Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: Book Bundles ( தமிழ் )

Showing all 7 results

 • Sale!

  இறைத்தூதர் முஹம்மது (ஸல்) மற்றும் தோழர்கள் தொகுப்பு / Iraithoothar Muhammad (PBUH) mattrum Thozhargal Thohuppu

  Rs. 10,120.00

  தாரிக் ரமதான், நூருத்தீன்

   

  இறைத்தூதர் முஹம்மது

   

  மேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது. பொருத்துபோகக் கூடியவராக, அன்பு, மென்மை, மாறாத நேர்மையுடையவராக, அனாதைகளின், ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது.

   

  தோழர்கள்: புனிதர்களின் அற்புத வரலாறு

   

  நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றை விறுவிறுப்பாகக் கூறும் தொகுப்பு இது.

  or 3 X Rs. 3,373.33 with Koko Koko
  Add to cart
 • Sale!
  Out of Stock

  இந்திய ஆட்ச்சியாளர்கள் தொகுப்பு / Indhiya Aadchiyaazhargal Thohuppu

  Rs. 8,440.00

  வில்லியம் டேல்ரிம்பிள், மொஹிபுல் ஹசன்

   

  திப்பு சுல்தான்

   

  இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது.

   

  கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது.

   

  அதேவேளையில், திப்புவின் அரசாங்கமும், அதை அவர் நடத்திய விதமும், அவரது இராணுவமும், அவர் செய்த சீர்திருத்தங்களும், மதக் கொள்கைகளும், தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும், சமூக சமத்துவமும், அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன.

   

  கடைசி முகலாயன்

   

  ‘மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான புத்தகம்.’ -டயானா ஆட்டில், கார்டியன் புக்ஸ் ஆஃப் தி இயர்

   

  ‘டேல்ரிம்பிள் நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர். இந்தப் புத்தகம் இதுவரை அவர் எழுதியதிலேயே சிறந்த புத்தகமாக இருக்கும்.’ -ஏஷியன் ஏஜ்

   

  ‘டெல்லி கைப்பற்றப்பட்டு வீழ்ச்சியுற்ற கதையை அரிதான மனிதநேயத்துடன் விவரிக்கிறார் டேல்ரிம்பிள், இந்தப் பேரார்வம் எல்லோரையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. உரைநடையில் அது மிக அழகானதாக, தடுமாற்றமில்லாமல், தங்குதடையின்றி நிரம்பி வழிகிறது.’ -தி ஹிந்து

   

  அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே!

   

  கேளுங்கள்!

   

  இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது.

   

  இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.

  or 3 X Rs. 2,813.33 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  வீரர்களின் வரலாற்று தொகுப்பு / Veerarhalin Varalatru Thohuppu

  Rs. 4,932.00

  எஸ். எல். வி. மூர்த்தி

   

  நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்

   

  சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

   

  மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!

   

  செங்கிஸ்கான் 

   

  செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக – ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்த நாடோடி. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் எலிகளையும், அணில்களையும், நாய்களையும் வேட்டையாடித் தின்றவர். கீழ்ஜாதி என்று முத்திரை குத்தப்பட்டவர் பரந்து விரிந்த ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபரானார்.

   

  போர்களின்போது செங்கிஸ்கான் கொன்று குவித்தவர்களின் எண்ணிக்கை நான்கு கோடியைத் தாண்டும். காட்டு மிராண்டி , ரத்தக் காட்டேரி என்று பல சரித்திர மேதைகளால் சித்தரிக்கப்பட்ட அதேவேளையில், மங்கோலியர்கள் செங்கிஸ்கானைத் தங்கள் தேசத்தந்தையாக, பொன்மனச்செம்மலாக, கடவுளாக இன்றும் மதிக்கிறார்கள்.

   

  பெண்மையை மதித்த – சாதி வேற்றுமைகளை வெறுத்த இவர் கொண்டுவந்த சில நியமங்கள் பதின்மூன்றாம் நூற்றாண்டில் இத்தகைய புரட்சி சிந்தனைகள் எப்படி இவர் மனதில் உருவாகின என்னும் பிரமிப்பை ஏற்படுத்துபவை.

   

  எதிரிகளை துவம்சம் செய்ய அவர் காட்டியது ரத்தவெறி பிடித்த ஓநாய் முகத்தை. குடிமக்களுக்கு நல்லது செய்யக் காட்டியது மருள்விழி மானின் சாந்த சொரூபத்தை. இருதுருவங்களான ஓநாயும் மானும் ஒரே மனித நெஞ்சிற்குள் குடியிருக்க முடியுமா? முடிந்திருக்கிறதே! சாத்தியப்படுத்தியிருக்கிறாரே இந்த மனிதர்!

   

  உலக வரலாறு சில பார்வைகள் (Glimpses of world history) என்ற தனது நூலில் நேருகூட வரலாற்றிலேயே மாபெரும் இராணுவத் தளபதி செங்கிஸ்கான்தான். அலெக்சாண்டரும் சீசரும் இவர் முன்னால் கத்துக்குட்டிகள் என்றாரே.

   

  அது எதனால்?

   

  பதில் காண படியுங்கள்!

  or 3 X Rs. 1,584.00 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  கியோஸாகியின் பிசினஸ் ( Kiyosakiyin Business Bundle )

  Rs. 4,000.00

  ராபர்ட் கியோஸாகி

   

  பிசினஸ் ஸ்கூல்

   

  மிக அதிகமாக விற்பனையாகியுள்ள இந்நூலின் முதற்பதிப்பில், ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் எட்டு அனுகூலங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டாம் பதிப்பில், அவர் அவற்றை விரிவாக்கியுள்ளதோடு, கூடுதல் தகவல்களையும் இணைத்துள்ளார். சிறப்புப் பரிசாக, கிம் கியோஸாகி, ஷரோன் லெச்டர் மற்றும் டயான் கென்னடி ஆகியோர் நெட்வொர்க் மார்க்கெட்டிங்கிலுள்ள மேலும் மூன்று அனுகூலங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளனர்.

  ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைக் கட்டியெழுப்புவதைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார்:

  • இது செல்வத்தை அடைவதற்கான ஒரு புரட்சிகரமான வழி
  • எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும்
  • செயலூக்கம்,உறுதியான தீர்மானம், மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்

   

  “நான் என்னுடைய பெருஞ்செல்வத்தை, நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலமாகச் சேர்க்காத காரணத்தால், அதைப் பற்றி என்னால் பாரபட்சமின்றி விளக்க முடியும். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் உண்மையான. பெரும்பணத்தை ஈட்டுவதற்கும் மேலான அனுகூலங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டங்களை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இதயம் உள்ள ஒரு தொழிலை நான் இறுதியாகக் கண்டறிந்துள்ளேன்.”

   

  21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்

   

  21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாய்ப்புகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.

  or 3 X Rs. 1,333.33 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  பணக்கார மனம், பணக்கார வாழ்க்கை தொகுப்பு : பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை & பணம்சார் உளவியல் தொகுப்பு / Panakara Manam, Panakara Vazkai Thogupu

  Rs. 5,870.00

  ராபர்ட் கியோஸாகி, மார்கன் ஹெளஸ்ஸேல்

   

  பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

   

  கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.

   

  பணம்சார் உளவியல்

   

  பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.

   

  “மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்

   

  “ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்

   

  “மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்

   

  பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.

   

  “பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.

  or 3 X Rs. 1,956.67 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  மக்கள் தொடர்புத் திறன்கள் தொகுப்பு / Makkal Thodarfu Thirangal Thohuppu

  Rs. 5,790.00

  லெஸ் ஜிப்லின், லீல் லவுன்டெஸ்

   

  மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி

   

  இது லெஸ் கிப்லின் அவர்களின் மக்களுடன் எவ்வாறு நம்பிக்கை மற்றும் சக்தியைக் கையாள்வது என்பதன் தமிழாக்கம். இந்த புத்தகத்தில், மனித உறவுகள் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணரான ஆசிரியர், மனித நடத்தைக்கு பின்னால் உள்ள அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக விளக்குகிறார். தனிநபர்கள் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நேர்மறையான முடிவுகளுக்கு எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை அவர் விவரிக்கிறார்.

   

  ஒரு நல்ல முதல் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை மேம்படுத்துவதற்கும், மற்றவர்களை பாதிக்கும் வகையில், மக்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கும் நேரத்தைச் சோதனைக்குட்பட்ட நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

   

  பிறரிடம் சகஜமாகப் பேசுவது எப்படி: உரையாடல்களில் ஜொலிப்பதற்கான 92 சின்னஞ்சிறு உத்திகள்

   

  வாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா?

   

  வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும், சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும், சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை.

   

  பிறருடன் கலந்துரையாடுவதற்கும், அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர், அவ்வளவுதான்.

   

  இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளில் இவையும் அடங்கும்:

   

  • எடுத்த எடுப்பிலேயே உங்களைப் பற்றிய ஒரு சிறந்த அபிப்பிராயத்தைப் பிறரிடம் தோற்றுவிப்பது எப்படி?
  • எந்தவொரு கூட்டத்திலும், அக்கூட்டம் தொடர்பான விஷய ஞானம் உங்களிடம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது எப்படி?
  • உரையாடல்களின்போது எப்போது பிறருடைய அகங்காரத்திற்குத் தீனி போட வேண்டும், எப்போது போடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது எப்படி?
  • உங்களுடைய அலைபேசியை ஒரு சிறந்த கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி?
  • உங்கள் முன் இருப்பவர்களை, கைதேர்ந்த ஓர் அரசியல்வாதியைப்போல உங்களுடைய பேச்சால் கட்டிப்போடுவது எப்படி?
  or 3 X Rs. 1,763.33 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  ராபின் ஷர்மாவின் சுயமுன்னேற்ற தொகுப்பு / Robin Sharmavin Suyamunnetra Thohuppu

  Rs. 5,090.00

  ராபின் ஷர்மா

   

  கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை

  இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சரித்திரம் படைத்த ஆமையாகவும், மிகச்சிறந்த செயல்வீரராகவும் ராபின் ஷர்மா திகழ்ந்து வருகிறார். பல பிரபல வணிக ஆளுமைகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கேளிக்கை உலகின் நட்சத்திரங்கள் ஆகியோர், தங்களுடைய உயர்ந்த இலட்சியங்களை, அன்றாட வெற்றிகளாக மாற்றிக் கொள்ள உதவும் வழிமுறைகளை, தன்னுடைய புதுமையான பயிற்சி முறைகளின் மூலம் ராபின் ஷர்மா சாத்தியப்படுத்தி வருகிறார்.

   

  இப்போது அவருடைய முதன்மையான படைப்பான, ‘கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை” என்ற இந்நூலின் மூலம், தலைசிறந்த கொள்கைகள், வழிமுறைகள், கருவிகள் ஆகியவற்றின் சாரத்தை, வெற்றிக்கான வழிகளாக முன்வைத்துள்ளார். இந்நூல், உங்கள் திறமைகளை உயர்த்துவதுடன், உலகத்தர வாழ்க்கையை வழங்கும் பயிற்சி நூலாகவும் அமையும். மேலும் உங்களை ஆன்மிக வழியில் முன்னேற்றவும் இது உதவும்.

  அதிகாலை 5 மணி குழு

  உங்கள் காலையை சொந்தமாக்கி – உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்.

   

  புகழ்பெற்ற தலைமைப் பண்பு மற்றும் மிகச்சிறந்த செயல்திறன் நிபுணர் ராபின் சர்மா 20 ஆண்டுகளுக்கு, முன்பு. ஒரு புரட்சிகரமான காலை வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாலை 5 மணி குழு தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். இது அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர்களின் சிக்கலான வாழ்வில் சிறந்த ஆரோக்கியத்தை செயல்படுத்தவும் அவர்களது அமைதியைப் பாதுகாக்கவும் உதவியது.

   

  இப்போது தீவிரமான நான்கு ஆண்டு முயற்சியின் விளைவாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டுள்ள, பலருக்கும் சாதனை முடிவுகளை அடையவும், அதே நேரத்தில் அவர்களின் மகிழ்ச்சி, உதவும்தன்மை மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவிய வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தாத்தில், அதிகாலையில் எழும் பழக்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், முன்பின் தெரியாத இரண்டு மனிதர்கள் ஒரு விசித்திரமான தொழிலதிபரைச் சந்திப்பது, பிறகு அவரே அவர்களின் ரகசிய வழிகாட்டியாக மாறுவது பற்றிய ஒரு அழகான மற்றும் பெரும்பாலும் சுவாரஸ்யமான கதையான அதிகாலை 5 மணி குழு புத்தகம் கீழ்க்கண்டவாறு உங்களை வழிநடத்தும்.

   

  வியக்கத்தக்க சாதனைகளை உருவாக்க சிறந்த மேதைகள், வணிக அதிபர்கள் மற்றும் உலகின் புத்திசாலித்தனமான மக்கள் தங்கள் கலைப் பொழுதை எவ்வாறு தொடங்குகிறார்கள்.. அதிகாலையில் எழுகையில், தூண்டுதல், மிகுந்த கவளம் மற்றும் அதி தீவிள உந்துதலுடன் உங்கள் நாளிள் முழுப் பயனையும் அடையும் படியான அதிகம் அறியப்படாத நீங்கள் உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு சூத்திரம் அதிகாலையின் அமைதியான நேரத்தை படிப்படியான செயல்முறை மூலம் பயன்படுத்தி, உடற்பயிற்சி, சுய புதுப்பித்தல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான நேரம் பெறுதல்.

   

  ஒரு நரம்பியல் அடிப்படையிலான நடைமுறையானது அதிகாலையில் எழும் பழக்கத்தின் மூலம். பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு சிந்திக்கவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், பநட்டமான செயல்பாட்டிற்கு பதிலாக நிம்மதியாக நாரைத் தொடங்கவும் அருமையான வாய்ப்பைத் தருகிறது. “ரகசியமான செயல்” தந்திரோபாயங்கள் டிஜிட்டல் கபணிச்சிதறல்கள் மற்றும் அற்பமான திசைதிருப்பல்களிலிருந்து உங்கள் சிறப்புத் திறன்கள், இயற்கைத் நிறமைகள் மற்றும் கனவுகளை பாதுகாத்து, நீங்கள் அதிர்ஷ்டம், செல்வாக்கு மற்றும் உலகில் அற்புதமான தாக்கத்தை அனுபவிக்க உதவுகிறது.

  or 3 X Rs. 1,483.33 with Koko Koko
  Read more