Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: பொருளாதாரம்
Showing all 25 results
-
21 ஆம் நூற்றாண்டில் மூலதனம் / 21 Am Nutrandil Muladhanam / Capital In The 21st Century Tamil
Rs. 5,490.00or 3 X Rs.1,830.00 withAdd to cartதாமஸ் பிக்கெட்டி
தமிழில்: கு.வி.கிருஷ்ணமூர்த்தி
பத்தொன்பாதம் நூற்றாண்டின் கடைசிக் காலாண்டிலும். இருபதாம் நூற்றாண்டில் முதல் இரு காலாண்டுகளிலும் பிரிட்டனில் ஏற்ப்பட்ட வளர்ச்சியைப் பார்க்கும் போது இதே காலகட்டத்தில் இந்தியாவில் தனிநபர் உண்மை வருமானம் வீழ்ச்சியடைந்ததையும் கோடிக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் மாண்டதையும் இணைத்துப் பார்ப்பதை தவிர்க்க முடியாது.
தொழிற்சங்கங்களை நசுக்கினால் வேலைவாய்ப்பு பெருகும் என்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் கோரிக்கையாகும். முதலாளித்துவம் ஏற்படுத்தும் ஏற்றத்தாழ்வைப் பற்றிய விரிவான ஆய்வு நூல்.
-
இந்திய இன்ஷூரன்ஸ் கோடீஸ்வரர்கள்
Rs. 990.00Rs. 890.00or 3 X Rs.296.67 withAdd to cartகனினிகா மிஸ்ரா
கோடீஸ்வரர்கள் அறுவடை செய்யும் பணப் பழக்கவழக்கங்களும், தனித்திறன்களும் மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உயர்வானவை. நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்து, ஏற்கனவே சரியான பொருளாதாரப் பாதையில் பயணித்தால், ஒரு நாள் நீங்களும் பணக்காரராக முடியும்.
-
சேமிப்பும் முதலீடும் – உங்களை கோட்டீஸ்வரராக்கும் வழிகாட்டி ( Semippum Muthaleedum )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartசிவகாசி மணிகண்டன்
ஏன் சேமிக்க வேண்டும், ஏன் முதலீடு செய்ய வேண்டும் என்பது தொடங்கி அனைத்துவிதமான முதலீட்டுத் திட்டங்களின் சாதக பாதகங்களையும், வங்கி சேமிப்புக் கணக்கு, ஃபிக்ஸட் டெபாசிட், ஆர்.டி, தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள், கம்பெனி ஃபிக்ஸட் டெபாசிட் தங்க முதலீட்டுத் திட்டங்கள், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கூறுகிறது இந்த நூல். அனைவராலும் விரும்பப்படும் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் முதலீடு என்றால் மியூச்சுவல் ஃபண்ட்தான். அதைப் பற்றி மட்டுமே பத்து அத்தியாயங்கள் இந்த நூலில் விரிவாக இடம்பெற்றிருக்கிறது.
அனைத்து நிதித் தேவைகளுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எப்படிப் பயன்படுத்துவது, மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் என்னென்ன என்பதைப் பற்றி தகுந்த உதாரணங்களுடன் எடுத்துக்காட்டுகிறது இந்த நூல். நாணயம் விகடன் வார இதழில் சேமிப்பும் முதலீடும் எனும் தலைப்பில் தொடராக வெளிவந்த கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றிருக்கிறது. குறுகிய காலம், நடுத்தரக் காலம், நீண்ட காலத்துக்கு எந்த மாதிரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும், ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப எந்தத் திட்டங்கள் சரியாக இருக்கும் என்பதையும், முதலீட்டைப் பாதுகாக்கும் அவசர கால நிதி, ஆயுள் காப்பீடு, மருத்துவக் காப்பீடு பற்றியும், முதலீட்டை சரியாகத் தேர்வு எப்படி என்பதையும் உதாரணங்களுடன் நூலாசிரியர் விளக்கியுள்ளார். சேமிப்பையும் முதலீட்டையும் சரியான திட்டமிடலுடன் செய்தால் நிறைவான, நிம்மதியான வாழ்க்கை நிச்சயம் என்பதை எடுத்துக்கூறுகிறது இந்த நூல்.
-
இன்சூரன்ஸ் (அள்ள அள்ளப் பணம் 8 ) / Insurance (Alla Alla Panam 8)
Rs. 1,690.00Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசோம. வள்ளியப்பன்
லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனையான அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் புது வரவு. கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும். செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பனின் இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர். ‘அள்ள அள்ளப் பணம்’ வரிசையில் முந்தைய நூல்களைப் போலவே இந்நூலும் மிகுந்த கவனம் பெறும் என்பது உறுதி.”
-
கடன்: (அள்ள அள்ளப் பணம் 9 ) / Kadan (Alla Alla Panam 9)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreசோம. வள்ளியப்பன்
கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும்.
செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பன் எழுதியுள்ள இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன் என்பது பெரிய சப்ஜெக்ட். அடமான கடன், செக்குகள், பிராமிசரி நோட், செக் பவுன்ஸ், வங்கி கடன்கள், NBFC நிறுவனங்களில் இருந்து கடன்கள், லோன் ஆப்கள், வியாபாரக் கடன், தங்கத்தின் மீதான கடன், விவசாய கடன், வாகன, வீட்டுக் கடன் அதற்குரிய வரி விலக்குகள், கடனை திருப்பி தராவிட்டால் எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள், சர்பாசி சட்டம் என பலவற்றைப் பற்றியும் ஒரு எளிமையான, அதே சமயம் விரிவான புத்தகம். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
-
நாட்டுக் கணக்கு ( Naattu Kanakku )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreசோம வள்ளியப்பன்
வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம். அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இத்தோடு நமக்கும் நம் நாட்டுக்கும் உள்ள தொடர்பு முடிந்துவிடுகிறது என்று நினைத்துக்கொள்கிறோம்.
தவறு.
நீங்கள் கட்டும் வரியை யார் நிர்ணயம் செய்கிறார்கள்?
உங்களுக்கு அரசால் எப்படிச் சில சலுகைகளை அளிக்கமுடிகிறது?
அதற்கான நிதியை அரசு எப்படிப் பெறுகிறது?
அரசு எவ்வாறு வருமானம் ஈட்டுகிறது?
சாலை, குடிநீர், கட்டுமானம், ராணுவம் என்று எப்படி அரசால் செலவழிக்கமுடிகிறது?
அரசும் நம்மைப் போல் கடன் வாங்குமா?
எனில் யாரிடமிருந்து?
அரசும் வரவு செலவு கணக்கு போட்டுப் பார்க்குமா?
அரசுக்கும் பொருளாதார நெருக்கடிகள் தோன்றுமா?
ஆம் எனில் அவற்றை எப்படி அவர்கள் கையாள்கிறார்கள்?இப்படியாக ஒவ்வொரு தலைப்பையும் அக்குவேறு, ஆணிவேறாக பிரித்து அரசு ஒரு பட்ஜெட்டை எப்படித் தயாரிக்கிறார்கள் என்பது வரை நாம் கனம் என்று நினைக்கும் ஒரு விஷயத்தை மிக, மிக எளிதாக, இலகுவாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார் சோம. வள்ளியப்பன். நம் தேசத்தின் பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்துக்கொள்வது நம் உரிமை. ஒரு குடிமகனாக அது நம் கடமையும்கூட.
-
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்
Rs. 1,850.00or 3 X Rs.616.67 withRead moreஜான் பெர்க்கின்ஸ்
தமிழில்: இரா. முருகவேள்
“நியூயார்க் டைம்ஸ் இதழில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் 70 வாரங்கள் இடம் பெற்றிருந்த நூல்.”
சிறந்த மொழிபெயர்ப்புக்காக த.மு.எ.க.ச. விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது இந்நூல்.
“…மூன்றாம் உலக நாடுகளில் நடப்பது குறித்து நான் தெளிவற்று இருந்தேன். ஆனால் இந்நூலைப் படித்த பிறகு பல அம்சங்களில் தெளிவடைந்தேன். அத்தோடு அதிர்ச்சியும் அடைந்தேன்.” –நிக்கோலஸ் லெசார்ட், திகார்டியன்
உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்கு பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும் அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உலகை அதிரச் செய்தது இந்நூல்.
-
ஒரு பொருளாதார அடியாளின் கூடுதல் வாக்குமூலம் (Oru Porulaadhaara Adiyaalin Kuduthal VaakkuMulam)
Rs. 3,790.00or 3 X Rs.1,263.33 withRead moreஜான் பெர்க்கின்ஸ்
தமிழில்: PSV குமாரசாமி
“நியூயார்க் டைம்ஸ் இதழில் அதிகம் விற்பனையாகும் நூல்கள் பட்டியலில் 70 வாரங்கள் இடம் பெற்றிருந்த நூல்.”
சிறந்த மொழிபெயர்ப்புக்காக த.மு.எ.க.ச. விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றது இந்நூல்.
“…மூன்றாம் உலக நாடுகளில் நடப்பது குறித்து நான் தெளிவற்று இருந்தேன். ஆனால் இந்நூலைப் படித்த பிறகு பல அம்சங்களில் தெளிவடைந்தேன். அத்தோடு அதிர்ச்சியும் அடைந்தேன்.” –நிக்கோலஸ் லெசார்ட், திகார்டியன்
உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக்காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்கு பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும் அது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து உலகை அதிரச் செய்தது இந்நூல்.
