Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
Showing 1–60 of 78 results
-
இறைத்தூதர் முஹம்மது ( Iraithoothar Muhammed PBUH )
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartதாரிக் ரமதான்
தமிழில்: எம். யூசுப் ராஜா
மேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது. பொருத்துபோகக் கூடியவராக, அன்பு, மென்மை, மாறாத நேர்மையுடையவராக, அனாதைகளின், ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது.
-
மாவீரன் அலெக்சாண்டர் / Maveeran Alexander
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartஎஸ்.எல்.வி.மூர்த்தி
ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !
ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர் நிச்சயம் இருப்பார்.
அலெக்சாண்டரின் யுத்த, நிர்வாக, கலாச்சாரப் பரிவர்த்தனைச் சாதனைகள் அற்புதமானவை, பிரமிக்க வைப்பவை. உண்மையில், இவையெல்லாம் அலெக்சாண்டர் என்ற மாபெரும் ஆளுமையின் அடையாளங்கள் மட்டுமே. இவை அனைத்தையும் தாண்டி, இன்னொரு மெய்யான அலெக்சாண்டர் இருக்கிறார். அத்தனைய அலெக்சாண்டரின் விஸ்வரூபத்தை எழுத்துவடிவில் காட்சிப்படுத்துகிறார் நூலாசிரியர் எஸ்.எல்.வி.மூர்த்தி.
ஆசை, ஆசை, ஆசை, ஆசை ஒரு மனித வடிவெடுத்து வந்தால், அதுதான் அலெக்சாண்டர். சாதாரண மனிதர்கள் 33 பிறவிகள் எடுத்தாலும் கனவு காணக்கூட முடியாத சிகரங்களைத் தன் 33 வயதில் அலெக்சாண்டர் எட்டியதற்குக் காரணம், அவருடைய அடங்காத ஆசை.
உலகை வெல்லும் ஆசையைக் கொண்டு சாதித்தவை ஏராளம்.
ஜூலியஸ் சீஸர், நெப்போலியன் புத்தகங்களின் வரிசையில் எஸ்.எல்.வி.மூர்த்தியின் முக்கியமான பதிவு, மாவீரன் அலெக்சாண்டர் !
-
ராக்ஃபெல்லர் / Rockfeller Tamil
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartகார்த்தீபன்
ராக்ஃபெல்லரின் வாழ்க்கை ஒருவகையில் அமெரிக்க எண்ணெய் வர்த்தகத்தின் ஆரம்பகால வரலாறும்கூட!
சாதனைகளுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத வாழ்க்கை ராக்ஃபெல்லருடையது.
அன்புமயமானவர், அளப்பரிய சாதனையாளர், எண்ணெய் வர்த்தகத்தின் முடிசூடா மன்னர், முடிவெடுப்பதில் அசாத்திய திறமை கொண்டவர், திட்டம் தீட்டுவதில் தன்னிகரற்றவர், ஏழைகளுக்கு அள்ளிக்கொடுப்பதில் வள்ளல். இப்படி ராக்ஃபெல்லரைப் பாராட்டுபவர்கள் ஒரு பக்கம்.
வெற்றிக்காக எந்தவொரு குறுக்குவழியையும் நாடத் தயாராக இருப்பவர். எதிரிகளைத் திட்டமிட்டு ஒழிப்பதில் கெட்டிக்காரர். அரசாங்கத்தை ஏமாற்றும் வித்தைகள் அனைத்தும் கைவரப்பெற்றவர். ஈவு, இரக்கம் என்பதே இவருடைய அகராதியில் கிடையாது. இப்படி ராக்ஃபெல்லரை விமரிசிப்பவர்கள் இன்னொரு பக்கம்.
பாராட்டுகளும் விமரிசனங்களும் ராக்ஃபெல்லரின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்தவை. ஆனால் இரண்டையுமே அவர் பெரிதாகப் பொருட்படுத்தியதில்லை. அவருடைய இலக்கு ஒன்றே ஒன்றுதான். வெற்றி. அதுவும் சாதாரண வெற்றியல்ல, பிரும்மாண்டமான வெற்றி. எதிரிகள் அத்தனைபேரையும் அண்ணாந்து பார்க்கச் செய்யும் வகையில் தன்னுடைய வெற்றி இருக்கவேண்டும் என்பார் ராக்ஃபெல்லர். அதைச் சாதிப்பதில்தான் தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்தினார். வர்த்தகத்தில் போட்டி இருக்கவேண்டும் என்று சொன்ன ராக்ஃபெல்லர், அந்தப் போட்டியில் தான் மட்டுமே வெல்லவேண்டும், தன்னுடைய ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனம் மட்டுமே உச்சத்தில் இருக்கவேண்டும் என்பதில் அசாத்திய பிடிவாதம் காட்டினார். அந்த வெற்றியை உறுதிசெய்ய அவர் செய்த சில காரியங்கள் அச்சமூட்டக்கூடியவை. அதன் காரணமாக அவர் சந்தித்த விமரிசனங்கள் அநேகம்.
அதேசமயம் ராக்ஃபெல்லரின் சில குணங்கள் பிரமிப்பை ஏற்படுத்தக்கூடியவை. அரசாங்கம், போட்டியாளர்கள், எதிரிகள் என்று எத்தனை முனைகளில் இருந்து நெருக்கடிகள் வந்தாலும் சரி. கலங்கமாட்டார். கவலைகொள்ளமாட்டார். மாறாக, இரண்டு ஆயுதங்களைப் பயன்படுத்துவார். ஒன்று, நிதானம். மற்றொன்று, துணிச்சல். வாழ்க்கையில் வெற்றிபெறத் துடிக்கும் ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் இவை.
-
சார்லஸ் டார்வின் / Charles Darwin Suyasarithai / The Autobiography of Charles Darwin
Rs. 990.00or 3 X Rs.330.00 withAdd to cartசார்லஸ் டார்வின்
தமிழில்: சுரேஷ்
இங்கே தரப்பட்டுள்ள எனது தந்தையின் சுயசரிதை நினைவுக்குறிப்புகள் அவரது குழந்தைகளுக்காக எழுதப்பட்டவை.
எப்போதேனும் பிரசுரிக்கப்படலாம் என்கிற எண்ணத்தோடு ஒருபோதும் அவை எழுதப்படவில்லை.
அவ்வாறிருக்கச் சாத்தியமில்லை எனப் பலருக்குத் தோன்றலாம்; ஆனால் அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கோ இது சாத்தியமான விஷயம் மட்டுமன்றி இயல்பானதும் கூட என்பது தெரிந்திருக்கும்.
– ஃபிடல் டார்வின் (டார்வினின் மகன்)
-
நந்தன் நிலேகனி: இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் பிராண்ட் அம்பாசிடர்
Rs. 690.00Rs. 550.00or 3 X Rs.183.33 withAdd to cartராஜீவ் திவாரி
Infosys நிறுவனத்துடனான நந்தன் நிலேகனியின் பயணம் 1978 இல் தொடங்கியது, Infosys உருவாவதற்கு முன்பே, அவர் IIT பாம்பேயில் பட்டம் பெற்ற பிறகு Patni Computers சேர்ந்து N.R. கீழ் பணியாற்றத் தொடங்கினார். நாராயண மூர்த்தி. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஜூலை 2, 1981 இல், Infosys மூர்த்தி மற்றும் பிற இணை நிறுவனர்களான எஸ். கோபாலகிருஷ்ணன், கே.தினேஷ், என்.எஸ்.ராகவன், என்.எம்.நீலேகனி மற்றும் எஸ்.டி.ஷிபுலால். மூர்த்தி தனது மனைவியிடமிருந்து ரூ.10,000 கடன் வாங்கி, 1980கள் மற்றும் 1990களில் Infosys உருவாக்க குழு கடுமையாக உழைத்தது.
Infosys தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது. இது IT மற்றும் BPO சேவைகளில் நிபுணத்துவம் பெற்றது. இது உலகம் முழுவதும் இத்தகைய சேவைகளை வழங்குகிறது மற்றும் 58,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது. இதன் ஆண்டு வருமானம் $2 பில்லியன் மற்றும் சந்தை மூலதனம் $21 பில்லியன். நந்தன் நிலேகனி நாராயண மூர்த்தியுடன் இணைந்து Infosys நிறுவனத்தை 1981 இல் தொடங்கினார். அவர் மார்ச் 2002 இல் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்படும் வரை நிறுவனத்தில் பல பதவிகளை வகித்துள்ளார்.
