங்கிதா ஷர்மா உலகத்தை தன் காலடியில் வைத்திருக்கிறாள். அவள் இளமையாக இருக்கிறாள், அழகாக இருக்கிறாள், புத்திசாலியாக இருக்கிறாள், மேலும் பல நண்பர்கள் மற்றும் பையன்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் எம்பிஏவுக்கான முதன்மையான மேலாண்மைப் பள்ளியில் சேரவும் முடிகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவள் மனநல மருத்துவமனையில் நோயாளியாக இருக்கிறாள். வாழ்க்கை கொடூரமாகவும் குளிராகவும் அவளுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்ததை பறித்துக்கொண்டது, அதையெல்லாம் திரும்பப் பெற அவள் இப்போது போராட வேண்டும்.

   

  இது வளர்ந்து வரும், நம்பிக்கையின் சக்தி மற்றும் உறுதியும், அடக்க முடியாத ஆவியும் எப்படி விதி உங்கள் மீது வீசினாலும் அதை எப்படி வெல்ல முடியும் என்பது பற்றிய ஆழமான நகரும் மற்றும் ஊக்கமளிக்கும் பதிவு. ஒரு கதை, அதன் மையத்தில் ஒரு காதல் கதை, இது நம்மைப் பற்றிய நமது நம்பிக்கைகளையும், நமது நல்லறிவுக் கருத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது, மேலும் ஒருவர் அதை உருவாக்குவதுதான் வாழ்க்கை என்று நம்பும்படி நம்மைத் தூண்டுகிறது.

  or 3 X Rs. 596.67 with Koko Koko
  Add to cart
 • Out of Stock

  மனதோடு ஒரு சிட்டிங் ( Manathodu Oru Sitting )

  Rs. 1,150.00
  or 3 X Rs.383.33 with

  சோம. வள்ளியப்பன்

   

   

  மனம் பற்றிய ‘இன்னொரு புத்தகம்’ அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி, என்ன செய்யவேண்டும் என்று புட்டுப் புட்டு வைக்கிற புத்தகம். நுட்பமான பார்வை, எவரும் சுலபமாக நடைமுறைப்படுத்தக்கூடிய யதார்த்தமான அணுகுமுறைகள் கொட்டிக்கிடக்கிற பொக்கிஷம். வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ள, நிம்மதியாக வாழ, அற்புதமான விளக்கங்கள். முழுக்க முழுக்க மனது பற்றிய புத்தகம். மனதை புரிந்துகொள்ள, கைகொள்ள, சொல் பேச்சு கேட்க வைக்க. மொத்தத்தில் மனதை ஆள… மனதோடு ஒரு சிட்டிங். மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளரான சோம. வள்ளியப்பன் எழுதிய மனம் பற்றிய ‘உஷார் உள்ளே பார்’ ஒரு தளம் என்றால், மனதோடு ஒரு சிட்டிங், அடுத்தத் தளம், அடுத்த நிலை, அடுத்தக் கட்டம். ‘இட்லியாக இருங்கள்’, ‘ஆளப்பிறந்தவர் நீங்கள்’ போன்ற வெற்றிப் புத்தகங்கள் எழுதிய சோம. வள்ளியப்பனின் முக்கியமான நூல் இது.

  or 3 X Rs. 383.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை Nalla Athirvukal Nalla Vaazhkai ( Good vibes, Good Life Tamil )

  Rs. 3,290.00
  or 3 X Rs.1,096.67 with

  வெக்ஸ் கிங்

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  உங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா? இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக வலம் வருகின்ற வெக்ஸ் கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேணீநீள்விகளுக்கும் இன்னும் அதிகமானவற்றுக்கும் இந்நூலில் விடையளிக்கிறார். பாதகமான சூழல்களிலிருந்து மீண்டு வந்து, இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கைக்கான ஒரு மூலாதாரமாக விளங்குகின்ற அவர், தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய உள்ளார்ந்த புரிதலையும் கொண்டு உங்களுக்கு உத்வேகமூட்ட வந்துள்ளார். நீங்கள் சிந்திக்கின்ற, உணர்கின்ற, பேசுகின்ற மற்றும் நடந்து கொள்கின்ற விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் இவ்வுலகத்தை மாற்றத் தொடங்குகிறீர்கள் என்பதை வெக்ஸ் கிங் இந்நூலில் உங்களுக்குக் காட்டுகிறார்.

  or 3 X Rs. 1,096.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  குழந்தைகளின் மனநலம் / kulanthaikalin Mananalam

  Rs. 1,190.00
  or 3 X Rs.396.67 with

  A. வினோத்குமார்

   
  சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான்நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களைமகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்திவசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்கஎன்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.
   
