Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: பணம்
Showing all 40 results
-
பணம்சார் உளவியல் ( Panamsar Ulaviyal ) The Psychology of Money
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartமார்கன் ஹெளஸ்ஸேல்
பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
“மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்
“ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்
“மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்
பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.
“பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
-
இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்
Rs. 990.00Rs. 890.00or 3 X Rs.296.67 withAdd to cartகனினிகா மிஸ்ரா
கோடீஸ்வரர்கள் அறுவடை செய்யும் பணப் பழக்கவழக்கங்களும், தனித்திறன்களும் மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உயர்வானவை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்து, ஏற்கனவே சரியான பொருளாதாரப் பாதையில் பயணித்தால், ஒரு நாள் நீங்களும் பணக்காரராக முடியும்.
-
செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் ( Selvantharakkum Sulaba Vinganam ) The Science of Getting Rich
Rs. 890.00or 3 X Rs.296.67 withAdd to cartவாலஸ் டி வாட்டில்ஸ்
தமிழில்: பி. உதயகுமார்
ரோண்டா பைரனின் (Rhonda Byrne) அதிகம் விற்பனையாகும் புத்தகம் மற்றும் திரைப்படமான இரகசியம் (The Secret) ன் உத்வேகம் இந்தப் புத்தகம்தான். வாலஸ் வாட்டில்ஸ், செல்வம் பெறுவதற்கான வழியில் சிந்தனை மற்றும் மன உறுதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக காட்டுகிறது.
-
பெருங்கனவு காணத் துணியுங்கள்! ( Perung Kanavu Kaana Thuniyungal )
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartஅங்குர் வாரிக்கூ
அங்குர் வாரிக்கூ தன்னுடைய முதல் நூலில், தன்னுடைய பயணத்திற்கு உந்துசக்தியாக விளங்கிய முக்கிய யோசனைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆக விரும்பியதில் தொடங்கிய அவருடைய பயணம், இலட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் பார்த்தும் படித்தும் உள்ள பல்வேறு படைப்புகளை உருவாக்குவதில் முடிந்தது.
நீண்டகால வெற்றிக்குத் தேவையான பழக்கங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தில் தொடங்கி, நிதி நிர்வாகத்திற்கான அடித்தளம்வரையும், தோல்வியை ஆரத் தழுவிக் கொள்வது மற்றும் ஏற்றுக் கொள்வதில் தொடங்கி, பச்சாதாபத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றிய உண்மைவரையும் அவருடைய சிந்தனை பரந்துபட்டதாக இருக்கிறது.
இப்புத்தகம் நீங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய ஒன்று. இதிலுள்ள வரிகளை நீங்கள் அடிக்கோடிட்டுக் கொண்டு பின்னர் மீண்டும் மீண்டும் அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அந்நியர்களுக்கும் கொடுக்கப் போகின்ற ஒரு புத்தகம் இது. மிக அதிகமாகப் பரிசளிக்கப்பட்டப் புத்தகமாக இப்புத்தகம் உருவெடுக்க வேண்டும் என்பது அங்குரின் விருப்பமாகும்.
-
கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள் (Koodeesvararkalin Sindhanai irahasiyangal)
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withAdd to cartடி. ஹார்வ் எக்கர்
தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி
#1 நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல் & யுஎஸ்ஏ டுடே பத்திரிகைகள் தொகுக்கின்ற விற்பனைப் பட்டியல்களில் முதலிடம்
“உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நம்பி இதை இருப்பதாக எண்ணிக் கொண்டு இந்நூலைப் படியுங்கள். கண்டிப்பாக ஏமாற்றம் ஏற்படாது” –டோனி ராபின்ஸ், ஊக்குவிப்புப் பேச்சாளர்
“காலாகாலத்திற்கும் நிற்கும் விதத்தில் நம்முடைய செல்வ மாளிகையைக் கட்டியெழுப்புவதற்கான வரைபடத்தையும் கருவிகளையும் ஹார்வ் எக்கர் இந்நூலில் நமக்கு வழங்கியுள்ளார்.” –டெனிஸ் வெயிட்லி, நூலாசிரியர்
“எளிதாகக் கடைபிடிக்க முடிகின்ற விதத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கான பைபிள் இது. ஹார்வ் எக்கர், இந்நூலில், பணம் சேர்ப்பது தொடர்பான அனைத்து மாயைகளையும் உடைத்து நொறுக்கி, கோடீஸ்வரர்களின் இரகசியங்களை சாதாரண மனிதர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார். அவற்றை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்:” –ஜில் லுப்லின், நூலாசிரியர்
“இன்று உலகிலுள்ள தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஹார்வ் எக்கரும் ஒருவர். அவருடைய உத்திகள் உங்களை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும்.” –மார்க் விக்டர் ஹான்சன், நூலாசிரியர்
“ஹார்வ் எக்கர் செல்வத்திற்கான இராஜபாட்டையை எளிதாக அமைக்கும் கலையில் வல்லவர். அவருடைய ஆற்றல்மிக்கக் கோட்பாடுகள் இந்த அருமையான நூல் வழியாக நமக்குக் கிடைத்துள்ளன.” –மார்சி சைமாஃப், நூலாசிரியர்
-
சேமிப்பும் முதலீடும் – உங்களை கோட்டீஸ்வரராக்கும் வழிகாட்டி ( Semippum Muthaleedum )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartசிவகாசி மணிகண்டன்
ஏன் சேமிக்க வேண்டும், ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடங்கி அனைத்துவிதமான முதலீட்டுத் திட்டங்களின் சாதக பாதகங்களையும், வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் தங்க முதலீட்டுத் திட்டங்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்த நூல். அனைவராலும் விரும்பப்படும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் முதலீடு என்றால் மியூச்சுவல் ஃபண்ட்தான். அதைப் பற்றி மட்டுமே பத்து அத்தியாயங்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றிருக்கிறது.
