Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: சுயமுன்னேற்றம்
Showing 1–60 of 180 results
-
உத்வேகம் & ஊக்கம் (100)
-
உற்பத்தித்திறன் (24)
-
தலைமைத்துவம் (25)
-
ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி ( Aazhmanathitku Appal Ulla Athisaya Sakthi )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartஜேம்ஸ் ஜென்சன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது.
டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து, “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே “புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது” என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிகொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன்.
இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன். இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல். திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன். இதன் மூலம் நூலில் இடம்பெற்றிராத “ எப்படி செய்ய வேண்டும் “ என்பது போன்ற விஷயங்களையும் நாம் இந்நூலில் சேர்த்திருக்கிறேன். — ஜேம்ஸ் ஜென்சன்
-
கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை ( Kanam Kanam Velvorkkana Kolkai ) The Everyday Hero Manifesto
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withAdd to cartராபின் ஷர்மா
இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக, சரித்திரம் படைத்த ஆமையாகவும், மிகச்சிறந்த செயல்வீரராகவும் ராபின் ஷர்மா திகழ்ந்து வருகிறார். பல பிரபல வணிக ஆளுமைகள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், கேளிக்கை உலகின் நட்சத்திரங்கள் ஆகியோர், தங்களுடைய உயர்ந்த இலட்சியங்களை, அன்றாட வெற்றிகளாக மாற்றிக் கொள்ள உதவும் வழிமுறைகளை, தன்னுடைய புதுமையான பயிற்சி முறைகளின் மூலம் ராபின் ஷர்மா சாத்தியப்படுத்தி வருகிறார்.
இப்போது அவருடைய முதன்மையான படைப்பான, ‘கணம் கணம் வெல்வோர்க்கான கொள்கை” என்ற இந்நூலின் மூலம், தலைசிறந்த கொள்கைகள், வழிமுறைகள், கருவிகள் ஆகியவற்றின் சாரத்தை, வெற்றிக்கான வழிகளாக முன்வைத்துள்ளார். இந்நூல், உங்கள் திறமைகளை உயர்த்துவதுடன், உலகத்தர வாழ்க்கையை வழங்கும் பயிற்சி நூலாகவும் அமையும். மேலும் உங்களை ஆன்மிக வழியில் முன்னேற்றவும் இது உதவும்.
-
பிறரிடம் சகஜமாகப் பேசுவது எப்படி: உரையாடல்களில் ஜொலிப்பதற்கான 92 சின்னஞ்சிறு உத்திகள் ( Piraridam Shajamaagap Pesuvathu Eppadi ) How to Talk to Anyone
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartலீல் லவுன்டெஸ்
தமிழில்: PSV குமாரசாமிவாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா?
வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும், சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும், சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை.
பிறருடன் கலந்துரையாடுவதற்கும், அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர், அவ்வளவுதான்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளில் இவையும் அடங்கும்:
- எடுத்த எடுப்பிலேயே உங்களைப் பற்றிய ஒரு சிறந்த அபிப்பிராயத்தைப் பிறரிடம் தோற்றுவிப்பது எப்படி?
- எந்தவொரு கூட்டத்திலும், அக்கூட்டம் தொடர்பான விஷய ஞானம் உங்களிடம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது எப்படி?
- உரையாடல்களின்போது எப்போது பிறருடைய அகங்காரத்திற்குத் தீனி போட வேண்டும், எப்போது போடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது எப்படி?
- உங்களுடைய அலைபேசியை ஒரு சிறந்த கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி?
- உங்கள் முன் இருப்பவர்களை, கைதேர்ந்த ஓர் அரசியல்வாதியைப்போல உங்களுடைய பேச்சால் கட்டிப்போடுவது எப்படி?
-
பணம்சார் உளவியல் ( Panamsar Ulaviyal ) The Psychology of Money
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartமார்கன் ஹெளஸ்ஸேல்
பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
“மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்
“ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்
“மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்
பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.
“பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
-
மாவீரன் அலெக்சாண்டர் / Maveeran Alexander
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartஎஸ்.எல்.வி.மூர்த்தி
ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !
ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர் நிச்சயம் இருப்பார்.
அலெக்சாண்டரின் யுத்த, நிர்வாக, கலாச்சாரப் பரிவர்த்தனைச் சாதனைகள் அற்புதமானவை, பிரமிக்க வைப்பவை. உண்மையில், இவையெல்லாம் அலெக்சாண்டர் என்ற மாபெரும் ஆளுமையின் அடையாளங்கள் மட்டுமே. இவை அனைத்தையும் தாண்டி, இன்னொரு மெய்யான அலெக்சாண்டர் இருக்கிறார். அத்தனைய அலெக்சாண்டரின் விஸ்வரூபத்தை எழுத்துவடிவில் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.
ஆசை, ஆசை, ஆசை, ஆசை ஒரு மனித வடிவெடுத்து வந்தால், அதுதான் அலெக்சாண்டர். சாதாரண மனிதர்கள் 33 பிறவிகள் எடுத்தாலும் கனவு காணக்கூட முடியாத சிகரங்களைத் தன் 33 வயதில் அலெக்சாண்டர் எட்டியதற்குக் காரணம், அவருடைய அடங்காத ஆசை.
உலகை வெல்லும் ஆசையைக் கொண்டு சாதித்தவை ஏராளம்.
ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் புத்தகங்களின் வரிசையில் எஸ்.எல்.வி.மூர்த்தியின் முக்கியமான பதிவு, மாவீரன் அலெக்சாண்டர் !
-
மாயாஜாலம் (இரகசியம் #3) ( Maayajaalam )
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartரோன்டா பைர்ன்
மாயாஜாலம் என்னும் இப்புத்தகத்தில், ரோன்டா பைர்ன், வாழ்க்கையையே மாற்றியமைக்கக்கூடிய இந்த ஞானத்தை உலகிற்கு வெளிப்படுத்துகிறார். இந்த ஞானத்தை நீங்கள் உங்களுடைய தினசரி வாழ்வில் எவ்வாறு நடைமுறைப்படுத்தலாம் என்பதை நம்புதற்கரிய 28 நாள் பயணத்தின் ஊடாக அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்.
-
ராக்ஃபெல்லர் / Rockfeller Tamil
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartகார்த்தீபன்
ராக்ஃபெல்லரின் வாழ்க்கை ஒருவகையில் அமெரிக்க எண்ணெய் வர்த்தகத்தின் ஆரம்பகால வரலாறும்கூட!
சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத வாழ்க்கை ராக்ஃபெல்லருடையது.
அன்புமயமானவர், அளப்பரிய சாதனையாளர், எண்ணெய் வர்த்தகத்தின் முடிசூடா மன்னர், முடிவெடுப்பதில் அசாத்திய திறமை கொண்டவர், திட்டம் தீட்டுவதில் தன்னிகரற்றவர், ஏழைகளுக்கு அள்ளிக்கொடுப்பதில் வள்ளல். இப்படி ராக்ஃபெல்லரைப் பாராட்டுபவர்கள் ஒரு பக்கம்.
வெற்றிக்காக எந்தவொரு குறுக்குவழியையும் நாடத் தயாராக இருப்பவர். எதிரிகளைத் திட்டமிட்டு ஒழிப்பதில் கெட்டிக்காரர். அரசாங்கத்தை ஏமாற்றும் வித்தைகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். ஈவு, இரக்கம் என்பதே இவருடைய அகராதியில் கிடையாது. இப்படி ராக்ஃபெல்லரை விமரிசிப்பவர்கள் இன்னொரு பக்கம்.
பாராட்டுகளும் விமரிசனங்களும் ராக்ஃபெல்லரின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவை. ஆனால் இரண்டையுமே அவர் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. அவருடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். வெற்றி. அதுவும் சாதாரண வெற்றியல்ல, பிரும்மாண்டமான வெற்றி. எதிரிகள் அத்தனைபேரையும் அண்ணாந்து பார்க்கச் செய்யும் வகையில் தன்னுடைய வெற்றி இருக்கவேண்டும் என்பார் ராக்ஃபெல்லர். அதைச் சாதிப்பதில்தான் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தினார். வர்த்தகத்தில் போட்டி இருக்கவேண்டும் என்று சொன்ன ராக்ஃபெல்லர், அந்தப் போட்டியில் தான் மட்டுமே வெல்லவேண்டும், தன்னுடைய ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் மட்டுமே உச்சத்தில் இருக்கவேண்டும் என்பதில் அசாத்திய பிடிவாதம் காட்டினார். அந்த வெற்றியை உறுதிசெய்ய அவர் செய்த சில காரியங்கள் அச்சமூட்டக்கூடியவை. அதன் காரணமாக அவர் சந்தித்த விமரிசனங்கள் அநேகம்.
அதேசமயம் ராக்ஃபெல்லரின் சில குணங்கள் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அரசாங்கம், போட்டியாளர்கள், எதிரிகள் என்று எத்தனை முனைகளில் இருந்து நெருக்கடிகள் வந்தாலும் சரி. கலங்கமாட்டார். கவலைகொள்ளமாட்டார். மாறாக, இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவார். ஒன்று, நிதானம். மற்றொன்று, துணிச்சல். வாழ்க்கையில் வெற்றிபெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் இவை.
-
இலக்குகள்! ( Ilakkugal )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
-
அத்தியாவசியவாதம் / Athiyavasiyavadham / Essentialism Tamil
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartGreg Mckeown
தமிழில்: PSV குமாரசாமி
அத்தியாவசியவாதம் என்பது வெறுமனே ஒரு நேர நிர்வாக உத்தியோ அல்லது மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கான உத்தியோ மட்டுமல்ல. அது இவற்றைக் கடந்த ஒன்று. நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானவை எவை என்பதைக் கண்டறிந்து, மற்ற அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் ஓர் ஒழுங்குடன் மேற்கொள்வதுதான் அத்தியாவசியவாதமாகும்.
• வீட்டில் அல்லது அலுவலகத்தில், ‘இதற்கு மேல் என்னால் முடியாது’ என்ற நிலையை நீங்கள் எப்போதாவது அடைந்ததுண்டா?
• அதிகமாக வேலை செய்தும் குறைவானவற்றையே சாதித்துள்ளதுபோல நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா?
• படுசுறுசுறுப்பாக இருந்திருந்தும் ஆக்கபூர்வமாக எதையும் செய்திருக்கவில்லை என்ற உணர்வு உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா?
• எப்போதும் இயங்கிக் கொண்டே இருந்து வந்துள்ளபோதிலும் எங்கும் போய்ச் சேர்ந்திருக்காததைப்போல நீங்கள் எப்போதாவது உணர்ந்ததுண்டா?
இக்கேள்விகளில் எவற்றுக்கேனும் ‘ஆமாம்’ என்று நீங்கள் பதிலளித்திருந்தால், நீங்கள் ஓர் அத்தியாவசியவாதியாக மாறுவதே உங்களுக்கான ஒரே தீர்வு.
-
இவ்வளவு மோசமாக உணர வேண்டிய அவசியமே இல்லாத ஓர் அற்புதமான மனிதர் நீங்கள் / Ivvalavu Mosamaha Unara Vendiya Avasiyame Illadha Or Atputhamana Manidhar Neegal / You’re Too Good To Feel This Bad Tamil
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartநாடே டல்லாஸ்
தமிழில்: PSV குமாரசாமி
ஒரு புதுமையான வாழ்க்கைமுறைக்கான ஒரு பழமையான அணுகுமுறை!
செம்மையாக சுவாசிக்கவும், தூங்கவும், இயங்கவும், வேலை செய்யவும், விளையாடவும், தியானிக்கவும், புரிந்து கொள்ளவும், பார்க்கவும், நேசிக்கவும், வாழவும் கற்றுக் கொள்ளுங்கள்!
வாழ்க்கையிலிருந்து அதிகமாகப் பெற விரும்புகின்ற, விண்ணளவு சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கின்ற நபர்களுக்கான நூல் இது. நீங்கள் அடுத்த நிலைக்குச் செல்வதற்கு முற்றிலும் வித்தியாசமான ஓர் அணுகுமுறை தேவை.
-
வாழ்க்கையில் மகத்தான வெற்றி பெறுவதற்கான 1% தீர்வு / Vazkaiyil Mahathana Vetri Peruvadhatkana 1% Theervu / The 1% Solution for Work and Life Tamil
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartடாம் கானல்லன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
தங்கப் பதக்கம் வென்றுள்ள ஒலிம்பிக் வீர்ர்கள், அமெரிக்க அதிரடிப் படையினர், விருதுகள் பெற்றுள்ள விற்பனையாளர்கள், முன்னணி நிறுவனங்கள் மற்றும் பிற வெற்றியாளர்களிடையே காணப்படும் ஓர் ஒற்றுமை என்னவென்று தெரியுமா?
அவர்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான 1 சதவீதத் தீர்வை அறிந்து வைத்துள்ளனர்.
இப்போது அதை உங்களாலும் கற்றுக் கொள்ள முடியும்!
அது எப்படிச் சாத்தியம் என்பதை மிகப் பிரபலமான பேச்சாளரும், விற்பனையில் சாதனைகள் படைத்துள்ள புத்தகங்களை எழுதியுள்ளவருமான டாம் கானல்லன், இந்நூலில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.
வெற்றியாளர்கள் ஒருபோதும் பிறரைவிட 100 சதவீதம் மேலானவர்களாக இருப்பதில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அவர்கள் பல விஷயங்களில் மற்றவர்களைவிட 1 சதவீதம் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒலிம்பிக் பந்தய வீரர், பதக்கம் எதுவும் பெறாத, நான்காவது இடத்தில் இருக்கும் வீரரைவிட ஒரே ஒரு சதவீதம் மட்டுமே அதிக வேகமாக ஓடி வந்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சின்னச் சின்ன விஷயங்கள் பலவற்றில் ஒரே ஒரு சதவீத மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் உங்களால் உங்கள் வாழ்க்கையில் எப்படி நிரந்தரமான, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பதை இப்புத்தகம் எளிமையான முறையில் விளக்குகிறது. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள, எளிதாகச் செயல்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், அவற்றைத் தொடர்ந்து கடைபிடித்துவர வேண்டும், அவ்வளவுதான்.
நீங்கள் அப்படிச் செய்வீர்களேயானால், உங்கள் வாழ்க்கையில் ஏற்படவிருக்கும் விளைவுகள் உங்களை பிரமிக்க வைக்கும் என்பது உறுதி!.
-
நந்தன் நிலேகனி: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பிராண்ட் அம்பாசிடர்
Rs. 690.00Rs. 550.00or 3 X Rs.183.33 withAdd to cartராஜீவ் திவாரி
Infosys நிறுவனத்துடனான நந்தன் நிலேகனியின் பயணம் 1978 இல் தொடங்கியது, Infosys உருவாவதற்கு முன்பே, அவர் IIT பாம்பேயில் பட்டம் பெற்ற பிறகு Patni Computers சேர்ந்து N.R. கீழ் பணியாற்றத் தொடங்கினார். நாராயண மூர்த்தி. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2, 1981 இல், Infosys மூர்த்தி மற்றும் பிற இணை நிறுவனர்களான எஸ். கோபாலகிருஷ்ணன், கே.தினேஷ், என்.எஸ்.ராகவன், என்.எம்.நீலேகனி மற்றும் எஸ்.டி.ஷிபுலால். மூர்த்தி தனது மனைவியிடமிருந்து ரூ.10,000 கடன் வாங்கி, 1980கள் மற்றும் 1990களில் Infosys உருவாக்க குழு கடுமையாக உழைத்தது.
Infosys தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இது IT மற்றும் BPO சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. இது உலகம் முழுவதும் இத்தகைய சேவைகளை வழங்குகிறது மற்றும் 58,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இதன் ஆண்டு வருமானம் $2 பில்லியன் மற்றும் சந்தை மூலதனம் $21 பில்லியன். நந்தன் நிலேகனி நாராயண மூர்த்தியுடன் இணைந்து Infosys நிறுவனத்தை 1981 இல் தொடங்கினார். அவர் மார்ச் 2002 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படும் வரை நிறுவனத்தில் பல பதவிகளை வகித்துள்ளார்.
-
நல் வாழ்வு நம் கையில்
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withAdd to cartலூயிஸ் எல். ஹே
சுய மதிப்பீடு என்பது ஒரு கலை. சகல நலன்களையும் அடைய விரும்புகிற எவருக்கும் மிக மிக அவசியம் இந்த சுயமதிப்பீடு. சித்தர்கள் முதல் தத்துவ வித்தகர்கள் வரை எண்ணற்ற ஞானியர் தமது சித்தாந்தங்களின் திரட்சியாகவும், இறுதித் தீர்ப்பாகவும் கூறுவது,
“”உன்னையே நீ அறி என்பது தான். “”உனக்கான தீர்வுகள் அனைத்தும் உனக்குள்ளேயே உள்ளன என்பதைக் கேட்டு யாரும் மிரள வேண்டியதில்லை. இதற்கான எளிய பயிற்சிகளைத் தான் இந்நூல் அருமையாக விவரிக்கிறது. மனவலிமையை வளர்த்துக் கொண்டே சக்தியின் மூலம் புற்று நோயிலிருந்தே முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்ட பெண்மணியான லூயிஸ் எல்.ஹே, உலக மக்களின் உயர்வுக்கான பல சூட்சுமங்களை இதில் விவரித்துள்ளார்.
-
எனக்கும் ஒரு கனவு / I too Had A Dream
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartவர்கீஸ் குரியன்
இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ‘அமுல்’ மூலம், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியதுடன், தனிநபருக்குக் கிடைக்கும் பாலின் அளவை இருமடங்காக்கியவர் என்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் வர்கீஸ் குரியன். மேலாண்மையில் அவர் உருவாக்கிய வெற்றிச் சூத்திரங்கள் தலைமுறைகள் தாண்டித் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை.
‘மேனேஜ்மெண்ட் குரு’ என்றே அவரைச் சொல்லலாம். தனியார் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில், அரசின் கட்டுப்பாட்டில் கூட்டுறவுப் பால் பண்ணைத் தொழிலில் புரட்சி செய்தவர். தான் எதிர்கொண்ட சவால்கள், பெற்ற வெற்றிகள் என்று தனது வாழ்வின் முக்கியத் தருணங்களைப் பற்றி இந்நூலில் எழுதியிருக்கிறார். இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் சுயசரிதை இது!
-
மனதெனும் குரங்கை வெல்லுங்கள் / Manathenum Kurangai Vellungal / Master The Mind Monkey Tamil
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withAdd to cartஆனந்த் பாட்கர்
மனதையும் அது நடத்தும் மாயங்களையும் புரிந்து கொள்ள, மெல்ல மெல்ல, மனதின் ஆழமான, மிக ஆழமான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும் புத்தகம் மனதெனும் குரங்கை வெல்லுங்கள். (MASTER THE MIND MONKEY). எளிதில் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளை அது வெளிக் கொணரும் முறை ஒருவருடைய சொந்த வாழ்க்கையிலும் தொழில் நிலைகளிலும் அவைகளை எளிதாக கடைப்படிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நேரடியான மற்றும் தெளிவான உரையாடல் நடை நீங்கள் கடைமுடிவான அறிவாற்றல் எய்துவதை எளிதாக்குகிறது. ஓட்டத்தில் ஒரு இனிமையான மென்மை சொற்களில் இதயத்தைத் தொடும் எளிமை மேலும் வழக்கு சொற்களை விடுத்த வாக்கியங்களில் ஓர் புத்துணர்வு வீசுகிறது.
நீங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க அருமையான உதாரணங்களும் நகைச்சுவை கலந்த உபகதைகளும் புத்தகம் முழுவதிலும் நிறைந்துள்ளன. நம்மைப் பாராட்டி சக்தியூட்டுகையில் பொய்ம்மையையும், மனச்சோம்பலையும் பழி சுமத்துவதையும் ஒப்பய பொறுப்பன்மையையும் ஓர் இரக்கபாவத்துடன் சாடுகிறது.
நம்மை மாற்றும் ஒர் தாக்கமுள்ள அனுபவமாக நம்முடைய அறிவாற்றலுக்கும் அதனால் எய்தக்கூடிய நிச்சயமான பலன்களுக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது இந்தப் புத்தகம்.
-
ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள் ( Yen Enra Kelviyil Irunthu Thuvakkungal ) Start with Why
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartசைமன் சினெக்
தமிழில்: PSV குமாரசாமி
ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன?
ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
ஸ்டீவ் ஜாப்ஸ், ரைட் சகோதரர்கள், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்.
பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
-
குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. குடும்பம், அலுவலகம், விளையாட்டு அணி போன்ற எல்லா இடங்களிலும் அவை பொருந்தும் என்பது அவற்றின் சிறப்பு.
- குழுவில் இடம்பெற்றிருக்கும் எவரொருவருக்கும் அடுக்கடுக்காக வெற்றிகளை ஈட்டித்தரவல்ல பண்புநலன்களில் சில:
- தெளிந்த நோக்குடன் இயங்குதல்: எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இலக்கு நோக்கியே இருத்தல்
- அரவணைத்துச் செல்லுதல்: பிறருடைய நலனில் கருத்தூன்றிச் செயல்படுதல்
- தன்னலமின்றிச் செயலாற்றுதல்: குழுவின் நலனுக்காக எந்த
வேலையையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுதல் தளராத உறுதியுடன் இருத்தல்: பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போதும் நன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தல் .