  குழந்தைகளை கையாள்வது எப்படி.. பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள்.அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போதுகுழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுவார்கள். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்கவேண்டும்.
   
  தண்டிப்பது குழந்தையை மனஅழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம்வருவார்கள். நன்றி;நக்கீரன்

  or 3 X Rs. 396.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பேசும் அமைதி ( Stillness Speaks )

  Rs. 790.00
  or 3 X Rs.263.33 with

  எக்கார்ட் டோலே
  ந. முரளிதரன்

   

  எக்கார்ட் டோலே, ‘இப்போழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இரண்டு நூல்களின் ஆசிரியர். இந்த இரண்டு தமிழ் வாசகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றவை ! உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றவை. இந்நூலில் நமக்கு உள்ளே இருக்கும் அமைதியினைத் தொடர்பு கொள்கிறபோது, மனநிலைக் கடந்து செல்கிறோம். அங்கே ஒர் ஆழமான அமைதி கிடைக்கிறது

  or 3 X Rs. 263.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஆன்ம-அனுபூதிக்கான பயணம் / Anma-Anuputhikana Payanam / Journey to Self-Realization

  Rs. 1,790.00
  or 3 X Rs.596.67 with

   Paramahansa Yogananda 

  பரமஹம்ஸ யோகானந்தரின் சொற்பொழிவுகள்மற்றும் கட்டுரைகளின் இத்தொகுப்பு, அவரது ஒரு யோகியின் சுயசரிதத்தில கோடிக்கணக்கானோரைக கவர்ந்திழுத்துள்ள மனவெழுச்சியூட்டுகின்ற மற்றும் அனைவருக்கும் பொருந்துகின்ற உண்மைகளின் பரந்த தொகுதியைப் பற்றிய ஆழ்ந்த விவாதங்களை வெளிப்படுத்துகிறது. வாசகரகள், ஆன்மீக வாழ்க்கைக்கு நம் யுகத்தின் மிகவும் போற்றத்தக்க மற்றும் நம்பத்தக்க வழிகாட்டிகளில் ஒருவராக ஆசிரியரை ஆக்கியுள்ள அவரது அனைத்தையும் அரவணைக்கும் ஞானம், ஊக்கம், மனித இனத்திற்கான அன்பு ஆகியவற்றின் ஒப்பற்ற இணைப்பைக் கொண்ட இந்த உரைகளை உயிருள்ளவையாகக் காண்பர்

  or 3 X Rs. 596.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  வாழ்க்கை வாழ்வதற்கே! ( Vaazhkai Vaazhvadetke )

  Rs. 1,950.00
  or 3 X Rs.650.00 with

  மேட் ஹெயிக்

  தமிழில்: PSV குமாரசாமி

  • Waterstones Book of the Year Nominee (2015)

   

  மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்!

   

  தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மனநோய்கள் தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், நம்முடைய அன்புக்குரியவர்களில் ஒருவரோ அல்லது நம்முடைய நண்பர்களில் ஒருவரோ அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மனத்தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தவர் என்ற முறையில் தன்னுடைய அனுபவங்கள் குறித்த, மேட் ஹெயிக்கின் வெளிப்படையான பேச்சு, மனநோயால் சின்னாபின்னமாகி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டும்; அதன் தீவிரத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருப்பவர்களின் கண்களைத் திறக்கும்.

  or 3 X Rs. 650.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஒரு துறவியைப்போலச் சிந்தியுங்கள் (Think Like a Monk)

  Rs. 3,690.00
  or 3 X Rs.1,230.00 with

  ஜே  ஷெட்டி

   

