Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
Category
- English Books
- (Auto)Biography & Memoir
- Artificial Intelligence
- Astronomy
- Atheism & Agnosticism
- Biological Sciences
- Business
- Career & Success
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Environment & Nature
- Health & Nutrition
- History
- Humor
- Investment & Strategy
- Linguistics
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mathematics & Physics
- Medicine
- Mental Health
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Oil Politics
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Science
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- Venture Capital
- War
- Women Empowerment
- University Magazine
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- கிளாசிக்ஸ்
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- பங்குச்சந்தை
- பணம்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மன ஆரோக்கியம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
Category: போர்
Showing 1–9 of 11 results
FBI: அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை
Rs. 790.00Read moreஎன். சொக்கன்
அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய ஒரே லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI. ஜேம்ஸ் பாண்ட் படக் காட்சிகளை மிஞ்சும் பல சாகசங்களை இவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். நவீன தொழில்நுட்பத்தையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பயன்படுத்தி பல நூதனமான உத்திகளைக் கையாண்டு உளவு பார்த்திருக்கிறார்கள். தேச பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறார்கள். அமெரிக்கக் காவல் துறையினரால் சமாளிக்கமுடியாத பல மர்ம கிரிமினல் வழக்குகளைத் திறம்படக் கையாண்டு பாராட்டுகளைக் குவித்திருக்கிறார்கள். உலகம் முழுவதிலும் FBIக்கு பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அவர்களுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. வெளியில் தெரியாத இந்த முகத்தைக்கொண்டு FBI பல நிழலுலகக் காரியங்களில் ஈடுபட்டுவருகிறது. சட்டத்தை வளைத்தும் தேவைப்பட்டால் முழுக்க உடைத்தும் பலவற்றை அவர்கள் செய்திருக்கிறார்கள். அவை மிகுந்த சர்ச்சைகளையும் விவாதங்களையும் அவ்வப்போது கிளப்புவது வழக்கம். என். சொக்கனின் இந்தப் புத்தகம் ஊஆஐ என்னும் அதிசய, ரகசிய உலகை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. கேஜிபி, சிஐஏ, மொஸாட் ஆகிய உளவு நிறுவனங்கள் குறித்தும் இவர் எழுதியிருக்கிறார்.
அமெரிக்காவின் மறுபக்கம்
Rs. 1,140.00Read moreநாகேஸ்வரி அண்ணாமலை
அமெரிக்கா என்றதும் மனதில் தோன்றுவது அது வளமிக்க நாடு் ,இராணுவ பலமிக்க நாடு் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் நாடு என்பதே. ஆனால் உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே.
நாகேஸ்வரியின் இந்நூல் இன்றைய அமெரிக்கா எவ்வாறு உருவானது. அதன் அரசியல் சமூகப் பொருளாதாரப் பின்னணி எப்படி இவ்வளவு வளத்தையும் அதிகாரத்தையும் மையப்படுத்த முடிந்திருக்கிறது ஐரோப்பியக் குடியேறிகள் எப்படி பூர்வீகக் குடிகளை அழித்துக் காலணிகளை அமைத்தனர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பரிக்கக் கறுப்பர்கள் எந்த அளவிற்கு அந்நாட்டிற்கு வளத்தைச் சேர்த்தனர் போன்ற விஷயங்களில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறது.
மேலும் உள்நாட்டில் ஜனநாயகம், வெளிநாட்டில் சர்வாதிகாரம் என இரட்டை மனநிலையுடன் இயங்கும் அமெரிக்கா கியூபா, ஈரான் இராக் போன்ற நாடுகளுடன் நடந்துகொண்ட விதம் பற்றியும் சந்தைப் பொருளாதாரத்தால் கார்பரேட் நிறுவனங்கள் மக்களை கடன் அட்டை மூலம் நுகர்வோராகவும் அதீத மருத்துவச் செலவால் கடனாளியாகவும் ஆக்கியிருப்பது பற்றியும் இவை எவ்வாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன போன்ற சமகாலக் கேள்விகள் மீதான புதிய பார்வைகளையும் இந்நூல் முன்வைக்கிறது
இரண்டாம் உலகப் போர்
Rs. 1,590.00Read moreமருதன்
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.
உலகிலேயே மகிழ்ச்சியான மனிதர்: நாஜி வதை முகாமிலிருந்து
Rs. 2,390.00Read moreஎடி ஜேக்கூ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
முதலில் தான் ஒரு ஜெர்மானியர், பிறகுதான் தான் ஒரு யூதர் என்று எடி ஜேக்கூ தன்னைப் பற்றி எப்போதுமே கருதி வந்திருந்தார். ஆனால் அந்த எண்ணம், 1938 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், நாஜிப் படையினர் அவரை அடித்து உதைத்துக் கைது செய்து வதை முகாமுக்கு இழுத்துச் சென்றபோது முற்றிலுமாக மாறியது. அதற்கடுத்த ஏழு ஆண்டுகள், கற்பனையில்கூட யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத கொடூரங்களை எடி நாள்தோறும் அனுபவித்தார், நாஜிக்களிடம் அவர் தன்னுடைய குடும்பத்தினரையும் நண்பர்களையும் தன்னுடைய சொந்த நாட்டையும் இழந்தார். இறுதியில் அவர் எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்டதால், இனி தன் வாழ்நாள் முழுவதும் எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதென்று அவர் ஓர் உறுதிமொழி மேற்கொண்டார்.