-
சே குவாரா: பொலிவியன் டைரி ( Bolivian Diary Tamil )
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withAdd to cartசே குவேரா
என்.ராமச்சந்திரன்சேகுவாரா கொரில்லாப் படையின் தலைவராக இருக்கும்போது, 1956-58ம் வருடங்களில் நடைபெற்ற கியூபாவின் புரட்சிப் போராட்டத்தின் போது நாட்குறிப்பில் தினசரி நிகழ்வுகளை எழுதுவது வழக்கம். தினசரிக் குறிப்பு எழுதும் பழக்கம் அவரிடம் இருந்ததால், பொலிவியாவில் கழிந்த அவரது கடைசி நாட்களைப் பற்றிய விவரமான தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, திருத்தப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது. நாட்குறிப்பு முழுவதும் சே. குவாராவால் பல புனைபெயர்கள் மற்றும் அடைப்பெயர்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. சில சமயம் ஒரே நபரைப் பல்வேறு பெயர்களில் குறிப்பிட்டுள்ளார். பொலிவியப் புரட்சியின் காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட சில முக்கியமான ஆவணங்களும், நகரத்துப் போராளிகளுக்கு விடுத்த ஆணைகளும், பொலிவிய மக்களுக்கு அறிவிப்புகளும், போராட்டத்தில் சே குவாரா சந்தித்தவர்களும் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களும் இடங்களும் பின்னிணைப்புகளாக கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பிடல் காஸ்ட்ரோவின் அறிமுக உரையும், கேமிலோ குவாராவின் முன்னுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.
-
தாஜுத்தீன் பாபா
Rs. 890.00or 3 X Rs.296.67 withAdd to cartநாகூர் ரூமி
ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள், மிருகங்கள், மரம் மட்டை என அவரது கருணை அனைவரையும், அனைத்தையும் சென்றடைந்தது. இறந்த பிறகும் நடந்த, நடந்துகொண்டிருக்கும் அற்புதங்கள் சந்தேகம் கொண்ட மானிட அறிவின் நாக்குகளை வெட்டுபவையாகும். தான் வாழ்ந்த மனநலக்காப்பகத்தை மக்கள் குறை தீர்க்கும் மன்றமாகவும், நாக்பூரை தாஜ்பூராகவும் மாற்றியவர். நாக்பூரின் ஆரஞ்சுப் பழத்தைப்போல தித்திக்கும் நடையில் நாகூர் ரூமி அவரது கதையைச் சொல்கிறார். படித்துப் பாருங்கள்.
-
என் வாழ்க்கை பயணம் (En Vaazhkai Payanam) My Life in Full
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartஇந்திரா கே. நூயி
இந்திரா கே. நூயியின் “மை லைஃப் இன் ஃபுல்” என்பது உலகின் மிகவும் போற்றப்படும் தலைமை நிர்வாக அதிகாரிகளில் ஒருவரின் குறிப்பிடத்தக்க பயணத்தை விவரிக்கும் ஒரு சக்திவாய்ந்த நினைவுக் குறிப்பு ஆகும்.
இந்தியாவில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து, ஒரு மூலோபாய சிந்தனையாளர் மற்றும் நிர்வாகியாக உயர்ந்தது வரை, அவரது புகழ்பெற்ற வாழ்க்கையின் நேரடிக் காட்சியை வாசகர்களுக்கு வழங்குகிறது, அவரது தலைமைத்துவ தத்துவம், அவர் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் வழியில் அவர் செய்த தியாகங்கள் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். . கருணை, மனக்கசப்பு மற்றும் நல்ல நகைச்சுவை ஆகியவற்றால் நிரப்பப்பட்ட, “மை லைஃப் இன் ஃபுல்” என்பது இருபத்தியோராம் நூற்றாண்டில் ஒரு அசாதாரண வாழ்க்கையின் அழுத்தமான பிரதிபலிப்பு மற்றும் வெற்றிக்கான வரைபடமாகும்.
-
எனக்கும் ஒரு கனவு / I too Had A Dream
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withAdd to cartவர்கீஸ் குரியன்
இந்தியாவில் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமான ‘அமுல்’ மூலம், லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியதுடன், தனிநபருக்குக் கிடைக்கும் பாலின் அளவை இருமடங்காக்கியவர் என்று பல்வேறு பெருமைகளுக்குச் சொந்தக்காரர் வர்கீஸ் குரியன். மேலாண்மையில் அவர் உருவாக்கிய வெற்றிச் சூத்திரங்கள் தலைமுறைகள் தாண்டித் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை.
‘மேனேஜ்மெண்ட் குரு’ என்றே அவரைச் சொல்லலாம். தனியார் நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில், அரசின் கட்டுப்பாட்டில் கூட்டுறவுப் பால் பண்ணைத் தொழிலில் புரட்சி செய்தவர். தான் எதிர்கொண்ட சவால்கள், பெற்ற வெற்றிகள் என்று தனது வாழ்வின் முக்கியத் தருணங்களைப் பற்றி இந்நூலில் எழுதியிருக்கிறார். இளைஞர்களுக்கு உத்வேகமூட்டும் சுயசரிதை இது!
-
எர்னஸ்டோ சே குவேரா / Ernesto Che Guevrara Tamil
Rs. 3,590.00or 3 X Rs.1,196.67 withAdd to cartஐ.லாவ்ரெட்ஸ்கி
தமிழில்: சந்திரகாந்தன்
பன்முகத் தன்மை வாய்ந்த இளம் புரட்சியாளனான சேகுவேராவின் வாழ்க்கை, லட்சியம், போராட்டம் குறித்து அனைத்து அம்சங்களையும் தெரிந்துகொள்ளும் விதத்தில் இந்நூல் அமைந்துள்ளது.
-
கடைசி முகலாயன்: ஓர் அரசகுலத்தின் வீழ்ச்சி, டெல்லி, 1857 / Kadaisi Mugalayan / The Last Mughal Tamil
Rs. 5,490.00or 3 X Rs.1,830.00 withAdd to cartவில்லியம் டேல்ரிம்பிள்
தமிழில்: இரா.செந்தில்
‘மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான புத்தகம்.’ -டயானா ஆட்டில், கார்டியன் புக்ஸ் ஆஃப் தி இயர்
‘டேல்ரிம்பிள் நம் காலத்தின் மிகச்சிறந்த வரலாற்று ஆசிரியர்களுள் ஒருவர். இந்தப் புத்தகம் இதுவரை அவர் எழுதியதிலேயே சிறந்த புத்தகமாக இருக்கும்.’ -ஏஷியன் ஏஜ்
‘டெல்லி கைப்பற்றப்பட்டு வீழ்ச்சியுற்ற கதையை அரிதான மனிதநேயத்துடன் விவரிக்கிறார் டேல்ரிம்பிள், இந்தப் பேரார்வம் எல்லோரையும் தொற்றிக்கொள்ளக்கூடியது. உரைநடையில் அது மிக அழகானதாக, தடுமாற்றமில்லாமல், தங்குதடையின்றி நிரம்பி வழிகிறது.’ -தி ஹிந்து
அரசர் பேச ஆரம்பித்தார். ‘நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை பிள்ளைகளே!
கேளுங்கள்!
இந்த அழிவை நான் கொண்டுவரவில்லை. எனக்கு செல்வங்களோ சொத்துக்களோ இல்லை. நிலமும் இல்லை, பேரரசும் இல்லை. நான் எப்போதுமே ஒரு பிச்சைக்காரன். ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு இறைவனைத் தேடிக்கொண்டிருக்கும் சூஃபி. என்னைச்சுற்றி சிலர் இருப்பதால் எனக்கான தினசரி ரொட்டியை நான் சாப்பிடுகிறேன். ஆனால் இப்போது மீரட்டில் பற்றவைக்கப்பட்ட ஒரு மாபெரும் தீநாக்கு அந்த ரொட்டியையும் விழுங்கிக் கொண்டிருக்கிறது. அது டெல்லியின் மீது விழுந்து இந்த மகத்தான நகரத்தை பற்றவைத்துவிட்டது.
இப்போது நானும் என்னுடைய வம்சாவளியும் அழிந்துபோக இருக்கிறோம். மகத்தான தைமூரிய [முகலாயர்கள்] பேரரசர்களுக்கு உண்டான பெயர் இப்போதும் உயிர்த்திருக்கிறது, ஆனால் விரைவில் அந்தப் பெயரும் முற்றாக அழிக்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.
-
திப்பு சுல்தான் / Tippu Sulthan
Rs. 3,890.00or 3 X Rs.1,296.67 withAdd to cartமொஹிபுல் ஹசன்
தமிழில்: எஸ். அர்ஷியா
இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது.
கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் மூலம் சாத்தியப் பட்டிருக்கின்றது.