இத்தகையப் பண்புநலன்கள் குழு உறுப்பினர்கள் மீதும் குழுவின் வெற்றிமீதும் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மேக்ஸ்வெல் இங்கு சித்தரித்துக் காட்டுகிறார். குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் எனும் இந்நூல் ஏதோ போகிற போக்கில் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் விதத்திலோ, வறட்டுச் சிந்தனையின் வடிவமாகவோ அமையவில்லை; மாறாக, இது குழுநலனை முன்னிறுத்தும் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமையிக்கச் செயல்பாடுகளை விவரிக்கின்றது.
-
ஒரு துறவியைப்போலச் சிந்தியுங்கள் (Think Like a Monk)
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withAdd to cartஜே ஷெட்டி
நீங்கள் ஒரு துறவியைப்போலச் சிந்திக்கின்றபோது இவற்றைப் புரிந்து கொள்வீர்கள்: • உங்களுடைய வாழ்வின் நோக்கத்தை எவ்வாறு அடைவது • எதிர்மறைகளை எவ்வாறு மீறுவது • அளவுக்கதிகமாகச் சிந்திப்பதை எவ்வாறு நிறுத்துவது • மகிழ்ச்சியைத் தேடினால் ஏன் அதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது • சந்திக்கும் அனைவரிடமிருந்தும் எவ்வாறு கற்றுக் கொள்வது • நீங்கள் ஏன் உங்களுடைய எண்ணம் அல்லர் • வெற்றிக்குப் பரிவு இன்றியமையாததாக இருப்பது ஏன் • இன்னும் பற்பல விஷயங்கள். . .
-
நீங்கள் சிந்திக்கின்ற அனைத்தையும் நம்பி விடாதீர்கள் (Don’t Believe Everything You Think)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartஜோசப் நுயென்
வலி தவிர்க்கப்பட முடியாதது, ஆனால் வேதனை அப்படியல்ல. உங்களுடைய மூளையை மறுவடிவமைப்பது, உங்களுடைய கடந்தகாலத்தை மாற்றி எழுதுவது, நேர்மறைச் சிந்தனை போன்ற எதைப் பற்றியதும் அல்ல இந்நூல். இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: • அனைத்து விதமான உளவியல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான வேதனைகளுக்குமான மூலகாரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவது எப்படி • எதிர்மறை எண்ணங்களாலும் உணர்வுகளாலும் அலைக்கழிக்கப்படாமல் இருப்பது எப்படி • உங்களுடைய சூழல் எதுவாக இருந்தாலும், அன்பு, அமைதி மற்றும் ஆனந்தத்தை அனுபவிப்பது எப்படி • சிந்தனையைக் கடந்து நிற்கின்ற உங்களுடைய உள்ளுணர்வையும் உள்ளார்ந்த ஞானத்தையும் கைவசப்படுத்துவது எப்படி • ஊக்குவிப்பு மற்றும் மன உறுதியின் உதவியின்றி, சுய சந்தேகம், சுய அழிவு போன்றவற்றிலிருந்து விடுபடுவது எப்படி நம்முடைய மனத்தின் அளப்பரிய ஆற்றலை அறிந்து கொள்வதற்கும், நாம் விரும்புகின்ற வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கும் தேவையான அனைத்து விஷயங்களும் இந்நூலில் அடங்கியுள்ளன.
-
சிதறா கவனக் குவிப்பு (Hyperfocus) (Sidharaa Kavanak Kuvippu)
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withAdd to cartகிறிஸ் பெய்லி
உங்களுடைய கவனக்குவிப்பை மிகச் சிறப்பாக நிர்வகிப்பதற்கும், உங்களுடைய படைப்பாற்றலை அதிகரித்துக் கொள்வதற்கும், அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நடைமுறைக் கையேடு இது. இதில் நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்: குறைவான நேரம் வேலை செய்வது எப்படி நம்முடைய உற்பத்தித்திறனை உயர்த்துகிறது? நாம் நம்முடைய வேலையை எளிதாக்கிக் கொள்ளாமல் அதைக் கடினமாக்கிக் கொள்வது எப்படி நாம் அதிகமான வேலைகளைச் செய்து முடிப்பதைச் சாத்தியமாக்குகிறது? நாம் களைப்பாக இருக்கும்போது எப்படி நம்மால் படைப்பாற்றல்மிக்க வேலைகளைச் செய்ய முடிகிறது? ஒன்றின்மீது நம்முடைய கவனத்தைக் குவிக்க இதற்கு முன்பு ஒருபோதும் நாம் இவ்வளவு திணறியதில்லை.
-
செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம் ( Selvantharakkum Sulaba Vinganam ) The Science of Getting Rich
Rs. 890.00or 3 X Rs.296.67 withAdd to cartவாலஸ் டி வாட்டில்ஸ்
தமிழில்: பி. உதயகுமார்
ரோண்டா பைரனின் (Rhonda Byrne) அதிகம் விற்பனையாகும் புத்தகம் மற்றும் திரைப்படமான இரகசியம் (The Secret) ன் உத்வேகம் இந்தப் புத்தகம்தான். வாலஸ் வாட்டில்ஸ், செல்வம் பெறுவதற்கான வழியில் சிந்தனை மற்றும் மன உறுதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக காட்டுகிறது.
-
நிறைவான வாழ்க்கைக்கான நிகரற்றக் கொள்கைகள் ( Everyday Greatness: Inspiration for a Meaningful Life )
Rs. 3,790.00Rs. 3,490.00or 3 X Rs.1,163.33 withAdd to cartஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
ஊக்கமளிக்கும் கதைகள் மற்றும் நடைமுறை நுண்ணறிவு வாசகர்களுக்கு அன்றாட மகத்தான வாழ்க்கையை வாழ சவால் விடுகின்றன.
செயல்படுவதற்கான தேர்வு – உங்கள் ஆற்றல்
நோக்கத்தின் தேர்வு – உங்கள் இலக்கு
கொள்கைகளுக்கான தேர்வு – உங்கள் இலக்குகளை அடைவதற்கான வழிமுறைகள்அடங்கும் தலைப்புகள்:
அர்த்தத்தைத் தேடுதல்
பொறுப்பேற்பது
உங்களுக்குள்ளே தொடங்குகிறது
கனவை உருவாக்குதல்
மற்றவர்களுடன் அணிசேருதல்
துன்பத்தை சமாளித்தல்மாயா ஏஞ்சலோ, ஜாக் பென்னி மற்றும் ஹென்றி டேவிட் தோரே போன்ற உலகின் மிக பிரபலமான மற்றும் அன்பான எழுத்தாளர்கள், தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கதைகள் மற்றும் ஸ்டீபன் கோவியின் நுண்ணறிவு மற்றும் வர்ணனை, “பிரதிபலிப்புகள் ” ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் குழு அல்லது தனிப்பட்ட ஆய்வுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு திட்டத்தை உருவாக்க உதவுகிறது.
-
சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.
உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிற்து. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.
-
டேவிட்டும் கோலியாத்தும் / Davidum Koliyathum
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withAdd to cartமால்கம் க்ளேட்வெல்
கிட்டத்திட்ட மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக புராதன பாலஸ்தீனத்தில் ஆடு மேய்க்கும் சிறுவனான டேவிட் பெரிய உருவத்தைக் கொண்ட பராக்கிரமசாலியான கோலியாத்தை கவணின் உதவிகொண்டு அடித்து கீழே சாய்த்தான் என்பது வரலாறு. அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை பலவீ னமானவருக்கும் பலமானவருக்குமான பிரச்சினை, போட்டி என்றால் டேவிட், கோலியாத்தைத்தான் நாம் உதாரணமாகச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.
டேவிட்டின் வெற்றியை நாம் சாத்தியமற்றது, அதிசயமானது எனக் கூறி வருகிறோம்.
டேவிட்டும் கோலியாத்தும் என்கிற இந்தப் புத்தகத்தில் மால்கம் க்ளாட்வெல் நாம் எதையெல்லாம் வளர்ச்சிக்குத் தடையானது , சாத்தியமற்றது என நினைத்துக் கொண்டிருக்கிறோமோ அதற்கெல்லாம் சவால் விடுகிறார்.”பாரபட்சம் அல்லது உடல் அளவில் இயலாமை அல்லது பெற்றோரில் ஒருவரை இழந்து நிற்பது அல்லது சாதாரண பள்ளிக்கூடத்தில் படிப்பது அல்லது ஏதேனும் ஒன்றில் பின் தங்கியிருப்பது”-இப்படிப்பட்ட பிரச்சினைகள் கொண்டவர்கள் அதை எதிர்கொண்டு வெற்றி பெற முடியுமா?
இந்த மாதிரியான தடைகள் இருந்தால் எதையும் சாதிக்கமுடியாது என நாம் வழக்கமாக நினைப்பதுண்டு.ஆனால் இந்தத் தடைகளுக்கும், சாத்தியமற்றவைகளுக்கும் புதிய விளக்கம் கொடுக்கிறார் மால்கம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு டேவிட் என்ற ஆடு மேய்க்கும் சிறுவனுக்கும், பராக்கிரமசாலியான கோலியாத்துக்கும் என்ன நடந்தது என்கிற ஓர் உண்மைக்கதையோடு இந்தப் புத்தகம் ஆரம்பிக்கிறது. அதிலிருந்து வட அயர்லாந்து, ‘ட்ரபிள்ஸ்’ என அழைக்கப்பட்ட இன தேசியவாத மோதல், புற்றுநோய் ஆய்வாளர்களின் மனநிலை,சமூக உரிமை செயல்பாட்டாளர்கள்,கொலை, அதற்கு பதிலாக பழி தீர்த்தல், வெற்றி பெற்ற/வெற்றி பெறாத வகுப்பறைகளின் இயக்கவியல் எனப் பல தளங்களுக்குப் பயணித்து நாம் எவஎல்லாம் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என நினைக்கிறோமோ அவையெல்லாம் எப்படி வெற்றிக்கு உதவுகின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளின் துணையுடன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
இவருடைய முந்தையப் புத்தகங்கள் போல – TIPPING POINT, BLINK, OUTLIERS, WHAT THE DOG SAW-டேவிட்டிலும் கோலியாத்திலும் நம்மைச் சுற்றியிருக்கும் உலகத்தில் நடப்பதை வழக்கத்திற்கு மாறாக அவதானித்து ஒரு மாற்றுச் சிந்தனையை வரலாறு, உளவியல், சமூகவியல் துறைகளில் செய்யப்பட ஆய்வுகளின் அடிப்படையில் நமக்குத் தந்திருக்கிறார்.
வாருங்கள் நாமும் பயணிப்போம்!!
-
பெருங்கனவு காணத் துணியுங்கள்! ( Perung Kanavu Kaana Thuniyungal )
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartஅங்குர் வாரிக்கூ
அங்குர் வாரிக்கூ தன்னுடைய முதல் நூலில், தன்னுடைய பயணத்திற்கு உந்துசக்தியாக விளங்கிய முக்கிய யோசனைகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் ஒரு விண்வெளிப் பொறியாளராக ஆக விரும்பியதில் தொடங்கிய அவருடைய பயணம், இலட்சக்கணக்கானவர்கள் இணையத்தில் பார்த்தும் படித்தும் உள்ள பல்வேறு படைப்புகளை உருவாக்குவதில் முடிந்தது.
