Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: பொதுவுடைமை

Showing 1–9 of 16 results

  • [RARE] இயக்கவ்வியல் பொருள்முதல்வாதம் என்றால் என்ன? (What is Dialectical Materialism?)

    Rs. 1,290.00

    வி. கிரபிவின்

    தமிழில் நா தர்மராஜன் எம் .ஏ .

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (The Communist Manifesto)

    Rs. 1,490.00

    கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்

    தமிழில்: ரா. கிருஷ்னையா

    “சமுதாய வாழ்க்கையெனும் அரங்கினையும் தன்னுள் கொண்டு முரணற்றதாய் அமைந்த பொருள்முதல்வாதம்; வளர்ச்சி பற்றிய மிக விரிவான, மிக ஆழமான போதனையாகிய இயக்கவியல்; வர்க்கப் போராட்டத்தையும், ஒரு புதிய, கம்யூனிச சமுதாயத்தின் படைப்பாளனாகிய பாட்டாளி வர்க்கத்திற்குள்ள உலக வரலாற்று முக்கியத்தவமுடைத்த புரட்சிகரப் பாத்திரத்தையும் பற்றிய தத்துவம்-இவை யாவும் அடங்கிய ஒரு புதிய உலகக் கண்ணோட்டத்தை இந்த நூல் மாமேதையருக்குரிய தெளிவோடும் ஒளிச்சுடரோடும் எடுத் துரைக்கிறது.”
    – லெனின்

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் (The Origin of the Family, Private Property & the State)

    Rs. 1,690.00

    ப். எங்கல்ஸ்

    குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்ற இந்நூலை பி. எங்கெல்ஸ் 1884ஆம் ஆண்டு மார்ச் இறுதி முதல் மே இறுதி வரையிலான இரண்டே மாதங்களில் எழுதினார்.

    மார்க்சின் கையெழுத்துப் பிரதிகளைப் புரட்டி பார்த்த பொழுது எங்கெல்ஸ், முற்போக்கு அமெரிக்க விஞ்ஞானி லூ. ஹெ. மார்கன் எழுதிய பண்டைக்காலச் சமூகம் என்ற நூலின் சுருக்க குறிப்பைக் கண்டுபிடித்தார். அதை 1880-1881இல் மார்க்ஸ் எழுதியிருந்தார். அதில் மார்க்சின் பல விமர்சன குறிப்புகளோடுகூட சொந்த கருத்துகளும், பிற நூல்கள், கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்ட கூடுதல் விவரங்களும் இடம் பெற்றிருந்தன. அச்சுருக்க குறிப்பைப் படித்து, அது மார்க்சும் தானும் சேர்ந்து உருவாக்கிய வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கருத்தையும் பூர்விக சமுதாயம் பற்றிய தம் கண்ணோட் டங்களையும் ஊர்ஜிதப்படுத்துவதைக் கண்ட எங்கெல்ஸ், மார்க்சின் குறிப்புகளையும் மார்கனின் நூலில் அடங்கியுள்ள ஒரு சில முடிவுகள், உண்மை விவரங்களையும் நூல் பரவலாகப் பயன்படுத்தி ஒரு தனி நூலை எழுதுவது அவசியம் என்ற முடிவிற்கு வந்தார். இது மார்க்ஸ் ‘விட்டுச் சென்ற ஒரு பணியைச் செய்து முடிப்பதாக” அமையுமென்று எங்கெல்ஸ் கருதினார். இந்நூலை எழுதும் பொழுது, கிரீஸ், ரோம், பண்டைய அயர்லாந்து, பண்டைய ஜெர்மானியர்கள் பற்றியெல்லாம் தான் நடத்திய ஆராய்ச்சிகளின் மூலம் கிட்டிய ஏராளமான விவரங்களையும் எங்கெல்ஸ் பயன்படுத்தினார்.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (The Origin of the Family, Private Property and The State)

    Rs. 1,290.00

    இ . லி . அந்திரேயெவ்

    சோவியத் விஞ்ஞானி இ. அந்திரேயெவ் இந்நூலில், எங்கெல்ஸ் எழுதிய குடும்பம், தனிசொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் புத்தகத்தின் முக்கிய அம்சங்களை ஆராய்கிறார். பூர்விக சமுதாயத்தின் வளர்ச்சிக் கட்டங்கள், இச்சமுதாயத்திலிருந்து பகைமுரண்பாடுகளடங்கிய வர்க்க சமுதாயத் திற்கு மாறியது, திருமண-குடும்ப உறவுகளின் வரலாற்றுப் அரசும் பரிணாமம், தனியுடைமையும் அரசும் தோன்றியது ஆகியவற்றின் மீது ஆசிரியர் கவனம் செலுத்துகிறார் இவற்றோடு கூட எங்கெல்ஸ் முன்வைத்த பிரச்சினைகளைப் பற்றிய இன்றைய விஞ்ஞானக் கருதுகளையும் வாசகர்கள் அறியலாம்.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] கூலி, விலை, லாபம் (Wages, Price and Profit)