அதேவேளையில், திப்புவின் அரசாங்கமும், அதை அவர் நடத்திய விதமும், அவரது இராணுவமும், அவர் செய்த சீர்திருத்தங்களும், மதக் கொள்கைகளும், தொழிற்துறைக்கு அவர் முன்னெடுத்த முயற்சிகளும், சமூக சமத்துவமும், அவரது குணாதிசியமும் இன்றைய நிலையிலிருந்து பல படிகள் முன்னிற்கின்றன.
-
தோழர்கள்: புனிதர்களின் அற்புத வரலாறு ( Thozharkal )
Rs. 8,910.00Rs. 8,190.00or 3 X Rs.2,730.00 withAdd to cartநூருத்தீன்
நாகரிக இலக்கணத்திற்கு உட்படாத முறையற்ற வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்த அரேபியர்கள், முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் இஸ்லாமிய மீளெழுச்சி துவங்கியபின் சுடர் விடும் நாயகர்களாகப் பரிணமித்தார்கள். தோழர்கள் என்றானார்கள். அந்தத் தோழர்களின் வரலாறுகள் தமிழில் நிறைய உண்டு. ஆனால் பரவலாக அறியப்படாத தோழர்களின் வரலாற்றை விறுவிறுப்பாகக் கூறும் தொகுப்பு இது.
-
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withAdd to cartஅலிஸ் காலப்ரைஸ் & ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ‘நூற்றாண்டின் சிறந்த மனிதர்’ என்று பெயரிடப்பட்டவர். உலக வரலாற்றில் மிகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்கிறார். ஆனால் ஒரு தனிமனிதனாக எந்தமாதிரி காணப்பட்டார்?
-
நெப்போலியன்: சாமானியன் சக்ரவர்த்தியான சாதனைச் சரித்திரம்
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withAdd to cartஎஸ். எல். வி. மூர்த்தி
சாதாரணன் – சிப்பாய் – தளபதி – மன்னன் – சக்கரவர்த்தி – கைதி. மாவீரன் நெப்போலியனின் வாழ்க்கையை இப்படி ஆறே வார்த்தைகளில் சுருங்கச் சொல்லிவிடலாம். ஆனால், இந்த ஆறு வார்த்தைகளுக்குப் பின்னால் புதைந்து கிடக்கும் பேருண்மைகள் அதி ஆழமானவை, மிக அழுத்தமானவை. பால்ய காலத்தில் வறுமையைச் சுவைத்து, வெளியில் சொல்ல முடியாத அவலங்களை விழுங்கி, வளர்ந்த எந்த ஒரு மனிதனும் விதியின் புதைகுழியில் சிக்கி முகவரியே இல்லாமல் போயிருப்பான். ஆனால், தன்னம்பிக்கையின் முகவரியாகத் துளிர்த்து, தழைத்து, விழுதுவிட்டு வளர்ந்து நின்றவன் நெப்போலியன். எதிர்வந்த சிரமங்கள் எப்பேர்ப்பட்டதெனினும் அவற்றை ரோமங்களாகக் கருதி ஊதித் தள்ளும் மனோதிடம் இந்த மாவீரனின் தனிச்சிறப்பு. அந்த மனோதிடமும் தன்னம்பிக்கையும் நெப்போலியனுக்குள் நிலைபெற்றது எப்படி என்பதை நுணுக்கமாகப் படம் பிடித்திருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.
மாணவனாக இருந்தபோதே மனத்தளவில் போரிட்டுப் பழகியவன், வெறும் சிப்பாயாகத் தடம் பதித்தபோதே தலைமைத் தளபதிக்கு இணையாக இயங்கியவன், தளபதியாக உயர்ந்தபோதே சக்கரவர்த்தி சிம்மாசனத்தை நோக்கி வீரத்துடன் நகர்ந்தவன் – நெப்போலியன் எப்போதும் வருங்காலத்தை நிகழ்காலத்தில் வாழ்ந்து பார்த்தவன். இவன், மெய்யான மாவீரன் மட்டுமல்ல, கூர்த்த மதிகொண்ட அரசியல்வாதி; நேர்த்தியான நிர்வாகி; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறிச் செல்வதில் நிகரற்றவன்! யுத்தத்தைக் காதலிக்கும் நெப்போலியனுக்குள் புதைந்துகிடக்கும் பெண்பித்தன் எப்போது வேண்டுமானாலும் விழித்தெழுவான். இந்நூலில் எஸ்.எல்.வி. மூர்த்தியின் ‘குதிரைப் பாய்ச்சல் மொழி’, வெறும் போர்கள் வழியே நெப்போலியனின் வீர பிம்பத்தைக் கட்டமைக்காமல், ஒரு சாமானியனின் மகன், படிப்படியாக பிரான்ஸின் சக்கரவர்த்தியாகப் உருவெடுத்த பிரமாண்டத்தைத் தத்ரூபமாக விவரிக்கிறது. உலகம் போற்றும் ஒப்பற்ற மாவீரனை அங்குலம் அங்குலமாகத் தரிசிக்கும் பேரனுபவத்துக்குத் தயாராகுங்கள்!
-
ஸ்டீபன் ஹாக்கிங்: வாழ்வும் பணியும்
Rs. 3,690.00or 3 X Rs.1,230.00 withAdd to cartகிட்டி ஃபெர்கூசன்
தமிழில்: பேரா. ச. வின்சென்ட்
ஸ்டீபன் ஹாக்கிங்கை நோய் மிக மெதுவாகவே பாதித்தது. லூக்காசியன் பேராசிரியராக ஆகும்போது, அவரால் நடக்க முடியாது, எழுத முடியாது. தானே சாப்பிட முடியாது. கீழே சாயும் தலையை அவரால் மீண்டும் உயர்த்த முடியாது. பேச்சும் குளறியது. அவருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவர்களால் தான் அவர் என்ன பேசுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஹாக்கிங் அப்போதும், இப்போதும் கூட செயலற்றவர் இல்லை; என்றும் செயல்படுகின்ற கணிதவியல் நிபுணர், இயற்பியல் அறிஞர். அப்போதே கூட அவரை ஐன்ஸ்டைனுக்கு அடுத்த ஆற்றல்மிக்க அறிவியலாளர் என்று அழைத்தார்கள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லூக்காசியன் பேராசிரியர் பதவி மிக மதிப்பு வாய்ந்தது. 1663ஆம் ஆண்டு முதல் அளிக்கப்பட்டு வரும் இப்பதவியில் இரண்டாவது பேராசிரியராக சர் ஐசக் நியூட்டன் இருந்திருக்கிறார்.
-
ஸ்டீவ் ஜாப்ஸ் ( Steve Jobs Tamil )
Rs. 4,690.00or 3 X Rs.1,563.33 withAdd to cartவால்டர் ஐசாக்ஸன்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நடத்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம்.
இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தன்மையுள்ள ஓர் இறுதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு. கச்சிதத்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள், இசை, கைபேசிகள், டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்சியை உருவாக்கியவர்.
வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.
-
ரிச்சர்ட் பிரான்ஸன்
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withAdd to cartஎன். சொக்கன்
பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.
ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை. தடைகள் வந்தன. எதிர்ப்புகள் அணிவகுத்தன. முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.
ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன். ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார். காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.
பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார். அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது. ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.
தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார். அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.
வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
-
லீ குவான் யூ: பெருந்தலைவன்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartபி. எல். இராஜகோபாலன்
லீ குவான் யூ வழக்குரைஞர் பட்டம் பெற்றது கேம்பிரிட்ஜில். அங்கிருந்த பேராசிரியர்கள் இனபேதம் பார்க்கவில்லை. ஆனால் விளையாட்டு திடல்,பேருந்து,உணவு விடுதி, வியாபார ஸ்தலங்கள் இங்கெல்லாம் மற்றவர்களால் ஆசியர்கள் நடத்தப்பட்ட விதம் கொண்டு லீ கொதித்தார்.
என்னதான் இங்கிலாந்தின் கட்டுப்பாடும், நாகரிகமும், பண்பாடும் அவரை ஈர்த்தாலும் பிரிட்டிஷ் இனவெறியர்கள் நடந்து கொண்ட விதம் அவரைத் தீவிர அரசியலை நோக்கி நகர்த்தியது.
பிரிட்டிஷாரின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டு, இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அவர்களின் வேட்கையும், வேகமும் அதிகரித்த விதம் அவருக்கு நம்பிக்கையை ஊட்டியது. சிங்கப்பூரில் அப்போதைக்கு ஆட்சியில் இருந்த அரசியல் கட்சி, ஏழைகளின் உழைப்பை உறிஞ்சிக் கொழுத்ததை அவர் ரசிக்கவில்லை. அதற்காக கம்யுனிச சித்தாந்தத்தையும் அவர் ஏற்கவில்லை.
