Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: மதம் & ஆன்மீகம்

Showing all 50 results

 • Kamaththilirundhu Kadavulukku Flashbookslk

  காமத்திலிருந்து கடவுளுக்கு ( Kamathilirunthu Kadavulukku )

  Rs. 4,390.00
  or 3 X Rs.1,463.33 with

  ஓஷோ

   

  சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப நிலையாக ஏற்படுத்தியுள்ளார். | கடவுளேகூட பாவச் செயல் என்று கருதாத ஒன்றை மிகப்பெரும் மனிதர்கள் பாவச்செயல் என்றழைக்கின்றனர். கடவுள் காமத்தை ஒரு பாவச்செயலாக கருதியிருப்பாரேயாகில் இந்த உலகில் கடவுளைத் தவிர மிகப்பெரிய பாவி வேறு யாரும் இருக்க முடியாது: இந்த பிரபஞ்சத்திலிலேயே அவரைவிட மிகப்பெரிய பாவி இருக்க முடியாது…”

  or 3 X Rs. 1,463.33 with Koko Koko
  Add to cart
 • சித்தார்த்தன் / Sithardhan / Siddhartha Tamil

  Rs. 1,090.00
  or 3 X Rs.363.33 with

  ஹெர்மன் ஹெஸ்ஸே

   

  நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ்பெற்ற ஓர் உருவக நாவல் சித்தார்த்தன்.

  இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது.

   

  கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கான ஆழமான, நகரும் கழிவிரக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கதை. 1922ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முதல் பதிப்பு வெளியானதிலிருந்து பல மொழிகளில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டிருக்கிறது. எளிமையான உரைநடையில், தேடலுள்ளவர் அனைவருக்கும் மிகவும் ஆழமான செய்தியை ஹெஸ்ஸே அனுப்பியுள்ளார்.

   

  சத்தியத்திற்கான தேடலில் தனது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறும் ஓர் இளைஞனைச் சுற்றிக் கதை சுழல்கிறது. ஒரு பிராமணச் சிறுவன் தன் தேடலைப் பின்தொடர்ந்து, அறிவொளி பெறுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்காக வாழ்க்கையின் பல்வேறு தளத்திற்குச் செல்கிறான். அவன் தந்தைக்கு ஒரு பக்தியுள்ள பிராமணனாக, சமணனாக, பணக்கார வணிகனாக, காதலனாக, எளிய படகோட்டியாக வாழ்க்கையை அனுபவிக்கிறான்.

   

  இதன்மூலம் அவன் தொடர்ச்சியான மாற்றங்களுக்கும் உணர்தல்களுக்கும் உட்படுகிறான், ஒரு பயிற்சியாளனாக பாராயணம் செய்யவோ, பக்தனாகத் தியானிக்கவோ இல்லை. சித்தார்த்தன் உலகத்துடன் கலக்க வருவதில்லை, இயற்கையின் தாளங்களுடன் எதிரொலிக்கிறான்; ஆற்றிலிருந்து பதில்களைக் கேட்க வாசகரின் காதைக் கீழே வளைக்கிறான்.

   

  இந்தப் பதிப்பில் “வாசகர் வழிகாட்டி’ என்னும் புதிய பகுதி இடம்பெறுகிறது. அதில் நாவல், நூலாசிரியர் பற்றிய அறிமுகமும் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பதற்கான வினாக்களும் வழிகாட்டுதல்களும் உள்ளன.

  or 3 X Rs. 363.33 with Koko Koko
  Add to cart
 • Sale!

  தோழர்கள்: புனிதர்களின் அற்புத வரலாறு ( Thozharkal )

  Rs. 8,190.00
  or 3 X Rs.2,730.00 with

  நூருத்தீன்

   

  நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றை விறுவிறுப்பாகக் கூறும் தொகுப்பு இது.

  or 3 X Rs. 2,730.00 with Koko Koko
  Add to cart
 • Sale!

  மைல்கற்கள் (Milekatkal) (Maalim Fi at-Tariq)

  Rs. 2,190.00
  or 3 X Rs.730.00 with

  சையித் குதுப்

  தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரீ

   

  நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்களில் முதன்மையானவர் சையித் குதுப். அவருடைய புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட புத்தகம் இதுதான். இராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது, இந்தப் புத்தகத்தை எழுதியதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது.

   

  இந்நூலில் அவர், மனித சமூகம் இஸ்லாத்தின் நிழலில் மட்டுமே ஆரோக்கியமான வளர்ச்சியை நோக்கிச் செல்லவும் நிம்மதியான வாழ்க்கையை வாழவும் முடியும் என்பதை விளக்குவதுடன்; மற்ற கண்ணோட்டங்கள் தோல்வியைச் சந்திக்கும் என்பதையும், அவை எப்படி மனித சமூகத்தை அழிவை நோக்கிக் கொண்டுசெல்கின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகிறார். இஸ்லாத்தின் உன்னதமான வழிகாட்டலின் பாதையிலுள்ள மைல்கற்களைப் பட்டியலிடும் குதுப், வரலாற்றில் அப்படியொரு முன்மாதிரியான சமூகம் எவ்வாறு உருவானது என்பதையும், அதற்குப் பின்னாலிருந்த காரணிகள் குறித்தும், அதன் தனித்தன்மைகள் குறித்தும் தெளிவுற விவரிக்கிறார்.

   

  இஸ்லாமிய அழைப்புப் பணியில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஓர் கட்டாய வாசிப்பு.

  or 3 X Rs. 730.00 with Koko Koko
  Add to cart
 • Sale!

  மர்யமா: கிரானடா முக்கதைகள் – 2 ( Maryama )

  Rs. 1,390.00
  or 3 X Rs.463.33 with

  றள்வா ஆஷூர்
  தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

   

  எங்கள் மூதாதையர்கள் ஏதும் குற்றமிழைத்துவிட்டதற்காகவா எங்களை இப்படித் தண்டிக்கிறாய்? அல்லது நல்லவர்களும் கெட்டவர்களுமான மனிதர்கள் தங்கள் இச்சைப்படி நடத்திச் செல்லவா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்திருக்கிறாய்? அவர்களின் மனேபாவம் இப்படிக் கொடூரமாக இருப்பதைத் தெரிந்திருந்தும் ஏன் அவர்களை விட்டு வைத்திருக்கிறாய்?

  – நாவலிலிருந்து…

  or 3 X Rs. 463.33 with Koko Koko
  Add to cart
 • இரகசியம் ( Irahasiyam ) The Secret

  Rs. 3,290.00
  or 3 X Rs.1,096.67 with

  ரோன்டா பைர்ன்

   

  தமிழில்: PSV குமாரசாமி

   

  இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.

  or 3 X Rs. 1,096.67 with Koko Koko
  Add to cart
 • ரசவாதி ( Rasavathi ) The Alchemist

  Rs. 2,690.00
  or 3 X Rs.896.67 with

  பாலோ கொயலோ

   

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  உங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவதைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை

   

   

  • Grand Prix des lectrices de Elle for roman (1995)
  • Premio Grinzane Cavour for Narrativa Straniera (1996)
  • Corine Internationaler Buchpreis for Belletristik (2002)
  • 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்

   

  “ஒருவரின் விதியை நிறைவேற்றுவதற்கான தேடல்.” அந்தோனி ராபின்ஸ்

   

  “உலகளாவிய ஞானத்தின் ஒரு தொழில்முனைவோர் கதை, நம் சொந்த வாழ்க்கையின் வணிகத்திற்கு நாம் உபயோகிக்கலாம்.” ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி

   

  “இது என் முழு வாழ்க்கையையும் மாற்றியது. என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சதி செய்த அனைத்து மக்களையும் நான் உணர்ந்தேன். ஃபாரல் வில்லியம்ஸ், இசைக்கலைஞர்

   

  or 3 X Rs. 896.67 with Koko Koko
  Add to cart
 • Out of Stock

  ஒரு ஆன்மாவின் தேடல் ( Memoirs Of A Vagrant Soul )

  Rs. 1,190.00
  or 3 X Rs.396.67 with

  மிகெய்ல் நைமி

   

   

  or 3 X Rs. 396.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  புத்தரின் வரலாறு / Budhdharin Varalaru

  Rs. 1,090.00
  or 3 X Rs.363.33 with

  மயிலை சீனி.வேங்கடசாமி

   

  நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர்கள் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன.

  சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு.

   

  உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும், அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன.

   

  பகவான் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும் போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது.

   

  இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால்,

   

  பெளத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்தசரித்திரம் எழுதப்பட்டது.

  or 3 X Rs. 363.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பேசும் அமைதி ( Stillness Speaks )

  Rs. 790.00
  or 3 X Rs.263.33 with

  எக்கார்ட் டோலே
  ந. முரளிதரன்

   

  எக்கார்ட் டோலே, ‘இப்போழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இரண்டு நூல்களின் ஆசிரியர். இந்த இரண்டு தமிழ் வாசகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றவை ! உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றவை. இந்நூலில் நமக்கு உள்ளே இருக்கும் அமைதியினைத் தொடர்பு கொள்கிறபோது, மனநிலைக் கடந்து செல்கிறோம். அங்கே ஒர் ஆழமான அமைதி கிடைக்கிறது

  or 3 X Rs. 263.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்) ( Jingalin Aasaan)

  Rs. 2,390.00
  or 3 X Rs.796.67 with

  இர்விங் கர்ஷ்மார்

  தமிழில்: ரமீஸ் பிலாலி

   

  இதோ, இதயத்தின் பாதையில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கதை. ஓர் ஆன்மீக சாகசப் பயணம். ஸூஃபி வழி பற்றிக் குறியீடாகச் சொல்லும் கற்பனை வளம்.

   

  பாலைவனத்தில் அனிச்சையாகக் கண்டறியப்படும் பொருள் ஒன்று சமகால ஸூஃபி குரு ஒருவரையும், அவருடைய சகாக்கள் ஏழு பேரையும் தொல்லுலகத்துப் பொக்கிஷம் ஒன்றைத் தேடிச்செல்லும் கட்டாயத்தில் வைக்கிறது: பேரரசர் சுலைமானின் மோதிரம். ஆம், ஆயிரமாயிரம் மரபுக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அதே முத்திரை மோதிரம்தான். புகையற்ற நெருப்பால் படைக்கப்பட்ட பயங்கர உயிரினமான ஜின்களைக் கட்டுப்படுத்தி ஆட்சி புரிவதற்காக இறைவனால் அவருக்கு வழங்கப்பட்ட மோதிரம் அது.

   

  ஆனால், தேடிச்செல்லத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மீது அந்தப் பயணம் ஒரு வினோத பாதிப்பை ஏற்படுத்துகிறது: மாயக் காட்சிகள் அவர்களின் கனவுகளிலும் நினைவுகளிலும் ஊடுருவுகின்றன. அவர்களின் இதயங்களில் கண்ணீர் நிரம்புகிறது. மர்மங்கள் மண்டுகின்றன. பூமியைப் புரட்டுவதுபோன்ற புயல்கள்; முடியப்போவதே இல்லை என்பதுபோன்ற இரவுகள்; மண்ணுக்குள் எப்போதோ தொலைந்த தொல் நகரம்; மேலும், ஜீவ நெருப்பால் ஆன ஜின்கள்.

   

  இறுதியில், அந்தப் பயணம் ஜின்களின் விதியை மட்டும் வெளிப்படுத்தவில்லை, அன்பின் வழியையும் இறைவனின் அளப்பரிய கருணையையும் வெளிப்படுத்துகிறது.

  or 3 X Rs. 796.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  டி. தருமராஜின் அயோத்திதாசரியம்

  Rs. 2,990.00
  or 3 X Rs.996.67 with

  டி. தருமராஜ்

   

  அயோத்திதாசர் யார்?
   
  அவரை எப்படிப் புரிந்துகொள்வது?
   
  அவர் யாருக்கானவர்?
   
  நூறு ஆண்டுகளுக்கு முன்பு அவர் எழுதியவற்றை இன்றைய தேதியில் எப்படி உள்வாங்கிக்கொள்வது?
   
  அவர் கட்டமைக்கும் வரலாற்றிலிருந்து, அவர் முன்வைக்கும் பண்பாட்டிலிருந்து, அவர் கண்டடையும் தொன்மத்திலிருந்து நாம் எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளமுடியும்? *
   

  அயோத்திதாசரை ஒரு தலைசிறந்த சிந்தனையாளராகவும் செயலூக்கம் கொண்ட ஒரு செயற்பாட்டாளராகவும் பொதுவெளியில் அறிமுகம் செய்து வைத்தவர்களுள் முதன்மையானவர் டி. தருமராஜ். அயோத்திதாசரை நாம் எப்படி அர்த்தப்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்கு அவர் வகுத்துக்கொடுக்கும் ஆய்வுச்சட்டகங்கள் புதுமையானவை, முக்கியமானவை. தருமராஜின் ஆய்வு முறையியலையும் அந்த முறையியலைப் பொருத்தி ஆராய்வதன்மூலம் வெளிப்படும் அயோத்திதாசரையும் பன்முக நோக்கில் அணுகி, விவாதிக்கிறது இந்நூல். ஜெயமோகன், ஸ்டாலின் ராஜாங்கம், சமஸ், பிரேம், ஏர் மகாராசன், சரவண கார்த்திகேயன், சுரேஷ் பிரதீப், ஈஸ்வரபாண்டி, சாந்தி நக்கீரன், இராவணன் அம்பேத்கர், கோபிநாத், கலையரசி, சக்திவேல், கார்த்திக், மனோஜ் பாலசுப்ரமணியன் ஆகியோர் வெவ்வேறு கோணங்களிலிருந்து தர்மராஜின் பங்களிப்புகளை ஆராய்கின்றனர். தருமராஜின் கட்டுரையொன்றும் இடம்பெற்றுள்ளது. இந்நூலைத் தொகுக்கும் பெரும் பணியை மேற்கொண்டதோடு ஓர் ஆய்வுக்கட்டுரையையும் வழங்கியிருக்கிறார் அரிபாபு. *
   

  சமயம், தொன்மம், பண்பாடு, கலை, அரசியல், மொழியியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், வரலாறு போன்ற துறைகளில் தேடலும் ஆர்வமும் கொண்டவர்களுக்கு இந்நூல் பல புதிய திறப்புகளை அளிக்கும் என்பது உறுதி.

  or 3 X Rs. 996.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ராமாயணம் (Sri Rama Lila)

  Rs. 1,790.00
  or 3 X Rs.596.67 with

  வனமாலி 
  நாகலட்சுமி சண்முகம்

   

  மனித பரிபூரணத்தின் உச்சமாக பூமியில் அவதரித்த விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமரின் கதை. வனமாலி ஆசிரமம், காலத்தால் அழியாத புராணமான ஸ்ரீ ராம லீலாவைப் படிக்கும் பண்டைய பாரம்பரியத்தைத் தொடர்கிறது. ஆழ்ந்த பக்தியுடன் எழுதப்பட்ட இந்நூல், வாசகர்களை கண்ணீரை வரவழைத்து, பக்தியைத் தூண்டுகிறது. ஒவ்வொரு காண்டத்தின் முடிவிலும் யோகா வசிஷ்ட வசனங்கள் ஓதப்பட்டு, ஆழ்ந்த ஆன்மீக ஞானத்தை வழங்குகின்றன. ஸ்ரீ ராம லீலாவைப் படிப்பவர்களுக்கு வளமான கதைசொல்லல் மற்றும் ஆன்மீக நுண்ணறிவு ஆகியவற்றின் மாற்றத்தக்க அனுபவம் காத்திருக்கிறது.

  or 3 X Rs. 596.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  சக்தி (இரகசியம் #2) (Colour) ( The Power )

  Rs. 4,290.00
  or 3 X Rs.1,430.00 with

  ரோன்டா பைர்ன்

   

  நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்.

  or 3 X Rs. 1,430.00 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  இலங்கை முஸ்லிம்களை புரிந்துகொள்ளல்

  Rs. 800.00
  or 3 X Rs.266.67 with

  அ.வா. முஹ்சீன்

   

  தவறான புரிதலானது இரு பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒன்று முஸ்லிம்களைப் பற்றி, ஏனைய சமூகங்கள் மத்தியில் நிலவுகின்ற தவறான அபிப்பிராயங்கள், இரண்டு முஸ்லிம்கள் தம்மைப் பற்றிக் கொண்டிருக்கின்ற தவறான அபிப்பிராயங்கள். இந்நூல் இந்த இரண்டையும் பற்றி பேசுகிறது. இலங்கைச் சூழலில், முஸ்லிம் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளின் பின்னணியில் எழுதப்பட்டுள்ள இந்நூல், இலங்கையைத் தாண்டி, உலக அளவில் முஸ்லிம் சமூகங்கள் அக்கறை கொள்ள வேண்டிய விடயங்கள் பற்றியும் பேசுகிறது.

  கலந்துரையாடப்படவும் விவாதிக்கப்படவும் கூடிய பல விடயங்களை இந்நூல் கொண்டிருக்கிறது. தேசிய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் சமூகங்களின் ஐக்கியம் மிகப் பெருமளவில் அவசியமாகியுள்ள இன்றைய நிலையில், இந்நூல் அத்தகைய ஐக்கியம் பற்றி மேலும் அக்கறை கொள்வதைத் தூண்டுகிறது.

  or 3 X Rs. 266.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தீர்க்கதரிசி

  Rs. 690.00
  or 3 X Rs.230.00 with

  கலீல் ஜிப்ரான்

   

  கலீல் கிப்ரானின் த பிராபட் என்ற இந்த புத்தகம் ஆங்கிலத்தில் கவித்துவமான 26 கட்டுரைகளைக் கொண்டது. இது நிறைய ஆன்மீக ஊக்குவிகளைக் கொண்டது.

   

  ஆசிரியர் தன் கைப்பட பன்னிரெண்டு ஓவியங்களை வரைந்துள்ளார். 11 வருடங்களுக்கு மேல் இந்தப் புத்தகத்தின் நேர்த்திக்காக உழைத்திருக்கிறார். இது கிப்ரானின் சிறந்த படைப்பு. அவருடைய இலக்கிய வாழ்வின் உச்சத்தைத் தொட்டப் புத்தகம். இதனால் இவர் ‘வாஷிங்டன் தெருவின் புலவர்’ என்று அறியப்பட்டார்.

   

  உணர்சிகளின் கொந்தளிப்பின் ஈர்ப்பைப் படம் பிடித்திருக்கிறார். த உலக பிராபட் 40 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. 20ம் நூன்றாண்டின் மிகவும் அதிகப்படியாகப் படிக்கப்பட்ட புத்தகம் என்று பெயர் வாங்கியது. இதன் முதல் பதிப்பில் 1300 பிரதிகள் ஒரே மாதத்தில் விற்கப்பட்டன.

  or 3 X Rs. 230.00 with Koko Koko
  Read more
 • கவலை வேண்டாம் ( Don’t Worry )
  Out of Stock

  கவலை வேண்டாம் ( Don’t Worry )

  Rs. 3,090.00
  or 3 X Rs.1,030.00 with

  ஷுன்மியோ மசுனோ

  தமிழில்: PSV குமாரசாமி

   

  சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தைக் குவிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், தேவையற்றப் பதற்றத்திலிருந்து உங்களை உங்களால் விடுவித்துக் கொள்ள முடியும்; அதோடு, உங்கள் மனமும் அமைதியடையும்.

   

  இப்புத்தகத்திலிருந்து நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:

   

  • ஒப்பிடுவதை நீங்கள் நிறுத்தும்போது, உங்களுடைய மாயைகளில் தொண்ணூறு சதவீதம் மாயமாய் மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
  • உங்களுடைய உடைமைகளை உதறித் தள்ளுங்கள். அது உங்களுடைய மனத்தையும் உடலையும் லேசாக்கும்.
  • அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். தினமும் ஒரு முறையாவது சிறிது நேரம் அசையாமல் நின்று கொண்டிருங்கள்.
  • நேர்மறையாக எதிர்வினையாற்றுங்கள். மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்கள்தான்.
  • தேவையற்றவற்றைத் தேடித் திரியாதீர்கள்.
  • போட்டியிலிருந்து தூரச் செல்லுங்கள், எல்லாம் தானாகவே சரியாகும்.

  or 3 X Rs. 1,030.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஓர் இந்திய இஸ்லாமியரின் இதயத்திலிருந்து

  Rs. 1,190.00
  or 3 X Rs.396.67 with

  வேலூர் எம். இப்ராஹிம்

   

  வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நம் தேசத்தின் ஆன்மா. நூலாசிரியர் வேலூர் எம். இப்ராஹிம் அந்த ஆன்மாவின் குரலை அழகு தமிழில் இந்த நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். பாஜகவின் மேடைகளில் ஏறி நின்றுகொண்டு நபிகள் பெருமானின் போதனைகளை முழங்குகிறார். பாஜகவினர் செய்யும் தவறுகளைப் பண்புடன் கண்டிக்கிறார். அயோத்தியில் ராமர் ஆலயம்தான் கட்டப்படவேண்டும் என்பதை நபிகளின் அருளுரைகளைக் கொண்டே எடுத்துச்சொல்கிறார்.
   

  சமஸ்கிருதம் எப்படி மதம் கடந்து இந்த தேசத்தின் செம்மொழியாகத் திகழ்கிறது என்பதை அழகாக எடுத்துரைத்திருக்கிறார். இந்துக்களின் மனம் புண்படுமென்றால் பசுமாமிசத்தை குர்பான் கொடுக்கவேண்டாம் என்று சொன்ன பஹதூர்ஷாவின் மத நல்லிணக்க உணர்வை எடுத்துச் சொல்லியிருக்கிறார். இஸ்லாமிய சமூகத்தைத் தவறாக வழி நடத்தும் இஸ்லாமிய தலைவர்கள், அமைப்புகளை வெளிப்படையாகப் பெயர் சொல்லி கடுமையாக விமர்சிக்கிறார். ஈவெராவுக்கும் கடுமையான மறுப்புகள் உள்ளன. பொதுவெளியில் பேசப்படாத, அதேநேரம் கட்டாயமாகப் பேசப்பட்டிருக்கவேண்டிய முக்கியமான கருத்துகளைக் கொண்ட இந்தப் புத்தகம் தமிழ்சமூகத்தின் அனைவருடைய கைகளையும் சென்று சேரவேண்டும்.

  or 3 X Rs. 396.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  யூதர்கள்: வரலாறும் வாழ்க்கையும் ( Yudhargal: Varalaarum Vaazhkaiyum )

  Rs. 1,980.00
  or 3 X Rs.660.00 with

  முகில்

   

  யூதர்களின் கலாசாரம், பழக்கவழக்கங்கள், பண்டிகைகள், திருமணம், வாழ்க்கை முறை, வழிபாடு என அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தும் இந்நூல், அவர்களது சரித்திரத்துக்கும் சமகாலத்துக்கும் இடையே அநாயாசமாக ஒரு மேம்பாலம் கட்டுகிறது.

  or 3 X Rs. 660.00 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  பஷீர் கதைகள் ( Basheer Kathaigal )

  Rs. 3,790.00
  or 3 X Rs.1,263.33 with

  வைக்கம் முகம்மது பஷீர்

   

  முற்போக்கு இலக்கியம் முதன்மையான நடைமுறையாக இருந்த காலப் பகுதியில் எழுத்தில் ஈடுபட்டவர் பஷீர். ‘ஜீவன் சாஹித்ய பிரஸ்தானம்’ (வாழ்விலக்கிய இயக்கம்) என்று அழைக்கப்பட்ட போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் பஷீர், தகழி சிவசங்கர பிள்ளை, பி. கேசவதேவ், பொன்குன்னம் வர்க்கி ஆகியோர். இவர்களின் எழுத்தில் புதுவகையை உருவாக்கியவர் பஷீர்.

   

  நடைமுறை உலகை மாற்றிப் புதிய உலகைச் சமைப்பதற்கான அறைகூவலைப் பிற எழுத்தாளர்கள் முன்னிருத்தினர். இந்த முழுமையற்ற உலகத்தை மாற்றி முழுமையான உலகைப் படைப்பது பற்றிய கனவை முன்வைத்தார்கள். ஆனால் பஷீர் இந்த முழுமையற்ற உலகை நேசித்தவராக இருந்தார். தீமையும் கீழ்மையும்இந்த உலகின் உயிரோட்டமான அம்சங்கள் என்று உணர்ந்திருந்தார்.

   

  நடைமுறை உலகத்தால் புறக்கணிக்கப்பட்டவர்களேஅவரது கதை மாந்தர்களாக இருந்தனர். அவர்களது வாழ்க்கையே அவருக்குக் கதை நிகழ்வுகளாக இருந்தன. பொறுக்கிகள், வேசிகள், திருடர்கள், முட்டாள்கள், பைத்தியங்கள், ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லாரும் அவருடைய அன்புக்குரிய பாத்திரங்களாக இருந்தார்கள்.அந்தப் பாத்திரங்கள்மீது வாசகரும் அன்பு பாராட்டக் கட்டாயப்படுத்தியதுதான் பஷீர் கலையின் வெற்றி.

  or 3 X Rs. 1,263.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தொலையுணர்வு: ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் அதிசய

  Rs. 2,390.00
  or 3 X Rs.796.67 with

  டாக்டர் ஜோஸப் மர்ஃபி

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்தச் சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.

  அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரச்சினைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுக்குள் இருக்கின்ற அசாதாரணமான சக்திகளை உடனடியாக முடுக்கிவிடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும்.

  or 3 X Rs. 796.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  மகாவம்சம் / Mahavamsam

  Rs. 1,720.00
  or 3 X Rs.573.33 with

  R.P. சாரதி

   

  நமக்குப் பெயரளவில் மட்டுமே பரிச்சயமான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் ‘மகாவம்சம்’ இதோ நூல் வடிவில். பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் தமிழ் வடிவம் இது.

   

  பல்லேறு புத்த பிக்குகளால் நாள்குறிப்பு வடிவத்தில் எழுதப்பட்டவை. கி.பி. 5-ம் நூற்றாண்டில் மஹாநாம மஹாதேராவால் முதல் முறையாக ஒரு நூலாக தொகுக்கப்பட்டது.

  அவ்வகையில், இது மிகப் புராதனமான பிரதியும் ஆகும். கி.மு.6-ம் நூற்றாண்டு தொடங்கி கி.மு.4-ம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகா வம்சம், சிங்களர்களின் புனித நூலாகவும் கொண்டாடப்படுகிறது.

   

  அவர்களது ஆதிகால வரலாற்றை மட்டுமில்லாமல் இலங்கையின் புத்த மதத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்த துல்லியமான மதீப்பீட்டையும் இது முன்வைக்கிறது.

   

  தவிரவும் இந்திய வரலாற்றின் ஆரம்பக்கால அத்தியாயங்கள் பலவற்றையும் மகா வம்சத்தில் காண முடியும். ‘சிங்களப் பேரினவாதம்’ என்று தமிழர்களால் வருணிக்கப்பட்டு, இன்றளவும் அங்கே கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்னையின் வேர், மகா வம்சத்திலிருந்துதான் உதிக்கிறது.

  அதனால்தான், சர்ச்சைக்குரிய ஒரு நூலாகவும் மகா வம்சம் கருதப்படுகிறது.

  or 3 X Rs. 573.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  மிர்தாதின் புத்தகம் ( The Book of Mirdad )

  Rs. 1,690.00
  or 3 X Rs.563.33 with

  மிகெய்ல் நைமி

   

  உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”

   

  இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது…
  மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!

   

  நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில்

  உருவாக்கப்பட்டுள்ள, மிகச் சிறந்த நூல் இது!

   

  பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய

  தகுதி படைத்த புத்தகம்!