  நீங்கள் ஒரு துறவியைப்போலச் சிந்திக்கின்றபோது இவற்றைப் புரிந்து கொள்வீர்கள்: • உங்களுடைய வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு அடைவது • எதிர்மறைகளை எவ்வாறு மீறுவது • அளவுக்கதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு நிறுத்துவது • மகிழ்ச்சியைத் தேடினால் ஏன் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது • சந்திக்கும் அனைவரிடமிருந்தும் எவ்வாறு கற்றுக் கொள்வது • நீங்கள் ஏன் உங்களுடைய எண்ணம் அல்லர் • வெற்றிக்குப் பரிவு இன்றியமையாததாக இருப்பது ஏன் • இன்னும் பற்பல விஷயங்கள். . .

  or 3 X Rs. 1,230.00 with Koko Koko
  Read more
 • நம்புதலின் மேஜிக்
  Out of Stock

  நம்புதலின் மேஜிக்

  Rs. 1,390.00
  or 3 X Rs.463.33 with

  கிளாட் ப்ரிஸ்டல்

  தமிழில்: மீரா ரவிஷன்கர்

   

  மனதில் தூங்கிக்கொண்டிருக்கும் விசையை விடுவி – அதீத சக்தியைக் கொண்ட உன் ஆற்றலை கண்டுபிடி!

   

  நீ என்ன நம்புகிறாயோ அதுதான் நீ!!!

   

  வாழ்வில் தேவையானவற்றைப் பெற மேஜிக் ஃபார்மூலா இருக்கா? இந்தப் புத்தகம் அதிசயம் என்றாலும் மிகையாகாது. இதில் எல்லோரும் பயன்படுத்தி பலன் கண்ட ஆக்க பூர்வமான முறைகள் உள்ளன. உங்கள் வாழ்வின் கரம் சிறப்பாகி, உங்கள் விருப்பங்கள் அனைத்தையும் அடையலாம்.

   

  நீங்கள் உங்கள் உலகின் படைப்பாளி. உங்களின் உள்ளே ஆளுமை விசை உண்டு. அது உங்கள் மனப்பிரபஞ்சத்தில் நீங்கள் வரைந்திருக்கும் படங்களை நிஜ உலகில் உண்மையாக்கும் சக்தி வாய்ந்தது, உங்களிடம் தேவை – இது வேலை செய்யும் என்ற நம்பிக்கை!

   

  உங்கள் வாழ்வினுள் மேஜிக்கைக் கொண்டு வாருங்கள்!

  or 3 X Rs. 463.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தீர்க்கதரிசி

  Rs. 690.00
  or 3 X Rs.230.00 with

  கலீல் ஜிப்ரான்

   

  கலீல் கிப்ரானின் த பிராபட் என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் கவித்துவமான 26 கட்டுரைகளைக் கொண்டது. இது நிறைய ஆன்மீக ஊக்குவிகளைக் கொண்டது.

   

  ஆசிரியர் தன் கைப்பட பன்னிரெண்டு ஓவியங்களை வரைந்துள்ளார். 11 வருடங்களுக்கு மேல் இந்தப் புத்தகத்தின் நேர்த்திக்காக உழைத்திருக்கிறார். இது கிப்ரானின் சிறந்த படைப்பு. அவருடைய இலக்கிய வாழ்வின் உச்சத்தைத் தொட்டப் புத்தகம். இதனால் இவர் ‘வாஷிங்டன் தெருவின் புலவர்’ என்று அறியப்பட்டார்.

   

  உணர்சிகளின் கொந்தளிப்பின் ஈர்ப்பைப் படம் பிடித்திருக்கிறார். த உலக பிராபட் 40 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 20ம் நூன்றாண்டின் மிகவும் அதிகப்படியாகப் படிக்கப்பட்ட புத்தகம் என்று பெயர் வாங்கியது. இதன் முதல் பதிப்பில் 1300 பிரதிகள் ஒரே மாதத்தில் விற்கப்பட்டன.

  or 3 X Rs. 230.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர் ( Thanathu Manaiviyai Thoppiyaaga Ninaiththukonda Manithar )

  Rs. 1,990.00
  or 3 X Rs.663.33 with

  ஆலிவர் சேக்ஸ்

  தமிழில்: பேரா. ச. வின்சென்ட்

   

  ‘ஆலிவர் சேக்ஸ் உலகின் மிகப் பிரபலமான நரம்பியல் வல்லுநர். உடைந்துபோன மனங்கள் பற்றிய அவரது நிகழ்வு அறிக்கைகள் நனவுநிலையின் புதிர்களுக்குச் சிறப்பான உள்ளொளி தருகின்றன.’