மாற்று அரசியலை முன்வைக்க முடிவு செய்து மக்கள் செயல் கட்சியை (Peoples Action Party) நிறுவி ஆட்சியைப் பிடித்தார். 31 ஆண்டுகள் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த காலத்தில் தரைமட்டமாகக் கிடந்த சிங்கப்பூரை வானுயர்ந்த கோபுரமாய் மாற்றி அமைத்தார்.
சிங்கப்பூர் உலக வர்த்தகத்தின் மையபுள்ளியானது இவரது தீர்க்க தரிசனத்தால்தான். நவீன சிங்கப்பூரின் ஒவ்வொரு அங்குலமும் இவருடைய பெயரைத்தான் ஜெபித்துக் கொண்டிருக்கிறது.
தேசத் தந்தையாக சிங்கப்பூர் மக்களால் போற்றப்படுகிறார் லீ குவான் யூ. அவரது வாழ்க்கையின் அடிநாதமாக இருக்கும் முக்கியமான விஷயங்கள் அனைத்தும் இந்த நூலில் நான்கு பாகங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது.
லீ குவான் யூவின் ஆரம்ப வாழ்க்கை தொடங்கி அவருடைய கல்வி, அரசியல் நுழைவு, அவருடைய இலக்கு, அதை அடைய அவர் எதிர்கொண்ட சவால்கள், அவருடைய கம்யூனிஸ எதிர்ப்பின் பின்னணி, தமிழர்கள் மீது அவர் அன்பு காட்டுவதற்கான காரணம் இவை அனைத்துக்கும் விடை சொல்கிறது இந்தப் புத்தகம்.
-
நெப்போலியன்: போர்க்கால புயல்
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreஎன். சொக்கன்
கில்லட்டின் காதலர், கலகக்காரர், போர்வெறி பிடித்தவர், சர்வாதிகாரி, சூழ்ச்சிக்காரர் என்று நெப்போலியன் பற்றிய நெகட்டிவ் பார்வைகள் நிறையவே உண்டு. மாவீரன், லட்சியவாதி, தன்னம்பிக்கைச் சக்கரவர்த்தி, போர் வித்தகர், காதலில் கரைகண்டவர் என்று பாஸிட்டிவ் விஷயங்களையும் பக்கம் பக்கமாகப் பேசலாம். உண்மையில் நெப்போலியன் யார்? லட்சியம் கண்ணை மறைக்க, ரத்தவெறி பிடித்து அலைந்தவரா? அல்லது சூழ்நிலை காரணமாக அப்படியொரு மாயச்சுழலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டவரா? வறுமையால் ஆளப்பட்டவரால், எப்படி உலகை ஆளும் பேரரசராக மாற முடிந்தது? இந்த வளர்ச்சி நேர்மையானதா?
இல்லை, கூர்மையான வாளின் முனையால் கொண்டுவரப்பட்டதா? கிடுகிடுவென்று உச்சத்தை நோக்கிச் சென்ற நெப்போலியன், அதைவிட இருமடங்கு வேகத்தில் படுபாதாளத்தில் விழுந்து மறைந்தாரே, அந்த வீழ்ச்சியின் பின்னணி என்ன? இந்தக் கேள்விகளுக்குள்தான், நிஜமான நெப்போலியன் ஒளிந்திருக்கிறார். ஒரு மாமன்னரின் வாழ்க்கை மட்டுமல்ல இது. ஒரு சாமானிய சிப்பாய், பேரரசராக உயர்ந்த வெற்றிக்கதையும் கூட.
-
நான் மலாலா: பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை ( Naan Malala )
Rs. 2,350.00or 3 X Rs.783.33 withRead moreமலாலா யூசுஃப்சாய்
தமிழில்: பத்மஜா நாராயணன்
ஸ்வாட் பள்ளத்தாக்கை தாலிபன்கள் கைப்பற்றியபோது ஒரேயொரு பெண் எதிர்த்து நின்றாள். வாய்மூடி அமைதியாக இருக்க மறத்து, தன் உரிமையான கல்விக்காக மலாலா யூசுஃப்ஸை போராடினாள். 2012 அக்டோபர் மாதம் 9ஆம் தேதி செவ்வாயன்று இப்போராட்டத்திற்குக் கடுமையான பின்விளைவு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து வீட்டிற்குச் செல்லும் போது அவள் பயணித்த பேருந்திலேயே தாலிபன் ஒருவன், மிக அருகிலிருந்து அவள் தலையில் சுட்டான். அவள் பிழைப்பாள் என்று யாரும் நம்பவில்லை.
ஆனால் அதிசயமாக உயிர்தப்பி, வட பாகிஸ்தானின் பள்ளத்தாக்கில் ஒரு பின் தங்கிய கிராமத்திலிருந்து ஐ.நா சபைவரை அவள் பயணம் செய்திருக்கிறாள். பதினாறு வயதிலேயே அமைதியான எதிர்ப்பிற்கு உலகச் சின்னமாய் குறிப்பிடப்படுகிறாள். அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றிருக்கிறாள். பயங்கரவாதத்தால் இடம்பெயர்த்து சென்ற ஒரு குடும்பத்தின் உருக்கமான கதைதான் ‘நான் மலாலா’. ஆண் குழந்தைகளே குடும்பச் சொத்து என்று கருதும் சமூகத்தில் தன் பெண் குழந்தைமேல் அபரிமித அன்பு கொண்ட பெற்றோரின் கதை.
பெண் கல்விக்கான போராட்டத்தின் கதை. இந்த உலகில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு குரலின் சக்தி போதும் என்று இந்நூல் நம்மை நம்பவைக்கும். யார் மலாலா ? என்று துப்பாக்கி ஏந்தியவன் வினவினான். நான் தான் மலாலா. இது தான் என் கதை.
-
சே குவேரா ( Che Guevara )
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreதா.பாண்டியன்
ஒரு மாபெரும் புரட்சியாளனின் வரலாற்றை மக்களுக்குஎப்படி எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்கு தோழர் தா. பாண்டியன் அவர்களின் இந்நூல் இலக்கணம் படைத்துள்ளது. இந்நூல் தமிழறிந்த அனைத்துத் தரப்பு இளைஞர்களின் கையிலும் இருக்க வேண்டிய பெட்டகம்.அரசியல் மற்றும் பொது வாழ்வில் அடியெடுத்து வைக்க நினைக்கிற அனைவரிடமும் அவசியம் இருக்க வேண்டிய கையேடு.
– த. ஸ்டாலின் குணசேகரன்.
-
வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் ( Vendre Theervom )
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withRead moreரெய்னர் ஸிட்டல்மன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.
ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?
இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
-
காந்தி யார்? 100 கேள்விகள்-பதில்கள்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreஎன். சொக்கன்
100 கேள்விகள், 100 பதில்கள்! இளம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் காந்தியை அழகாகவும் தெளிவாகவும் கொண்டுசென்று சேர்க்கும் நூல். காந்தி வெளிநாட்டில் படித்தபோது என்ன கற்றுக்கொண்டார்? கல்லூரியில் அவர் எப்படிப்பட்ட மாணவர்? தென்னாப்பிரிக்காவில் அவர் என்ன செய்தார்? ஏன் இந்தியா திரும்பினார்? அவர் அடிக்கடி பயன்படுத்திய சத்தியாக்கிரகம் என்ற சொல்லை யார் உருவாக்கினார்? அவர் கிரிக்கெட் பார்ப்பாரா? சினிமா பிடிக்குமா? வாழ்க்கை, அரசியல், தத்துவம், போராட்டக்குணம், எழுத்துப்பணி, விடுதலைப் போராட்ட வாழ்க்கை என்று காந்தியோடு தொடர்புடைய அனைத்தையும் எளிய கேள்வி பதில் பாணியில் இந்நூல் நமக்கு அறிமுகம் செய்கிறது. இதைவிடவும் எளிமையாக காந்தியை அறிமுகப்படுத்தமுடியாது. காந்தி என்றாலே எளிமைதான், இல்லையா?
-
அறிவியலில் பெண்கள் – ஒரு சமூக வரலாற்றுப் பார்வை ( Ariviyal Pengal )
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreகு.வி.கிருஷ்ணமூர்த்தி
மனித இனத்தின் அறிவியல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் என அனைத்துக்கும் பெண்கள் தங்களின் பங்களிப்பை திறம்பட அளித்துள்ளார்கள் என்பது வரலாற்று உண்மை. அதை இந்நூல் விளக்குகிறது.