-
தேச செல்வங்களின் கதை
Rs. 1,990.00Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreலியோ ஹுபர்மேன்
தமிழில்: க. மாதவ்
இந்தப் புத்தகம் ஐரோப்பிய நில உறவுகளை அலசுகிறது. சிலுவைப்போர்களுக்கும் வர்த்தக விரிவாக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், புதிய பொருள் உற்பத்திகளின் தேவைகள், புதிய வர்க்கங்களின் தோற்றம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, நிலப்பிரபுத்துவம்-முதலாளித்துவத்தின் மோதல், தேசிய அரசுகளின் உருவாக்கம், அரசியல் அமைப்புகளின் தோற்றம்-வளர்ச்சி, தொழிற்புரட்சி, தொழிற்சாலை உற்பத்திமுறையின் தோற்றம், புதிய உலகங்களை கண்டுபிடித்தல், அடிமை வர்த்தகம், ஆரம்ப மூலதன குவியல், சந்தை விரிவாக்கம், மூலதன பரவல், ஏகாதிபத்திய வளர்ச்சி, சந்தைகள் பங்கீடு-மறுபங்கீடுக்கான யுத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் தோற்றம், தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி அமைதல், பாசிசத்தின் வளர்ச்சி ஆகிய வரலாற்று நிகழ்வுகளை மத்திய யுக காலந்தொட்டு நவீனகாலம் வரையிலான பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் தக்க சான்றுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
நாம் அறிந்த வரலாற்று பிரபலங்களின் உண்மை சொரூபம் இந்த வரலாற்று நிகழ்வுகளில் எவ்வாறு இருந்தது என்பதை இந்தப் புத்தகம் மிக சரியாக விளக்குகிறது. இந்தப் பிரபலங்களின் வர்க்க சார்பை மிகத் தெளிவாக சித்தரிக்கிறது.
இந்தப் புத்தகத்தின் பேசுபொருள் சிக்கலான சமூக, அரசியல், பொருளாதாரமாக இருந்தாலும், லியோ ஹூபர்மேன் அதை ஒரு கதைசொல்லியின் பாங்கில் கவித்துவமாக விளக்கியிருப்பதை வாசகர்கள் உணர்வார்கள்.
-
நீங்களும் விற்பனையாளர் ஆகலாம் (You Can Sell)
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreShiv Khera / ஷிவ் கேரா
நீங்கள் ஒரு வெற்றிகரமான விற்பனை நிபுணரை உருவாக்கும் நேர-சோதனை கொள்கைகளை நீங்கள் விற்கலாம். பயன்படுத்தப்படும் வார்த்தை கொள்கைகள்’ மற்றும் தந்திரோபாயங்கள் அல்ல. ஏனெனில் தந்திரோபாயங்கள் கையாளக்கூடியவை, அதேசமயம் கொள்கைகள் ஒருமைப்பாட்டின் அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டவை. வெற்றிபெற நீங்கள் ‘வர்த்தகத்தின் தந்திரங்களை’ கற்றுக்கொள்ள வேண்டும் என்று மக்கள் சொல்வதை நீங்கள் பல முறை கேட்கிறீர்கள். இது உண்மையல்ல. இந்தப் புத்தகம் வித்தியாசமானது!
-
டாடா: நிலையான செல்வம் ( The Creation of Wealth )
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreஆர். எம். லாலா
தமிழில்: B.R. மகாதேவன்
அதிகம் வாசிக்கப்பட்ட வெற்றிக் கதை இது!
1868-ல் ஜம்சேட்ஜி டாடாவால் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிறுவனம் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளாக தேசத்துக்கு வளம் சேர்த்துவரும் விதத்தை விவரிக்கும் புத்தகம் இது.தொழில் புரட்சிக்கு முந்தைய உலகில் முன்னணியில் இருந்த நம் தேசத்தை நவீன காலகட்டத்திலும் மேலான நிலைக்குக் கொண்டு செல்ல ஜம்சேட்ஜி மூன்று திட்டங்களை முன் வைத்தார். ஒன்று, எஃகு உருக்காலைத் திட்டம். இரண்டு, நீர் மின்சாரத் திட்டம். மூன்றாவது, ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழகம்.
அந்தக் கனவுகளை அடியொற்றியே டாடா குழுமம் வளர்ந்து வந்திருப்பதன் மூலம் நிறுவனருக்கு நியாயமான அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது. ஆனால், அந்த வெற்றி எளிதில் கிடைத்துவிடவில்லை. அரசுக் கட்டுப்பாடுகள் இருந்த காலகட்டத்திலும், தாராளமயமாக்கல் நடைபெற்ற காலகட்டத்திலும் டாடா குழுமம் என்னென்ன சவால்களைச் சந்திக்க வேண்டியிருந்தது, அவற்றை எப்படி வென்று காட்டியிருக்கிறது என்பதை இந்தப் புத்தகம் விரிவாக விவரிக்கிறது.
டாடா குழுமத்தின் வெற்றி என்பது வர்த்தக, தொழில்துறை சார்ந்த ஒன்று மட்டுமே அல்ல என்பதையும் தெளிவாக ஆவணப்படுத்துகிறது. பணியாளர் நலத்திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள், உயர் கல்வி மையங்கள், கலை, கலாசார மேம்பாடு, கிராமப்புற மேம்பாடு என பலவகைகளில் டாடா குழுமம் ஆற்றிவரும் தேச நலச் செயல்திட்டங்கள் பற்றியும் அழுத்தமாகச் சித்திரிக்கிறது.
-
பிசினஸ் சீக்ரெட்ஸ் (Business Secrets)
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreசி.கே. ரங்கநாதன்
‘பிசினஸா… எனக்கும் அதுக்கும் ரொம்ப தூரம்… அதைப் பற்றி எனக்குத் தெரியாது… எனக்கு சப்போர்ட் பண்ண யாரும் இல்லை…’ என்ற எண்ணம் கொண்டிருப்பவர்கள் இந்த நூலைப் படித்த பிறகு அப்படிச் சொல்லவே முடியாது. முதலில் என்ன பிசினஸ் செய்யலாம் எனத் தேர்ந்தெடுத்து பின் அதை எந்த இடத்தில் அமைக்கலாம்… அதற்கு முதலீடு செய்ய என்னென்ன தேவை என்பதை ஆராய்ந்து, திட்டமிட்டு, எளிமையான முறையில் கையாளும்பட்சத்தில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானத்தைப் பெறும் உத்திகளைப் பற்றி இந்த நூல் தெளிவாகக் கற்றுக்கொடுக்கிறது. என்ன தொழில் செய்ய வேண்டும்? அதில் எது நமக்கு ஏற்றதாய் இருக்கும் எனக் கண்டுபிடித்து அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும்?
தொழிலாளர்களை எப்படி நியமிக்க வேண்டும்? பிசினஸில் ஏற்படும் தடைகளையும் தவறுகளையும் எப்படி எதிர்கொண்டு முன்னேற்றம் அடைய வேண்டும்? பிசினஸுக்காக முதலீட்டுப் பணம் எப்படிப் பெறுவது? அதற்கான திட்டங்கள் என்ன? போன்ற நுணுக்கமான வழிமுறைகளை எடுத்துரைத்திருப்பது இந்த நூலின் சிறப்பு. பிசினஸ் செய்வதில் குறுக்குவழி கூடாது; அதனால் சந்திக்க நேரிடும் விளைவுகள்… வருமான வரி செலுத்துவதன் அவசியங்கள்; அதனால் கிடைக்கும் மரியாதை… வங்கி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுதல்; இதனால் கூடுதல் கடன் கிடைக்கக்கூடிய வாய்ப்பு… போன்ற பிசினஸ் சீக்ரெட்ஸ்களை பக்குவமாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் சி.கே.ஆர். நாணயம் விகடனில் தொடராக வெளிவந்த பிசினஸ் சீக்ரெட்ஸ், நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சிறந்த ஆலோசனைகளையும் ஆக்கப்பூர்வமான அறிவுரைகளையும் பெற்று, உங்கள் பிசினஸில் நீங்கள் வெற்றிபெற, பக்கங்களைப் புரட்டுங்கள்… பிசினஸில் வெல்லுங்கள்!
-
லாபம் தரும் ஜீரோ பட்ஜெட் ( Laabam Tharum Budget )
Rs. 1,170.00or 3 X Rs.390.00 withRead moreவிகடன் குழு
ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்பது செலவில்லாமல், ரசாயனம் சேர்க்காமல் இயற்கை முறையில் விவசாயம் செய்வது.
இதுவரை பூச்சியை விரட்ட, விதை நேர்த்தி செய்ய, அதிக விளைச்சல் காண பலவித ரசாயனங்களை உபயோகித்து விவசாயம் செய்த விவசாயிகள், பண விரயம் ஆனதோடு எதிர்பார்த்ததை விட அதிக எதிர் விளைவுகளையும் சந்தித்து, இத்தொழிலை விட்டுவிடலாம் என சோர்ந்து போனார்கள்.
விவசாயிகளின் சோர்வை நீக்கி, விழிப்பு உணர்வு கொடுக்கவே வந்தது ‘பசுமை விகடன்’ இதழ் நடத்திய ஜீரோ பட்ஜெட் இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம். ஜீரோ பட்ஜெட் குறித்து வேளாண் வித்தகர் சுபாஷ் பாலேக்கர் கொடுத்த பயிற்சிகள், உயிர் காக்கும் விவசாயத் தொழிலை மீட்டுத் தந்ததோடு, விவசாயிகளுக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும் அள்ளிக்கொடுத்தது.ஜீவாமிர்தம், பிரம்மாஸ்திரம், அக்னிஅஸ்திரம், கன ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், புளித்த மோர்க்கரைசல், எலுமிச்சை முட்டைக் கரைசல், மீன் அமினோ அமிலக் கரைசல் போன்ற இயற்கை உரம் தயார் செய்யும் முறையை கற்றுக்கொடுத்த சுபாஷ் பாலேக்கரது விவசாய நுணுக்கங்களைக் கையாண்டு விவசாயிகள் மேம்பட்ட மகசூல், அமோக விளைச்சல், மகத்தான லாபம் கண்டு வெற்றியின் உச்சத்தில் உள்ளனர்.
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி மல்லி, வாழை, ஆரஞ்சு, மாம்பழம், பாகல், கரும்பு, மஞ்சள், பப்பாளி முதற்கொண்டு அதற்கு ஊடுபயிராக பூக்கள், தானிய வகைகளைப் பயிரிட்டு அதிக லாபம் அடைந்த விவசாயிகள், தங்களது அனுபவத்தை பசுமை விகடனில் பகிர்ந்துகொண்டார்கள். அந்த வெற்றி அனுபவங்கள் இப்போது நூல் வடிவில் உங்கள் கையில் உள்ளது.இதேமுறையில் வெற்றியடைய விரும்பும் விவசாயிகளுக்கு இந்த நூல் வரப்பிரசாதமே!
-
மூளைதனம் ( Moolaithanam )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreசி.கே. ரங்கநாதன்
வெற்றி பெறுவதற்கு ஆரம்பமாக இருப்பது திட்டமிடல். திட்டமிடாத பயணமும் திட்டமிடாத தொழிலும் இலக்கை அடைந்ததில்லை. ஆகவே, தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிடல் என்பது குதிரைக்குக் கட்டுகிற கடிவாளம் போன்றது.
அதற்கு உதாரணம், ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உலகப் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனமான ‘மைக்ரோ சாஃப்ட்‘டைத் தோற்றுவித்த பில்கேட்ஸ். அவரின் இலக்கும் திட்டமிடலும், தனக்குத்தானே அவர் போட்டுக்கொண்ட இலட்சியக் கடிவாளமும் அவர் பக்கம் உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்தது; செய்கிறது.
அதற்காக எல்லோரும் பில்கேட்ஸ் போல மென்பொருள் துறையை நோக்கிப் படையெடுக்க வேண்டிய அவசியமில்லை. பில்கேட்ஸுக்கு மென்பொருள் துறை. உங்களுக்கு எந்தத் துறையில் விருப்பமோ, எதில் ஈடுபாடோ அதை நோக்கிப் பயணிப்பதுதான் வெற்றிக்கான எளிய வழி.
அடுத்து, தொழில் வளர்ச்சிக்குத் திட்டமிடல் மட்டுமே போதாது. வழிநடத்தலும் அவசியம். உங்களைச் சுற்றி உங்கள் வியாபாரத்தைச் சுற்றி யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களை அரவணைத்து அழைத்துச் செல்லுதல் முக்கியம். -
முதலீட்டு மந்திரம் 108
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசி.சரவணன்
ஒருவரை அவரின் சம்பளம் கோட்டீஸ்வராக மாற்றாது. அவரின் சேமிப்பு மற்றும் முதலீடுதான் கோடீஸ்வரர் ஆக மாற்றும். மாதம் ரூ.1,000 வீதம் 30 ஆண்டுகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்து வந்தால் நீங்களும் கோடீஸ்வராகக் கூடும் என்பது இந்த நூலில் எளிமையாக விளக்கப்பட்டிருக்கிறது.
இந்த நூலில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள வேறுபாடு தொடங்கி 108 முக்கிய முதலீட்டு மந்திரங்களை விவரிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்களின் உதவியோடு தொகுத்து வழங்கி இருக்கிறார் நூலாசிரியர் சி.சரவணன். முதல் செலவு – முதலீடு, முதலீட்டுக்கான சரியான ஃபார்முலா; வருமானம் – சேமிப்பு = செலவு, ஜீரோ ரிஸ்க் – ஜீரோ வருமானம், உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும், போன்ற முதலீட்டு மந்திரங்கள் சிந்திக்க தூண்டுபவையாக இருக்கின்றன.