    Rs. 1,290.00

    கார்ல் மார்க்ஸ்

    இந்நூல் 1865 ஜூனில் முதலாம் அகிலத்தின் பொதுக் குழுவில் கா. மார்க்ஸ் ஆற்றிய உரையின் வாசகமாகும். அதில்தான் கா. மார்க்ஸ் தன் உபரி மதிப்புத் தத்துவத்தின் அடிப்படைகளை முதன்முதலாகப் பகிரங்கமாக அறிவித்தார்.

    அகில உறுப்பினர் வேஸ்டன், கூலி உயர்வு தொழிலாளர்களின் நிலையை மேம்படுத்தாது, தொழிற்சங்கங்களின் நடவடிக்கை தீயது என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்றார்; கா. மார்க்சின் உரை இத் தவறான கருத்துகளை நேரடியாகச் சாடியது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட் டத்தையும் தொழிற்சங்கங்களையும் எதிர்த்த புரூதோன் வாதிகள் மற்றும் லஸ்ஸால்வாதிகளின் மீதும் இந்த உரை அடியாக விழுந்தது.

    தன் உரையில் கா. மார்க்ஸ், தம்மைச் சுரண்டும் மூலதனத்தின் முன் பாட்டாளிகள் அடங்கி சமரசமாகப் போக வேண்டும் என்பதை உறுதியோடு எதிர்க்கிறார், தொழிலாளர்களுடைய பொருளாதாரப் போராட்டத்தின் பங்கையும் முக்கியத்துவத்தையும் தத்துவார்த்த ரீதியில் ஆதாரப்படுத்துகிறார். இதைப் பாட்டாளிகளின் இறுதி லட்சியத்திற்கு-கூலியுழைப்பு முறையையே அடியோடு ஒழிப்பதற்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் கோடிட்டுக் காட்டுகிறார்.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்

    Rs. 1,390.00

    லெனின்

    தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு:

    ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, மகா ருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி, சோசாலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் பிரச்சனை அல்லது “தன்னாட்சிமயமாக்கல்”.

    ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை கேடலோனியாக்களும் குர்திஸ்தான்களும் வரவேற்கும் இக்காலத்தில் லெனினை வாசிப்பது மிகவும் பொருத்தமானதாகும்.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] புரட்சிகரமான வாய்ச்சொல் (Revolutionary Phrase)

    Rs. 1,790.00

    வி.இ.லெனின்

    இத்தொகுப்பு நூலில் பிரேஸ்த் சமாதான உடன்படிக்கை குறித்து பெரும்பாலும் 1918ல் வி. இ. லெனின் கட்டுரைகள் அடங்கியுள்ளன.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம் (The Part Played by Labour in the Transition from Ape to Man)

    Rs. 1,190.00

    இ. லி . அந்திரேயெவ்

    தமிழில் இரா. பாஸ்கரன்

    இச்சிறு நூலில் சோவியத் ஆராய்ச்சியாளர் இ.அந்திரேயெவ், “மனிதக் குரங்கு மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்” எனும் எங்கெல்சின் கட்டுரை உண்மையான ஒரு உலகக் கண்ணோட்டம் உருவாகியதன் மீது எத்தகைய தாக்கம் செலுத்தியது என்று விளக்குகிறார். எங்கெல்சின் கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு நூலாசிரியர், மனிதனும் சமுதாயமும் தோன்றியதன் முக்கிய கட்டங்களைச் சுட்டிக் காட்டுகிறார். எங்கெல்சின் அடிப்படைக் கருத்துகளை நிரூபிக்கும் பல விஞ்ஞான விவரங்களை நூலாசிரியர் நவீன புதைபொருள் மற்றும் மானுடவியல் ஆராய்ச்சிகளிலிருந்து எடுத்துக் காட்டுகிறார். இப்பிரச்சினைகளைப் பற்றிய மார்க்சிய அணுகுமுறையைத் தவிர மற்ற அணுகுமுறைகளையும் ஆசிரியர் விமர்சன நோக்கில் பகுப்பாய்வு செய்கிறார்.

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    Add to cart
  • [RARE] மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் தொகுதி 2 (Marx Engels Selected Works in 12 Volumes)

    Rs. 1,490.00

    கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ்

    பேராசான்களான மார்க்ஸ் – எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது.