Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: பௌத்தம்

Showing all 3 results

 • புத்தரின் வரலாறு / Budhdharin Varalaru

  Rs. 1,090.00
  or 3 X Rs.363.33 with

  மயிலை சீனி.வேங்கடசாமி

   

  நமது நாட்டில் உள்ள புத்தர் சரித்திரங்கள், பள்ளி மாணவர்கள் சரித்திரப் பாடத்தில் கற்கும் வெறும் கதையாக எழுதப்பட்டுள்ளன.

  சமய சம்பிரதாயத்தை ஒட்டிய புத்தர் வரலாறு தமிழில் இல்லை என்னும் குறைபாடு உண்டு.

   

  உலகத்திலேயுள்ள சமயப் பெரியார்களின் சரித்திரங்கள் எல்லாம் தெய்வீகச் செயல்களும், அற்புத நிகழ்ச்சிகளும் உடையனவாக உள்ளன.

   

  பகவான் புத்தருடைய சரித்திரமும், சமய சம்பிரதாய முறையில் பார்க்கும் போது, தெய்வீகச் செயல்களையும் அற்புத நிகழ்ச்சிகளையும் கொண்டுள்ளது.

   

  இப்போது தமிழ்நாட்டில் வழங்கும் புத்த சரித்திரங்கள், அற்புதச் செயல்கள் நீக்கப்பட்டு வெறும் கதைகளாக எழுதப்பட்டுள்ளன. அதனால்,

   

  பெளத்தமத சம்பிரதாயப்படியுள்ள புத்த சரித்திரம் கிடைக்கப் பெறுவது இல்லை. இந்தக் குறைபாட்டினை நீக்கக் கருதி இந்தப் புத்தசரித்திரம் எழுதப்பட்டது.

  or 3 X Rs. 363.33 with Koko Koko
  Add to cart
 • சித்தார்த்தன் / Sithardhan / Siddhartha Tamil

  Rs. 1,090.00
  or 3 X Rs.363.33 with

  ஹெர்மன் ஹெஸ்ஸே

   

  நோபல் பரிசு பெற்ற ஹெர்மன் ஹெஸ்ஸேயின் புகழ்பெற்ற ஓர் உருவக நாவல் சித்தார்த்தன்.

  இது புத்தர் காலப் பின்னணியில் இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து சித்தார்த்தன் என்று அழைக்கப்படும் ஒரு சிறுவனின் ஆன்மிகப் பயணத்தை விவரிக்கிறது.

   

  கிழக்கின், மேற்கத்தின் ஆன்மிக மரபுகளை உளப்பகுப்பாய்வுடனும் தத்துவத்துடனும் ஒருங்கிணைத்து, மனிதகுலத்திற்கான ஆழமான, நகரும் கழிவிரக்கத்துடன் எழுதப்பட்டிருக்கிறது இந்தக் கதை. 1922ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் முதல் பதிப்பு வெளியானதிலிருந்து பல மொழிகளில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டிருக்கிறது. எளிமையான உரைநடையில், தேடலுள்ளவர் அனைவருக்கும் மிகவும் ஆழமான செய்தியை ஹெஸ்ஸே அனுப்பியுள்ளார்.

   

  சத்தியத்திற்கான தேடலில் தனது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறும் ஓர் இளைஞனைச் சுற்றிக் கதை சுழல்கிறது. ஒரு பிராமணச் சிறுவன் தன் தேடலைப் பின்தொடர்ந்து, அறிவொளி பெறுவதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதற்காக வாழ்க்கையின் பல்வேறு தளத்திற்குச் செல்கிறான். அவன் தந்தைக்கு ஒரு பக்தியுள்ள பிராமணனாக, சமணனாக, பணக்கார வணிகனாக, காதலனாக, எளிய படகோட்டியாக வாழ்க்கையை அனுபவிக்கிறான்.

   

  இதன்மூலம் அவன் தொடர்ச்சியான மாற்றங்களுக்கும் உணர்தல்களுக்கும் உட்படுகிறான், ஒரு பயிற்சியாளனாக பாராயணம் செய்யவோ, பக்தனாகத் தியானிக்கவோ இல்லை. சித்தார்த்தன் உலகத்துடன் கலக்க வருவதில்லை, இயற்கையின் தாளங்களுடன் எதிரொலிக்கிறான்; ஆற்றிலிருந்து பதில்களைக் கேட்க வாசகரின் காதைக் கீழே வளைக்கிறான்.

   

  இந்தப் பதிப்பில் “வாசகர் வழிகாட்டி’ என்னும் புதிய பகுதி இடம்பெறுகிறது. அதில் நாவல், நூலாசிரியர் பற்றிய அறிமுகமும் புத்தகத்தை ஆழ்ந்து படிப்பதற்கான வினாக்களும் வழிகாட்டுதல்களும் உள்ளன.

  or 3 X Rs. 363.33 with Koko Koko
  Add to cart
 • Out of Stock

  மகாவம்சம் / Mahavamsam

  Rs. 1,720.00
  or 3 X Rs.573.33 with

  R.P. சாரதி

   

  நமக்குப் பெயரளவில் மட்டுமே பரிச்சயமான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் ‘மகாவம்சம்’ இதோ நூல் வடிவில். பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டதன் தமிழ் வடிவம் இது.

   

  பல்லேறு புத்த பிக்குகளால் நாள்குறிப்பு வடிவத்தில் எழுதப்பட்டவை. கி.பி. 5-ம் நூற்றாண்டில் மஹாநாம மஹாதேராவால் முதல் முறையாக ஒரு நூலாக தொகுக்கப்பட்டது.

  அவ்வகையில், இது மிகப் புராதனமான பிரதியும் ஆகும். கி.மு.6-ம் நூற்றாண்டு தொடங்கி கி.மு.4-ம் நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகா வம்சம், சிங்களர்களின் புனித நூலாகவும் கொண்டாடப்படுகிறது.

   

  அவர்களது ஆதிகால வரலாற்றை மட்டுமில்லாமல் இலங்கையின் புத்த மதத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்த துல்லியமான மதீப்பீட்டையும் இது முன்வைக்கிறது.

   

  தவிரவும் இந்திய வரலாற்றின் ஆரம்பக்கால அத்தியாயங்கள் பலவற்றையும் மகா வம்சத்தில் காண முடியும். ‘சிங்களப் பேரினவாதம்’ என்று தமிழர்களால் வருணிக்கப்பட்டு, இன்றளவும் அங்கே கொழுந்து விட்டெரியும் இனப்பிரச்னையின் வேர், மகா வம்சத்திலிருந்துதான் உதிக்கிறது.

  அதனால்தான், சர்ச்சைக்குரிய ஒரு நூலாகவும் மகா வம்சம் கருதப்படுகிறது.

  or 3 X Rs. 573.33 with Koko Koko
  Read more