நீண்டகால வெற்றிக்குத் தேவையான பழக்கங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தில் தொடங்கி, நிதி நிர்வாகத்திற்கான அடித்தளம்வரையும், தோல்வியை ஆரத் தழுவிக் கொள்வது மற்றும் ஏற்றுக் கொள்வதில் தொடங்கி, பச்சாதாபத்தைக் கற்றுக் கொள்வதைப் பற்றிய உண்மைவரையும் அவருடைய சிந்தனை பரந்துபட்டதாக இருக்கிறது.
இப்புத்தகம் நீங்கள் மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டிய ஒன்று. இதிலுள்ள வரிகளை நீங்கள் அடிக்கோடிட்டுக் கொண்டு பின்னர் மீண்டும் மீண்டும் அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்பீர்கள். நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அந்நியர்களுக்கும் கொடுக்கப் போகின்ற ஒரு புத்தகம் இது. மிக அதிகமாகப் பரிசளிக்கப்பட்டப் புத்தகமாக இப்புத்தகம் உருவெடுக்க வேண்டும் என்பது அங்குரின் விருப்பமாகும்.
-
கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள் (Koodeesvararkalin Sindhanai irahasiyangal)
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withAdd to cartடி. ஹார்வ் எக்கர்
தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி
#1 நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல் & யுஎஸ்ஏ டுடே பத்திரிகைகள் தொகுக்கின்ற விற்பனைப் பட்டியல்களில் முதலிடம்
“உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நம்பி இதை இருப்பதாக எண்ணிக் கொண்டு இந்நூலைப் படியுங்கள். கண்டிப்பாக ஏமாற்றம் ஏற்படாது” –டோனி ராபின்ஸ், ஊக்குவிப்புப் பேச்சாளர்
“காலாகாலத்திற்கும் நிற்கும் விதத்தில் நம்முடைய செல்வ மாளிகையைக் கட்டியெழுப்புவதற்கான வரைபடத்தையும் கருவிகளையும் ஹார்வ் எக்கர் இந்நூலில் நமக்கு வழங்கியுள்ளார்.” –டெனிஸ் வெயிட்லி, நூலாசிரியர்
“எளிதாகக் கடைபிடிக்க முடிகின்ற விதத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கான பைபிள் இது. ஹார்வ் எக்கர், இந்நூலில், பணம் சேர்ப்பது தொடர்பான அனைத்து மாயைகளையும் உடைத்து நொறுக்கி, கோடீஸ்வரர்களின் இரகசியங்களை சாதாரண மனிதர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார். அவற்றை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்:” –ஜில் லுப்லின், நூலாசிரியர்
“இன்று உலகிலுள்ள தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஹார்வ் எக்கரும் ஒருவர். அவருடைய உத்திகள் உங்களை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும்.” –மார்க் விக்டர் ஹான்சன், நூலாசிரியர்
“ஹார்வ் எக்கர் செல்வத்திற்கான இராஜபாட்டையை எளிதாக அமைக்கும் கலையில் வல்லவர். அவருடைய ஆற்றல்மிக்கக் கோட்பாடுகள் இந்த அருமையான நூல் வழியாக நமக்குக் கிடைத்துள்ளன.” –மார்சி சைமாஃப், நூலாசிரியர்
-
மக்களைக் கையாளும்போது தன்னம்பிக்கையுடனும் திறமையுடனும் செயல்படுவது எப்படி
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartலெஸ் ஜிப்லின்
இது லெஸ் கிப்லின் அவர்களின் மக்களுடன் எவ்வாறு நம்பிக்கை மற்றும் சக்தியைக் கையாள்வது என்பதன் தமிழாக்கம். இந்த புத்தகத்தில், மனித உறவுகள் துறையில் அங்கீகரிக்கப்பட்ட நிபுணரான ஆசிரியர், மனித நடத்தைக்கு பின்னால் உள்ள அடிப்படைக் கொள்கைகளை தெளிவாக விளக்குகிறார். தனிநபர்கள் தங்களுக்குச் சாதகமாகச் செயல்படும் நேர்மறையான முடிவுகளுக்கு எவ்வாறு தொடர்பு கொள்ளலாம் என்பதை அவர் விவரிக்கிறார். ஒரு நல்ல முதல் தோற்றத்தை ஏற்படுத்துவதற்கும், கேட்கும் மற்றும் பேசும் திறன்களை மேம்படுத்துவதற்கும், மற்றவர்களை பாதிக்கும் வகையில், மக்களை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கும் நேரத்தைச் சோதனைக்குட்பட்ட நுட்பங்கள் மற்றும் உத்திகளைக் கற்றுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.
-
ஆக்கப்படுவதே வாழ்க்கை
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withAdd to cartபிரீத்தி ஷெனாய்
நீங்கள் சென்றுக்கொண்டிருக்கும் பாதையை விதி வளைத்து விட்டால் என்ன செய்வீர்கள்? நீங்கள் செல்ல விரும்பாத இடத்திற்கு அது உங்களைத் தூக்கி எறிந்தால் என்ன செய்வது? நீங்கள் போராடுவீர்களா, ஓடுவீர்களா அல்லது ஏற்றுக் கொள்வீர்களா?
எண்பதுகளின் முற்பகுதியில் இந்தியாவின் இரண்டு நகரங்களில் அமைக்கப்பட்ட வாழ்க்கை என்பது அங்கிதாவின் சில குறிப்பிடத்தக்க வருட வாழ்க்கையின் ஒரு பிடிப்புக் கணக்கு. அங்கிதா ஷர்மா உலகத்தை தன் காலடியில் வைத்திருக்கிறாள். அவள் இளமையாக இருக்கிறாள், அழகாக இருக்கிறாள், புத்திசாலியாக இருக்கிறாள், மேலும் பல நண்பர்கள் மற்றும் பையன்கள் அவளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவள் எம்பிஏவுக்கான முதன்மையான மேலாண்மைப் பள்ளியில் சேரவும் முடிகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, அவள் மனநல மருத்துவமனையில் நோயாளியாக இருக்கிறாள். வாழ்க்கை கொடூரமாகவும் குளிராகவும் அவளுக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்ததை பறித்துக்கொண்டது, அதையெல்லாம் திரும்பப் பெற அவள் இப்போது போராட வேண்டும்.
இது வளர்ந்து வரும், நம்பிக்கையின் சக்தி மற்றும் உறுதியும், அடக்க முடியாத ஆவியும் எப்படி விதி உங்கள் மீது வீசினாலும் அதை எப்படி வெல்ல முடியும் என்பது பற்றிய ஆழமான நகரும் மற்றும் ஊக்கமளிக்கும் பதிவு. ஒரு கதை, அதன் மையத்தில் ஒரு காதல் கதை, இது நம்மைப் பற்றிய நமது நம்பிக்கைகளையும், நமது நல்லறிவுக் கருத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது, மேலும் ஒருவர் அதை உருவாக்குவதுதான் வாழ்க்கை என்று நம்பும்படி நம்மைத் தூண்டுகிறது.
-
இரகசியம் ( Irahasiyam ) The Secret
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withAdd to cartரோன்டா பைர்ன்
தமிழில்: PSV குமாரசாமி
இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartஅலிஸ் காலப்ரைஸ் & ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ என்று பெயரிடப்பட்டவர். உலக வரலாற்றில் மிகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்கிறார். ஆனால் ஒரு தனிமனிதனாக எந்தமாதிரி காணப்பட்டார்?
-
கருமமே கண்ணாக! (Karumame Kannaaha!)
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartகால் நியூபோர்ட்
தமிழில்: PSV குமாரசாமி
“ஆழ்ந்த கவனம் செலுத்தும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டியது ஏன் முக்கியம் என்பதைத் தக்கக் காரணங்களுடன் எடுத்துரைக்கின்ற இந்நூல், உடனடியாக நடைமுறையில் செயல்படுத்தத்தக்க அறிவுறுத்தல்களை வழங்குகிறது.”
–ஆடம் எம். கிரான்ட், ‘ஒரிஜினல்ஸ்’ நூலின் ஆசிரியர்‘கருமமே கண்ணாக’ என்பது அறிவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வேண்டிய ஒரு கடினமான வேலையை, எந்த கவனச்சிதறலுக்கும் ஆளாகாமல் ஒருமித்த கவனக்குவிப்புடன் மேற்கொள்வதற்கான திறனாகும். கருமமே கண்ணாகச் செயல்படுவது நீங்கள் செய்கின்ற எந்தவொரு வேலையிலும் நீங்கள் சிறப்புற உதவும், குறைவான நேரத்தில் நீங்கள் அதிகமானவற்றைச் சாதிக்க வழி வகுக்கும், ஒரு திறமையில் மேதமை பெறுவதிலிருந்து வரக்கூடிய உண்மையான மனநிறைவை உங்களுக்கு வழங்கும். சுருக்கமாகக் கூறினால், ஒருமித்த கவனம் செலுத்தக்கூடிய திறன் என்பது, போட்டிகள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய உலகில் சர்வ வல்லமை வாய்ந்த ஓர் ஆயுதத்தைப் போன்றது.
ஆனாலும், இரைச்சல்மிக்க அலுவலகங்களில் பணியாற்றுகின்ற அறிவுசார் ஊழியர்களாக இருந்தாலும் சரி, தங்களுடைய முன்னோக்கைக் கூர்தீட்டிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கின்ற படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலான மக்கள், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்வதற்கான திறனை இழந்துள்ளனர். மாறாக, மின்னஞ்சல்களிலும் சமூக ஊடகங்களிலும் அவர்கள் தங்களுடைய நாட்களைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றனர் – இதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது என்பதை உணராமல்!
கலாச்சார விமர்சனங்களையும் நடைமுறையில் செயல்படுத்தப்படக்கூடிய அறிவுரைகளையும் உள்ளடக்கிய இந்நூல், கவனச்சிதறலுக்கு உள்ளான ஓர் உலகில் ஒருமித்த கவனத்துடன் வெற்றி பெறுவதற்கான வழியைத் தேடிக் கொண்டிருக்கின்ற எவரொருவருக்கும் வழி காட்டும்.
