Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: இயற்கை

Showing all 8 results

 • Sale!

  [RARE] கடல்களும் மனிதனும் ( Ocean and Man )

  Rs. 2,190.00
  or 3 X Rs.730.00 with

  ப. ஸலோகின்

  தமிழில்: டாக்டர் இரா. பாஸ்கரன்

   

  இன்று உலகக் கடல்களின் மீட்பும் கடல் வளங்களை விவேகமாகப் பயன்படுத்துவதும் உலகப் பிரச்சினையாகும். உலகம் பூராவும் உள்ள மக்களின் கூட்டு முயற்சியால்தான் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

   

  * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

  இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

  ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

  or 3 X Rs. 730.00 with Koko Koko
  Add to cart
 • Sale!

  [RARE] புவியகத்தின் புரியாப் புதிர்கள் ( The Mystery of The Earth’s Mantle )

  Rs. 790.00
  or 3 X Rs.263.33 with

  அ. மலாஹவ்

  தமிழில்: ரா. கிருஷ்ணையா

   

  நமது புவியின் அகத்துள் இருப்பது என்ன? அதன் உள்ளடுக்கு மறைத்து வைத்திருக்கும் இரகசியங்கள் யாவை? மீயாழத்துறப்பணத் துளைகளில் செலுத்தப்படும் நுண்ணுணர்வுக் கருவிகள் இங்கு காணப் போவது என்ன? கொதிக்கும் மேக்மாக் குழம்பா, அல்லது மீத்திண்மத் திடப் பொருளா? கற்பனைக்கும் மீறிய மிக உயர்ந்த வெப்பநிலைகளா, அல்லது தனிமச் சுழியை அணுகும் கொடுங்குளிரா?

   

  எண்ணில் அடங்காத பல்வேறு கருதுகோள்களும் முன்வைக்கப்பட்டுள்ளன; ஆனால் விஞ்ஞானத்தால் இன்னமும் இக்கேள்விகளுக்குத் திட்டவட்டமான பதில் அளிக்க இயலவில்லை.

   

  பூமியின் ஆழ் மண்டலங்களது இரகசியங்களை விஞ்ஞானிகள் எப்படி யெல்லாம் பாடுபட்டுத் தேடிக் கண்டு பிடிக்கிறார்கள் என்று இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. நமது புவிக்கோளத்தின் அடியாழங்களை ஆராய்ந்து அறிவதற்காகத் தமது வாழ்வைப் பணித்துள்ள புவியியலாளர்கள் அயராது மேற்கொள்ளும் முயற்சி களின், ஆராய்ச்சிகளின் சிந்தையை அள்ளும் காவியமே இப் புத்தகத்தின் உள்ளடக்கம்.

   

  * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

  இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

  ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

  or 3 X Rs. 263.33 with Koko Koko
  Add to cart
 • Ariviyal Yedu Yaen Yepadi Flashbookslk
  Out of Stock

  அறிவால் எது? ஏன்? எப்படி? (பாகம் 1)

  Rs. 1,990.00
  or 3 X Rs.663.33 with

  என்.ராமதுரை

   

   

  நீங்கள் வாழும் உலகை அறிவியல்பூர்வமாகப் புரிந்துகொள்ள இதைவிட எளிமையான இன்னொரு வழிகாட்டி இல்லை. இந்தப் பூமி எப்படிப்பட்டது?

   

  இந்தப் பிரபஞ்சத்தில் என்னென்ன கிரகங்கள் இருக்கின்றன?

   

  இதுவரை நடத்தப்பட்ட விண்வெளி ஆய்வுகள்மூலம் நாம் புதிதாக என்ன கற்றிருக்கிறோம்?

   

  இயற்பியலும் உயிரியலும் புவியியலும் நம் அறிவை எப்படி விசாலமாக்குகின்றன?

   

  அணு முதல் இமய மலை வரை; வெட்டுக்கிளி முதல் டைனோசார் வரை; நிலம் முதல் ஆகாயம்வரை; ரத்தம் முதல் மூளை வரை; ஓசோன் முதல் பொலோனியம் வரை; பனிக்கட்டி முதல் எரிமலை வரை; நிலா முதல் ரோபோ வரை. அனைத்தையும் மிகவும் எளிமையாக, ரசிக்கும்படி அறிமுகப்படுத்துகிறது இந்த அறிவியல் பெட்டகம். இந்நூல் அறிமுகப்படுத்தும் அறிவியல் அடிப்படைகளைக் கற்பதன்மூலம் நம் சிந்தனைகள் அழகாகும்; நம் பார்வை விசாலமடையும்; இந்த உலகமே நம் பார்வையில் வண்ணமயமாக மாற்றம் பெறும். இனிமையான எழுத்து நடை. ஆதாரபூர்வமான தகவல்கள்.