மருத்துவத்தில் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தொடங்கி, வேதியியல், உளவியல், புவியியல், கணினிஇயல், உயிரியல், கணிதவியல் என அனைத்துத் துறைகளிலும் பெண் அறிவியலாளர்களின் பங்கு குறித்த வரலாறும் இதில் கூறப்பட்டுள்ளது. பிற நாட்டவர் மட்டுமின்றி, தமிழகத்தைச் சேர்ந்த மரபணு அறிஞரான இ.கே.ஜானகி அம்மாள், அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். நேருவின் அழைப்பின் பேரில் இந்தியா திருப்பிய அவர், இந்தியாவின் தாவரக் கள ஆய்வு நிறுவனத்தை மறுசீரமைப்புச் செய்யும் பணியை மேற்கொண்டார் என்பன உள்ளிட்ட பல்வேறு அரிய தகவல்கள் இந்நூலில் அளிக்கப்பட்டுள்ளன.
அறிவியல் ஆய்வுகளில் பெண்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லாதது, திருமணம் செய்து குடும்பப் பொறுப்புகளினால் ஏற்படும் அழுத்தம், பணியிடங்களில் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பிரச்னைகள், தங்களுக்கான பெண் முன்மாதிரிகள் இல்லாதது என்று ஆண்களைப் போன்று அதிக அளவில் பெண்கள் ஈடுபட இயலாததற்கான காரணங்களையும் இந்த நூல் அலசுகிறது. அறிவியலோ, கண்டுபிடிப்புகளோ பாலினத்தைச் சார்ந்தவை அல்ல, திறமையைச் சார்ந்தவை என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட இந்நூல் மிகவும் பயனுள்ளது.
-
ராஜீவ் காந்தி: அதிகாரம் . அரசியல் . ஆட்சி
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreசோம வள்ளியப்பன்
இந்திய அரசியல் வரலாற்றில் ராஜீவ் காந்தியின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் பெறுவதற்கான காரணங்கள் விரிவானவை. இயன்றவரை ஒதுங்கியிருந்தவரை இந்திராவின் படுகொலை அரசியலுக்கு இழுத்து வந்தது. அதே அரசியல் அவர் வாழ்வையும் கனவையும் ஒருசேர முடிவுக்குக் கொண்டுவந்தது. நேரு போலவோ இந்திரா போலவோ நீண்டகாலம் ஆட்சியில் இருந்தவர் கிடையாதுதான்.
இருந்தாலும், எமர்ஜென்சி முதல் எம்.ஜி.ஆர் வரை; அசாம் முதல் ஆசிய விளையாட்டு வரை; போபால் முதல் பஞ்சாப் விவகாரம் வரை; அயோத்தி முதல் அமிதாப் பச்சன் வரை; பிரணாப் முகர்ஜி முதல் போஃபர்ஸ் வரை; சார்க் முதல் ஷாபானு வரை; வி.பி.சிங் முதல் விடுதலைப்புலிகள் வரை; கம்ப்யூட்டர் முதல் கட்சித்தாவல் தடைச்சட்டம் வரை; ஜெயவர்த்தனே முதல் ஜெயலலிதா வரை அவர் அரசியல் வாழ்வின் அத்தியாயங்கள் ஆச்சரியமூட்டும் வகையில் படர்ந்தும், விரிந்தும் உள்ளன. இந்தியாவை அவர் முன்னால் நகர்த்திச் öன்றிருக்கிறார்; பின்னுக்கும் இழுத்து வந்திருக்கிறார். அவருடைய வெற்றிகளில் இருந்து மட்டுமின்றி தோல்விகளிலிருந்தும் தடுமாற்றங்களில் இருந்தும் பெற்றுக்கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.
ராஜீவ் காந்தியின் வாழ்வையும் அவர் வாழ்ந்த காலத்தையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் இந்நூல் அன்றைய இந்தியாவின் நிழல் எவ்வளவு அழுத்தமாக இன்றைய இந்தியாவின்மீது படிந்திருக்கிறது என்பதை உணர்த்துகிறது. ‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ உள்ளிட்ட குறிப்பிடத்தக்க நூல்களை எழுதிய ஆர். முத்துக்குமாரின் விரிவான, விறுவிறுப்பான படைப்பு.
-
SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் ( Sony Niruvanam Vazharntha Kathai )
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreஅகியா மொரிடா
இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும்.
Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன்முனைப்பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.
-
உருக்கு உலக மன்னர்: லட்சுமி மிட்டால்
Rs. 790.00Rs. 650.00or 3 X Rs.216.67 withRead moreவிமலநாத்
இந்தியாவின் உருக்குத் தொழிலில் முதலிடத்தை, கடின உழைப்பாலும், திறமையாலும் அடைந்த லட்சுமி மிட்டல் குழுமம், நமது பாராட்டுக்குரியவர்கள். “இந்தியா ஏழை நாடு என்ற ஏளனம், இந்த இருபத்தைந்து ஆண்டுகளில், லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா, நாராயண் மூர்த்தி போன்ற தொழில் வல்லுனர்களால் காணாமல் போய்விட்டது. லட்சுமி மிட்டலின் நிறுவனம் உலகின் மிகப் பெரிய உருக்கு இரும்பு உற்பத்தியாளராக மாற, அனைத்து விதத்திலும் தயாராக உள்ளது என்ற அளவுக்கு, இந்தோனேஷியா மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளில், சொந்த உருக்கு இரும்பு நிறுவனங்களை வைத்திருக்கும், அந்த மாமனிதரின் எழுச்சி ஊட்டும் வரலாறு!
-
எனது பயணம்: கனவுகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் ( Enathu Payanam ) My Journey
Rs. 1,450.00or 3 X Rs.483.33 withRead moreஏ.பி.ஜே.அப்துல் கலாம்
கனவுகள் என்பவை நம் தூக்கத்தில் நாம் காண்பவை அல்ல; நம்மை ஒருபோதும் தூங்கவிடாமல் பார்த்துக் கொள்பவைதான் நமது கனவுகளாக இருக்க வேண்டும்.
-
செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும்( Genghis Khanum Naveena Ulagin Uruvaakkamum ) Genghis Khan and the Making of Modern World
Rs. 3,090.00or 3 X Rs.1,030.00 withRead moreஜேக் வெதர்ஃபோர்ட்
400 ஆண்டுகளில் ரோமானியப் பேரரசு பெற்ற வெற்றியை 25 ஆண்டுகளில் பெற்றுவிட்ட மங்கோலியப் பேரரசின் சரிதத்தை, செங்கிஸ்கானின் வாழ்க்கை வரலாற்றினூடே சித்தரிக்கின்றது இந்நூல். நவீன உலக வடிவமைப்புக்கான மூன்று புத்தாக்கங்களாக இருந்துள்ள அச்சிடும் கருவி, வெடிமருந்து, திசைமானி இம்மூன்றும் மங்கோலியப் பேரரசு மூலம் கிடைத்தவை. அரோப்பாவின் கேடுகளுக்கெல்லாம் மூலகாரணம் மங்கோலியப் படையெடுப்புகள் என்னும் அய்ரோப்பியரின் வாதத்தை நிராகரிக்கிறார் ஜேக் வெதர்ஃபோர்ட்.
-
மோட்டார் சைக்கிள் டைரிகள் (The Motorcycle Diaries)
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreசே குவேரா
நான் இந்த குறிப்புகளை முதன்முறை படித்தபோது, அவை புத்தக வடிவில் இல்லை. இதை எழுதிய மனிதரை எனக்கு தெரியாது. படிக்கப் படிக்க, இந்த மனிதரைப் பற்றி தெளிவாகத் தெரிந்தது. நான் அவருடைய மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன். இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்ததும், அதே பாதையில் நீங்களும் பயணிக்க ஆசைப்படுவீர்கள் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை.
அது, அவர் விவரித்த அழகுக்காகவும் இருக்கலாம் அல்லது அவர் பகிர்ந்துகொண்ட அவருடைய ஆழமான உணர்வுகளாலும் இருக்கலாம். பல இடங்களில் நானே, ஆல்பெர்டோ கிளைடோலின் இடத்தில் இருந்து, என் தந்தையின் முதுகைப் பிடித்துக்கொண்டு, அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதுபோல் உணர்ந்தேன். ஒருவேளை உங்களுக்கு அவர் சென்று பாதையிலேயே பயணம் செய்ய வாய்ப்புக் கிடைத்தால், அங்கே பல விஷயங்கள் இன்னும் மாறாமலும் அல்லது இன்னும் மோசமாக ஆனதையும் பார்ப்பீர்க்கள் என்பது வருத்தத்தக்க விஷயம். பின்னாளில் சே என்றழைக்கப்பட்ட அந்த இளைஞனைப்போல, இந்த நிதர்சன உண்மை நம் அனைவருக்கும் ஒரு சவால். நம்முடைய மக்கள் எப்படியெல்லாம் துன்பப்படுகிறார்கள் என்று புரிந்துகொண்டு, அவர்களுக்கென்று ஓர் புதிய உலகைப் படைப்பது நம்முடைய கடமையாகும். நான் மிகவும். நேசிக்கும் அந்த மனிதருடன் உங்களை விட்டுவிடுகிறேன்.