அனைத்து நிதித் தேவைகளுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படிப் பயன்படுத்துவது, மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் என்னென்ன என்பதைப் பற்றி தகுந்த உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுகிறது இந்த நூல். நாணயம் விகடன் வார இதழில் சேமிப்பும் முதலீடும் எனும் தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலத்துக்கு எந்த மாதிரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும், ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப எந்தத் திட்டங்கள் சரியாக இருக்கும் என்பதையும், முதலீட்டைப் பாதுகாக்கும் அவசர கால நிதி, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பற்றியும், முதலீட்டை சரியாகத் தேர்வு எப்படி என்பதையும் உதாரணங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சேமிப்பையும் முதலீட்டையும் சரியான திட்டமிடலுடன் செய்தால் நிறைவான, நிம்மதியான வாழ்க்கை நிச்சயம் என்பதை எடுத்துக்கூறுகிறது இந்த நூல்.
-
பணம் சில ரகசியங்கள் ( Panam Sila Rahasiyangal )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartசோம. வள்ளியப்பன்
எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்கவேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் வாசல்கள் வழியாக உள்ளே வருவதற்கும் இன்னும் ஆயிரம் வாசல்கள் வழியே வெளியில் செல்லவும் பணம் தயாராக இருக்கிறது. எந்தெந்த கதவுகளைத் திறந்துவைக்கவேண்டும்? எவற்றையெல்லாம் மூடி வைக்கவேண்டும்? பணம் ஒரு கருவி மட்டுமே. அது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் வாழ்க்கை என்பது அது மட்டுமேயல்ல என்கிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சரியான இலக்குகளை அமைத்துக்கொள்ளாவிட்டால் பணம் நம்மை, நம் பணி வாழ்வை, நம் குடும்ப உறவுகளை, நம் எதிர்காலக் கனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் சோம. வள்ளியப்பனின் இந்நூல் பணம் குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. -
இன்சூரன்ஸ் (அள்ள அள்ளப் பணம் 8 ) / Insurance (Alla Alla Panam 8)
Rs. 1,690.00Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசோம. வள்ளியப்பன்
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும். செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பனின் இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ‘அள்ள அள்ளப் பணம்’ வரிசையில் முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் மிகுந்த கவனம் பெறும் என்பது உறுதி.”
-
தொட்டதெல்லாம் பொன்னாகும்
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreசோம. வள்ளியப்பன்
சொந்தத்தொழில் செய்பவரா நீங்கள்?
வேலை கேட்காமல், வேலை கொடுப்பவரா நீங்கள்?
சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முதலாளியா நீங்கள்?
பெற்றிருக்கும் வியாபார வெற்றியை உறுதிசெய்துகொள்ள முயற்சிக்கிறீர்களா?
பெறும் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா?வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெற்றவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் போன்றவை மட்டுமல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது, ஊழியர்களை எப்படி ஊக்கப்படுத்துவது, போட்டியாளர்களை எப்படிப் பார்ப்பது, வியாபரத்தை எப்படிப் பெருக்குவது என்பது போன்ற, வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும், எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்கவேண்டிய புத்தகமாக, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுடன் விரிவும் செறிவும் செய்யபட்ட புதிய பதிப்பாக வருகிறது, பல ஆயிரம் பிரதிகள் விற்ற சோம வள்ளியப்பனின் வெற்றிப் புத்தகம்.
-
கடன்: (அள்ள அள்ளப் பணம் 9 ) / Kadan (Alla Alla Panam 9)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreசோம. வள்ளியப்பன்
கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும்.
செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பன் எழுதியுள்ள இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன் என்பது பெரிய சப்ஜெக்ட். அடமான கடன், செக்குகள், பிராமிசரி நோட், செக் பவுன்ஸ், வங்கி கடன்கள், NBFC நிறுவனங்களில் இருந்து கடன்கள், லோன் ஆப்கள், வியாபாரக் கடன், தங்கத்தின் மீதான கடன், விவசாய கடன், வாகன, வீட்டுக் கடன் அதற்குரிய வரி விலக்குகள், கடனை திருப்பி தராவிட்டால் எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள், சர்பாசி சட்டம் என பலவற்றைப் பற்றியும் ஒரு எளிமையான, அதே சமயம் விரிவான புத்தகம். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
-
பாபிலோனின் மாபெரும் செல்வந்தர்: பண்டைய மக்களின் வெற்றி இரகசியங்கள் ( Babilonin Maperum Selvanthar ) The Richest Man In Babylon
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreஜார்ஜ் எஸ். கிளேசன்
தமிழில்: PSV குமாரசாமி
செல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்!
உலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப் பன்மடங்கு பெருக்கியிருந்த பாபிலோனியச் செல்வந்தர்களின் வெற்றி இரகசியங்களை, ஜார்ஜ் எஸ். கிளேசன், சுவாரசியமான கதைகளின் வடிவில் இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
-
நாட்டுக் கணக்கு ( Naattu Kanakku )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreசோம வள்ளியப்பன்
வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம்.