   

  நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர்

  மட்டுமல்லர். எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே

  மாபெரும் எழுத்தாளர்!

   

  நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன்.

  எதுவுமே இதற்கு ஈடாகாது!

   

  ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய

  விலை மதிக்க முடியாத புத்தகம் இது!
    —– ஓஷோ

  or 3 X Rs. 563.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  மகாபாரதம் (ராஜாஜி) ( Mahabaratham )

  Rs. 1,650.00
  or 3 X Rs.550.00 with

  வியாச முனிவர்

   

  மகாபாரதம் பாரதத்தின் இரண்டு இதிகாசங்களுள் ஒன்றாகும். மற்றது இராமாயணம் ஆகும். வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக மகாபாரதம் கூறுகிறது. இது சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளது. இந்தியத் துணைக்கண்டப் பண்பாட்டைப் பொறுத்தவரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இதிகாசம் இந்து சமயத்தின் முக்கியமான நூல்களில் ஒன்று. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் மனிதனுடைய நால்வகை நோக்கங்களையும், சமூகத்துடனும், உலகத்துடனும் தனிப்பட்டவருக்கு உரிய உறவுகளையும், பழவினைகள் பற்றியும் இது விளக்க முற்படுகின்றது.

   

  இது 74,000க்கு மேற்பட்ட பாடல் அடிகளையும், நீளமான உரைநடைப் பத்திகளையும் கொண்டு விளங்கும் இந்த ஆக்கத்தில் 18 இலட்சம் சொற்கள் காணப்படுகின்றன. இதனால் இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் இது நீளமானது. நவீன இந்து சமயத்தின் முக்கிய நூல்களிலொன்றான பகவத் கீதையும் இந்த இதிகாசத்தின் ஒரு பகுதியே. பாண்டு, திருதராட்டிரன் என்னும் இரு சகோதரர்களின் பிள்ளைகளிடையே இடம் பெற்ற பெரிய போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இந்தக் காப்பியமாகும். இதனைத் தமிழில் இலக்கியமாகப் படைத்தவர் வில்லிபுத்தூரார் ஆவார். பாரதியார் மகாபாரதத்தின் ஒரு பகுதியை பாஞ்சாலி சபதம் எனும் பெயரில் இயற்றினார். வியாசர் விருந்து என்ற பெயரில் இராஜகோபாலாச்சாரி அவர்கள் மகாபாரதத்தினை உரைநடையாக இயற்றியுள்ளார்

  or 3 X Rs. 550.00 with Koko Koko
  Read more
 • The Master Key System Tamil flashbooks.lk
  Out of Stock

  திறனின் திறவுகோல் அமைப்பு

  Rs. 1,490.00
  or 3 X Rs.496.67 with

  சார்ல்ஸ் எப். ஹானல்

   

  இந்த புத்தகம் வெற்றிக்கான ஒரு சக்திவாய்ந்த அமைப்பின் ரகசியத்தை வைத்திருக்கிறது, இது எழுத்தாளர் சார்லஸ் எஃப். ஹானெலால் தனக்கென ஒரு செல்வத்தை குவிக்க பயன்படுத்தப்பட்டது. மாஸ்டர் கீ சிஸ்டம் ஈர்ப்பு விதியின் மூலம் படைப்பு வெளிப்பாட்டின் கொள்கைகளின் அடித்தளத்தை அமைக்கிறது. பிரபஞ்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த சக்தியைக் குறிப்பிடும் போது, ​​இன்று மிகவும் பிரபலமான வார்த்தையாக மாறியுள்ள, ஈர்ப்பு விதி என்ற சொற்றொடரைப் பயன்படுத்திய முதல் புத்தகங்களில் இது ஒன்றாகும். உங்கள் மனதின் படைப்புக் கருவியை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பயன்படுத்துவது என்பதை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள்.

  or 3 X Rs. 496.67 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  காதலின் நாற்பது விதிகள் (ஸூஃபி நாவல்) ( Kadhalin Naatpathu Vithigal ) The Forty Rules of Love

  Rs. 3,490.00
  or 3 X Rs.1,163.33 with

  எலிஃப் ஷஃபாக்

  தமிழில்: ரமீஸ் பிலாலி

   

  தீராக் காதலின் தற்காப்புப் போராட்டத்தில் பழங்காலமும் நிகழ்காலமும் கச்சிதமாகக் கை கோர்க்கின்றன.     — தி டைம்ஸ் (இங்கிலாந்து)

   

  தனது கவித்துவமான இந்நாவலில் எலிஃப் ஷஃபாக் இறைக் காதலை நோக்கிய இரண்டு யாத்திரைகளை இணை கோடுகளாக வரைந்திருக்கிறார்: ஒன்று நவீன காலத்தில் நிகழ்கிறது, மற்றொன்று பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஸூஃபி ஞானிகளான ரூமிக்கும் ஷம்ஸி தப்ரேஸுக்கும் இடையில் நிகழ்கிறது. இவ்விரு கதையாடல்கள் கொள்ளும் குறுக்கீட்டில் சுயம், சுயமின்மை, இறைவனுக்கான அர்ப்பணம் ஆகியவை குறித்த முக்கியமான போதனைகள் வெளிப்படுகின்றன.   —— ஆல்ட்முஸ்லிமா.காம்

   

  காதலின் நாற்பது விதிகள் வாசியுங்கள். நீங்கள் உங்களின் இதயத்தைத் திறக்கலாம், தடைப்பட்டுக் கிடக்கும் இடங்களைத் தகர்த்து வெளிப்படலாம், மாயமான முறையில் காதலில் விழலாம், விடுதலையின் ஆழமான ஆனந்தத்தை உணரலாம்.    —– ஜாக் கார்ன்ஃபீல்டு

  or 3 X Rs. 1,163.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்

  Rs. 490.00
  or 3 X Rs.163.33 with

  தீபக் சோப்ரா

  தமிழில்: M. சீனிவாசன்

   

  இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் நீடித்து நிற்கும் சந்தோஷத்தையே வெற்றி என்று விளக்கமாக கூறலாம். அர்த்த புஷ்டியான இலக்குகளை தொடர்ந்து அடைந்து கொண்டிருப்பதையே வாழ்க்கையின் வெற்றி என்று விளக்கலாம். வெற்றிக்கு எத்தனயோ முகங்கள் உண்டு. பொருட்செல்வம் என்பது அவற்றுள் ஒன்றுதான். அத்துடன் நில்லாமல், வெற்றி என்பது ஒரு பிரயாணம். ஒரு முடிவு எல்லையல்ல. அல்லது நாம் அடைந்து விடும் முடிவான இடம் அல்ல. புத்தகங்களோ கணக்கிலடங்காதவை. காலம் மிகக்குறுகியது. ஆகவே எது மிகவும் முக்கியமோ அதை உடனே எடுத்துக் கொள்வதுதான் அறிவின் ரகசியம். அதை எடுத்துக் கொண்டு அதன்படி வாழ முயற்சியுங்கள்.

  or 3 X Rs. 163.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ரூமியின் வைரங்கள் ( Roomiyin Vairangal )

  Rs. 400.00
  or 3 X Rs.133.33 with

  ஜலாலுத்தீன் ரூமி

  தமிழில்: ரமீஸ் பிலாலி

   

  13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாரசீக மகாகவியும் சூஃபி ஞானியும் ஆன மௌலானா ரூமி அவர்களின் தேர்ந்தெடுத்த கவிதைகள் இந்நூல் உங்களிடம் கொண்டு வருகிறது.

   

  மௌலானா ரூமியின் கவிதைகளில் அன்பின் அனைத்துப் பரிமாணங்களும் வெளிப்பட்டுள்ளன. எனவே, சில நேரங்களில் அவரின் கவிதை மிகவும் எளிமையானதாகத் தென்படலாம். இளம் காதலன் ஒருவன் தன் காதலியிடம் பேசுவது போல் தெரியலாம். ஆனால் மனித காதல் என்பதும்கூட இறைக் காதலின் பிரதிபலிப்புதான் என்பதை மௌலானா ரூமி மீண்டும் மீண்டும் தனது காவியத்தில் உணர்த்துகிறார்கள். ஒவ்வொரு அன்பும் இறைவனிடமே இட்டுச் சென்றாக வேண்டும். ஏனெனில் அன்பின் மூல முகவரி இறைவன்தான். அதற்கான வழியை மௌலானா ரூமியின் கவிதைகள் நமக்குக் காட்டுகின்றன.

  or 3 X Rs. 133.33 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  கிரானடா (நாவல்) ( Granada )

  Rs. 2,190.00
  or 3 X Rs.730.00 with

  றள்வா ஆஷூர்

  தமிழில்: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்

   

  அசாதாரணமானதொரு காலத்தில் வாழ்ந்த சாதாரணர்கள் சிலரின் வாழ்க்கையைப் பின்தொடர்ந்து செல்வதன்வழி பதினைந்தாம் நூற்றாண்டில் நிகழ்ந்த முஸ்லிம் ஸ்பெயினின் வீழ்ச்சி ஏற்படுத்திய பண்பாட்டு இழப்பையும் வலியையும் வெகுநுட்பமாக நெய்தெடுத்திருக்கிறது கிரானடா. ஸ்பானிஷ் மதக்குற்ற விசாரணைக் காலத்தின் மூச்சடைக்கும் சூழலின் மத்தியில் அரும்பும் அழகிய காதல்கள், அடக்குமுறைக்கு முன் பணிய மறுக்கும் பண்பாடு, பிழைத்து வாழ்ந்துவிடுவதற்கான யத்தனங்கள் என வாழ்வின் பல்வேறு வண்ணங்களும் முயங்கி மாயம் நிகழ்த்தும் ஒரு நவீன கிளாசிக் இது. முக்கதைகளில் முதலாவது.

  or 3 X Rs. 730.00 with Koko Koko
  Read more
 • Sale!
  The Greatest Secret Tamil flashbooks.lk
  Out of Stock

  மாபெரும் இரகசியம் Maperum Irakasiyam ( The Greatest Secret )

  Rs. 4,290.00
  or 3 X Rs.1,430.00 with

  ரோன்டா பைர்ன்

  தமிழில்: PSV குமாரசாமி

   

  2006 ஆம் ஆண்டில் இரகசியம் நூலை வெளியிட்டதன் மூலம் சர்வதேசப் புரட்சி ஒன்றை ரோன்டா பைர்ன் தோற்றுவித்தார். வாழ்க்கையை அடியோடு மாற்றக்கூடிய அவருடைய இந்தக் கண்டுபிடிப்பு, தங்களுக்குள் புதைந்து கிடக்கும் சக்திகளை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவியது. ஆனால் ரோன்டாவின் பயணம் அத்துடன் முடியவில்லை. ஏனெனில், அதிக ஞானத்தைத் தேடிச் செல்லும்படி ஏதோ ஒன்று அவருக்குள்ளிருந்து அவரை உந்தித் தள்ளியது. அவர் அந்தத் தேடலில் பதினான்கு ஆண்டுகளைச் செலவிட்டதன் விளைவாகக் கண்டுபிடித்த உலகளாவிய உண்மைகள் இந்நூலின் பக்கங்களில் இடம்பெற்றுள்ளன.

   

  மாபெரும் இரகசியம் மக்களை பௌதிக உலகிலிருந்து உயர்த்தி, அனைத்துச் சாத்தியக்கூறுகளும் நிறைந்துள்ள ஆன்மிகத் தளத்திற்குக் கூட்டிச் செல்லும். இந்நூலில் இடம்பெற்றுள்ள போதனைகள், நீங்கள் உடனடியாக நடைமுறையில் பயன்படுத்தக்கூடிய சில பயிற்சிகளை வழங்குவதோடு, உங்களுடைய பயங்கள், ஐயப்பாடு, கவலை, வேதனை ஆகியவற்றைக் கரைக்கக்கூடிய ஆழமான உண்மைகளையும் வழங்குகின்றன. உலகம் நெடுகிலுமுள்ள பல்வேறு ஆன்மிக ஆசான்கள் உதிர்த்த ஞான முத்துகளால் நிரம்பி வழிகின்ற மாபெரும் இரகசியம், துன்பத்திற்கு ஒரு முடிவு கட்டி, ஒரு பேரானந்தமான வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு நேரடியான பாதையை வாசகர்களுக்கு வழங்குகிறது.

  or 3 X Rs. 1,430.00 with Koko Koko
  Read more
 • Aalmanathin Atputha Sakthi - The Power of your Subconscious Mind Tamil flashbooks.lk
  Out of Stock

  உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி ( Ungal Aazhmanathin Atputha Sakthi )

  Rs. 1,350.00
  or 3 X Rs.450.00 with

  டாக்டர் ஜோஸப் மர்ஃபி

  தமிழில்: மாலதி கிருஷ்ணா

   

  உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மத்திரையில் படமாகப் பதியவைத்தால், உங்களால உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிறைந்துள்ள இப்புத்தகம், உங்களது ஆழ்மன சக்தியை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்தரைக்கிறது.

  or 3 X Rs. 450.00 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  உன் வாழ்வைப் புதுப்பித்துக் கொள்! ( Un Vaazhvai Puthupiththuk Kol )

  Rs. 2,390.00
  or 3 X Rs.796.67 with

  முஹம்மது அல்கஸ்ஸாலி

  தமிழில்: ஷாஹுல் ஹமீது உமரீ

   

  கண்ணியமும் வெற்றியும் விளைச்சலும் மனிதர்களின் உள்ளங்களில் இனிமையான கனவுகளாக மட்டுமே இருக்கும். அவற்றுக்காகச் செயல்படக்கூடியவர்கள் தங்களின் ஆன்மாவை அவற்றில் ஊதினால் மட்டுமே, இவ்வுலகில் இருக்கும் உணர்வோடும் செயல்பாட்டோடும் அவற்றை அடைந்தால் மட்டுமே அவை உயிரோட்டம் ததும்பிய உண்மைகளாக மாற்றமடையும்.

  – முஹம்மது அல்கஸ்ஸாலி

  or 3 X Rs. 796.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  வில்லாளன்

  Rs. 1,650.00
  or 3 X Rs.550.00 with

  பாலோ கொயலோ

   

  ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது!

   

  இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா, ஒரு காலத்தில் தன்னுடைய வில் வித்தைக்குப் புகழ் பெற்றவராக இருந்து, பிறகு பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றுள்ளவர். பல கேள்விகளைச் சுமந்து கொண்டு ஓர் இளைஞன் அவரைத் தேடி வருகிறான். அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் வாயிலாக, வில் வித்தையின் நுணுக்கங்களையும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கான அறநெறிகளையும் தெட்சுயா அவனுக்கு விளக்குகிறார்.

  or 3 X Rs. 550.00 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  த ஹார்ட்ஃபுல்னெஸ் வே (The Heartfulness Way)

  Rs. 1,990.00
  or 3 X Rs.663.33 with

  கமலேஷ் டி. படேல் ,ஜோதுபட்ட பொல்லாக்

   

  உறவுகள், தொழில், சொத்து, உடல்நலம் என பலவகையான தேவைகளுக்காக நாம் திட்டமிட்டு செயல்பட்டு கொண்டிருக்கும்போதும், பல நேரங்களில் நாம் வெறுமையையும், நமது உண்மையான சுயத்திலிருந்து விலகிவிட்ட உணர்வையும் அடைகிறோம். ஒரு கிரகம், பல சூரியன்களை சுற்றிவர முடியுமா? அதுபோன்று நம் வாழ்க்கையில் நமக்கு பல மையங்கள் இருப்பினும், ஒவ்வொரு இதயத்தின் நடுவிலும் இருக்கும் மிக ஆழமான அந்த உண்மையான மையம் எங்கே? ஒரு மாணவனுக்கும், ஆசிரியருக்கும் இடையிலான ஆன்மீகத் தெளிவூட்டும் உரையாடல்களின் மூலம் தாஜி என பலராலும் அறியப்படும் திரு கம்லேஷ் ஞி. படேல் அவர்கள், ஹார்ட்ஃபுல்னெஸ் வழிமுறையின் கோட்பாடுகள் மற்றும் தத்துவத்தை, ஹார்ட்ஃபுல்னெஸ் வழிமுறையை பயிற்சி செய்பவரும், பயிற்சி அளிப்பவருமான ஜோஷுவா போல்லாக்கிற்கு வெளிப்படுத்துகிறார். இப்புத்தகம், பிரார்த்தனை மற்றும் யோகப் பிராணாஹுதியின் சாராம்சத்தில் தொடங்கி நடைமுறை குறிப்புகளின் வாயிலாக தியானத்தை தெளிவுபடுத்துதல் வரை நம்மை சிந்திக்க வைக்கிறது. இது நமது புலன்களின் வரையறைகளைக் கடந்து வாழவும், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணையவும் வழிவகுக்கிறது. ஹார்ட்ஃபுல்னெஸ் வழிமுறையை பயிற்சி செய்வது என்பது தோற்றத்தைக் கடந்து சாராம்சத்தை நாடுவதாகும், சடங்குகளுக்குப் பின்னால் இருக்கும் சத்தியத்தை நாடுவதாகும். இது நம்மை நமது இதயத்தின் ஆழத்தில் மையப்படுத்தி அங்கிருக்கும் உண்மையையும், நிறைவையும் கண்டறிய உதவும்.
  or 3 X Rs. 663.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  கம்ப ராமாயணம்

  Rs. 2,690.00
  or 3 X Rs.896.67 with

  பழ. பழனியப்பன்

   

  கம்பனை முன்னமேயே கற்றவர்க்கு இது ஒரு ‘கையேடு’. இனி கற்பவர்க்கு இது ஒரு ‘கைவிளக்கு’.
   
  கம்பன் கல்லாத கலையும் வேதக்கடலும் இல்லை எனலாம். கம்பன் கீர்த்தியை, கம்ப நாடனின் கவிதா நேர்த்தியை, அவனிடம் மலிந்து கிடக்கும் கலைமகள் கடாட்சத்தை, அவனது விருத்தமெல்லாம் இன்றளவும் மெருகு குலையாமல் தகத்தகாயமாய்த் துலங்குகின்ற விந்தையை, அவனது சமயப்பொறை ஓம்புகின்ற சிந்தையை – எடை போட்டு – அதன் நிறை என்னவென்று நமக்கு எடுத்தோதியுள்ளார் கம்ப காவலர் கம்பனடி சூடி திரு. பழ. பழநியப்பன்.
   