  or 3 X Rs. 663.33 with Koko Koko
  Read more
 • Sale!
  vilangiyal flashbooks.lk
  Out of Stock

  [RARE] விலங்கியல் (Zoology)

  Rs. 2,690.00
  or 3 X Rs.896.67 with

  வ. ஷாலாயேவ் , நி. ரிக்கவ்

   

  இந்த விலங்கியல் பாடபுத்தகம் ஆரம்பத்தில் சோவியத் யூனிய னுக்காகத் தயாரிக்கப்பட்டது. அங்கே இதன் இருபது மறு பதிப்புக்கள் வெளியாயின. ருஷ்ய சோவியத் சோஷலிஸக் கூட்டுக் குடியரசிலும் மற்ற யூனியன் குடியரசுகளிலும் இருபது ஆண்டுக் காலம் இது உயர் நிலைப் பள்ளிகளில் பாடபுத்தகமாகப் பயிலப்பட்டது. அறுபதுக்களின் தொடக்கத்தில் இந்நூல் தெற்கு ஆசிய மொழிகள் பலவற்றில் வெளியிடப்பட்டது. தற்போது இப்பாடபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு இம்மொழிகளுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. முதல் பதிப்பில் போலவே இந்தப் பதிப்பிலும் ஓரணுவுயிர்கள் முதல் பிரைமேட்டுகள் ஈறாக விலங்குலகின் முக்கியக் குழுக்களைப் பற்றிய முறையான சுருக்க விவரம் தரப்பட்டிருக்கிறது. இயற்கை உருவ இயல், உடலியல், சூழ்நிலை இயல், கருவியல், தொல்லுயிரியல், வகைப் பாகு பாட்டியல் ஆகிய விலங்கியலின் பல்வேறு துறைகளிலிருந்து திரட்டப் பட்டுள்ள தகவல்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

   

   

  * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

  இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

  ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

  or 3 X Rs. 896.67 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஆட்கொல்லி விலங்கு

  Rs. 1,390.00
  or 3 X Rs.463.33 with

  ஆட்கொல்லி விலங்கு

   

  “அடுத்து என்ன, அடுத்து என்ன என்று பரபரப்போடு பக்கங்களைப் புரட்ட வைக்கும் பலவிதமான சாகச அனுபவங்கள் அடுத்தடுத்து இந்நூலில் விரிகின்றன.

  ஒரு புலி எந்தப் புள்ளியில் ஆட்கொல்லி விலங்காக உருமாறுகிறது?
   
  அது எவ்வாறு மனிதர்களை வேட்டையாடுகிறது?
   
  வனத்தில் வாழும் ஒரு சிறுத்தை ஏன் மனிதர்கள்மீது பாயவேண்டும்?
   
  ஒரு வேட்டை எவ்வாறு படிப்படியாகத் திட்டமிடப்படுகிறது?
   
  ஓர் ஆட்கொல்லி விலங்கின் இருப்பிடம் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகிறது?
   
  விலங்கு வரும்வரை எப்படிப் பதுங்கியிருக்கவேண்டும்?
   
  காட்டிலும் மேட்டிலும் என்னென்ன வகையான ஆபத்துகள் காத்திருக்கும்?
   
  தேடிப்போன விலங்கு கண்முன்னால் திரண்டு நிற்கும் அந்தக் கணத்தில் என்ன நடக்கிறது?
   

  அடுத்து எந்த விலங்கு தோன்றுமோ எப்படித் தாக்குமோ என்று அச்சத்தில் உறைந்துகிடக்கும் கிராமத்து மக்களை மீட்டெடுக்க கென்னத் ஆண்டர்சன் தனது வேட்டையைத் தொடங்குகிறார். மனிதன் இயற்கையின்மீது பெரும் போர் தொடுக்கிறான். இயற்கை பதிலுக்கு மனிதனை வேட்டையாடத் தொடங்குகிறது. இந்தப் போரில் வெல்லப்போவது யார்? “

  or 3 X Rs. 463.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  கழுகுகளின் காடு

  Rs. 1,590.00
  or 3 X Rs.530.00 with

  சந்துரு

   

  வன விலங்குகள்மீதும் சூழலியல்மீதும் ஆர்வம் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம்.
   

