Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
Category
- English Books
- (Auto)Biography & Memoir
- Artificial Intelligence
- Astronomy
- Atheism & Agnosticism
- Biological Sciences
- Business
- Career & Success
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Environment & Nature
- Health & Nutrition
- History
- Humor
- Investment & Strategy
- Linguistics
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mathematics & Physics
- Medicine
- Mental Health
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Oil Politics
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Science
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- Venture Capital
- War
- Women Empowerment
- University Magazine
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- கிளாசிக்ஸ்
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- பங்குச்சந்தை
- பணம்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மன ஆரோக்கியம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
Category: பங்குச்சந்தை
Showing all 7 results
கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட்
Rs. 3,790.00Rs. 3,390.00Add to cartராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.”
சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பணக்காரத் தந்தையின் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் திரைவிலக்குகிறது.
பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடம் எப்போதேனும் கேட்டதுண்டா?
• பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும்போது, சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்?
• சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கின்றனர்?
• தொழில் யுகத்திலிருந்து தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?
தங்கம் (அள்ள அள்ளப் பணம் – 7)
Rs. 1,190.00Read moreசோம. வள்ளியப்பன்
ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு
· தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
· நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது?
· தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது?
· தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா?
· கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா?
தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது.
வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.
பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (அள்ள அள்ளப் பணம் – 3)
Rs. 1,290.00Read moreசோம. வள்ளியப்பன்
நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்து கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F). அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O).
பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1)
Rs. 1,290.00Read moreசோம. வள்ளியப்பன்
பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்?
இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது. பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன
உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.பங்குச்சந்தை அனாலிசிஸ் (அள்ள அள்ளப் பணம் – 2)
Rs. 1,190.00Read moreசோம. வள்ளியப்பன்
- பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது ‘அள்ள அள்ளப் பணம் – 1’. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள். நிச்சயம் மேலே போகும் என்று எதிர்பார்த்த ஷேர்கள் கீழே இறங்கின. சில சமயம் மார்க்கெட்டே விழுந்தது. சரி, விற்றுவிடலாம் என்று நீங்கள் தீர்மானித்து, விற்றபிறகு மார்க்கெட் ஏறியது. நீங்கள் தடுமாறினீர்கள். கொஞ்சம் புரிவது போலும் இருந்தது, புரியாமலும் இருந்தது.
- எந்தப் பங்கை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது? Fundamental Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். எப்பொழுது வாங்க வேண்டும்? எப்பொழுது விற்க வேண்டும்?
- எப்பொழுது வாங்கவோ, விற்கவோ கூடாது? Technical Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். பொருளாதாரம்? Macroeconomics தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரியாக ஆவது இயலாது. இந்த மூன்றையும் எளிமையாக, உங்களுக்குப்பரியும் வகையில், இந்தப் புத்தகம் சொல்லித்தருகிறது!
பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4)
Rs. 1,190.00Read moreசோம. வள்ளியப்பன்
- பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார்.
- பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் – 6)
Rs. 790.00Read moreசோம. வள்ளியப்பன்
எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்க வேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.
வேறெதையும்விட மியூச்சுவல் ஃபண்டில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது.