Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: பங்குச்சந்தை

Showing all 10 results

  • Cashflow Quadrant Tamil flashbooks.lk

    கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் (Cashflow Quadrant)

    Rs. 3,690.00
    or 3 X Rs.1,230.00 with

    ராபர்ட் கியோஸாகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    “பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.”

     

    சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பணக்காரத் தந்தையின் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் திரைவிலக்குகிறது.

     

    பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடம் எப்போதேனும் கேட்டதுண்டா?

     

    • பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும்போது, சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்?

     

    • சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கின்றனர்?

     

    • தொழில் யுகத்திலிருந்து தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?

    or 3 X Rs. 1,230.00 with Koko Koko
    Add to cart
  • Out of Stock

    இழக்காதே! பங்கு சந்தை: படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் / Izhakkathey!

    Rs. 2,790.00
    or 3 X Rs.930.00 with

    செல்லமுத்து குப்புசாமி 

     

    பங்கு சந்தை படுகுழிகளும் பாதுகாப்பு வழிகளும் பங்குச் சந்தைகளின் உலகம் பரவசமூட்டும் ஒரு விஷயம். அதே அளவுக்கு சிக்கலானதும் கூட.

     

    அதை மேலும் சிக்கலாக்கும் எந்தவொரு intelligent fool ஐயும் விட செல்லமுத்து குப்புசாமி touch of genius உடன் இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கான கூடுதல் தகுதி படைத்தவராகிறார் எங்கோ உச்சாணியில் அமர்ந்து கொண்டு காற்றில் வரைபடம் போடுவதற்குப் பதிலாக பகுத்தறியும் நோக்கில் பங்குச் சந்தையை அணுகும் சூட்சுமம் அவருக்குக் கைவருகிறது.

    or 3 X Rs. 930.00 with Koko Koko
    Read more
  • Alla Alla panam 4 flashbooks.lk
    Out of Stock

    பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4) ( Pangusanthai: Portfolio Muthaleedugal )

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    சோம. வள்ளியப்பன்

     

      பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார்.
      பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.
    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • மியூச்சுவல் ஃபண்ட்
    Out of Stock

    மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் – 6) ( Mutual Fund )

    Rs. 990.00
    or 3 X Rs.330.00 with

    சோம. வள்ளியப்பன்

     

    எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்க வேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட்.

     

    மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.

     

    வேறெதையும்விட மியூச்சுவல் ஃபண்டில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது.

    or 3 X Rs. 330.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1) ( Pangusanthai: Adippadaikal )

    Rs. 1,790.00
    or 3 X Rs.596.67 with

    சோம. வள்ளியப்பன்

     

    பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்?

     

    இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது. பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன
    உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.

    or 3 X Rs. 596.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஷேர் மார்க்கெட் (Share Market)

    Rs. 1,090.00
    or 3 X Rs.363.33 with

    சொக்கலிங்கம் பழனியப்பன்

     

    பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கும் ‘ஷேர் மார்க்கெட்’டில் அப்படி என்னதான் இருக்கு..?’ என்ற கேள்விக்கு, உரிய பதிலைத் தேடுவோர் அநேகர்.
     

    அதிக அளவில் முதலீடு செய்து இயங்கிவரும் ஸ்தாபனம் அல்லது புதிதாக தொடங்கப்பட இருக்கும் ஸ்தாபனம் வெளியிடும் முதலீட்டுப் பங்குகளை, லாப நோக்கில் வாங்குவதும் – விற்பதுமான வியாபார நடைமுறையை பங்குச் சந்தை ( SHARE MARKET ) என்கிறார்கள். பங்குச் சந்தையில் எந்த வகையான பங்குகளை வாங்கலாம், ஒரு பங்கை வாங்கும்முன் நாம் தெரிந்துகொள்ள வேண்டியவை, ஒரு பங்கு எந்த நிலையில் இருக்கும்போது வாங்க விற்க வேண்டும், பங்குச் சந்தையில் ‘காளை’ மற்றும் ‘கரடி’ நிலைகளை அறியும் வழிமுறை, இதில் நிபுணராக நாம் மேற்கொள்ள வேண்டிய யுக்தி… போன்ற பல்வேறு தகவல்களை நடைமுறை உதாரணங்களோடு விளக்கியுள்ளார் நூலாசிரியர் சொக்கலிங்கம் பழனியப்பன்.
     

    நாணயம் விகடனில் ‘பங்குச் சந்தை ஆத்திசூடி’ என்ற தலைப்பில் வெளிவந்த தகவல் தொகுப்புதான் இந்த நூல். ‘வீட்டுப் பாடம்’ என்ற தலைப்பில், பங்கு பரிவர்த்தனையில் ஈடுபடுவதற்கான சில பயிற்சி முறைகளை அத்தியாயம் தோறும் சொல்லி இருப்பது, இந்த நூலுக்கே உரிய தனிச்சிறப்பு. மொத்தத்தில், சாமானிய மக்களும் ‘ஷேர் மார்க்கெட்’ தொடர்பான அடிப்படை அறிவைப் பெறவேண்டும் என்பதே இந்த நூலின் நோக்கம்.

    or 3 X Rs. 363.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பங்குச்சந்தை அனாலிசிஸ் (அள்ள அள்ளப் பணம் – 2) Panguchanthai Analysis

    Rs. 1,490.00
    or 3 X Rs.496.67 with

    சோம. வள்ளியப்பன்

     

      பங்குச்சந்தையை தூரத்தில் இருந்து பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தீர்கள். கையைச் சுட்டுவிடுமோ என்று பயந்தீர்கள். உங்கள் பயத்தைப் போக்க வந்தது ‘அள்ள அள்ளப் பணம் – 1’. அடடா, இவ்வளவுதான் பங்குச்சந்தையா என்று பயம் நீங்கி உள்ளே நுழைந்தீர்கள். பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்தது. கொஞ்சம் பணத்தை முதலீடு செய்தீர்கள். நிச்சயம் மேலே போகும் என்று எதிர்பார்த்த ஷேர்கள் கீழே இறங்கின. சில சமயம் மார்க்கெட்டே விழுந்தது. சரி, விற்றுவிடலாம் என்று நீங்கள் தீர்மானித்து, விற்றபிறகு மார்க்கெட் ஏறியது. நீங்கள் தடுமாறினீர்கள். கொஞ்சம் புரிவது போலும் இருந்தது, புரியாமலும் இருந்தது.
      எந்தப் பங்கை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது? Fundamental Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். எப்பொழுது வாங்க வேண்டும்? எப்பொழுது விற்க வேண்டும்?
      எப்பொழுது வாங்கவோ, விற்கவோ கூடாது? Technical Analysis உங்களுக்குச் சொல்லித்தரும். பொருளாதாரம்? Macroeconomics தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரியாக ஆவது இயலாது. இந்த மூன்றையும் எளிமையாக, உங்களுக்குப்பரியும் வகையில், இந்தப் புத்தகம் சொல்லித்தருகிறது!

     

    or 3 X Rs. 496.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (அள்ள அள்ளப் பணம் – 3) ( Pangusanthai: Futures and Options )

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    சோம. வள்ளியப்பன்

     

    நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.

     

    ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்து கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F). அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O).

     

    பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அள்ள அள்ள பணம் 5: பங்குச்சந்தை டிரேடிங் ( Pangusantha: Trading )

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with
    சோம வள்ளியப்பன்
    பங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். “அள்ள அள்ளப் பணம்” என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது. கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட. இன்வெஸ்ட்மெண்ட் என்பது சரியான பங்குகளாகப் பார்த்து, சல்லிசான விலையில் கிடைக்கும்போது வாங்கிப் போட்டு, பெட்டியில் பூட்டி வைத்துவிடுவது. தென்னம்பிள்ளை மாதிரி ஆண்டுகள் ஆனாலும், கடைசியில் காய்க்கும்போது கொட்டோ கொட்டென்று கொட்டும்.ஆனால் தினசரி பங்கு வர்த்தகத்தில் புகுந்து விளையாடும் பலரும் ஈடுபடுவது “இண்ட்ரா டே டிரேடிங்” எனப்படும் தினசரி வர்த்தகத்தில். இங்கு எந்தப் பங்கையும் நீங்கள் வாங்கி சேர்த்துவைக்கப்போவதில்லை. அன்றே வாங்கி, அன்றே விற்றுவிடுவீர்கள். அன்றே லாபமும், அன்றே நட்டமும். தீ, நெருப்பு கொஞ்சம் கவனமாக இல்லை என்றால் பொசுக்கிவிடும். ஆனால் அந்த நெருப்புதானே விட்டில் பூச்சிகளை விரும்பி அழைக்கிறது. விட்டில் பூச்சிகள் போல பொசுங்கிவிடாமல், கனமான ஆமை ஓட்டை உங்களுக்கு அளிக்கிறது இந்தப் புத்தகம். டிரேடிங்கில் வெல்ல நிறைய கணக்கு தெரிந்திருக்க வேண்டும். கேண்டில்கள், வேவ்கள் போன்ற வரைபடங்களைப் பார்த்துப் புரிந்துகொள்ளவேண்டும். பணம் செய்யவேண்டும் என்ற ஆவல் இருந்தால் உங்களால் நிச்சயம் இந்தக் கணக்குகளைப் புரிந்துகொள்ள முடியும். சோம.வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் உங்களைக் கைபிடித்து டிரேடிங் உலகுக்குள் அழைத்துச் செல்கிறது.
    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தங்கம் (அள்ள அள்ளப் பணம் – 7)

    Rs. 1,490.00
    or 3 X Rs.496.67 with

    சோம. வள்ளியப்பன்

     

    ஆசைக்கு – முதலீட்டுக்கு – வர்த்தகத்துக்கு

     

    · தங்கத்தில் முதலீடு செய்வது எப்படி? அது எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கும்?

     

    · நகைகள், தங்க காசுகள், இ-கோல்ட், கோல்ட் பாண்டுகள், கோல்ட் இ.டி.எஃப்கள், கமாடிட்டி கோல்ட், கோல்ட் மானிட்டைசேஷன் ஸ்கீம் – எதில் எவ்வளவு முதலீடு செய்வது?

     

    · தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது? அது ஏன் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கிறது?

     

    · தங்கம் போலவே வெள்ளியிலும் பிட்காயினிலும் முதலீடு செய்வது உசிதமா?

     

    · கிரிப்டோகரன்சி என்பது என்ன? பிட்காயின் வேறு கிரிப்டோகரன்சிகள் வேறா? வர்த்தகத்தில் ஈடுபடும் அனைவரும் கிரிப்டோகரன்சி குறித்து தெரிந்து கொள்ளவேண்டுமா?

     

    தங்கம், வெள்ளி, கிரிப்டோகரன்சி மூன்றையும் குறித்த மிகத் தெளிவான, மிக விரிவான அறிமுகத்தையும் எதில் எவ்வளவு முதலீடு செய்வது என்பதையும் மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார் சோம. வள்ளியப்பன். ‘அள்ள அள்ளப் பணம்’ புத்தக வரிசை மூலம் பங்குச்சந்தை உலகின் அத்தனை நுணுக்கங்களையும் எளிமையாக நமக்குக் கற்பித்தவரின் முக்கியமான நூல் இது.

     

    வணிகம், முதலீடு, பொருளாதாரம் ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்நூல் மிகுந்த பயனளிக்கும்.

    or 3 X Rs. 496.67 with Koko Koko
    Read more