  கம்பராமாயணத்தை சகலரும் அனுபவித்து ஜன்மம் கடைத்தேற வேண்டும், வீடுபேறு பெறவேண்டும், என்றெண்ணி இடையறாது முயன்று இந்த நூலை ஆக்கியளித்துள்ள திரு. பழ. பழநியப்பன் ‘இன்னோர் இராமானுச’ராய் என் கருத்துக்குப் புலப்படுகிறார்.
  முக்கியமான பாடல்களை, ஆங்காங்கு முழுமையாய்ச் சுட்டியும், சில கடினமான சொற்களுக்கு அகராதிபோல் பொருள் விளக்கமும், பின்பு அப்பாடல்களின் பொருளை ரத்தினச் சுருக்கமாய் புரியும் தமிழில் நமக்குப் படைத்தும் தமிழ்ப் பணியும் தரணிப் பணியும் ஒருசேர ஆற்றியிருக்கிறார் கம்பனடிசூடி.
   

  இந்த நூல் இருக்கும் இல்லந்தோறும் இன்பம் பெருகும்… பரிசுத்தமான இறையுணர்வில் இதயம் உருகும்!

  – கவிஞர் வாலி

  or 3 X Rs. 896.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  சைவ ஆதீனங்கள்

  Rs. 790.00
  or 3 X Rs.263.33 with

  ஜனனி ரமேஷ்

   

  கோயில்களின் வரலாறு வெளிவந்த அளவுக்கு ஆதீனங்களின் வரலாறோ அவற்றின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஆதீனகர்த்தர்கள் குறித்த வரலாறோ வெளிவந்ததில்லை.
   

  இந்து சமய வரலாற்றில் சைவ ஆதீனம் வகிக்கும் பாத்திரம் என்ன? ஆதீனம் என்றால் என்ன? மொத்தமுள்ள 18 ஆதீனங்களில் இப்போது எவ்வளவு இயங்கி வருகின்றன? அவை எங்கே அமைந்துள்ளன? அவற்றை யார் பொறுப்பேற்று நடத்திவருகிறார்கள்? ஆதீனங்களில் எத்தகைய மரபுகள் பின்பற்றப்படுகின்றன? பொதுவான மரபுகளா அல்லது ஒவ்வொன்றுக்கும் தனித்
  தனியே நடைமுறைகள் உள்ளனவா? சைவ சித்தாந்தம் பற்றிய பார்வையில் இவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் நிலவுகின்றனவா? சைவத்தை இவை எவ்வாறு வளர்த்தெடுக்கின்றன?
   

  ஆதீனங்களின் தோற்றம், வளர்ச்சி, பணிகள் அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்துகிறது இந்நூல். தமிழறிஞர்களையும் அவர்தம் படைப்புகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் ஜனனி ரமேஷின் மற்றுமொரு படைப்பு.

  or 3 X Rs. 263.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தாயம் ( Thaayam )

  Rs. 1,990.00
  or 3 X Rs.663.33 with

  மஹாத்ரயா ரா

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  இது மஹாத்ரயா எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கடிதமும், வாழ்க்கை, வேலை, சூழல்கள் மற்றும் மனப்போக்குகள் தொடர்பான பல ஆழ்ந்த பிரதிபலிப்புகளை வெளிப்படுத்துகின்றன. எளிய படிப்பினைகள் மற்றும் கொள்கைகள், நடைமுறைக்குகந்த யோசனைகள் ஆகியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

   

  இதில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைபிடித்தால், வாழ்க்கை மன நிறைவுடையதாக இருக்கும், சவாலான சூழல்களைச் சந்திப்பது சுலபமானதாக இருக்கும். ஓர் அகரீதியான முரண்பாடு, ஓர் உறவுச் சிக்கல், தொழில்ரீதியான ஓர் இக்கட்டான நிலை, ஒரு திட்ட மதிப்பீடு, நேர நிர்வாகப் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இங்கு தீர்வுகள் இருக்கின்றன.
  :”எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் விரியுங்கள். தேடுபவனுக்கு அங்கு ஒரு விடை காத்துக் கொண்டிருக்கும்.”
  ‘தாயம்’ என்ற இந்நூலில் தங்களுக்கான விடையை பலர் கண்டுபிடித்துள்ளனர்.

   

  வெற்றி பெரிய பெரிய விஷயங்களில் இருக்கிறது.

  மகிழ்ச்சி சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது.

  தியானம் வெறுமையில் இருக்கிறது.

  கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார்.

  அதுதான் வாழ்க்கை.

   

  “குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. நான் பல புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் ‘தாயம்’ புத்தகம்தான் நான் படித்ததிலேயே மிக அருமையான புத்தகம்.” –ஆர். சி. லஹோட்டி, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

   

  “…மிகப் பெரிய விஷயங்கள் இவ்வளவு எளிய வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு பக்கமும் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீங்கள் வெற்றிகரமானவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதை நீங்கள் படிக்கும்போது சிறப்பாக உணர்வீர்கள். அறிவுப் பொக்கிஷமாக, அக ஒளி வழிகாட்டியாகத் திகழும் இந்நூல்தான் என் இதயத்தைத் தொட்ட ஒரே ஆன்மீகப் புத்தகம். நான் இதைப் பற்றி எண்ணற்றோரிடம் பேசியிருக்கிறேன்.” — சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் மற்றும் பாடகர்

  or 3 X Rs. 663.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தென்னிந்தியக் கிராம தெய்வங்கள்

  Rs. 1,290.00
  or 3 X Rs.430.00 with

  ஹென்றி ஒயிட்ஹெட்

   

  எழுதப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல் கழிந்துவிட்ட பிறகும் இன்றும் முக்கியத்துவம் இழக்காமல், பல புதிய வெளிச்சங்களைத் தன்னுள் புதைத்து வைத்திருக்கும் ஒரு வண்ணமயமான ஆய்வு நூல் இது.
   

  சமயப் பரப்புரைக்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வருகை தந்த கிறிஸ்தவ குருமாரான நூலாசிரியர் ஹென்றி ஒயிட்ஹெட் சுமார் 40 ஆண்டுகாலம் தென்னிந்தியாவில் பல இடங்களில் பணியாற்றியிருக்கிறார். அப்போது வெவ்வேறு கிராமங்களில் மக்களிடையே நிலவிய பலவிதமான வழிபாட்டு முறைகளை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அவருக்கு ஏற்பட்டது. போகிற போக்கில் கண்டதையும் ஒரு சில தகவலாளிகள் சொன்னதைக் காதில் கேட்டு வாங்கியும் நூல்கள் எழுதிக்குவித்த மற்ற ஐரோப்பியர்கள் போலல்லாமல் ஒயிட்ஹெட் விரிவாகவும் ஆழமாகவும் கள ஆய்வுகள் மேற்கொண்டு உருவாக்கிய நூல் இது.
   

  தெய்வங்களைப் பற்றிய நூல் மட்டுமல்ல இது. பலியிடும் முறைகள், சடங்குகள், திருவிழாக்கள், பழக்கவழக்கங்கள் என்று தமிழக மக்களின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்யும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் விரிகிறது. திராவிடவியலில் ஆர்வம் கொண்டிருக்கும் அனைவரும் இதனை வாசிப்பதும் விவாதிப்பதும் அவசியம்.

  or 3 X Rs. 430.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தென்னிந்தியாவில் இஸ்லாமியப் படையெடுப்புகள்

  Rs. 1,990.00
  or 3 X Rs.663.33 with

  எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார்

   

  ‘இது தென்னிந்தியா மீது நடைபெற்ற இஸ்லாமியர்களின் படையெடுப்பைப் பற்றி விவரிக்கும் ஓர் அரிய புத்தகம். தென்னிந்தியாவில் இன்னும் கோயில்கள் இருப்பதால், அங்கு இஸ்லாமியர்களின் தாக்குதல்கள் நடைபெறவில்லை. அல்லது அவை மிகக் குறைவாகவே நடந்துள்ளன என்று பலர் கருதுகின்றனர். டெல்லி சுல்தானகத்தால் தென்னிந்தியா எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை இந்த அருமையான புத்தகம் கூறுகிறது’ என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற வரலாற்று ஆசிரியர் மீனாட்சி ஜெயின்.
   

  இந்நூலை எழுதிய எஸ். கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார் வரலாறு, தொல்லியல் துறைகளில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அரசியல் சாய்வுகளின்றி, தகுந்த ஆதாரங்களோடும் ஏற்கத்தக்க வாதங்களோடும் இஸ்லாமியப் படையெடுப்புகளின் வரலாற்றை உள்ளது உள்ளபடி பதிவு செய்திருக்கிறார்.
   