  சலசலத்து ஓடும் ஆற்று நீரைக் கண்டு மயங்கி நிற்கும்போது, தொலைவில் ஒரு யானை பிளிறும் சத்தம் கேட்கும். அதை ஊன்றி கவனிக்கும்போது சிறுத்தையின் குரல் உலுக்கும். சில நிமிடங்களில் ஏதோ ஒரு விலங்கு நீர் அருந்த வரும். ஆந்தைகள் அலறும். காட்டெருமை எதையோ துரத்திக்கொண்டு ஓடும். வானத்தில் ஒரு கழுகு வட்டமிடத் தொடங்கும்.
   

  வனம் ஒரு புதையல். வனம் ஓர் அற்புதம். வனம் நம் வாழ்வின், நம் சிந்தனையின், நம் கனவின் தவிர்க்கவியலாத ஒரு பகுதி. அந்த வண்ணமயமான பகுதியை எளிமையாகவும் அழகாகவும் அறிமுகப்படுத்தும் நூல் இது.
   

  காட்டுயிர் சார்ந்த ஆய்வுகளிலும் களப்பணிகளிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் சந்துரு தனது பயண அனுபவங்களின் ஊடாகத் தான் கண்டதையும் கேட்டதையும் கற்றதையும் கதை போல் இதில் பதிவு செய்திருக்கிறார். கழுகுகளின் உலகை இவ்வளவு நெருக்கமாகச் சென்று ஆராயும் இன்னொரு புத்தகம் தமிழில் இல்லை.

  or 3 X Rs. 530.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  ஆடு-மாடு வளர்ப்பு

  Rs. 990.00
  or 3 X Rs.330.00 with

  விகடன் குழு

   

  ஆடு மாடுகளை வளர்ப்பது என்பது ஆதிகாலத்திலிருந்து மனித சமுதாயத்துக்குப் பயனளிக்கும் ஒன்றாகவே கருதப்பட்டு வருகிறது. எத்தனையோ விவசாயக் குடும்பங்களுக்கு ஆடு மாடுகள்தான் சோறு போடுகின்றன. இன்று பல குழந்தைகள், ஏன் பெரியவர்கள்கூட பசுவின் பால் குடித்துதான் வளர்கிறார்கள்; வாழ்கிறார்கள். விவசாயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்துவிட்டாலும், விவசாயத் தொழில்களுக்கு ஆடு மாடுகள் ஏராளமாக உதவி புரிகின்றன. மாடுகள் தங்கள் உழைப்பைத் தருவதோடு இறைச்சி, பால், சாணம், கோமியம், கொம்பு, தோல் என அனைத்தையும் தந்து உதவுகின்றன. ஆடு வளர்ப்பிலும் அதேபோலதான். ஆட்டின் இறைச்சி, தோல், பால், புழுக்கை என அனைத்தும் பணமாகிறது. கறவை மாடுகள், உழவு மாடுகள், எருமை மாடுகள், காளை மாடுகள் போன்ற மாட்டு இனங்களை வளர்க்கவும், அவற்றுக்குத் தேவையான புல் வகைகள், தீவனங்கள், பராமரிப்பு… என விளக்கங்களைத் தருவதோடு, மாடுகளை வாங்கவும் விற்கவும் சந்தைகள், வங்கிக்கடன், லாபகணக்குகள் என அத்தனை விவரங்களையும் தருகிறது இந்த நூல். ஆடு&மாடு வளர்ப்பு என்பது ஒரு லாபம் தரும் தொழிலாகவே மாறிவிட்டது.

  or 3 X Rs. 330.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  காக்கைச் சிறகினிலே :பறவைகளின் வண்ணமயமான உலகம்

  Rs. 1,590.00
  or 3 X Rs.530.00 with

  சந்துரு

   

  பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி!
   

  ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது?
   

  எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா? ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு விதமான அலகு இருப்பது ஏன்? பறவைகள் எங்கிருந்து இவ்வளவு அழகிய வண்ணங்களைப் பெறுகின்றன?
   

  பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று மிக விரிவான பின்னணியில் பறவைகளின் கதையை விவரிக்கிறது இந்நூல். ஒரே நேரத்தில் அறிவியல் களஞ்சியமாகவும் அழகியல் படைப்பாகவும் இது மிளிர்வதைக் காணலாம்.
   

  ஒரு பறவையாக இருப்பது என்றால் என்ன என்பதை இவ்வளவு நுணுக்கமாகவும் இவ்வளவு சுவையாகவும் விவரிக்கும் இன்னொரு நூல் தமிழில் வந்ததில்லை. திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராகப் பணிபுரியும் கோகுலாவின் இந்நூல் பறவையியல், சூழலியல், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்குப் பெரும் திறப்பாக அமையும்.

  or 3 X Rs. 530.00 with Koko Koko
  Read more