தவறு.
நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்?
உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது?
அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது?
அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது?
சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது?
அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா?
எனில் யாரிடமிருந்து?
அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா?
அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா?
ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்?இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன். நம் தேசத்தின் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்துக்கொள்வது நம் உரிமை. ஒரு குடிமகனாக அது நம் கடமையும்கூட.
-
செல்வபுரிக்கான விரைவுப் பாதை: செல்வத்தைக் குவிப்பதற்கான புதிரை விடுவியுங்கள்! ( Selvapurikkana Viraivup Paathai )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreஎம்ஜே டிமார்க்கோ
தமிழில்: PSV குமாரசாமி
“எனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த புத்தகம் என்றதால் அவரின் பரிந்துரைக்கு அமைய இப்புத்தகத்தை Flashbooks.lk இல் பெற்றுகொண்டேன். எமது வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ பணத்தை எமது கட்டுப்பாட்டிட்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் எனவும், அதற்காக டிமார்க்கோ கூறும் செயல்முறைக்கேற்ற உத்திகளும் first class. கட்டாயம் இப்புத்தகத்தை வாசியுஙகள்.” —சுரேஷ், நுவர எளிய, இலங்கை ( Suresh, Nuwara Eliya, Sri Lanka)
வணிகவியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் செலவழித்துக் கற்றுக் கொள்வதைவிட அதிகமாக இந்த நூலிலிருந்து இரண்டே நாட்களில் கற்றுக் கொள்ளலாம்!
-
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை ( Panakkara Thanthai Ealai Thanthai )
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
-
விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி (vitpanai thuraiyil adhalapaadhalathil irundhu vetri shiharathitku ennai uyarthikondadhu eppadi)
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreஃபிராங்க் பெட்ஜர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“நான் இதுவரை படித்தப் புத்தகங்களிலேயே விற்பனைத்திறம் பற்றி எழுதப்பட்டுள்ள மிகவும் உதவிகரமான, உங்களை அபாரமாக ஊக்குவிக்கக்கூடிய தலைசிறந்த புத்தகம் இதுதான்.” – டேல் கார்னகி, ‘நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி‘ என்ற நூலின் ஆசிரியர்
“இப்புத்தகம் எனக்குச் செய்துள்ள உபகாரங்களை அளவிட முடியாது. வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற எவரொருவரும் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இது.” –நார்மன் வின்சென்ட் பீல், ‘நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி‘ என்ற நூலின் ஆசிரியர்
இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:
- உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
- பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
- உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
- வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
- ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி
-
பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4) ( Pangusanthai: Portfolio Muthaleedugal )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம. வள்ளியப்பன்
- பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார்.
- பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.
-
மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் – 6) ( Mutual Fund )
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreசோம. வள்ளியப்பன்
எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்க வேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.
வேறெதையும்விட மியூச்சுவல் ஃபண்டில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது.
-
சிக்கனம் சேமிப்பு முதலீடு / Sikkanam Semippu Mudhaleedu
Rs. 850.00or 3 X Rs.283.33 withRead moreசோம.வள்ளியப்பன்
சம்பாதிக்கத் தெரியும் சேமிக்கத் தெரியுமா?
ஒவ்வொருவருக்குமான அற்புதமான நிதி வழிகாட்டி.
அதிக வருமானம் பெறுவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. சிக்கனத்தைக் கடைபிடித்து நிறைய சேமிக்கவேண்டும், சாமர்த்தியமாக முதலீடுகள் செய்யவேண்டும், கேட்பதற்கு மிகவும் எளிமையான யோசனைகளாகத் தோன்றும்.
ஆனால் நடைமுறைப்படுத்த ஆரம்பிக்கும்போதுதான் ஆயிரம் சந்தேகங்கள் முளைக்கும்.
செலவுகள் ஒவ்வொரு நாளும் பெருகிக்கொண்டிருக்கும்போது சிக்கனத்தைக் கடைபிடிப்பது எப்படி?
வீட்டுக்கடனும் வண்டிக்கடனும் வங்கிக்கடனும் போட்டிப்போடும்போது சேமிப்பு எப்படிச் சாத்தியப்படும்?
முதலீடு குறித்து எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் எதில் முதலீடு செய்வது?
சீட்டுக் கட்டுவது பாதுகாப்பானதா?
பங்குச்சந்தையில் பணம் போடலாமா?
தங்கம் வாங்குவது நல்ல சேமிப்பு முறையா?
அல்லது காப்பீடு எடுக்கவேண்டுமா?
நிர்வாகவியல் குருவும் பங்குச்சந்தை நிபுணருமான சோம. வள்ளியப்பன் இந்நூலில் அளிக்கும் யோசனைகள் நம் அச்சங்களைப் போக்கி, குழப்பங்களை விளக்கி, சரியான திசையில் நம்மை வழிநடத்துகிறது.
எளிய நடையில் எழுதப்பட்டுள்ள ஓர் அருமையான பொருளாதார வழிகாட்டி இது.
-
வருங்காலம் இவர்கள் கையில் / Varungkaalam Ivargal Kaiyil
Rs. 820.00or 3 X Rs.273.33 withRead moreஎன்.சொக்கன்
அதிக முதலீடு இன்றி பெரும் செல்வம் ஈட்டிய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களின் உத்வேகமூட்டும் வெற்றிக் கதைகள்.
அட, புதுமையாக இருக்கிறதே என்று மற்றவர்களை வியக்க வைக்கும் ஒரு யோசனை.
அந்த யோசனையைச் செயல்படுத்தத் தேவையான உழைப்பு.
இந்த இரண்டு மட்டும் இருந்தால் போதும். Uber, Snapchat, DropBox, Spotify என்று இந்தப் புத்தகம் எடுத்துக் காட்டும் வெற்றிகரமான உதாரணங்கள் பல இந்த இரண்டின் கலவையால் மட்டுமே சாத்தியமாகி இருக்கின்றன.
பதினைந்துக்கும் மேற்பட்ட ஆச்சரியமூட்டும் வெற்றிக் கதைகளை என்.சொக்கன் இந்நூலில் நமக்காகப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
அவற்றிலிருந்து திரட்டிக்கொண்ட பாடங்களை வைத்து நம்மாலும் பல வெற்றிகரமான நிறுவனங்களை உருவாக்கிக்காட்ட முடியும்.
-
கறுப்புப் பணம் ( Karuppu Panam )
Rs. 520.00or 3 X Rs.173.33 withRead moreரமணன்
எது கறுப்புப் பணம்? இது எப்படி உருவாகிறது? யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு?
-
செல்வந்தர் ஆகுங்கள் நீங்கள் தூங்கும்போது
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreபென் ஸ்வீட்லாண்ட்
தமிழில்: என். ஜெயராமன், கே.ஆர். ஸ்ரீநிவாசன்
இப் புத்தகத்தை முடிக்கும் முன்னரே நீங்கள் இவற்றை நிச்சயம் தெரிந்து கொள்வீர்கள்:
- யார் உங்களிடம் எதைச் சொல்லியிருந்தாலும், வாழ்க்கையில் உங்கள் உண்மையான இலக்குகளை எவ்வாறு அடையாளம் காண்பது.
- உங்கள் சுய-ஆளுமை. உங்கள் உண்மையான ஆற்றல்கள், உங்களிடம் மறைந்திருக்கும் அளவற்ற திறமைகளுடன் எவ்வறு உங்களை இணைத்துக் கொள்வது.
- நீங்கள் விரும்புவதைச் சாதிக்க மற்றவர்கள் உங்களுக்கு உதவி அளிக்க விருப்பத்துடன் முன்வர வழைக்கும் சத்தியம், ஆழமான தன்னம்பிக்கை, உத்வேகம் மற்றும் நல்லெண்ணங்களை எவ்வாறு உங்கள் மனதில் நிறைத்துக் கொள்வது
- உங்கள் சொந்த வெற்றிகளைப் பறைசாற்றும் பிரகாசமான மனக் காட்சிகளை எவ்வாறு முழுமையாகத் தேர்ந்தெடுத்து உங்கள் மனதில் பதித்து தக்க வைத்துக் கொள்வது.
-
ஆழ்மனத்தின் அளப்பரிய சக்தியை உபயோகித்துப் பெரும் செல்வந்தராவது எப்படி ( Your Infinite Power to Be Rich )
Rs. 1,480.00or 3 X Rs.493.33 withRead moreஜோசப் மர்ஃபி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
மிக ஆழமான உண்மைகளை வேடிக்கையாகவும் அறிவு புகட்டுகின்ற விதத்தில் வெளிப்படுத்தும் ஓர் உருவகக் கதைதான் இது. ஆனால் இதில் வரும் புதிர் கட்டங்கள் நாம் விரும்பும் விசயத்தை தேடுவதற்கு எந்த இடத்தில் நேரத்தை செலவிட வேண்டும் என்று நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது. அது நம் அலுவலகமாக இருக்கலாம் அல்லது நம் வீடாக இருக்கலாம் ஆனால் நம் மனம் அழுத்தம் அதிகரிக்காமல் செயல்பட நமக்கு உதவுகிறது.
-
பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1) ( Pangusanthai: Adippadaikal )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreசோம. வள்ளியப்பன்
பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்?
இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது. பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன
உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும். -
செல்வம் சேர்க்கும் வழிகள்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreG. S. சிவகுமார்
* எது செல்வம்? அதை எப்படிக் கண்டடைவது? எப்படி அதை நோக்கி நகர்ந்து செல்வது?
* நேர்மையாக, நேர் வழியில் பணம் ஈட்டுவது சாத்தியமா? .
* செல்வந்தர் ஆவதற்கு ஏதேனும் தகுதி இருக்கிறதா? அந்தத் தகுதியை நான் பெற்றிருக்கிறேனா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பது?
* எது எனக்கு ஏற்றது? மாதச் சம்பளம் பெறுவதா அல்லது ஒரு தொழில் தொடங்கி நடத்துவதா?
* தொழில் எனில் எது பாதுகாப்பானது? எதில் வருமானம் அதிகம் கிடைக்கும்?
* கிடைக்கும் வருமானத்தை எப்படிச் சேமிப்பது? எப்படிப் பெருக்குவது? எப்படி முதலீடு செய்வது?
யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது போன்ற தயக்கங்களை உதறித் தள்ளிவிட்டு இந்நூலை வாசிக்க ஆரம்பியுங்கள், வளமான எதிர்காலம் உங்களுக்காகக் காத்திருக்கிறது.