  சோழப் பேரரசின் வீழ்ச்சியில் தொடங்கி தக்காணத்தில் நடந்த முகமதியர்களின் படையெடுப்புகள், கில்ஜிக்களின் ஆட்சியில் நடைபெற்ற அழிவுகள், துக்ளக்கின் படையெடுப்புகள் என்று விரிந்து செல்கிறது இந்நூல். இந்திய வரலாற்றைப் புரிந்துகொள்ள உதவும் முக்கிய நூல்களுள் ஒன்று என்று இதனைச் சொல்லமுடியும்.

  or 3 X Rs. 663.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பிரிட்டிஷ் இந்தியாவில் பசுவதையும் எதிர்ப்பும்

  Rs. 990.00
  or 3 X Rs.330.00 with

  தரம்பால், டி. எம். முகுந்தன்
  பி. ஆர். மகாதேவன்

   

  பசுவதையைத் தடுப்பதென்பது இந்தியத்தன்மையை மீட்டெடுக்கும் திசையிலான பயணத்தின் முதல் காலடி. இந்திய சமூகத்துக்கு கௌரவத்தையும் புனிதத்தையும் மீட்டெடுக்க உதவும். இந்தியாவுக்குச் சுமையாக மாறியிருக்கும் அந்நிய சிந்தனைகள் மற்றும் மதிப்பீடுகளுக்கும் இந்தியாவின் பழங்காலத்து சுயமான சிந்தனை மற்றும் மதிப்பீடுகளுக்கும் 200-300 ஆண்டுகளாக நீடித்த பிரிட்டிஷ் அரசினால் சீர்குலைக்கப்பட்டவற்றைச் சுதந்தரம் பெற்றதும் தெளிவான சிந்தனையும் திடமான முயற்சிகளும் இருந்திருந்தால் மீட்டெடுத்திருக்கலாம். பசுவைப் பாதுகாத்து வளர்ச்சியைப் பரவச் செய்திருக்கலாம். இடையிலான முரண்பாடுகளை இந்தியர்கள் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்துகொள்ளும்போதுதான் இந்த மீட்சியும் மறுமலர்ச்சியும் சாத்தியமாகும்.

  or 3 X Rs. 330.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பிரியாணியும் புளியோதரையும்: சமகால அரசியல் விமர்சனங்கள்

  Rs. 1,290.00
  or 3 X Rs.430.00 with

  அரவிந்தன் நீலகண்டன்

   

  “மதமும் அரசியலும் மட்டுமல்ல, இணையக் கூடாத பல அம்சங்கள் இன்று பிரிக்க முடியாதபடி ஒன்று கலந்து நிற்கின்றன. கிரிக்கெட் இன்று விளையாட்டு மட்டுமல்ல. நீங்கள் யாருக்குக் கை தட்டுகிறீர்கள் என்பதை வைத்து உங்கள் தேசபக்தி அளவிடப்படுகிறது. படம் பார்ப்பது இனியும் பொழுதுபோக்கு அல்ல. அது அரசியல் செயல்பாடு.
   

  உங்கள் உணவு மேஜையும் பூஜையறையும் படுக்கையறையும் உங்கள் கட்டுப்பாட்டில் இன்று இல்லை. அவை வீதிக்கு இழுக்கப்பட்டு ஆராயப்படுகின்றன. உங்கள் உடை, காதல், ரசனை, நம்பிக்கை, கற்பனை, செயல் எதையும் இனி நீங்கள் தனித்துத் தீர்மானிக்க முடியாது. சாதி, மொழி, அரசியல், கலை, பண்பாடு என்று நம் வாழ்வோடும் சிந்தனைகளோடும் தொடர்புடைய ஒவ்வொரு துறையிலும் காணப்படும் சிக்கல்களையும் முரண்களையும் அரவிந்தனின் இந்நூல் ஆராய்கிறது.
   

  எந்தக் கோட்பாட்டுச் சட்டகத்துக்குள்ளும் சிக்கிக்கொள்ளாமல், எந்த கட்சிக் கொள்கைக்கும் ஒப்புக்கொடுக்காமல் துணிவோடும் சிந்தனைத் தெளிவோடும் மிகச் செறிவான உரையாடலை அரவிந்தன் இதில் நிகழ்த்துகிறார். வெறும் பரபரப்புச் செய்திகளாக நாம் கடந்து சென்றுவிட்ட பல நிகழ்வுகளுக்குப் பின்னாலுள்ள அரசியலையும் உளவியலையும் உள்வாங்கிக்கொள்ள இந்நூல் உதவும்.”

  or 3 X Rs. 430.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  நான் புரிந்துகொண்ட நபிகள் ( Naan Purinthu Konda Nabigal )

  Rs. 1,290.00
  or 3 X Rs.430.00 with

  அ.மார்க்ஸ்

   

  பிற மதங்களைப் போல இஸ்லாம் தன்னை ஏற்றுக்கொண்டவர்களுக்கு மரணத்திற்குப் பிந்திய வாழ்வை மட்டுமே இலக்காக வைத்து இயங்கும் மதமன்று. ஒரு மத நிறுவனத்தை மட்டுமின்றி இந்த உலகிலேயே நிறைவேற்றத்தக்க ஒரு சமூகத் திட்டத்தையும் முன்வைத்து இயங்குவதால் அது மிகவும் செயலூக்கத்துடன் வரலாற்றில் தலையிடுகிறது. நபிகள் ஒரு இறைத்தூதர் மட்டுமன்று. அவர் சமகால வரலாற்றில் தலையிட்ட ஒரு வரலாற்று நாயகரும்கூட. வாளெடுத்துப் போராடியவர். வாழ்நாளில் வென்று காட்டியவர்.

   

  மானுடராக நம்முன் வாழ்ந்ததன் விளைவாகவும் சமகால வரலாற்றில் செயலூக்கமிக்க ஓரங்கமாக விளங்கியதன் அடியாகவும் அவரின் வாழ்வு வண்ணமயமானதாக விளங்குகிறது. ஏராளமான சம்பவங்கள். ஏராளமான மனிதர்கள். ஒரு இறைத்தூதராக மட்டுமின்றி நகைச்சுவை பேசி நண்பர்களோடு சிரிக்கிற. மகனின் மரணத்தில் அழுது குலுங்குகிற, காதல் வயப்படுகிற, மன்னிக்கும் மாண்புகள் நிறைந்த ஒரு சிறந்த மனிதராகவும் அவர் நம்முன் தோன்றுகிறார். இந்தப் பரிமாணங்களை முன்வைக்கும் அதே நேரத்தில் அவர் வாழ்வின் ஊடாகவும், அவர் வழி இறங்கிய திருக்குர்ஆனின் ஊடாகவும் வெளிப்படும் சில முக்கிய இறையியல் சிந்தனைகளையும் நான் புரிந்துகொண்ட வகையில் இங்கே முன்வைத்துள்ளேன்.

  ——- முன்னுரையிலிருந்து

  or 3 X Rs. 430.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழமைகள்

  Rs. 1,950.00
  or 3 X Rs.650.00 with

  மிட்ச் ஆல்பம்

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  ‘மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ள இந்நூல், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்த எளிமையையும் ஞானத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”
  –எம். ஸ்காட் பெக், எம்.டி. நூலாசிரியர்

   

  இந்நூல் ஒரு வியத்தகு பொக்கிஷம். இறப்பு நிச்சயம் என்ற உணர்வு நம்முடைய மாபெரும் ஆசானாகவும் ஞானத்தின் மூலாதாரமாகவும் திகழ்கிறது. இந்நூலைப் படித்து முடித்ததும் நான் சிரித்தேன், பிறகு அழுதேன். என்னுடைய குழந்தைகளுக்காக நான் உடனடியாக இதன் ஐந்து பிரதிகளை வாங்கினேன்.”
  –பெர்னி எஸ். சீகல், எம்.டி, நூலாசிரியர்

   

  “அருமையான, இதயத்தை நெகிழ வைக்கின்ற இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் தயக்கமில்லாத அன்பின் கதகதப்பால் ஒளிர்கிறது.”
  –யூத மதகுரு ஹெரால்டு குஷ்னர், நூலாசிரியர்

   

  “தன்னுடைய வழிகாட்டியின்மீது அன்பைப் பொழிகின்ற ஒரு மனிதனின் கதை இது. வாழ்க்கைக்குச் செறிவூட்டுகின்ற ஒப்புயர்வில்லா நேர்மை இதில் இழையோடுகிறது.”
  –ராபர்ட் பிளை, நூலாசிரியர்

   

  “மிட்ச் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து பெற்ற ஓர் அற்புதமான பரிசை, இந்நூலின் வாயிலாக ஒரு வழிகாட்டியாகவும், ஒரு நமக்கும் வழங்குகிறார். மனிதாபிமானியாகவும், ஓர் ஆன்மிகவாதியாகவும் விளங்கிய பேராசிரியர் மோரி, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு முழுநீள வகுப்பை நடத்தியுள்ளார்.”
  — ஏமி டேன் நூலாசிரியர்

   

  “நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் விதத்திலும் துடிப்புடனும் எழுதப்பட்டுள்ள இந்நூல், அன்பு மற்றும் இரக்கத்தின் ஊடாக ஒருவரோடு ஒருவர் ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்வதுதான் மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்பதில் பேராசிரியர் மோரி கொண்டிருந்த ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அப்பாடத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம் மிட்ச் தன்னுடைய குருவுக்கு ஒரு மாபெரும் பரிசை வழங்கியுள்ளார்.”
  –டாக்டர் ஜேன் கிரீர் நூலாசிரியர்

   

  “சில சமயங்களில், நீங்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் பார்வையை மீண்டும் ஒரு முறை ஓடவிட்டால், நாமெல்லாம் தேவதைகளின் நடுவே இருப்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும். தன்னுடைய சொந்த இறப்பை எதிர்கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க மோரி போன்ற ஒரு மனிதரால்தான் முடியும். அவர் ஒரு ஞானி என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலைப் படித்து முடித்தப் பிறகு, வகுப்பு இன்னும் முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”
  –ஜெஃப் டேனியல்ஸ்

  or 3 X Rs. 650.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  அர்த்தமுள்ள இந்துமதம் ( Arthamulla Indumatham )