-
இடி அமீன் ( Idi Amin )
Rs. 1,380.00or 3 X Rs.460.00 withRead moreச. ந. கண்ணன்
இடி அமின் கொன்றொழித்த மனித உயிர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். ரத்தம் குடிப்பார், மனித உடல் பாகங்களைத் தின்பார் என்பதில் தொடங்கி பல உறைய வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. கொன்ற உடல்களை நீர்வீழ்ச்சியில் வீசி முதலைகள் பசியாற வைப்பார் என்று அவர் உதவியாளர் சாட்சியம் அளித்திருக்கிறார்.
இடி அமின் குறித்த வதந்திகளும் கட்டுக்கதைகளும் அதிகம். என்றாலும், உகாண்டாவின் சர்வாதிகாரியாக அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் அரங்கேறிய அரசியல் அராஜகங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படுகின்றன. எதிர்ப்பவர்-களை மட்டுமல்ல, எதிர்க்க நினைப்பவர்களையும் அமின் அழித்திருக்கிறார். இந்தியர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பொருளாதாரம் உருக்குலைந்தது. அவர் காலத்தில், அவருடன் பழகியவர்கள், பணியாற்றியவர்கள் அத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள் அல்லது காணாமல் போனார்கள். தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே.
இடி அமின் செய்துகொண்டிருந்தது சீர்திருத்தமா, சீரழிவா என்பதை உகாண்டா மட்டுமல்ல உலகமும்கூட நீண்ட காலத்துக்குப் புரிந்துகொள்ளவில்லை. உண்மை தெரிய வந்தபோது, நிலைமை கைமீறியிருந்தது. ஒரு தேசம் அங்கே அழிந்துபோயிருந்தது. ஹிட்லர், முஸோலினி வரிசையில் மனித குலத்துக்கு பெரும் நாசம் விளைவித்த சர்வாதிகாரியான இடி அமினின் வாழ்க்கையை உகாண்டாவின் வரலாறோடு சேர்த்தே வழங்கிஇருக்கிறார் ச.ந. கண்ணன்.
-
திருவள்ளுவர்
Rs. 2,490.00or 3 X Rs.830.00 withRead moreஜெயமோகன்
திருவள்ளுவர் யார்? கடலளவு ஆழமும் விரிவும் கொண்ட கேள்வி இது.
இந்து, சைவர், வைணவர், பௌத்தர், சமணர், கிறிஸ்தவர், ஆன்மிகவாதி, வேத விற்பன்னர், வேத மறுப்பாளர், பிராமணர், முற்போக்காளர், பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல அடையாளங்கள் அவருக்கு.
சில ஏடுகளில் வள்ளுவரின் பிறப்பிடம் தேவலோகமாகவும் இன்னும் சிலவற்றில் மயிலாப்பூராகவும் இருக்கிறது. அவர் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்பதையாவது சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவிவிட்டோமா என்றால் அதுவுமில்லை. இருந்தும் பல்கலைக்கழகம், சிலை, கோட்டம், கோயில், விருது, பீடம், மாநாடு அனைத்தும் அமையப் பெற்றவராக வள்ளுவர் திகழ்கிறார். தமிழின் முகமும் தமிழரின் இதயமும் அவரே.
வள்ளுவரையும் குறளையும் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அத்தனை ஆய்வுகளையும், பொருட்படுத்தத்தக்க அத்தனை விவாதங்களையும், அவற்றிலிருந்து உருதிரண்ட அனைத்துக் கருத்துகளையும் மாற்றுக் கருத்துகளையும் இந்நூல் திறன்பட தொகுத்து அளிக்கிறது. பரிமேலழகர், உ.வே.சா, மறைமலையடிகள், அயோத்திதாசர், மு. வரதராசனார், வையாபுரிப் பிள்ளை, கிருபானந்த வாரியார், பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜி.யு. போப், எல்லீஸ், கால்டுவெல் என்று வள்ளுவர் மீதும் குறள் மீதும் அக்கறை கொண்டிருந்த அனைவரும் இந்நூலில் கவனம் பெறுகிறார்கள்.
-
இளையராஜா ஏன் முதல்வர் வேட்பாளர் இல்லை?
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withடி. தருமராஜ்
இளையராஜாவிடமிருந்து தொடங்கும் இந்நூல் சினிமா, சாதி, அதிகாரம் மூன்றும் சந்தித்துக்கொள்ளும் ஒரு மர்மமான புள்ளியில் வேர் பிடித்து, நம் உணர்வு, ரசனை, பண்பாடு, மரபு, நிலம், மொழி, தத்துவம், வரலாறு என்று கிளைகளைப் பரப்பி, விரிந்துகொண்டே செல்கிறது. கிராமமும் நகரமும்; சிறிய பண்பாடும் பெரிய பண்பாடும்; கபாலியும் கரகாட்டமும்; சங்க இலக்கியமும் மேற்கத்திய மொழியியலும்; வன்முறையும் காதலும்; சாதியமும் சினிமாவும் எதிர்பாராத தருணங்களில் சந்தித்துக்கொள்கின்றன. நாம் இதுவரை கேட்டிராத உரையாடல்களை நிகழ்த்துகின்றன.
இந்த அபூர்வ சந்திப்புகளையும் உரையாடல்களையும் கூர்ந்து அவதானித்து பதிவு செய்திருக்கிறார் டி. தருமராஜ். இரண்டு அட்டைகளுக்கு நடுவில் சிக்கிக் கிடக்காமல் உயிர்ப்பெற்று எழுந்து வந்து நம்முன் நிற்கின்றன அவர் எழுத்துகள். இளையராஜாவின் பாடல்கள் போல.
கமல் / Kamal
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreபா. தீனதயாளன்
அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை. கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்தது.
உடைபட்ட ஒவ்வொன்றும் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் கமல் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பின்னால், அவற்றின் வெற்றி, தோல்விகளுக்குப் பின்னால், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் ஆர்வத்தைக் காணலாம். நடிப்பின் இலக்கணத்தை நிர்ணயித்தவர் சிவாஜி என்றால் அதை வெற்றிகரமாக நடைமுறைக்குப் பழக்கியவர் கமல். அதனால்தான், இந்த இருவரையும் பல சமயம் ஒரே நேர் வரிசையில் நிற்க வைத்து பெருமிதம் கொள்கிறது திரையுலகம்.
கமலின் சாதனைகள் அவர் நடிப்பிலோ அவர் பெற்ற விருதுகளிலோ, பாராட்டுகளிலோ அடங்கியிருக்கவில்லை. தமிழ் திரையுலகை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர் கொண்டிருக்கும் ஏக்கத்தில், அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அவர் நெஞ்சுறுதியில் அடங்கியிருக்கிறது.
சிவாஜி, ஜெமினி, சின்னப்பா தேவர் வரிசையில் பா. தீனதயாளனின் அடுத்த விறுவிறுப்பான புத்தகம் இது.
குணங்குடி மஸ்தான் சாஹிப் : இந்திய சூஃபிகள் வரிசை
Rs. 890.00or 3 X Rs.296.67 withRead moreநாகூர் ரூமி
ஜாதி, மதம், நிறம், இனம் தாண்டி மனிதர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும், ஏனெனில் சத்தியம் எல்லோருக்கும் பொதுவானது மட்டுமல்ல, அது என்றும் மதம் கடந்தது என்ற செய்தியை சூஃபிகளின் வாழ்க்கை சொல்லிக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட சூஃபி ஞானிகளில் ஒருவர்தான் குணங்குடி மஸ்தான் சாஹிப்.
முன்னவரும் மூத்தவருமான தக்கலை ஞானி பீரப்பாவைப் போல பாடல்கள் மூலமாக தன் செய்தியைச் சொன்னவர் குணங்குடியார். அவர் ஒரு சித்தர் என்று கருதப்படுவதற்கும் இது முக்கியமான காரணமாக உள்ளது. சாதாரணமாக அவரது பேச்சே பாடலாகத்தான் வந்துள்ளது. தொண்டி என்ற ஊரிலிருந்து அந்தக்கால சென்னையின் காவாந்தோப்பு என்ற பகுதியில் குணங்குடியார் தங்கியதால் அந்தப் பகுதி பின்னாளில் தொண்டியார் பேட்டையாகி பின் ‘தண்டையார் பேட்டை’யாகிவிட்டது!
சத்தியத்தை உணர்ந்து கொள்ளவேண்டும் என்ற தாகம் கொண்ட அனைவருக்கும் குணங்குடியாரின் வாழ்க்கையில் வழிகாட்டும் செய்திகள் நிறைய உண்டு. அதுவும் நாகூர் ரூமியின் கைவண்ணத்தில் என்றால் கேட்கவா வேண்டும்!