  – கார்டியன்

   

  உள்ளொளியுடன் கருணையுள்ளத்தையும் காட்டுகிறது; மனத்தை நெகிழச்செய்கிறது… திறமைமிக்க கதை சொல்லியின் தெளிவுடனும் ஆற்றலுடனும் இந்த வரலாறுகளைத் தருகிறார்… மருத்துவம் தொடர்பான நூலில் இது ஒரு மகத்தான படைப்பு.’

  – நியூ யார்க் டைம்ஸ்

   

  இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப்போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன; ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன.

  or 3 X Rs. 663.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தாயம் ( Thaayam )

  Rs. 1,990.00
  or 3 X Rs.663.33 with

  மஹாத்ரயா ரா

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  இது மஹாத்ரயா எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கடிதமும், வாழ்க்கை, வேலை, சூழல்கள் மற்றும் மனப்போக்குகள் தொடர்பான பல ஆழ்ந்த பிரதிபலிப்புகளை வெளிப்படுத்துகின்றன. எளிய படிப்பினைகள் மற்றும் கொள்கைகள், நடைமுறைக்குகந்த யோசனைகள் ஆகியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

   

  இதில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைபிடித்தால், வாழ்க்கை மன நிறைவுடையதாக இருக்கும், சவாலான சூழல்களைச் சந்திப்பது சுலபமானதாக இருக்கும். ஓர் அகரீதியான முரண்பாடு, ஓர் உறவுச் சிக்கல், தொழில்ரீதியான ஓர் இக்கட்டான நிலை, ஒரு திட்ட மதிப்பீடு, நேர நிர்வாகப் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இங்கு தீர்வுகள் இருக்கின்றன.
  :”எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் விரியுங்கள். தேடுபவனுக்கு அங்கு ஒரு விடை காத்துக் கொண்டிருக்கும்.”
  ‘தாயம்’ என்ற இந்நூலில் தங்களுக்கான விடையை பலர் கண்டுபிடித்துள்ளனர்.

   

  வெற்றி பெரிய பெரிய விஷயங்களில் இருக்கிறது.

  மகிழ்ச்சி சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது.

  தியானம் வெறுமையில் இருக்கிறது.

  கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார்.

  அதுதான் வாழ்க்கை.

   

  “குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. நான் பல புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் ‘தாயம்’ புத்தகம்தான் நான் படித்ததிலேயே மிக அருமையான புத்தகம்.” –ஆர். சி. லஹோட்டி, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

   

  “…மிகப் பெரிய விஷயங்கள் இவ்வளவு எளிய வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு பக்கமும் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீங்கள் வெற்றிகரமானவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதை நீங்கள் படிக்கும்போது சிறப்பாக உணர்வீர்கள். அறிவுப் பொக்கிஷமாக, அக ஒளி வழிகாட்டியாகத் திகழும் இந்நூல்தான் என் இதயத்தைத் தொட்ட ஒரே ஆன்மீகப் புத்தகம். நான் இதைப் பற்றி எண்ணற்றோரிடம் பேசியிருக்கிறேன்.” — சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் மற்றும் பாடகர்

  or 3 X Rs. 663.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள் ( Athikamaha Sinthippathai Niruthungal ) Stop Overthinking Tamil

  Rs. 1,850.00
  or 3 X Rs.616.67 with

  நிக் டிரென்டன்

    தமிழில்: PSV குமாரசாமி

   

  நீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும், முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்கள் மனத்தின்மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை இந்நூலாசிரியர் நிக் டிரென்டன் புரிந்து வைத்துள்ளார்.

   

  உங்களுடைய மூளையை மீள்உருவாக்கம் செய்வதற்கும், உங்களுடைய எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், உங்களுடைய மனப் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை நிக் இதில் விளக்குகிறார். அவற்றில் கீழ்க்கண்ட விஷயங்களும் அடங்கும்:

   

  • எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி
  • உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி
  • ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி
  • மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி
  • மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி
  • உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி

   

  or 3 X Rs. 616.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

  Rs. 1,090.00
  or 3 X Rs.363.33 with

  சோம. வள்ளியப்பன்

   

  அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.

   

  உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.

   

  தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.

   

  சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது.

   

  ‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.

  or 3 X Rs. 363.33 with Koko Koko
  Read more