-
கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் (Cashflow Quadrant)
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.”
சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பணக்காரத் தந்தையின் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் திரைவிலக்குகிறது.
பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடம் எப்போதேனும் கேட்டதுண்டா?
• பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும்போது, சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்?
• சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கின்றனர்?
• தொழில் யுகத்திலிருந்து தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?
-
சிந்தித்துப் பாரு, செல்வந்தன் ஆகு / SindhithuParu, Selvandhan Aahu / Think And Grow Rich Tamil
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreநெப்போலியன் ஹில்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 2500க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.
இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தைகயும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதரமான நூல் இது தான். இதில் இடம் பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.
-
விற்பனைத் திறமையில் அற்புதம் (vitpanai thiramaiyil atpudham)
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreலெஸ் கிப்ளின்
இந்த புத்தகம் விற்பனையின் அடிப்படைகளைப் பற்றி பேசுகிறது- மக்களுக்கு எப்படி விற்க வேண்டும். தயாரிப்பு அறிவு எளிதில் பெறப்படும் டிஜிட்டல் யுகத்தில், விற்பனையைப் பெற மக்களைக் கையாளும் கலை, முன்பை விட மிகவும் பொருத்தமானது. மக்களுடனான திறன் மற்றும் மக்களைக் கையாளும் கலை போன்ற மில்லியன் நகல் பெஸ்ட்செல்லர்களின் ஆசிரியரான லெஸ் கிப்லின், உங்கள் விற்பனையை விண்ணில் உயர்த்துவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்குகிறார். இந்தப் புத்தகம் உங்களுக்கு:
* விற்பனையில் வெற்றி
* விற்பனையைத் திறப்பதில் மாஸ்டர் ஆக
* ஒத்துக்கொள்ளும் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள்
* விற்பனையை நடத்துவதற்கான நுட்பங்களைப் பெறுங்கள்
* அருமையான விற்பனை விளக்கத்தை உருவாக்குங்கள்
* விற்பனையை மூடுங்கள். -
பிசினஸ் ஸ்கூல்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: க. சுப்பிரமணியன்
மிக அதிகமாக விற்பனையாகியுள்ள இந்நூலின் முதற்பதிப்பில், ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் எட்டு அனுகூலங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டாம் பதிப்பில், அவர் அவற்றை விரிவாக்கியுள்ளதோடு, கூடுதல் தகவல்களையும் இணைத்துள்ளார். சிறப்புப் பரிசாக, கிம் கியோஸாகி, ஷரோன் லெச்டர் மற்றும் டயான் கென்னடி ஆகியோர் நெட்வொர்க் மார்க்கெட்டிங்கிலுள்ள மேலும் மூன்று அனுகூலங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளனர்.
ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைக் கட்டியெழுப்புவதைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார்:
- இது செல்வத்தை அடைவதற்கான ஒரு புரட்சிகரமான வழி
- எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும்
- செயலூக்கம்,உறுதியான தீர்மானம், மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்
“நான் என்னுடைய பெருஞ்செல்வத்தை, நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலமாகச் சேர்க்காத காரணத்தால், அதைப் பற்றி என்னால் பாரபட்சமின்றி விளக்க முடியும். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் உண்மையான. பெரும்பணத்தை ஈட்டுவதற்கும் மேலான அனுகூலங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டங்களை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இதயம் உள்ள ஒரு தொழிலை நான் இறுதியாகக் கண்டறிந்துள்ளேன்.”
-
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreதீபக் பஜாஜ்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் தங்கள் கனவுகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்புவதாலேயே மக்கள் இத்தொழிலுக்குள் வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடனும் ஊக்கத்துடனும் கடினமாக உழைத்தும்கூடப் பலரால் தங்களுடைய கனவு வருவாயையும் வாழ்க்கைமுறையையும் அடைய முடிவதில்லை.
வெற்றிக்குத் தேவையான சரியான தொழிலறிவும் திறமைகளும் உத்திகளும் கருவிகளும் அவர்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம். எந்தவொரு பொருளையும் எந்தவொரு வருவாய்த் திட்டத்தையும் கொண்ட எந்தவொரு நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனத்திலும் மேல்மட்ட சாதனையாளர்களில் ஒருவராக ஆவதற்கு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அனைத்தையும் இந்த வழிகாட்டி நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
-
8 மாபெரும் சாதனையாளர்களின் பண்புகள்
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreகேமரூன் சி. டெய்லர்
“அறிவுள்ள உலக உண்மைகள் இந்த புத்தகத்தில் அழகாகப் பரவியுள்ளன. அறுவடைச் சட்டங்களுக்கான ஒரு உண்மையான விளக்கம்”
டா. ஸ்டீபன் ஆர். கவி, அமெரிக்காவின் நம்பர் 1 ஆக விற்பனையாகும், தி 7 ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபெக்டிவ் பீப்பிள் புத்தகத்தை எழுதியுள்ளார்.“வெற்றி, சந்தோஷம், ஆன்மீகம் மற்றும் நிதி சுதத்திரம் சிக்கலானது அல்ல, நான் ஏன் இப்படி நினைக்கிறேன் என்று கேமருன் சி. டெய்லரின் புத்தகத்தை படித்த பின்னர் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
லூ ஹோல்ட்ஸ், நேஷனல் சேம்பியன் மற்றும் ஹெட் ஃபுட்பால் கோச், நாட்டர்டாம் பல்கலைக்கழகம், 1985-1996“நீங்கள் உங்களது வாழ்க்கையின் நடைமுறைப்படுத்தக்கூடிய காலங்கடந்த உண்மைகள் கொண்ட இது இதமான அற்புதமான புத்தகம்”
பிரெயன் டிரேசி, சிறப்பாக விற்பனையாகும் தி வேட்டு வெல்த் புத்தகத்தின் எழுத்தாளர்“இந்த புத்தகத்தை படிப்பவர்கள் இதில் உள்ள உறுதியான நெறிகளின் செல்வத்தின் மீது செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்!’