ஆபிரஹாம் லிங்கன்: அடிமைகளின் சூரியன்/ Abraham Lincoln: Adimaigalin Sooriyan
Rs. 940.00or 3 X Rs.313.33 withRead moreபாலு சத்யா
ஒரு தேசத்தின் ஜனாதிபதியை உலகம் முழுவதுமுள்ள மக்கள் தங்கள் தலைவராக உரிமை கொண்டாடுவது சரித்திரத்தில் அபூர்வமாகத்தான் நடைபெறும்.
தொடர்ந்து நேசிக்கப்படும், தொடர்ந்து நினைவுகூரப்படும், தொடர்ந்து கொண்டாடப்படும் தலைவராக இன்று வரை நீடிக்கிறார் ஆபிரஹாம் லிங்கன். சிலிர்க்கவைக்கும் வாழ்க்கை வரலாறு.
விறகு வெட்டி, படகோட்டி, பலசரக்குக்கடை ஊழியர், வக்கீல், அமெரிக்க ஜனாதிபதி, உலகத் தலைவர்.
குறைந்தது ஆயிரம் தடைகளைத் தாண்டித்தான் தன் வாழ்வின் ஒவ்வொரு முக்கியக் காலகட்டத்தையும் கடந்து முன்னேறியிருக்கிறார் ஆபிரஹாம் லிங்கன்.
கொஞ்சம் தேங்கியிருந்தாலும் ஒரு தொடர் தோல்வியாளராக மாறியிருக்கவேண்டியவர். திருமண வாழ்வில் தோல்வி, சட்டமன்றத் தேர்தலில் தோல்வி, அத்தனையும் கடந்து ஐம்பது வயதில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மறு விநாடியே, அமெரிக்காவை உலுக்கியெடுத்த உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகிவிட்டது.
தலைக்கு மேலே கத்தி, லிங்கனிடம் தீராத வேட்கையும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் மகத்தான கனவுகளும் இருந்தது. கறுப்பின மக்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கவேண்டும், மக்களுக்காக, மக்களால், மக்களைக் கொண்டு நடத்தப்படும் அரசாங்கத்தை சிருஷ்டிக்கவேண்டும், அமெரிக்கா துண்டுதுண்டாகச் சிதறாமல் ஒரு வலிமையான தேசமாக உருப்பெறவேண்டும்,
லிங்கனின் எளிமையான வாழ்க்கையும், அவர் வெற்றிகொண்ட கடினமான தருணங்களும் சரித்திரத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிட்ட முக்கிய அத்தியாயங்களாகும்.
சரித்திரத்தை மாற்றி எழுதிய ஆபிரஹாம் லிங்கனின் அசாதாரணமான வாழ்க்கையை எளிய, இனிய நடையில் விவரிக்கிறார் பாலு சத்யா.
அக்னிச் சிறகுகள்: சுயசரிதம்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஏ.பி.ஜே.அப்துல் கலாம், அருண் திவாரி
தமிழில்: கவிஞர் புவியரசு
ஒவ்வொரு சாமானியனும் தனது முழு மன உறுதியாலும் கடின உழைப்பாலும் வெற்றியை அடையும் தனது கதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் மற்றவர்கள் தனது கதையில் உத்வேகத்தையும் வலிமையையும் காணலாம். ‘விங்ஸ் ஆஃப் ஃபயர்’ என்பது தொலைநோக்கு விஞ்ஞானி டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் சுயசரிதை ஆகும், அவர் மிகவும் எளிமையான தொடக்கத்தில் இருந்து இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். டாக்டர் கலாமின் நுண்ணறிவுகள், தனிப்பட்ட தருணங்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் நிறைந்த புத்தகம். அது அவருடைய வெற்றிப் பயணத்தைப் பற்றிய புரிதலை நமக்குத் தருகிறது.
நவல் ரவிகாந்த்தின் நாட்குறிப்புகள் (Naval Ravikanthin Naatkurippuhal) The Almanack Of Naval Ravikant
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreஎரிக் ஜோர்கன்சன்
செல்வந்தராக ஆவது என்பது வெறும் அதிர்ஷ்டத்தைப் பற்றியது அல்ல; மகிழ்ச்சி என்பது நாம் பிறக்கும்போது நம்மோடு பிறந்த விஷேச குணம் அல்ல. இந்த அபிலாஷைகள் நம்மால் எட்டப்பட முடியாதவை அல்ல. செல்வத்தை உருவாக்குவதும் மகிழ்ச்சியாக இருப்பதும் கற்றுக் கொள்ளப்படக்கூடிய திறன்களே.
அத்திறன்கள் என்னென்ன? அவற்றை எப்படிக் கற்றுக் கொள்வது? நம்முடைய முயற்சிக்கு வழிகாட்டுகின்ற கொள்கைகள் எவையெவை?
நவல் ரவிகாந்த் ஒரு தொழிலதிபர், ஒரு தத்துவவியலாளர் மற்றும் ஒரு முதலீட்டாளர். செல்வச் சேகரிப்பு மற்றும் மகிழ்ச்சியாக இருத்தல் தொடர்பான தன்னுடைய கொள்கைகளின் மூலமாக உலகின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தவர் அவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் சமூக ஊடகங்கள் மற்றும் பேட்டிகளின் மூலமாகப் பகிர்ந்து கொண்ட ஞானத்தின் தொகுப்புதான் இந்நூல். செல்வத்தையும் மகிழ்ச்சியையும் எப்படி அடைவது என்பதைப் படிப்படியாகக் கற்றுக் கொடுக்கும் ஒரு நூல் அல்ல இது. மாறாக, நீங்கள் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் அடைவதற்கான உங்களுடைய சொந்தப் பாதையை உருவாக்கிக் கொள்வதற்கு அவருடைய வார்த்தைகள் உங்களுக்கு வழிகாட்டும்.
உமர்: செங்கோல் இல்லாமல் கிரீடம் இல்லாமல் ( Umar Sengol Illamal Kireedam Illamal )
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreநூரநாடு ஹனீஃப்
தமிழில்: நிர்மால்யா
ஆட்சியாளன் ஒருவன், செங்கோலின் வலிமையையும் கிரீடத்தின் கம்பீரத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டு, மக்கள் மீதான அன்பு, இறையச்சம், நேர்மை ஆகியவற்றை மட்டுமே தன் அதிகாரங்களாகக் கொண்டு ஆட்சி நடத்தமுடியுமா? முடியும் என்று நிரூபித்தவர் இரண்டாவது கலீஃபாவான உமர்.
முகமது நபியின் கடுமையான எதிரியாக, அவரைக் கொலை செய்யும் வெறியுடன் அலைந்துகொண்டிருந்தவர், முகமதுவை நேரடியாகக் காணும்போது மனம் மாறி, அவருடன் சேர்கிறார். பின் நபியின் அத்தனை போர்களிலும் பங்கேற்கிறார். அவரது மறைவுக்குப் பின், முதலாம் கலீஃபா அபுபக்கரின் பக்கபலமாக இருக்கிறார். ஆட்சி உமரிடம் ஒப்படைக்கப்படும்போது, அவர் களிப்படையவில்லை.
கிழிந்த, ஒட்டுப்போட்ட ஆடைகளையே அணிகிறார். மக்கள் குறையைத் தீர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்கிறார். கஜானாவிலிருந்து தன்னிஷ்டத்துக்குப் பணம் எடுத்துக்கொள்வதில்லை. கலீஃபாவாக, சுல்தானாக அவர் ஆண்ட ராஜ்ஜியம் விரிந்து பரந்திருந்தது. உயிர் பிரியும் நேரத்தில் அவரிடம் இருந்தது கடன்கள் மட்டுமே. தொழுகை நேரத்தில் எதிரி ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு உயிர்விடும் உமர் தன் கொலையாளிக்குக் கருணை கேட்கிறார்.
வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில் மலையாளத்தில் நூறநாடு ஹனீஃபால் எழுதப்பட்ட இந்தப் புதினத்தை நிர்மால்யா தமிழில் மொழிபெயர்த்துள்ளார். புதினம் என்பதற்கு மேலாக, விறுவிறுப்பான நடையில் எழுதப்பட்ட வரலாறாகவே இதனைக் கொள்ளலாம்.
சச்சின் டென்டுல்கர் சுயசரிதை: என் வழி தனி வழி ( Sachin Tendulkar: Playing It My Way Tamil)
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreசச்சின் டென்டுல்கர்
எனது வாழ்க்கை பற்றி எழுதவேண்டும் என்ற முடிவு எடுத்தவுடனேயே நான் நேர்மையாக எழுதவேண்டும் என்பதை அறிந்திருந்தேன். ஏனெனில் நான் அப்படித்தான் எனது ஆட்டத்தை ஆடினேன், இதற்கு முன்பாக நான் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களையும் நான் பேசியாக வேண்டும் என்பதை உணர்ந்திருந்தேன்.