-
இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது / Irahasiyam Evvaru En Vazkaiyai Matriyadhu / How The Secret Changed My Life Tamil
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withAdd to cartரோன்டா பைர்ன்
தமிழில்: PSV குமாரசாமி
கடந்த பத்து ஆண்டுகளாக சர்வதேச அளவில் விற்பனையில் மகத்தான சாதனைகளைப் படைத்து வருகின்ற, ரோன்டா பைர்னின் ‘இரகசியம்’ புத்தகம், உலகெங்கிலும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கையை நம்புதற்கரிய விதத்தில் மாற்றியுள்ளது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அத்தகையோரின் உண்மைக் கதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றைத் தொகுத்து, ரோன்டா பைர்ன் இந்நூலை உருவாக்கியுள்ளார். ‘இரகசியம்’ புத்தகத்திலிருந்து தாங்கள் கற்றுக் கொண்டவற்றைப் பயன்படுத்தித் தங்களுடைய பொருளாதாரம், உறவுகள், தொழில்வாழ்க்கை, ஆரோக்கியம் ஆகியவற்றைக் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மேம்படுத்தியுள்ள சாதாரணமான மக்களுடைய அசாதாரணமான அனுபவங்களின் தொகுப்புதான் ‘இரகசியம் எவ்வாறு என் வாழ்க்கையை மாற்றியது’ என்ற இந்நூல்.
‘இரகசியம்’ புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மிகவும் சக்திவாய்ந்த பிரபஞ்ச விதியான ஈர்ப்பு விதியைப் பயன்படுத்தி உங்கள் விருப்பப்படி உங்கள் வாழ்க்கையை உங்களாலும் மாற்றிக் கொள்ள முடியும்.
-
நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withAdd to cartஎஸ். எல். வி. மூர்த்தி
சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
-
இன்றே செய்வீர்! அதை நன்றே செய்வீர்! ( Indre Seyveer, Athai Nandre Seyveer ) Do it Today!
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartடாரியஸ் ஃபோரூ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
காலம் தாழ்த்துவதிலிருந்து மீள்வதற்கும், உங்களுடைய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கும், அதிகமானவற்றைச் சாதிப்பதற்கும் உங்களுக்கு உதவக்கூடிய, என்னுடைய கட்டுரைகளில் மிகச் சிறந்த 30 கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து நான் இதில் கொடுத்துள்ளேன்.
ஆக்கபூர்வமான, அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கு அவை உங்களுக்கு வழி காட்டும். காலம் தாழ்த்தினால் உங்களால் ஆக்கபூர்வமானவராக இருக்க முடியாது. நீங்கள் ஆக்கபூர்வமானவராக இல்லாவிட்டால், உங்களால் எதையும் சாதிக்க முடியாது. அதனால்தான், காலம் தாழ்த்தும் பழக்கத்திலிருந்து நான் போராடி மீண்ட விதத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதுடன் நான் இப்புத்தகத்தைத் துவக்கியிருக்கிறேன். இழப்பு, வேதனை, அர்த்தம் ஆகியவற்றின் ஊடான ஒரு தனிப்பட்டப் பயணம் இது. அதன் பிறகு, அதிகபட்ச உற்பத்தித்திறனுக்கு இட்டுச் செல்கின்ற ஒரு பாதையில் நான் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன். நம்முடைய காலம் முடிவதற்குள் நம்முடைய உச்சபட்ச ஆற்றலை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அது உதவும்.
-
ரஜினியின் வாழ்க்கை மந்திரங்கள் / Rajini’s Mantras / Rajiniyin Vazkai Mandhirangal
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withAdd to cartP.C. Balasubramanian
“எனது ரசிகர்கள்மற்றும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒவ்வொருவருமே இந்த நூலை வாழ்க்கைக்கு மிகவும் உதவிகரமானதாகவும் வாழ்க்கையை உயர்த்தக்கூடிய அளவில் மிக்க பயனளிப்பதாகவும் கருதுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” – ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் மிக்க தனித்துவம் வாய்ந்த, அவருக்கே உரிய ‘வாழும் பாணி’ யின் உதவியுடன் வாசகர்கள் எப்படித் தங்கள் வாழ்க்கைகளில் தொடர்ந்து முன்னேறி வளம் பெறலாம்? – என உணர்த்தும் நூல் இது.
இந்த ரஜினியின் மந்திரங்கள்’ என்னும் நூலில் பல புத்தகங்களை ஏற்கனவே படைத்து, ‘மிக்க உயர்ந்த அளவில் விற்பனையாக்கி வெற்றிகண்ட PC பாலசுப்பிரமணியன் ரஜினிகாந்த ஆற்றிய குறிப்பிட்ட பற்பல உரைகள், மற்றும் பொது மக்களுடன் தொடர்பு கொண்ட நிகழ்ச்சிகள் ஆகியவையில் இயல்பாக வெளிப்படுத்திய செயல்பாடுகள் மற்றும் இடையீடுகள் முதலியவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய வாழ்க்கைப்பாடங்களைச் சிறப்புத் தொகுதியாக வெளியிட்டிரிக்கிறார்.
தனது ரசிகர்களால் ‘தலைவர்’ என்று மிக்க அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் பல லட்சக்கணக்கான மக்களின் மனதுகளில் சிறந்த ஊக்குவிப்பான எண்ணங்களை உருவாக்கும் திறமை உள்ளவர் அவருடைய பெரும் வெற்றியின் கதை ஒரு பஸ் கண்டக்டர் என்ற நிலையிலிருந்து இந்தியத் திரைப்பட உலகில் பெருவாரியான மக்களின் பேரன்புக்குப் பாத்திரமாகி ‘சூப்பர் ஸ்டார் நிலைக்கு உயர்ந்த வரலாறு நிஜமாகவே அளவற்ற வியப்பைத் தருவதாகும்.
அவரது சொந்த வாழ்வின் கதை ஒரு மனிதர் எப்படித் தனது தனிமனித இயல்புகளையும், பெருமதிப்புக்குரிய தனது வாழ்க்கியத் தத்துவகளையும் துளியும் விட்டுக்கொடுக்காமல் தனது குறிக்கோளை எவ்வாறு அடைவது என்பதை உணர்த்திக் காட்டிய உயர்தரமான ப்ளுபரிஸ்ட் ஆகும்.
மேற்படியான அவரது உயர்ந்த வாழ்க்கை வரலாற்றிலிருந்து குறிப்பிடத்தக்க, பற்பல நிகழ்வுகளை இந்த நூலில் தொகுத்து, இந்த நூலின் ஆசிரியர் பாலசுப்ரமணியன் எப்படி ஒரு தனிமனிதர் எந்தச் சூழ்நிலையிலும் அதற்கேற்ப நல்ல முறையில் அமைத்துக்கொள்ளாக் கூடிய மனோபாவம், அனுபவங்களிலிருந்து சரியான வாழும் முறைகளை அமைத்துக் கொள்ளும் விருப்பம், விடாமுயற்சி மற்றும் சரியான நடைமுறைத் தீர்மானங்கள் ஆகியவற்றைக் கொண்டு தனிச்சிறப்புடன் புகழ்பட வாழமுடியும் என்று நன்கு சிந்தித்திருக்கிறார். அப்படி அவர் எல்லாக் காலங்களிலும் தனது வாழ்வில் இதுவரை தொடர்ந்து விளங்கியுள்ளார் என்பது அவரை ஒரு மிகவும் விரும்பத்தக்க மிக்க சீர்மைவாய்ந்த விக்கிரஹமாக ஆகியிருப்பது உண்மை
மேற்கூறிய ‘ரஜினியின் மந்திரங்கள்ல் ஒவ்வொன்றும் மிகமிக எளிமையானதும், யாரும் மேற்கொண்டு செயல் படுத்தக்கூடிய வாழும் முறையாகவும் அமைந்துள்ளது. அது ஒவ்வொன்றும் சமூகத்தின் மீதும் உங்களுக்கு நெருக்கமானவர்கள் மீதும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உங்களுக்கு உதவும் என்பதில் ஐயமில்லை.
-
கூட்டு விளைவு: உங்கள் வருமானத்தையும் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் வெற்றியையும் முடுக்கிவிடுங்கள்
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartடேரன் ஹார்டி
தமிழில்: PSV குமாரசாமி
“நீங்கள் நினைத்துள்ளதைக் காட்டிலும் மேலான வெற்றியைச் சாதிப்பதற்குத் தேவையான யோசனைகளின் தங்கச் சுரங்கமாக இந்தூல் விளங்குகிறது”
– பிரையன் டிரேசி, ‘விண்ணளவு சாதனை’ நூலின் ஆசிரியர், ஊக்குவிப்புப் பேச்சாளர் -
கதாநாயகன் (இரகசியம் #4) ( Kadhanayagan ) (Colour)
Rs. 3,950.00or 3 X Rs.1,316.67 withAdd to cartரோன்டா பைர்ன்
ஹீரோ என்பது பன்னிரண்டு ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றியை ஈட்டியவர்களின் ஞானத்தின் தொகுப்பாகும். அவர்களின் வாழ்க்கை துன்பங்களால் நிறைந்தது, ஆனால் அவை அனைத்தையும் அவர்கள் வெற்றிகரமாக கடந்தனர். ஒவ்வொருவருக்கும் உள்ளே ஒரு ஹீரோ இருக்கிறார், எழுந்திருக்க காத்திருக்கிறார். ரோண்டா பைர்ன் இந்தப் புத்தகத்தில் தனது நம்பிக்கைகளை வலுப்படுத்துகிறார், அந்த உத்வேகம் நம்மைச் சுற்றி இருக்கிறது, மகிழ்ச்சியும் தைரியமும்தான் ஒருவர் தங்கள் வாழ்க்கையை வீரமாக மாற்றிக்கொள்ளும் மிகப்பெரிய பலம்.
-
ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs Tamil )
Rs. 4,690.00or 3 X Rs.1,563.33 withAdd to cartவால்டர் ஐசாக்ஸன்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நடத்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம்.
இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தன்மையுள்ள ஓர் இறுதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு. கச்சிதத்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள், இசை, கைபேசிகள், டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்சியை உருவாக்கியவர்.
வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.
-
ஒரே ஒரு விஷயம்
Rs. 2,290.00Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartகேரி கெல்லர் & ஜே பாபசான்
நாகலட்சுமி சண்முகம்
ஒரே ஒரு விஷயம்: அற்புதமான விளைவுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியகரமான உண்மைகள், 2013 ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் கேரி கெல்லர் மற்றும் ஜே பாபசான் ஆகியோரால் எழுதப்பட்டது. புத்தகம், தி ஒன் திங், நமது வெற்றியைத் தடுக்கும் பொய்கள், நம் நேரத்தைத் திருடி, நோக்கத்தில் நம் செறிவை அதிகரிக்கும் திருடர்கள் போன்ற தடைகளை சமாளிக்க நம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பழக்கத்தை எவ்வாறு இணைக்க முடியும் என்பதை விளக்குகிறது. இந்த புத்தகம் வணிகத்தில் ஈடுபடும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அவர்களின் வேலையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தடுக்கும் காரணிகளை நீக்குகிறது. புத்தகம் படிக்க எளிதானது மற்றும் அது தெரிவிக்கும் கருத்துக்களில் கணிசமானதாகும்.
ஒருவருடைய வழியில் வரும் குழப்பமான கவனச்சிதறல்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை மையமாகக் கொண்டது இந்த புத்தகம். இதைச் செய்வதன் மூலம், அவர்கள் அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம்.