வங்கி ஃபிக்ஸடு டெபாசிட், இன்ஷுரன்ஸ், பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்டு, ரியல் எஸ்டேட், தங்கம் என எந்த முதலீடாக இருந்தாலும் அதனை மேற்கொள்ளும் முன் இந்தப் புத்தகத்தை ஒருமுறை படித்துவிட்டு செய்தால் நிச்சயம் லாபகரமாக இருக்கும், அந்த அளவுக்கு விஷயங்கள் இதில் பரந்து விரிந்திருக்கின்றன. இந்த முதலீட்டு மந்திரங்கள் உங்களை செல்வந்தராக்கும் என்பதில் சந்தேகமில்லை! மந்திரங்களை உச்சரிக்க உள்ளே செல்லுங்கள்!
-
பணம் தரும் மந்திரம் / Panam Tharum Manthiram
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஎஸ். கே. முருகன்
‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்று எழுதிவைத்துள்ளார் வள்ளுவர். அந்தப் பொருள் நம் வாழ்வில் கிடைக்க நமக்கு முதல் முக்கியத் தேவை பணம்தான். நாளுக்கு நாள் அனைத்துத் துறைகளில் மாற்றம் கண்டு வரும் இவ்வுலகில் நிம்மதியான இல்லற வாழ்வுக்கு அடிப்படையாக இருப்பது பணமே. நாடுகளுக்கு நாடு பணத்தின் பெயர் மாறலாம், ஆனால் அதன் பயன்பாடு உலகத்தாருக்கு எல்லாம் ஒன்றே. அப்படிப்பட்ட பணத்தைச் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் அற வழியில் வரும் வருமானமே வாழ்வுக்கு உண்மையான வளம் சேர்க்கும். சிலர் சீக்கிரமே பணக்காரராகிவிட வேண்டும் என்று தவறான வழியில் பணம் சேர்க்க நினைக்கும் இக்காலத்தில், நேர் வழியில் வரும் பணமே நிரந்தரம் என்பதைச் சொல்கிறது இந்து நூல். சம்பளத்துக்கு வேலை செய்யும் சாதாரண தொழிலாளராக இருந்து இந்தியாவின் முன்னணி தொழிலபதிராக உயர்ந்த திருபாய் அம்பானி முதல், ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருந்தாலும் இன்றும் சளைக்காமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் இசைஞானி இளையராஜா வரை பல்வேறு துறைகளில் தன் கடும் உழைப்பாலும் அறிவுத் திறனாலும் உயர்ந்து அதன்மூலம் கோடீஸ்வரர்களாக ஆனவர்களின் வாழ்வை எடுத்துக்காட்டி அவர்களின் ஊக்க நல்லுரைகளையும் தந்திருக்கிறார் நூலாசிரியர். மனம் நினைத்தால் பணம் வரும் வழி கிடைக்கும் என்பதை எடுத்துக்கூறும் இந்த நூல், நீங்களும் கோடீஸ்வரராக நிச்சயம் உதவும்.
-
[RARE] தேசிய இனப் பிரச்சினைகளும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்
Rs. 1,790.00Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreலெனின்
தேசங்களின் சுயநிர்ணய உரிமை குறித்த விவாதங்களை நடத்தியதிலும் தீர்வுகளை அளித்ததிலும் உலக வரலாற்றில் வி. இ. லெனினுக்கு நிகர் வேறு யாருமில்லை. இது ஒரு தொகுப்பு நூல். இதில் அடங்கியுள்ள படைப்புகள் பின்வருமாறு:
ருஷ்யாவின் சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் தேசிய இனச் செயல்திட்டம்,தேசிய இனப்பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை, மகா ருஷ்யர்களின் தேசிய இனப் பெருமிதம் பற்றி, சோசாலிசப் புரட்சியும் தேசிய இனங்களின் பிரச்சனை அல்லது “தன்னாட்சிமயமாக்கல்”.
ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை கேடலோனியாக்களும் குர்திஸ்தான்களும் வரவேற்கும் இக்காலத்தில் லெனினை வாசிப்பது மிகவும் பொருத்தமானதாகும்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
-
மார்க்கெட்டிங் மாயாஜாலம்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
‘மார்க்கெட்டிங். இது ஒரு தாரக மந்திரம். உங்கள் கண்ணில் தென்படும் அத்தனை விஷயங்கள் மீதும் பரம்பொருள் போல் ஆதிக்கம் செலுத்தும் சக்தி. ஒரு வரியில் சொல்வதென்றால் பொருள்களை விற்கப் பயன்படும் உத்தி. பெட்டிக்கடை தோறும் பெப்ஸி போர்டுகளும் கொல்லைப்புறம் வரை கோககோலா தட்டிகளும் தென்படுவதன் பின்னால் உள்ள சூட்சுமம்.
மார்க்கெட்டிங் என்பது உங்கள் தொழிலில் வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள வித்தியாசம். உங்களுக்கு எது வேண்டும்? வெற்றிதானே? உங்கள் வர்த்தகம் கொழிப்பதற்கான வழிமுறைகளை அள்ளித்தருகிறது! சுய தொழில் புரிவோருக்கும், மிகப்பெரிய நிறுவனங்களில் மார்க்கெட்டிங் துறையில் வேலை தேடிக்கொண்டிருப்போருக்கும் – ஏன், கடைக்குப் போய் காசு கொடுத்து ஏதாவது வாங்கும் அத்தனை பேருக்குமே இது ஒரு அட்சய பாத்திரம்.
-
அள்ள அள்ள பணம் 5: பங்குச்சந்தை டிரேடிங் ( Pangusantha: Trading )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreசோம வள்ளியப்பன்பங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். “அள்ள அள்ளப் பணம்” என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது. கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட. இன்வெஸ்ட்மெண்ட் என்பது சரியான பங்குகளாகப் பார்த்து, சல்லிசான விலையில் கிடைக்கும்போது வாங்கிப் போட்டு, பெட்டியில் பூட்டி வைத்துவிடுவது. தென்னம்பிள்ளை மாதிரி ஆண்டுகள் ஆனாலும், கடைசியில் காய்க்கும்போது கொட்டோ கொட்டென்று கொட்டும்.ஆனால் தினசரி பங்கு வர்த்தகத்தில் புகுந்து விளையாடும் பலரும் ஈடுபடுவது “இண்ட்ரா டே டிரேடிங்” எனப்படும் தினசரி வர்த்தகத்தில். இங்கு எந்தப் பங்கையும் நீங்கள் வாங்கி சேர்த்துவைக்கப்போவதில்லை. அன்றே வாங்கி, அன்றே விற்றுவிடுவீர்கள். அன்றே லாபமும், அன்றே நட்டமும். தீ, நெருப்பு கொஞ்சம் கவனமாக இல்லை என்றால் பொசுக்கிவிடும். ஆனால் அந்த நெருப்புதானே விட்டில் பூச்சிகளை விரும்பி அழைக்கிறது. விட்டில் பூச்சிகள் போல பொசுங்கிவிடாமல், கனமான ஆமை ஓட்டை உங்களுக்கு அளிக்கிறது இந்தப் புத்தகம். டிரேடிங்கில் வெல்ல நிறைய கணக்கு தெரிந்திருக்க வேண்டும். கேண்டில்கள், வேவ்கள் போன்ற வரைபடங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். பணம் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தால் உங்களால் நிச்சயம் இந்தக் கணக்குகளைப் புரிந்துகொள்ள முடியும். சோம.வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் உங்களைக் கைபிடித்து டிரேடிங் உலகுக்குள் அழைத்துச் செல்கிறது. -
தங்கம் (அள்ள அள்ளப் பணம் – 7)
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசோம. வள்ளியப்பன்
ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு
· தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?
· நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது?
· தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது?
· தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா?
· கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா?
தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது.
வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.
-
பணமே ஓடி வா
Rs. 790.00or 3 X Rs.263.33 withசோமா. வள்ளியப்பன்Read more
சம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தகம்தான் ‘பணமே ஓடி வா’.’அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.வியாபார வியூகங்கள்
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்திதலைசிறந்த பிசினஸ் ஜர்னல்கள், மார்க்கெட்டிங் வல்லுனர்கள், நிர்வாக மேதைகளின் ஆய்வுகள், அறிக்கைகள், அறிவுரைகள் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வியூகங்கள் உங்களை வெல்லவைக்கும். எதிரிகளை மீளமுடியாமல் சிக்கவைக்கும். * ஸ்ட்ரடீஜிக் மானேஜ்மெண்ட் * பஸ்ட் திறனாய்வு * ஐந்து போட்டி சக்திகள் அமைப்பு * வேல்யூ செயின் * கம்பெனி விஷன் டாகுமெண்ட் * கோர் காம்பெடன்ஸ் * வியூக அறிக்கை * ஹெட்ஜ்ஹாக் கோட்பாடு * ஜெனரிக் வியூகங்கள் * ஸ்வாட் திறனாய்வு பயப்படாதீர்கள்… இந்தச் சிக்கலான கடினமான விஷயங்கள் அனைத்தையும் எளிமையாகத் தோளின்மீது கை போட்டபடியே பேசும் நண்பர்போல் வெகு ஜோவியலாக விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.சூப்பர் சேல்ஸ் சக்சஸ் ஃபார்முலா / Super Sales – Success Formula
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withஜி.எஸ்.சிவகுமார்