அவர் தன்னுடைய வதை முகாம் அனுபவங்களிலிருந்து தான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி வருவதன் மூலமும், ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருவதன் மூலமும், நாஜிக்களின் அடக்குமுறையின்கீழ் உயிரிழந்தவர்களுக்கும் தங்களுடைய சொந்தபந்தங்களை இழந்தவர்களுக்கும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அவருடைய 100 ஆவது பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்ட இந்நூல், இருண்ட காலகட்டங்களில்கூட மகிழ்ச்சியைக் கண்டுகொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கின்ற ஒன்றாக மிளிர்கிறது.
ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
Rs. 1,790.00Add to cartஆன் ஃப்ராங்க்
தமிழில்: மைதிலி சம்பத்
ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பிற்கு அறிமுகம் தேவையில்லை.
மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில், அழகாக எழுதப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சரித்திரம் இது.எத்தனையோ இடர்பாடுகளை எதிர்த்து போராடியும், உயிர் வாழ விரும்பும் மனிதனின் அழிக்க முடியாத உறுதிக்கு இது ஒரு நிரூபணம். ஆன் ஃப்ராங்க் இரண்டாம் உலகப்போரில் பலியாகி இருப்பினும், அவளுடைய கதையையும், அவள் நாட்குறிப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் எடுத்துக் கொண்டுள்ள அவள் வார்த்தைகள்,
அவளுடைய நினைவுகளை உலகம் அறிந்து கொள்வதற்காக பல காலமாக உயிருடன் வைத்திருக்கிறது…
கழுகு தரை இறங்கிவிட்டது
Rs. 1,190.00Read moreஜாக் ஹிக்கின்ஸ்
தமிழில்: கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ்
சரியாய் பகல் ஒரு மணிக்கு, ஜெர்மனியின் ராணுவத் தலைமைக்கு ஒரு சிறு தகவல் வந்து சேர்ந்தது. ‘கழுகு, தரையிறங்கிவிட்டது’.
எதிரி நாடுகளுக்குள் பாராசூட் கொண்டு இறங்கி சண்டை செய்ய பழக்கப்படுத்தப்பட்ட ஒரு ஜெர்மானிய வீரர்கள் குழு கர்னல் ஸ்டைனர் தலைமையில் இங்கிலாந்து நாட்டுக்குள் பத்திரமாக தரையிறங்கி விட்டது என்பதே இதற்கு அர்த்தம்.
கடற்கரையோரமாய் வார இறுதி நாட்களை அமைதியாக கழித்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்லை ஜெர்மனிக்கு கடத்திக்கொண்டு செல்ல, ரகசியத் திட்டத்துடன் வந்து இறங்கிய கூட்டமாகும்.
நாம் மறந்துபோன, ஆச்சரியமிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் உலகப் போரின் சரித்திர சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் மீண்டுமொருமுறை உங்களை 1943க்கே அழைத்துச்செல்லும்.
இந்த பரபரப்பான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது அதே ராணுவ நாட்களின் பரபரப்பு புத்தக வடிவில்…உங்கள் கைகளில்…
செங்கிஸ்கான்
Rs. 1,090.00Read moreமுகில்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.
அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்
Rs. 2,290.00Read moreஎஸ். எல். வி. மூர்த்தி
சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
பாலஸ்தீன இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை
Rs. 1,590.00Read moreநாகேஸ்வரி அண்ணாமலை
‘…பாலஸ்தீனத்தில் நமக்குப் பேரழிவு நேர்ந்தால், அதற்கு முதல் பொறுப்பு பிரிட்டன். இரண்டாவதாக, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் நம்மிடையே தோன்றியிருக்கும் இம்மாதிரியான பயங்கரவாதிகள்…’ –விஞ்ஞானி ஐன்ஸ்டைன்
‘…பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது… அங்கு இப்போது நடப்பதை எந்தத் தர்மத்தின்படியும் நியாயப்படுத்த முடியாது…’ –மகாத்மா காந்தி
உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது ஊடகங்களில் தினமும் செய்தியாகிரது, நியாயமான முடிவுகான இயலாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது, இதப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதைகளும் அறெபியர்களுக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ பிளவுபட்டிருக்கின்றன.
தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் இதன் முழுப் பரிமானத்தையும் கொண்டுவரவில்லை, நாகேஸ்வரி அண்ணாமலையின் இந்த நூல் பிரச்சனையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது. இதைப்படிப்பவர்கள் பாலஸ்தீனதில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்து கொள்வார்கள். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து இருசாரிடமும் விவாதித்து, பிரச்சனை தொடர்பான பல பரிமான்ங்களைப் படித்து எழுதியுள்ளார். ஆசிரியரின் நேரடியான நடை இந்தச் சிக்கலான பிரச்சினையை வாசகர்களுக்கு எளிதாக விளங்கவைக்கும்.