இந்த புத்தகம் தினசரி வாழ்க்கை மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களின் குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு அவர்களின் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடவும், பெரும் நிகழ்வுகளால் ஏற்படும் சோர்வு உணர்வை சமாளிக்கவும் மற்றும் ஒரு சிறந்த காலப்பகுதியில் சிறந்த முடிவுகளை அடையவும் உதவுகிறது.
உங்கள் வாழ்க்கை – வேலை, தனிப்பட்ட, குடும்பம் மற்றும் ஆன்மீகம் என்றால் ஒன் திங் ஒவ்வொரு பகுதியிலும் அசாதாரண முடிவுகளை அளிக்கிறது.
-
மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல் ( Magilchiyaaga Iruppathatkaana Thunichal ) The Courage To Be Happy
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartஇச்சிரோ கிஷிமி and ஃபூமிடாகா கோகா
தமிழில்: PSV குமாரசாமி
- சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ என்ற நூலின் தொடர்ச்சி இது.
நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது. ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ நூலைப் போலவே இந்நூலும், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வடிவில் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான சூட்சமம், 20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளில் மறைந்துள்ளது என்று இதில் வருகின்ற தத்துவஞானி நம்புகிறார்.
ஆனால், அவரோடு மல்லுக்கு நிற்கின்ற இளைஞனோ, வெறுமனே உங்களுடைய சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்களால் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று வாதிடுகிறான். அந்தத் தத்துவஞானி பொறுமையாக, அட்லருடைய “துணிச்சலின் உளவியலின்” சாராம்சத்தை விளக்கி, மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைவதற்குத் தேவைப்படுகின்ற படிப்படியான வழிமுறைகளையும், அந்த மாற்றங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற விதத்தில் எத்தகைய பிரம்மாண்டமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.
இது உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டிருக்கின்ற ஓர் படைப்பாகும். இது அனைத்து விதமான பின்புலங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பொருத்தமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.
-
காலை எழுந்தவுடன் தவளை! ( Kaazhai Elunthavudan Thavalai ) Eat That Frog
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் (to-do list) உள்ள எல்லாவற்றிற்கும் போதுமான நேரம் இல்லை-அது எப்போதும் இருக்காது. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. அவர்கள் மிக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவைகளை செய்து முடிப்பதை உறுதிசெய்கிறார்கள். அவர்கள் தங்கள் தவளைகளை சாப்பிடுகிறார்கள்.
ஒரு பழைய பழமொழி உள்ளது, நீங்கள் தினமும் காலையில் முதல் முறையாக ஒரு தவளை சாப்பிட்டால், நீங்கள் நாள் முழுவதும் செய்ய வேண்டிய மிக மோசமான காரியத்தை முடித்துவிட்டீர்கள் என்ற திருப்தி உங்களுக்கு கிடைக்கும். டிரேசியைப் பொறுத்தவரை, தவளை சாப்பிடுவது உங்கள் சவாலான பணியைச் சமாளிப்பதற்கான ஒரு உருவகமாகும் – ஆனால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். காலை எழுந்தவுடன் தவளை! ஒவ்வொரு நாளையும் எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பதை காட்டுகிறது, இதனால் இந்த முக்கியமான பணிகளை நீங்கள் கச்சிதமாக செய்து அவற்றை திறமையாகவும் செயல் விளைவுடையதாகவும் நிறைவேற்ற முடியும்.
பிரையன் ட்ரேசி பயனுள்ள நேர மேலாண்மைக்கு என்ன முக்கியம் என்பதை துள்ளியமாக கூறுகிறார்: முடிவு, ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு. வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தகம், இன்று உங்கள் முக்கியமான பணிகளைச் செய்வதை உறுதி செய்யும்!
-
ரசவாதி ( Rasavathi ) The Alchemist
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartபாலோ கொயலோ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவதைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை
- Grand Prix des lectrices de Elle for roman (1995)
- Premio Grinzane Cavour for Narrativa Straniera (1996)
- Corine Internationaler Buchpreis for Belletristik (2002)
- 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்
“ஒருவரின் விதியை நிறைவேற்றுவதற்கான தேடல்.” — அந்தோனி ராபின்ஸ்
“உலகளாவிய ஞானத்தின் ஒரு தொழில்முனைவோர் கதை, நம் சொந்த வாழ்க்கையின் வணிகத்திற்கு நாம் உபயோகிக்கலாம்.” — ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி
“இது என் முழு வாழ்க்கையையும் மாற்றியது. என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சதி செய்த அனைத்து மக்களையும் நான் உணர்ந்தேன். — ஃபாரல் வில்லியம்ஸ், இசைக்கலைஞர்
-
பணம் சில ரகசியங்கள் ( Panam Sila Rahasiyangal )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartசோம. வள்ளியப்பன்
எதற்குப் பணம் சம்பாதிக்கவேண்டும்? எவ்வளவு சம்பாதிக்கவேண்டும்? சம்பாதித்ததை என்ன செய்யவேண்டும்? எளிமையாகத் தோன்றினாலும் இந்த மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பது கடினம். ஆயிரம் வாசல்கள் வழியாக உள்ளே வருவதற்கும் இன்னும் ஆயிரம் வாசல்கள் வழியே வெளியில் செல்லவும் பணம் தயாராக இருக்கிறது. எந்தெந்த கதவுகளைத் திறந்துவைக்கவேண்டும்? எவற்றையெல்லாம் மூடி வைக்கவேண்டும்? பணம் ஒரு கருவி மட்டுமே. அது வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் வாழ்க்கை என்பது அது மட்டுமேயல்ல என்கிறார் நூலாசிரியர் சோம. வள்ளியப்பன். சரியான இலக்குகளை அமைத்துக்கொள்ளாவிட்டால் பணம் நம்மை, நம் பணி வாழ்வை, நம் குடும்ப உறவுகளை, நம் எதிர்காலக் கனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரிக்கிறார். பங்குச்சந்தை, சுய-முன்னேற்றம், நிர்வாகவியல் என்று பல துறைகளில் இயங்கிவரும் சோம. வள்ளியப்பனின் இந்நூல் பணம் குறித்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில முக்கியமான ரகசியங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. -
ரிச்சர்ட் பிரான்ஸன்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartஎன். சொக்கன்
பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.
ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை. தடைகள் வந்தன. எதிர்ப்புகள் அணிவகுத்தன. முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.
ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன். ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார். காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.
பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார். அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது. ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.
தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார். அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.
வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
-
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி ( Ninaivaatral )
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withAdd to cartவில்லியம் வாக்கர் அட்கின்சன்
“நான் வாசித்துள்ள புத்தகங்களிலேயே மிகவும் முக்கியமானது இந்தப் புத்தகம் தான். நினைவாற்றல் எவ்வளவு முக்கியமானது என்பதில் தொடங்கி, எமது மனதை மற்றும் உடலை பயன்படுத்தி நினைவாற்றலை வளர்ப்பதை பற்றி, புத்தகங்களில் இருந்து வாழ்க்கையில் பயன்படுத்த விடயங்களை பெறுவது முதல் அனைத்தும் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகம்.” — நிர்மலா – யாழ்ப்பாணம், இலங்கை ( Nirmala – Jaffna, Sri Lanka )
“எல்லா அறிவும் நினைவு மட்டுமே.” நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஏராளமான தகவல்கள் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. நமது அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து முக்கியமான சிறிய விவரங்களை நினைவில் வைத்துக்கொள்வது வரை, நமது தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவசியமான தரவுகளை மனப்பாடம் செய்வது வரை, நமது மனத் திறன்களின் செயல்திறனை முடிவில்லாமல் நம்புகிறோம்.
ஆனால் சில சமயங்களில் நாம் விரும்புவது போல் அது திறமையாக இருக்காது. ஒரு விளக்கக்காட்சியை வழங்குவதை மறந்துவிட்டு, புள்ளிவிவரங்களை நினைவில் கொள்ள முடியாத சூழ்நிலைகளில் நாம் நம்மைக் காண்கிறோம். நாங்கள் முன்பு சந்தித்த ஒருவரைச் சந்திக்கிறோம், ஆனால் இப்போது அவர்களின் பெயர் என்னவென்று தெரியவில்லை, நினைவில் இல்லை. நம் நினைவாற்றல் கூர்மையாக இருக்க வேண்டும், அதனால் விஷயங்களை நொடியில் நினைவுபடுத்த முடியும். நினைவாற்றலில் வில்லியம் வாக்கர் அட்கின்சன், அதை எவ்வாறு உருவாக்குவது, பயிற்சி செய்வது மற்றும் பயன்படுத்துவது, நமது நினைவகத்தை மேம்படுத்த, வளர்ப்பதற்கு மற்றும் பயிற்சியளிக்க எளிதான மற்றும் பொருந்தக்கூடிய முறைகளை வழங்குகிறது.
இந்தப் புத்தகம், மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் பயனுள்ள தகவல்களைத் தரும்; விரைவாகவும், முயற்சியில்லாமலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும் வழிகாட்டி.
-
லீ குவான் யூ: பெருந்தலைவன்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartபி. எல். இராஜகோபாலன்
லீ குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில். அங்கிருந்த பேராசிரியர்கள் இனபேதம் பார்க்கவில்லை. ஆனால் விளையாட்டு திடல்,பேருந்து,உணவு விடுதி, வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கொண்டு லீ கொதித்தார்.
என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும், நாகரிகமும், பண்பாடும் அவரை ஈர்த்தாலும் பிரிட்டிஷ் இனவெறியர்கள் நடந்து கொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின் வேட்கையும், வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர் ரசிக்கவில்லை. அதற்காக கம்யுனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை.
மாற்று அரசியலை முன்வைக்க முடிவு செய்து மக்கள் செயல் கட்சியை (Peoples Action Party) நிறுவி ஆட்சியைப் பிடித்தார். 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கப்பூரை வானுயர்ந்த கோபுரமாய் மாற்றி அமைத்தார்.
சிங்கப்பூர் உலக வர்த்தகத்தின் மையபுள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான். நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக் கொண்டிருக்கிறது.
தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ. அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கை தொடங்கி அவருடைய கல்வி, அரசியல் நுழைவு, அவருடைய இலக்கு, அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள், அவருடைய கம்யூனிஸ எதிர்ப்பின் பின்னணி, தமிழர்கள் மீது அவர் அன்பு காட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.
-
அதிகாலை 5 மணி குழு ( Athikalai 5 Mani Kulu )
Rs. 2,350.00or 3 X Rs.783.33 withAdd to cartராபின் ஷர்மா
உங்கள் காலையை சொந்தமாக்கி – உங்கள் வாழ்க்கையை உயர்த்துங்கள்.