விற்பனைத் துறையில் பெரும் சாதனைகள் புரிய ஓர் எளிமையான, சுவாரஸ்யமான கையேடு!- விற்பனைத் துறை எப்படிச் செயல்படுகிறது? அதில் இணைவது எப்படி?- இத்துறையில் என்னென்ன சிக்கல்கள், சவால்கள், வாய்ப்புகள் உள்ளன? அவற்றை எப்படிக் கையாள்வது?- உங்கள் மேலாளரின் நம்பிக்கையைப் பெறுவது எப்படி? எந்தவொரு குழுவிலும் சிக்கலின்றி பணியாற்றுவது எப்படி?- பேச்சு, எழுத்துத் திறனை வளர்த்துக்கொள்வது எப்படி?- வாடிக்கையாளரைப் புரிந்துகொள்வது எப்படி? அவருடைய தேவைகளை உணர்ந்து, பூர்த்தி செய்வது எப்படி?- பேரங்களை வெற்றிகரமாக நடத்திமுடிக்கும் கலையை எப்படிக் கற்றுக்கொள்வது?- இலக்குகளை அடைவது எப்படி? நெருக்கடிகளைச் சமாளிப்பது எப்படி?நீங்கள் விற்பனைத் துறையைச் சேர்ந்தவராக இருந்தால் அல்லது அதில் நுழையும் கனவு கொண்டிருப்பவராக இருந்தால், இந்தப் புத்தகத்தை நீங்கள் வாசித்தே தீர வேண்டும். 35 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனைத் துறையில் பணியாற்றிய தனது நீண்ட, நெடிய அனுபவத்தின் அடிப்படையில் இந்நூலை உருவாக்கியிருக்கிறார் சிவக்குமார். உங்களுடைய நிச்சயமான வெற்றிக்கு உத்தரவாதமளிக்கும் பாடங்கள் பல இதில் உள்ளன.பிசினஸில் தற்கொலை செய்து கொல்வது எப்படி? ( Businessil thatkozhai Seythu Kolvathu Eppadi )
Rs. 990.00Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreசதிஹீஷ் கிருஷ்ணமூர்த்தி
என்னவெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும், அதை எப்படியெல்லாம் செய்தால் லாபம் கொழிக்கும் என்பதை எடுத்துச்சொல்ல ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. என்னவெல்லாம் செய்யக்கூடாது?
அப்படிச் செய்தால் என்னாகும்?
எத்தகைய தவறுகள் தொழில் வளர்ச்சியை பாதிக்கும்?
எத்தகைய தவறுகள் நம்மையும் சேர்த்து முடக்கிப்போடும்?
ஆகியவற்றை நேர்மையாக எடுத்துச் செல்லும் நூல்கள் அதிகமில்லை. இந்நூல் அதைத்தான் செய்கிறது என்பதால் ஒரு வகையில் இது உங்களுக்கான கசப்பு மருந்து. நீங்கள் எப்படியெல்லாம் மேலே மேலே உயரவேண்டும் என்றல்ல, எங்கெல்லாம் சறுக்குவீர்கள் என்பதைக் கவனத்துடன் இந்நூல் உங்களுக்குச் சுட்டிக்காட்டப்போகிறது. தெரிந்தும் தெரியாமலும் தொழிலில் தவறு செய்து தானும் தற்கொலை செய்துகொண்டு தன் தொழிலையும் கொல்லும் விதங்களை, விபரீதங்களை விவரிக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட். மார்க்கெட்டிங், பிராண்டிங் உலகின் முடிசூடா தாதாவாகத் திகழும் சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இந்நூல் உங்களைத் தற்கொலையிலிருந்து தடுத்து நிறுத்தப்போகிறது. அதோ சிகரம் என்று உற்சாகப்படுத்துவதற்குப் பதில், ஐயோ பள்ளம் என்று அலறி உங்களைத் தடுத்தாளப்போகிறது. நிஜமாக வெற்றி என்பது எந்தக் கட்டத்திலும் தோல்வி அடையாமல் இருப்பதிலிருந்துதான் தொடங்குகிறது அல்லவா?
பிசினஸ் டிப்ஸ் ( Business Tips Tamil )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
எதையும் எளிதாகப் புரிந்துகொள்ளும்படியும் வெகுவாக ரசிக்கும்படியும் சொல்வது சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. கனமான, ஆழமான பிசினஸ் மேனேஜ்மெண்ட் பாடங்கள்கூட இவர் கை பட்டால் புதுப் பொலிவு பெற்றுவிடுகிறது. நீங்கள் ஏற்கெனவே தொழிலொன்றை நடத்திவந்தாலும் சரி, ஒரு தொழில்முனைவோராக மாறும் கனவோடு இருப்பவராக இருந்தாலும் சரி… இந்தப் புத்தகம் உங்களுக்குத் தேவையான பயனுள்ள டிப்ஸ்கள் அனைத்தையும் கையடக்கமாகத் தொகுத்து அளிக்கிறது. திறமைசாலியான ஓர் ஆலோசகரை அதிக வருமானம் கொடுத்து பணியில் அமர்த்திக்கொள்வதற்குப் பதில் இந்தப் புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டால் போதும். வளமான வாழ்வும் லாபகமான வர்த்தகமும் கைமேல் கிடைக்கும்.