ஜான் எம். ஹன்ட்ஸ்மேன் பில்லியனர், ஹன்ட்ஸ்மேன் கார்பரேஷனின் நிறுவனர்“புத்திசாலியான வர்கள் இந்த தகவலை பின்பற்றுவார்கள்!’
வில்லியம் டி. டான்கோ பிஎச்.டி., நம்பர் 1 ஆக விற்பனையாகும் தி மில்லினியர் நெக்ஸ்ட் டோர் புத்தகத்தை எழுதியவர் -
லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் ( Laabam Tharum Budget )
Rs. 1,170.00or 3 X Rs.390.00 withRead moreவிகடன் குழு
ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது.
இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செய்த விவசாயிகள், பண விரயம் ஆனதோடு எதிர்பார்த்ததை விட அதிக எதிர் விளைவுகளையும் சந்தித்து, இத்தொழிலை விட்டுவிடலாம் என சோர்ந்து போனார்கள்.
விவசாயிகளின் சோர்வை நீக்கி, விழிப்பு உணர்வு கொடுக்கவே வந்தது ‘பசுமை விகடன்’ இதழ் நடத்திய ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம். ஜீரோ பட்ஜெட் குறித்து வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் கொடுத்த பயிற்சிகள், உயிர் காக்கும் விவசாயத் தொழிலை மீட்டுத் தந்ததோடு, விவசாயிகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுத்தது.ஜீவாமிர்தம், பிரம்மாஸ்திரம், அக்னிஅஸ்திரம், கன ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், புளித்த மோர்க்கரைசல், எலுமிச்சை முட்டைக் கரைசல், மீன் அமினோ அமிலக் கரைசல் போன்ற இயற்கை உரம் தயார் செய்யும் முறையை கற்றுக்கொடுத்த சுபாஷ் பாலேக்கரது விவசாய நுணுக்கங்களைக் கையாண்டு விவசாயிகள் மேம்பட்ட மகசூல், அமோக விளைச்சல், மகத்தான லாபம் கண்டு வெற்றியின் உச்சத்தில் உள்ளனர்.
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மல்லி, வாழை, ஆரஞ்சு, மாம்பழம், பாகல், கரும்பு, மஞ்சள், பப்பாளி முதற்கொண்டு அதற்கு ஊடுபயிராக பூக்கள், தானிய வகைகளைப் பயிரிட்டு அதிக லாபம் அடைந்த விவசாயிகள், தங்களது அனுபவத்தை பசுமை விகடனில் பகிர்ந்துகொண்டார்கள். அந்த வெற்றி அனுபவங்கள் இப்போது நூல் வடிவில் உங்கள் கையில் உள்ளது.இதேமுறையில் வெற்றியடைய விரும்பும் விவசாயிகளுக்கு இந்த நூல் வரப்பிரசாதமே!
-
மூளைதனம் ( Moolaithanam )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreசி.கே. ரங்கநாதன்
வெற்றி பெறுவதற்கு ஆரம்பமாக இருப்பது திட்டமிடல். திட்டமிடாத பயணமும் திட்டமிடாத தொழிலும் இலக்கை அடைந்ததில்லை. ஆகவே, தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிடல் என்பது குதிரைக்குக் கட்டுகிற கடிவாளம் போன்றது.
அதற்கு உதாரணம், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ‘மைக்ரோ சாஃப்ட்‘டைத் தோற்றுவித்த பில்கேட்ஸ். அவரின் இலக்கும் திட்டமிடலும், தனக்குத்தானே அவர் போட்டுக்கொண்ட இலட்சியக் கடிவாளமும் அவர் பக்கம் உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது; செய்கிறது.
அதற்காக எல்லோரும் பில்கேட்ஸ் போல மென்பொருள் துறையை நோக்கிப் படையெடுக்க வேண்டிய அவசியமில்லை. பில்கேட்ஸுக்கு மென்பொருள் துறை. உங்களுக்கு எந்தத் துறையில் விருப்பமோ, எதில் ஈடுபாடோ அதை நோக்கிப் பயணிப்பதுதான் வெற்றிக்கான எளிய வழி.
அடுத்து, தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிடல் மட்டுமே போதாது. வழிநடத்தலும் அவசியம். உங்களைச் சுற்றி உங்கள் வியாபாரத்தைச் சுற்றி யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லுதல் முக்கியம். -
முதலீட்டு மந்திரம் 108
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசி.சரவணன்
ஒருவரை அவரின் சம்பளம் கோட்டீஸ்வராக மாற்றாது. அவரின் சேமிப்பு மற்றும் முதலீடுதான் கோடீஸ்வரர் ஆக மாற்றும். மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நீங்களும் கோடீஸ்வராகக் கூடும் என்பது இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது.
இந்த நூலில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாடு தொடங்கி 108 முக்கிய முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடு தொகுத்து வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். முதல் செலவு – முதலீடு, முதலீட்டுக்கான சரியான ஃபார்முலா; வருமானம் – சேமிப்பு = செலவு, ஜீரோ ரிஸ்க் – ஜீரோ வருமானம், உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும், போன்ற முதலீட்டு மந்திரங்கள் சிந்திக்க தூண்டுபவையாக இருக்கின்றன.
வங்கி ஃபிக்ஸடு டெபாசிட், இன்ஷுரன்ஸ், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, ரியல் எஸ்டேட், தங்கம் என எந்த முதலீடாக இருந்தாலும் அதனை மேற்கொள்ளும் முன் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்துவிட்டு செய்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும், அந்த அளவுக்கு விஷயங்கள் இதில் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த முதலீட்டு மந்திரங்கள் உங்களை செல்வந்தராக்கும் என்பதில் சந்தேகமில்லை! மந்திரங்களை உச்சரிக்க உள்ளே செல்லுங்கள்!
-
பணம் தரும் மந்திரம் / Panam Tharum Manthiram
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஎஸ். கே. முருகன்
‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று எழுதிவைத்துள்ளார் வள்ளுவர். அந்தப் பொருள் நம் வாழ்வில் கிடைக்க நமக்கு முதல் முக்கியத் தேவை பணம்தான். நாளுக்கு நாள் அனைத்துத் துறைகளில் மாற்றம் கண்டு வரும் இவ்வுலகில் நிம்மதியான இல்லற வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது பணமே. நாடுகளுக்கு நாடு பணத்தின் பெயர் மாறலாம், ஆனால் அதன் பயன்பாடு உலகத்தாருக்கு எல்லாம் ஒன்றே. அப்படிப்பட்ட பணத்தைச் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் அற வழியில் வரும் வருமானமே வாழ்வுக்கு உண்மையான வளம் சேர்க்கும். சிலர் சீக்கிரமே பணக்காரராகிவிட வேண்டும் என்று தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் இக்காலத்தில், நேர் வழியில் வரும் பணமே நிரந்தரம் என்பதைச் சொல்கிறது இந்து நூல். சம்பளத்துக்கு வேலை செய்யும் சாதாரண தொழிலாளராக இருந்து இந்தியாவின் முன்னணி தொழிலபதிராக உயர்ந்த திருபாய் அம்பானி முதல், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் இன்றும் சளைக்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா வரை பல்வேறு துறைகளில் தன் கடும் உழைப்பாலும் அறிவுத் திறனாலும் உயர்ந்து அதன்மூலம் கோடீஸ்வரர்களாக ஆனவர்களின் வாழ்வை எடுத்துக்காட்டி அவர்களின் ஊக்க நல்லுரைகளையும் தந்திருக்கிறார் நூலாசிரியர். மனம் நினைத்தால் பணம் வரும் வழி கிடைக்கும் என்பதை எடுத்துக்கூறும் இந்த நூல், நீங்களும் கோடீஸ்வரராக நிச்சயம் உதவும்.
-
ஷேர் மார்க்கெட் (Share Market)
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreசொக்கலிங்கம் பழனியப்பன்
பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ‘ஷேர் மார்க்கெட்’டில் அப்படி என்னதான் இருக்கு..?’ என்ற கேள்விக்கு, உரிய பதிலைத் தேடுவோர் அநேகர்.
அதிக அளவில் முதலீடு செய்து இயங்கிவரும் ஸ்தாபனம் அல்லது புதிதாக தொடங்கப்பட இருக்கும் ஸ்தாபனம் வெளியிடும் முதலீட்டுப் பங்குகளை, லாப நோக்கில் வாங்குவதும் – விற்பதுமான வியாபார நடைமுறையை பங்குச் சந்தை ( SHARE MARKET ) என்கிறார்கள். பங்குச் சந்தையில் எந்த வகையான பங்குகளை வாங்கலாம், ஒரு பங்கை வாங்கும்முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை, ஒரு பங்கு எந்த நிலையில் இருக்கும்போது வாங்க விற்க வேண்டும், பங்குச் சந்தையில் ‘காளை’ மற்றும் ‘கரடி’ நிலைகளை அறியும் வழிமுறை, இதில் நிபுணராக நாம் மேற்கொள்ள வேண்டிய யுக்தி… போன்ற பல்வேறு தகவல்களை நடைமுறை உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் சொக்கலிங்கம் பழனியப்பன்.
நாணயம் விகடனில் ‘பங்குச் சந்தை ஆத்திசூடி’ என்ற தலைப்பில் வெளிவந்த தகவல் தொகுப்புதான் இந்த நூல். ‘வீட்டுப் பாடம்’ என்ற தலைப்பில், பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான சில பயிற்சி முறைகளை அத்தியாயம் தோறும் சொல்லி இருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. மொத்தத்தில், சாமானிய மக்களும் ‘ஷேர் மார்க்கெட்’ தொடர்பான அடிப்படை அறிவைப் பெறவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.
-
பங்குச்சந்தை அனாலிசிஸ் (அள்ள அள்ளப் பணம் – 2) Panguchanthai Analysis
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசோம. வள்ளியப்பன்
- பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது ‘அள்ள அள்ளப் பணம் – 1’. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள். நிச்சயம் மேலே போகும் என்று எதிர்பார்த்த ஷேர்கள் கீழே இறங்கின. சில சமயம் மார்க்கெட்டே விழுந்தது. சரி, விற்றுவிடலாம் என்று நீங்கள் தீர்மானித்து, விற்றபிறகு மார்க்கெட் ஏறியது. நீங்கள் தடுமாறினீர்கள். கொஞ்சம் புரிவது போலும் இருந்தது, புரியாமலும் இருந்தது.
- எந்தப் பங்கை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது? Fundamental Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். எப்பொழுது வாங்க வேண்டும்? எப்பொழுது விற்க வேண்டும்?
- எப்பொழுது வாங்கவோ, விற்கவோ கூடாது? Technical Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். பொருளாதாரம்? Macroeconomics தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரியாக ஆவது இயலாது. இந்த மூன்றையும் எளிமையாக, உங்களுக்குப்பரியும் வகையில், இந்தப் புத்தகம் சொல்லித்தருகிறது!
-
பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (அள்ள அள்ளப் பணம் – 3) ( Pangusanthai: Futures and Options )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம. வள்ளியப்பன்
நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்து கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F). அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O).
பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
-
பணத்தின் பயணம்: பண்டமாற்று முதல் பிட்காயின் வரை… ( Panathin Payanam )
Rs. 3,150.00or 3 X Rs.1,050.00 withRead moreஇரா.மன்னர் மன்னன்
உயிர்களுக்கான உறவுமுறைகளை வளர்த்துக்கொள்ளும் வகையில்தான் பண்டமாற்று முறை’ உருவானது. இதன் நவீன வடிவமே, தற்போது புழக்கத்தில் உள்ள நாணயங்களும் ரூபாய் நோட்டுகளும். உலக உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளவும், வணிக ரீதியில் தன்னை மேம்படுத்திக்கொள்ளவும், உலகலாவிய வியாபாரத்தை வளர்த்தெடுக்கவும் பணம் தேவையாக இருக்கிறது.
கற்காலம் தொடங்கி இன்றைய கலர்ஃபுல் காலம் வரையிலான பணத்தின் பரிணாம வளர்ச்சியை இந்த நூலின் ஒவ்வோர் அத்தியாயத்திலும் அறிந்துகொள்ளலாம். பழங்காலத்தில் இருந்த பண்டமாற்று முறையில் தொடங்கி, தங்கம் போன்ற விலை உயர்ந்த நகைகளைப் பிணயப் பொருள்களாகப் பயன்படுத்தி, கால ஓட்டத்தில் கரன்சிகளாக உருவெடுத்தது வரையிலும், பல்லவர் கால வரலாற்றில் பணம் தொடர்பாகப் பொதிந்துள்ள பொருள் மதிப்பு, பொற்காசுகளாக மாறிய ஒவ்வொரு நிகழ்வையும் தெளிவாக விளக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.
இந்தியாவின் பண்டைய நாணயங்கள் தொடங்கி, ஆங்கிலேயர் கால நாணயங்கள், தமிழக நாணயங்கள், ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் கால பண மதிப்பிலான வணிகத் தொடர்புகள் என வெவ்வேறு வடிவங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட பணத்தின் சுவாரஸ்யப் பயணத்தை எளிய வார்த்தைகளால் விளக்கியிருப்பதோடு, சமீபத்திய உதாரணங்களுடன் தொகுத்திருப்பது இந்த நூலுக்கே உரிய சிறப்பு. சவால்கள் நிறைந்த இன்றைய உலக வாழ்க்கையில் நாம் திரட்டும் பொக்கிஷத்தின் மூலம் உலகப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முறை, நாணவியல் கூறுகளின் அடிப்படையில் இன்றைய பணத்தின் மதிப்பு என்ன, இந்தியப் பொருளாதாரத்தின் தற்போதைய நிலை, உலக வரலாற்றில் பணமதிப்பு நீக்கம் முதல் மத்திய அரசின் பண மதிப்பு நீக்கம் வரையில் நாம் தெரிந்துகொள்ளவேண்டிய, நமக்கு எளிதில் பிடிபடாத பற்பல வரலாற்று விழுமியங்கள் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன.
ஓய்வை மறந்து, உணவைத் துறந்து, உறக்கத்தைப் பிரிந்து ஓடி ஓடி சேர்க்கும் பணம், இந்த நூலின் வழியே தன் வரலாறைக் கூறவந்துள்ளது… இனி, பணம் பேசும்! பண்டமாற்றில் தொடங்கி பிட்காயின் வரை பணத்தின் வரலாற்றை முழுமையாக விளக்கும் நூல். சரக்குப் பணம், வங்கிகள், பங்குச் சந்தைகள், பொருளாதார மோசடிகள் – இவற்றின் வரலாறும் உள்ளே அத்தியாயங்களாக… மொத்தம் 60 அத்தியாயங்கள், 488 பக்கங்கள். விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு.
-
தங்கம் (அள்ள அள்ளப் பணம் – 7)
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசோம. வள்ளியப்பன்
ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு
· தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
· நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது?
· தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது?
· தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா?
· கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா?
தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது.
வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.
-
பணமே ஓடி வா
Rs. 790.00or 3 X Rs.263.33 withசோமா. வள்ளியப்பன்Read more
சம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தகம்தான் ‘பணமே ஓடி வா’.’அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.