புகழ்பெற்ற தலைமைப் பண்பு மற்றும் மிகச்சிறந்த செயல்திறன் நிபுணர் ராபின் சர்மா 20 ஆண்டுகளுக்கு, முன்பு. ஒரு புரட்சிகரமான காலை வழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாலை 5 மணி குழு தத்துவத்தை அறிமுகப்படுத்தினார். இது அவரைப் பின்பற்றுபவர்களுக்கு அவர்களின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், அவர்களின் சிக்கலான வாழ்வில் சிறந்த ஆரோக்கியத்தை செயல்படுத்தவும் அவர்களது அமைதியைப் பாதுகாக்கவும் உதவியது.
இப்போது தீவிரமான நான்கு ஆண்டு முயற்சியின் விளைவாக எழுத்தாளரால் வடிவமைக்கப்பட்டுள்ள, பலருக்கும் சாதனை முடிவுகளை அடையவும், அதே நேரத்தில் அவர்களின் மகிழ்ச்சி, உதவும்தன்மை மற்றும் புத்துணர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தவும் உதவிய வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தாத்தில், அதிகாலையில் எழும் பழக்கத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வீர்கள், முன்பின் தெரியாத இரண்டு மனிதர்கள் ஒரு விசித்திரமான தொழிலதிபரைச் சந்திப்பது, பிறகு அவரே அவர்களின் ரகசிய வழிகாட்டியாக மாறுவது பற்றிய ஒரு அழகான மற்றும் பெரும்பாலும் சுவாரஸ்யமான கதையான அதிகாலை 5 மணி குழு புத்தகம் கீழ்க்கண்டவாறு உங்களை வழிநடத்தும்.
வியக்கத்தக்க சாதனைகளை உருவாக்க சிறந்த மேதைகள், வணிக அதிபர்கள் மற்றும் உலகின் புத்திசாலித்தனமான மக்கள் தங்கள் கலைப் பொழுதை எவ்வாறு தொடங்குகிறார்கள்.. அதிகாலையில் எழுகையில், தூண்டுதல், மிகுந்த கவளம் மற்றும் அதி தீவிள உந்துதலுடன் உங்கள் நாளிள் முழுப் பயனையும் அடையும் படியான அதிகம் அறியப்படாத நீங்கள் உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய ஒரு சூத்திரம் அதிகாலையின் அமைதியான நேரத்தை படிப்படியான செயல்முறை மூலம் பயன்படுத்தி, உடற்பயிற்சி, சுய புதுப்பித்தல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான நேரம் பெறுதல்.
ஒரு நரம்பியல் அடிப்படையிலான நடைமுறையானது அதிகாலையில் எழும் பழக்கத்தின் மூலம். பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருக்கும்போது, உங்களுக்கு சிந்திக்கவும், படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், பநட்டமான செயல்பாட்டிற்கு பதிலாக நிம்மதியாக நாரைத் தொடங்கவும் அருமையான வாய்ப்பைத் தருகிறது. “ரகசியமான செயல்” தந்திரோபாயங்கள் டிஜிட்டல் கபணிச்சிதறல்கள் மற்றும் அற்பமான திசைதிருப்பல்களிலிருந்து உங்கள் சிறப்புத் திறன்கள், இயற்கைத் நிறமைகள் மற்றும் கனவுகளை பாதுகாத்து, நீங்கள் அதிர்ஷ்டம், செல்வாக்கு மற்றும் உலகில் அற்புதமான தாக்கத்தை அனுபவிக்க உதவுகிறது.
-
TCS: ஒரு வெற்றிக் கதை
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withRead moreஎஸ். ராமதுரை
கி. இராமன்ஒரு நிறுவனத்தை மாபெரும் நிறுவனமாக மாற்றுவது எப்படி? ஓர் எளிய கனவைப் பெருங்கனவாக வளர்த்தெடுப்பது எப்படி? தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்நிலை வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக டி.சி.எஸ் வளர்ந்த கதையை அதைச் சாத்தியப்படுத்திய ஒருவரே நேரடியாக நம்மோடு இதில் பகிர்ந்துகொள்கிறார். டாப் டென் நிறுவனங்களில் ஒன்றாக மாறவேண்டும் என்பது டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் ஆரம்பகாலக் கனவு. அதை அடைவதற்கு ஒரு காலக்கெடுவையும் அவர்கள் நிர்ணயித்தார்கள்.
ஆனால் அதற்கு ஒரு வருடம் முன்பாக, அதாவது 2009ஆம் ஆண்டில் கனவு நிறைவேறிவிட்டது. இந்த அதிசயத்துக்குப் பின்னாலிருப்பவர் டி.சி.எஸ் தலைமைச் செயல் அதிகாரியான எஸ்.ராமதுரை. அவர் பொறுப்புக்கு வந்தபோது நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 155 மில்லியன் டாலர். இன்று 42 நாடுகளில் கிளைகள் படர்ந்துள்ளன. 5 லட்சத்துக்கும் மேலானவர்கள் பணிபுரிகிறார்கள்.
வருடாந்தர வருமானம் 22 பில்லியன் டாலருக்கும் மேல்.டி.சி.எஸ் நிறுவனத்தின் வரலாறென்பது நவீன இந்தியாவின் மகத்தான வெற்றிக் கதைகளில் ஒன்று. மிகவும் மதிக்கப்படும் வணிகத் துறைத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ராமதுரை இந்தப் புத்தகத்தில் அந்த அசாதாரண வெற்றியை எட்டிப்பிடித்த கதையை விரிவாக நினைவுகூர்ந்திருக்கிறார்.
-
மனதோடு ஒரு சிட்டிங் ( Manathodu Oru Sitting )
Rs. 1,150.00or 3 X Rs.383.33 withRead moreசோம. வள்ளியப்பன்
மனம் பற்றிய ‘இன்னொரு புத்தகம்’ அல்ல இது. மனது பற்றிய முக்கியமான புத்தகம். மன ஓட்டங்களைப் பல்வேறு கோணங்களில் இருந்தும் ஆராய்ந்து, அங்கே என்ன நடக்கிறது, ஏன் அப்படி, நாம் எப்படி, என்ன செய்யவேண்டும் என்று புட்டுப் புட்டு வைக்கிற புத்தகம். நுட்பமான பார்வை, எவரும் சுலபமாக நடைமுறைப்படுத்தக்கூடிய யதார்த்தமான அணுகுமுறைகள் கொட்டிக்கிடக்கிற பொக்கிஷம். வாழ்க்கையைச் சரியாகப் புரிந்துகொள்ள, நிம்மதியாக வாழ, அற்புதமான விளக்கங்கள். முழுக்க முழுக்க மனது பற்றிய புத்தகம். மனதை புரிந்துகொள்ள, கைகொள்ள, சொல் பேச்சு கேட்க வைக்க. மொத்தத்தில் மனதை ஆள… மனதோடு ஒரு சிட்டிங். மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளரான சோம. வள்ளியப்பன் எழுதிய மனம் பற்றிய ‘உஷார் உள்ளே பார்’ ஒரு தளம் என்றால், மனதோடு ஒரு சிட்டிங், அடுத்தத் தளம், அடுத்த நிலை, அடுத்தக் கட்டம். ‘இட்லியாக இருங்கள்’, ‘ஆளப்பிறந்தவர் நீங்கள்’ போன்ற வெற்றிப் புத்தகங்கள் எழுதிய சோம. வள்ளியப்பனின் முக்கியமான நூல் இது.
-
அலுவலகத்தில் உடல்மொழி ( Aluvalahathil Udalmozhi )
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreஆலன் & பார்பரா பீஸ்
தமிழில்: PSV குமாரசாமி
ஒரு மனிதன் நினைப்பதிலிருந்து உணர்வதிலிருந்து அவர் பேசுவது வேறுபட்டு இருக்கிறது என்பதை அவரது உடல் மொழி வெளிப்படுத்துகிறது. துணைவரை தேர்ந்தெடுப்பது முதல் எந்தச் சூழளையும் தைரியமாக எதிர்கொள்ளவதற்கு தேவையான உடல் மொழி ரகசியங்களை நீங்கள் அறிந்து கொள்ள இந்த நூல் பயன்படும். ஒருவரது அசைவுகளை வைத்தே அவரின் எண்ணங்களை உணர்வுகளை புரிந்துகொண்ட சரியான முடிவை எடுப்பது எப்படி என்று நாம் அறிந்துகொள்ளலாம்.
-
கடன்: (அள்ள அள்ளப் பணம் 9 ) / Kadan (Alla Alla Panam 9)
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreசோம. வள்ளியப்பன்
கடன் என்பது இரு பக்கமும் கூர்மை கொண்ட ஒரு பளபளப்பான கத்தி. சாதுரியமாகக் கையாண்டால் மிகுந்த பலன் பெறலாம். பெரும் நிறுவனங்கள் தொடங்கி அரசாங்கங்கள் வரை அனைவருக்கும் கடன் இன்றியமையாததாகவே இருக்கிறது. அதே சமயம் கவனமின்றிப் பயன்படுத்தினால் யாராக இருந்தாலும் பதம் பார்த்துவிடும்.
செல்வம் சேர்க்கும் வழிகளையும் சேமிக்கும் வழிகளையும் தனது ‘அள்ள அள்ளப் பணம்’ தொடர் நூல் வரிசைமூலம் தொடர்ந்து பதிவு செய்துவரும் பொருளாதாரம் மற்றும் நிர்வாகவியல் நிபுணர் சோம. வள்ளியப்பன் எழுதியுள்ள இந்நூலின் ஆய்வுப்பொருள், கடன். கடன் என்பது பெரிய சப்ஜெக்ட். அடமான கடன், செக்குகள், பிராமிசரி நோட், செக் பவுன்ஸ், வங்கி கடன்கள், NBFC நிறுவனங்களில் இருந்து கடன்கள், லோன் ஆப்கள், வியாபாரக் கடன், தங்கத்தின் மீதான கடன், விவசாய கடன், வாகன, வீட்டுக் கடன் அதற்குரிய வரி விலக்குகள், கடனை திருப்பி தராவிட்டால் எடுக்கப்படக்கூடிய சட்ட நடவடிக்கைகள், சர்பாசி சட்டம் என பலவற்றைப் பற்றியும் ஒரு எளிமையான, அதே சமயம் விரிவான புத்தகம். கடன்கள் குறித்து, அவற்றின் நன்மை தீமைகள் குறித்து, கடன்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து, வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியவை குறித்தெல்லாம் அனைவருக்கும் புரியும் வடிவில் எளிமையாக இந்நூலில் வழங்கியிருக்கிறார் நூலாசிரியர்.
-
Amazon ஒரு வெற்றிக் கதை ( Amazon Oru Vettrik Kadhai )
Rs. 1,150.00or 3 X Rs.383.33 withRead moreஎஸ்.எல்.வி.மூர்த்தி
அமேசானின் வெற்றிக்கதை என்பது மாபெரும் வெற்றிகளை ஈட்டிவரும் ஒரு பெரும் நிறுவனத்தின் கதையா அல்லது அதைத் தோற்றுவித்த ஓர் அசாதாரணமான ஆளுமையின் கதையா? இரண்டுமேதான்.