  Rs. 4,390.00
  or 3 X Rs.1,463.33 with

  கண்ணதாசன்

   

  அர்த்தமுள்ள இந்து மதம் என்பது கவிஞர் கண்ணதாசன் இந்து சமயத்தின் பல்வேறு தத்துவங்களையும், அத் தத்துவங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துக்களையும் கொண்டு எழுதிய ஒரு சமய நூல். தினமணிக் கதிர் இதழில் ஒராண்டுக் காலம் தொடராக வெளிவந்த கட்டுரைகள் தொகுக்கப்பட்டு வானதி பதிப்பகம் மூலம் நூலாக வெளியிடப்பட்டது. பத்து பாகங்களாகத் தனித்தனிப் புத்தகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலை 2009 ஆம் ஆண்டில் ஒரே நூலாகத் தொகுத்து கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டது.

  or 3 X Rs. 1,463.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  இப்பொழுது ( Ippoluzhu ) The Power of Now

  Rs. 1,490.00
  or 3 X Rs.496.67 with

  எகார்ட் டோலே

  தமிழில்: N. கனகமணி

   

  ‘இந்த புத்தகம் மனிதகுலத்திற்கு “ஆன்மீக பரிசு” என்று பல நூறு ஆண்டுகளாக நினைவுகூரப்படும்.’ — அபி வோஹ்ரா

   

  எளிமையான கொள்கைகள் மற்றும் கூற்றுகள் மட்டுமல்லாமல், புத்தகம் வாசகர்களை அவர்களின் உண்மையான மற்றும் ஆழமான சுயத்தை கண்டறிய மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் ஆன்மீகத்தின் இறுதி நிலையை அடைய ஒரு எழுச்சியூட்டும் ஆன்மீக பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.

  or 3 X Rs. 496.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஒரு யோகியின் சுயசரிதம்

  Rs. 1,990.00
  or 3 X Rs.663.33 with

  பரமஹம்ஸ யோகானந்தர்

   

  30–ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த 100 ஆதங்க நூல்களில் ஒன்று எனப் பெயர் பெற்ற பரமஹம்ஸ் யோகானந்தரின் குறிப்பிடத்தக்க வாழ்க்கை சரித்திரம் உங்கனை. மகான்கள் மற்றும் போகியர், அறிவியல் மற்றும் அதிசயங்கள், மாரணம் மற்றும் உயிர்த்தெழுதலைப் பற்றிய உலகத்தின் மறக்க வொண்ணா ஆராய்ச்சிகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அவர். ஆன்ம-நிறைவை அளிக்கும் ஞானத்துடனும் அன்பை எழுப்பும் புத்திக் கூர்மையுடனும், வாழ்க்கை மற்றும் பிரபஞ் சத்தினுடைய மிக ஆழ்ந்த இரகசியங்களை விளக்குகிறார் -ஒவ்வொரு மனிதனின் வாழ்க் கையிலும் உள்ள ஆனந்தம், அழகு மற்றும் மறைந்துள்ள எல்லையற்ற ஆன்மீகத் தன்மைகள்.

   

  ஆகியவற்றை நோக்கி நம் இதயங்களையும் மனங்களையும் திறந்த வண்ணம்தான்.இதன் ஆசிரியரால் நிறுவப்பட்ட ஸ்தாபன மாசிய யோகதா சத்சங்க சொஸைடி, ஆஃப் இந்தியா-விடமிருந்து மட்டுமே கிடைக்கப் பெறுகின்ற இந்த முழுமையான பதிப்பு 1946ம் வெருடப் பதிப்பிற்குப் பிறகு அவர் இணைத்த விரிவான விஷயங்களையும் சேர்த்து இறுதி பாலுக்கான அவரது அனைத்து அலாக்களையும் உள்ளடக்கியுள்ளாதாகும்மனம் மற்றும் ஆன்மாவின் ஜன்னால் களைத் திறக்கும் புத்தகம்.

  or 3 X Rs. 663.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  கைலாய: மானசரோவர் யாத்திரை

  Rs. 990.00
  or 3 X Rs.330.00 with

  இலந்தை சு.ராமசாமி

   

  ‘இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட. பாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை; பயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை.
   

  உணவுக் குறிப்புகளிலிருந்து குளிர்ப் பாதுகாப்பு முறைகள் வரை. எல்லாம், எல்லாமே அடங்கிய நூல் இது. நூலாசிரியர் இலந்தை ராமசாமி, திபெத் வழியே கயிலாய மலை யாத்திரை மேற்கொண்டு பல சிலிர்ப்பூட்டும், மயிர்க்கூச்செறியச்செய்யும் அனுபவங்களைச் சந்தித்துத் திரும்பியவர். தமது அபாரமான எழுத்தாற்றலில் அனுபவங்களை அப்படியே வடித்துத் தருகிறார். இதற்குமுன் வடதுருவப் பகுதியான அலாஸ்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ‘அலாஸ்கா: அழகின் சிலிர்ப்பு’ என்கிற பயண நூலை எழுதியவர்.’

  or 3 X Rs. 330.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஸ்காந்த புராணம்

  Rs. 1,190.00
  or 3 X Rs.396.67 with

  ஸ்ரீ கோவிந்தராஜன்

   

  ‘இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட. பாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை; பயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை. உணவுக் குறிப்புகளிலிருந்து குளிர்ப் பாதுகாப்பு முறைகள் வரை. எல்லாம், எல்லாமே அடங்கிய நூல் இது. நூலாசிரியர் இலந்தை ராமசாமி, திபெத் வழியே கயிலாய மலை யாத்திரை மேற்கொண்டு பல சிலிர்ப்பூட்டும், மயிர்க்கூச்செறியச்செய்யும் அனுபவங்களைச் சந்தித்துத் திரும்பியவர். தமது அபாரமான எழுத்தாற்றலில் அனுபவங்களை அப்படியே வடித்துத் தருகிறார். இதற்குமுன் வடதுருவப் பகுதியான அலாஸ்காவுக்குப் பயணம் மேற்கொண்டு ‘அலாஸ்கா: அழகின் சிலிர்ப்பு’ என்கிற பயண நூலை எழுதியவர்.’
  or 3 X Rs. 396.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  அறியப்படாத கிறிஸ்தவம் Part-1 & Part-2

  Rs. 8,590.00
  or 3 X Rs.2,863.33 with

  நிவேதிதா லூயிஸ்

   

  கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு, முற்றிலும் புதிய பார்வைகளை அளிக்கும் ஒரு கலகப் புத்தகத்தை நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார்.
   

  இரு பெரும் பகுதிகளில் ஆயிரம் பக்கங்களைக் கடந்து விரிகிறது இந்நூல். தென்மேற்குத் தமிழகத்தின் முள்ளூர்த்துறை முதல் திண்டிவனம் வரை; கிழக்கே புதுவை தொடங்கி மேற்கே கொடிவேரிவரை தமிழகத்தில் கிறிஸ்தவம் வேர்கொண்டு வளர்ந்த கதை இதில் விரிகிறது.
   

  விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டு, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, அவர்களுடைய கதைகளையும் அனுபவங்களையும் வலிகளையும் கனவுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கவனமாகத் திரட்டி இந்நூலில் அவர் தொகுத்திருக்கிறார்.

  or 3 X Rs. 2,863.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  வாரணாவதம்: துரியோதன பர்வம்

  Rs. 1,890.00
  or 3 X Rs.630.00 with

  களம்பூர் பாபுராஜ்

   

  வாரணாவதம் துரியோதனன் பார்வையில் மகாபாரதம். இதிகாசங்களும் புராணங்களும் காற்று, கடல், ஆகாயம் போல் அனைவருக்குமானவை. அவற்றுக்கு எல்லைகள் வகுக்க இயலாது. எந்தக் கோணத்திலிருந்தும் அணுகலாம். எப்படி வேண்டுமானாலும் மறுவாசிப்பு செய்யலாம். எவ்வளவு நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ அவ்வளவு விதங்களில் அர்த்தப்படுத்திக்கொள்ளலாம்.

  மகாபாரதத்தை யாருடைய பார்வையிலிருந்தும் விரித்தெடுக்கலாம். நன்மை தீமை, தர்மம் அதர்மம், நாயகன் வில்லன் ஆகிய இருமைகளைக் கொண்டு மகாபாரதத்தை அணுகுவது ஒரு முறை என்றால் இந்த மதிப்பீடுகளிலிருந்து விலகி, எதிர் நிலையிலிருந்து அதன் கதையைச் சொல்லத் தொடங்குவது இன்னொரு முறை.

  இந்நாவலில் மகாபாரதம் துரியோதனின் கோணத்திலிருந்து விரிகிறது. கறுப்பும் வெள்ளையும் கலந்து வியாசர் உருவாக்கிய துரியோதனனை இருள் மனிதனாக மட்டும் சுருக்கிக் காணவேண்டியதில்லை என்று வாதிடும் இந்நாவல் ஒரு புதிய தேடலைத் தொடங்கி வைப்பதோடு நமக்கு நன்கு பரிச்சயமான கோணங்களையும் நிகழ்வுகளையும் புதிய நோக்கில் மறுஆய்வுக்கு உட்படுத்துகிறது. முற்றிலும் புதிய, வண்ணமயமான ஒரு மகாபாரதத்தை வாசிக்கத் தயாராகுங்கள்.

  or 3 X Rs. 630.00 with Koko Koko
  Read more