அமேசான் என்பது ஆலமரம் என்றால் அதன் விதை, ஜெஃப் பெஸோஸ். எனவே இது ஒரு விதையின் கதை. எனவே, இது ஒரு மரத்தின் கதையும்கூட. அமெரிக்காவில் ஒரு மூலையில் மிகச் சாதாரணமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி உலகம் முழுவதும் கிளைகளைப் பரப்பி பிரமிப்பூட்டும் வெற்றிகளைப் பெற்றது எப்படி?
அமேசானைத் தோற்றுவித்த ஜெஃப் பெஸோஸ் உலகப் பணக்காரர்கள் வரிசையில் பில் கேட்ஸுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது எப்படி? எதிர்காலத்தில் இணையம்தான் உலகை ஆளப்போகிறது என்பதை ஜெஃபால் எப்படி முன்கூட்டியே உணரமுடிந்தது? புத்தகங்களை ஆன்லைனில் விற்பதன்மூலம் லாபம் ஈட்டமுடியும் என்னும் நம்பிக்கையை அவர் எப்படிப் பெற்றார்? புத்தகங்களில் தொடங்கி உலகிலுள்ள அனைத்தையும் வாங்குவதற்கான பிரமிப்பூட்டும் இணையக் கடையாக அமேசானை அவர் வளர்த்தெடுத்தது எப்படி? அமேசான் தன் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்தும் ஜெஃப் தன் போட்டியாளர்களைச் சிதறடிக்கும் முறை குறித்தும் எழும் பல்வேறு குற்றச் சாட்டுகள் உண்மையா? வாழ்விலும் பணியிலும் ஜெஃப் பெஸோஸை நம்முடைய முன்னுதாரணமாகக் கொள்ளமுடியுமா? எனில் அவரிடமிருந்து நாம் என்னென்ன வெற்றிப் பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? எஸ்.எல்.வி. மூர்த்தியின் இந்நூல் மிக சுவாரஸ்யமான முறையில் ஒரு வண்ணமயமான வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.
-
பாபிலோனின் மாபெரும் செல்வந்தர்: பண்டைய மக்களின் வெற்றி இரகசியங்கள் ( Babilonin Maperum Selvanthar ) The Richest Man In Babylon
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreஜார்ஜ் எஸ். கிளேசன்
தமிழில்: PSV குமாரசாமி
செல்வத்தைக் குவிப்பது எப்படி என்பது குறித்து எழுதப்பட்டுள்ள நூல்களிலேயே மிகவும் பிரபலமான நூல்!
உலகெங்கும் இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற, செல்வத்தைக் குவிப்பதற்கான அடிப்படை விதிகளை, நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய பாபிலோனியர்கள் அறிந்திருந்தனர். செல்வத்தை ஈட்டி, அதைப் பாதுகாத்து, அதைப் பன்மடங்கு பெருக்கியிருந்த பாபிலோனியச் செல்வந்தர்களின் வெற்றி இரகசியங்களை, ஜார்ஜ் எஸ். கிளேசன், சுவாரசியமான கதைகளின் வடிவில் இந்நூலில் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
-
வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் ( Vendre Theervom )
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withRead moreரெய்னர் ஸிட்டல்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?
இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
-
நல்ல அதிர்வுகள் நல்ல வாழ்க்கை Nalla Athirvukal Nalla Vaazhkai ( Good vibes, Good Life Tamil )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreவெக்ஸ் கிங்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உங்களை நீங்களே உண்மையாக நேசிக்க எவ்வாறு கற்றுக் கொள்வது? எதிர்மறையான உணர்ச்சிகளை நேர்மறையான உணர்ச்சிகளாக எவ்வாறு மாற்றுவது? நிரந்தரமான மகிழ்ச்சியைக் கண்டுகொள்வது உண்மையிலேயே சாத்தியமா? இன்ஸ்டாகிராமில் வெற்றிகரமாக வலம் வருகின்ற வெக்ஸ் கிங், மேற்குறிப்பிடப்பட்டுள்ள கேணீநீள்விகளுக்கும் இன்னும் அதிகமானவற்றுக்கும் இந்நூலில் விடையளிக்கிறார். பாதகமான சூழல்களிலிருந்து மீண்டு வந்து, இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கைக்கான ஒரு மூலாதாரமாக விளங்குகின்ற அவர், தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்களையும் தன்னுடைய உள்ளார்ந்த புரிதலையும் கொண்டு உங்களுக்கு உத்வேகமூட்ட வந்துள்ளார். நீங்கள் சிந்திக்கின்ற, உணர்கின்ற, பேசுகின்ற மற்றும் நடந்து கொள்கின்ற விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் இவ்வுலகத்தை மாற்றத் தொடங்குகிறீர்கள் என்பதை வெக்ஸ் கிங் இந்நூலில் உங்களுக்குக் காட்டுகிறார்.
-
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி ( Thanathu Pokkishathai Vittra Thuravi )
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreராபின் ஷர்மா
தமிழில்: அ. ராஜ்மோகன்
தனது பொக்கிஷத்தை விற்ற துறவி என்ற இந்த புத்தகம் ‘தனது ஃபெராரியை விற்ற துறவி” ஜீலியின் மாண்டிலின் கதையைச் சொல்கிறது. உங்கள் கனவுகளை நனவாக்குவது மற்றும் தலைவிதியை எட்டுவது பற்றிய ஒரு கற்பனைக் கதை. மகிழ்ச்சியான எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள, நமது வாழ்வின் இலட்சியத்தைப் பின் தொடர்ந்து செல்ல, சுய ஒழுங்குமுறைக் கட்டுபாட்டை வளர்த்துக் கொண்டு துணிவுடன் செயல்பட, நேரத்தை நமது மிக முக்கியமான கைப்பொருளாக மதிக்க, நமது உறவுகளைப் பேணிப் பாதுகாக்க மற்றும் அன்றையப் பொழுது அன்றன்றே என்று வாழ்க்கையை முழுமையாக வாழ நமக்கு கற்றுக் கொடுக்கும் ஒரு அருமையான புத்தகம்.
-
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க ( Ungalukkul Irukkum Thalaimathuvaththai Vazharthedukka )
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withRead moreஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு? இல்லை! நிச்சயமாக இல்லை!
ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும். அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும். அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால் – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.
-
என் சீஸை நகர்த்தியது யார்?
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஸ்பென்சர் ஜான்சன், எம்.டி.
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
என் சீஸை நகர்த்தியது யார்? ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் எளிய நீதிக்கதை. ஒரு பிரமைக்குள் வாழும் நான்கு கதாபாத்திரங்களின் வேடிக்கையான மற்றும் அறிவொளி தரும் கதை, அவை வளரவும், மகிழ்ச்சியடையவும் சீஸ் தேடுகிறது. ‘சீஸ்’ என்பது ஒரு நல்ல வேலை, அன்பான உறவு, பணம் அல்லது உடைமை, ஆரோக்கியம் அல்லது ஆன்மீக மன அமைதியாக இருந்தாலும், நீங்கள் வாழ்க்கையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதற்கான ஒரு உருவகமாகும்.
-
ஜீபூம்பா : 100 ஆளுமைகளைச் சாதனையாளர்களாக மாற்றிய கணங்கள்
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreஎன். சொக்கன்
ஜீபூம்பா சாதனையாளர்களுடைய வாழ்க்கையை நாம் ஒரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது அவர்களுடைய வெற்றித் தருணங்கள்தான் அடுத்தடுத்துத் தெரிகின்றன. நாமெல்லாம் இப்படி இல்லை, இவர்கள் தனி ரகம் என்று நினைக்கிறோம். ஆனால், இன்னொரு பக்கத்திலிருந்து பார்க்கும்போது தொடக்கக் காலத்தில் அவர்கள் எப்படி இருந்தார்கள் என்பது தெரிகிறது. திடீரென்று சில ஒற்றுமைகள் தெரியத் தொடங்குகின்றன. நாமும் இப்படிதானே இருந்தோம், பிறகு எப்படி அவர்கள் வேறுவிதமாக வளர்ந்திருக்கிறார்கள் என்று யோசிக்கிறோம்.
இந்தப் புதிருக்கான விடை, இந்த இரண்டு பார்வைகளுக்கும் நடுவில் உள்ள ஒரு மாயத் தருணம். அது கூர்ந்து பார்க்கிறவர்களுக்குதான் புரியும். அந்தத் திருப்புமுனைதான் அவர்களுடைய வாழ்க்கையை மாற்றிப்போட்டிருக்கிறது, முன்னேற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்பது தெரியும். பல துறைகளைச் சார்ந்த சாதனையாளர்களுடைய வாழ்க்கைகளின் திருப்புமுனைக் கணங்களைக் கதை வடிவில் பதிவு செய்யும் நூல் இது, நம்முடைய வாழ்க்கையில் வரக்கூடிய திருப்புமுனைகளை அடையாளம் காணவும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவும் உதவும்.
-
யார் நீ?
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreசோம வள்ளியப்பன்
யார் நீ?
நம் ஆளுமைத் திறன் எப்படிப்பட்டது, நாம் உள்ளுக்குள் என்னவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான புரிதலை நாம் ஒவ்வொருவரும் பெற்றிருப்பது அவசியம். நாம் யார் என்பதைத் தெரிந்துகொண்டால்தான் நாம் விரும்பும் மாற்றம் நமக்குள் நிகழும். ஒருவருடைய பர்சனாலிட்டியைத் தெரிந்துகொள்ள MBTI, TA, 16 PF, எனியகிராம் உள்ளிட்ட செயல்முறைகளை உலகளவில் வெவ்வேறு துறை சார்ந்த நிபுணர்கள் கையாள்கிறார்கள். இவை அறிவியல்பூர்வமானவை. நம்மை நாமே பரிசோதித்துக்கொள்ள பெரிதும் உதவுபவை. இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் படிப்படியாகப் பின்பற்றினால் நம் ஒவ்வொருவரின் பர்சனாலிட்டி டைப் என்ன என்பதைக் கண்டுபிடிக்கலாம்.
இது தன்னையும் மற்றவர்களையும் புரிந்துகொள்ள உதவுகிறது. கண்டுபிடித்து முடித்த பிறகு, நாம் என்ன மாதிரியான மாற்றங்களையும் திருத்தங்களையும் நம் குணாதிசயங்களில் கொண்டுவர விரும்புகிறோமோ அவற்றை மேற்கொள்ள ஆரம்பிக்கலாம். விரிவான வாசிப்பையும் நீண்ட ஆய்வையும் இணைத்து இந்த விலை மதிப்பற்ற உளவியல் கையேட்டை உருவாக்கியிருக்கிறார் சோம. வள்ளியப்பன். இது ஒரு புது வரவு மட்டுமல்ல, புரட்சிகரமான வரவும்கூட.