இதோ நான் எனது கடைசி இன்னிங்ஸின் முடிவில் நின்று கொண்டிருக்கிறேன், கடைசியாக பெவிலியன் நோக்கி நடைபோடும் போது முதன் முதலாக கிரிக்கெட் மட்டையை தொட்ட காலம் முதல் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த சுயசரிதை அந்த அடிப்படையில் எழுதப்பட்டதே.
– சச்சின் டென்டுல்கர்
வரம் பெற்ற வாழ்க்கை ( Varam Pettra Vaazhkai )
Rs. 1,290.00or 3 X Rs.430.00 withRead moreநெப்போலியன் ஹில்
தமிழில்: அகிலன் – கபிலன்
நெப்போலியன் ஹில், பல மில்லியன் சிறந்த விற்பனையான திங்க் அண்ட் க்ரோ ரிச் எழுதியவர், தனிப்பட்ட வளர்ச்சி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். அவர் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர் என்று எளிதாகக் கூறலாம்.
இந்த வாழ்க்கை வரலாறு நெப்போலியன் ஹில்லின் பயணத்தை அவரது தாழ்மையான தொடக்கத்திலிருந்து ஆண்ட்ரூ கார்னகி உடனான அவரது புகழ்பெற்ற சந்திப்பு வரை, ஒரு சக்திவாய்ந்த சிந்தனையாளராக மாறுவதற்கான அவரது பயணம் வரை படம்பிடிக்கிறது.
அம்பேத்கரின் உலகம் : தலித் இயக்க உருவாக்கம்
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreஎலினார் ஸெல்லியட்
அம்பேத்கரின் வாழ்க்கை என்பது ஒடுக்கப்பட்ட பெருந்திரளான தலித் மக்களின் வாழ்க்கையும்தான். அம்பேத்கரை அவர் வாழ்ந்த காலகட்டத்தில் பொருத்தி, அவர் அக்கறை செலுத்திய தலித் மக்களோடு இணைத்துப் பார்க்கும்போது மட்டுமே அவரைப் பற்றிய ஒரு முழுமையான சித்திரம் கிடைக்கும். இந்தச் சித்திரத்தைக் கொண்டு இந்தியாவைப் புரிந்துகொள்ள முயலும்போது புதிய பார்வைகளும் கோணங்களும் சாத்தியமாகின்றன.
அம்பேத்கரின் அரசியலையும் மகாராஷ்டிராவின் மகர் இயக்கத்தையும் ஒன்றோடொன்று உரையாடவிட்டு, விரிவாகவும் ஆழமாகவும் அலசி ஆராயும் முதல் ஆய்வு இது. ஒடுக்கப்பட்ட தலித் மக்களின் ஓங்கி ஒலிக்கும் அரசியல் குரலாக அம்பேத்கர் எவ்வாறு மாறினார், இன்றுவரை இந்திய அரசியலின் தவிர்க்கமுடியாத பெரும் சக்தியாக அவர் ஏன் திகழ்கிறார், ஒரு தலித் தலைவராக மட்டும் ஏன் அவரை நாம் குறுக்கிவிடமுடியாது என்பதற்கான காரணங்கள் தெள்ளத்தெளிவாக இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.
ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு
Rs. 1,790.00or 3 X Rs.596.67 withRead moreஆன் ஃப்ராங்க்
தமிழில்: மைதிலி சம்பத்
ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பிற்கு அறிமுகம் தேவையில்லை.
மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில், அழகாக எழுதப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சரித்திரம் இது.எத்தனையோ இடர்பாடுகளை எதிர்த்து போராடியும், உயிர் வாழ விரும்பும் மனிதனின் அழிக்க முடியாத உறுதிக்கு இது ஒரு நிரூபணம். ஆன் ஃப்ராங்க் இரண்டாம் உலகப்போரில் பலியாகி இருப்பினும், அவளுடைய கதையையும், அவள் நாட்குறிப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும் எடுத்துக் கொண்டுள்ள அவள் வார்த்தைகள்,
அவளுடைய நினைவுகளை உலகம் அறிந்து கொள்வதற்காக பல காலமாக உயிருடன் வைத்திருக்கிறது…
போராடுவதே நமது கடமை ( Poraduvathe Namathu Kadamai )
Rs. 1,650.00or 3 X Rs.550.00 withRead moreஃபிடல் காஸ்ட்ரோ
ஆட்சி பணிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும் காஸ்ட்ரோ கட்டிலுக்கு பாரமாக கிடக்கவில்லை…
தனது 90 வயதில் பலத் துறை (உலக) அறிஞர்களை ஒன்று கூட்டி உரையாடுகிறார்…
இயற்கை அதன் பரிணாம வளர்ச்சி போக்கில் பல நூறு கோடி ஆண்டுகளில் உருவாக்கிய செல்வங்களை முதலாளித்துவம் ஒரு நூறாண்டுகளில் அழித்தொழிப்பதை பற்றி பேசுகிறார்கள்…
மனித இனமே அழிந்துவிடும் அபாயம் பற்றி பேசுகிறார்கள்…
ஒற்றை பயிர் விவசாய முறையை பற்றி பேசுகிறார்கள்…
காடுகளின் பன்மை தன்மையை பற்றி பேசுகிறார்கள்…
சமூக ஊடகங்கள் ஐந்தாம் அதிகாரம் என்று பேசுகிறார்கள்…
வளர்ந்து வரும் விழிப்புணர்வை நம்பிக்கையுடன் அலசுகிறார்கள்…
போராடுவது நமது கடமை என்கிறார்கள்…
இயக்கங்களின் தலைவர்கள், ஊழியர்கள் எவர் கவனத்திலிருந்தும் நழுவக்கூடாத நூல்…
ஆண்ட்ரு கார்னகி ( Andrew Carnegie )
Rs. 790.00or 3 X Rs.263.33 withRead moreஆண்ட்ரூ கார்னகி
தமிழில்: பி. உதயகுமார்
ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவின் சுதந்திர சூழலை விரும்பி, அமெரிக்கா வந்த ஒரு சாதனை மனிதனின் வாழ்க்கை வரலாறு இது. 1851 ஆம் ஆண்டில் இரண்டரை டாலர் வார சம்பளத்தில் தொடங்கிய அவரது வெற்றி வாழ்க்கை. படிப்படியாக உலகின் முதல் இரும்பாலை மகாராஜாவாக உயர்ந்தார். ரயில் பெட்டிகள் தயாரிப்பது, இரும்புப் பாலங்கள் கட்டுவது, தண்டவாளங்கள் செய்து அவற்றை நிறுவுதல் என்று, தான் தொழிலில் உயர்ந்தது மட்டுமல்லாது அமெரிக்காவையும் தொழிலில் முன்னேற்றமடைந்த நாடாக உயர்த்திய பெருமையாளர் ஆவார்.
ஆனால் எளிமையானவர்கூட அன்னாரின் சாதனைகளில் சில..
- கார்னகி மெலோன் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்த
- 1885-ஆம் ஆண்டில் 500,000 டாலர்கள் வழங்கி பிட்ஸ்பர் நூலகத்தை சிறப்புற நடத்தியது.
- இதைப்போல்…3000 நூலகங்களை உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவியது.
ஏன் நூலகங்களுக்கு இவ்வளவு முன்னுரிமை? விவரம் நூலில்.
1919-ஆம் ஆண்டில் கார்னகியின் மறைவின் போது, அவர் நேரடியாக வழங்கிய தர்மங்களின் மொத்தத் தொகை 350 கோடி டாலர். இது தவிர தொண்டு நிறுவனங்களுக்கு இவர் வழங்கியது 30 கோடி டாலர்.
இந்நூல் இந்த சாதனை மேதையின் கையால் எழுதப்பெற்ற சுயசரிதம்.
சே குவேரா: வாழ்வும் மரணமும் ( Che Guevara: Vaazhvum Maranamum )
Rs. 7,290.00or 3 X Rs.2,430.00 withRead moreஜோர்ஜ் ஜி. காஸ்டநாடா
சே எந்த இடத்திற்கு உரியவரோ, அந்த இடத்திலேயே அவரைக் காணமுடியும். சமூகத்தின் அடியாழத்தில் படிந்திருக்கும் மண்ணின் ஊடாகப் பரவுகின்ற சமூக எழுச்சிகளின் குறியீடுகளாகவும் பண்பாட்டு அடையாளச் சின்னங்களாகவும் விளங்குபவர்களுக்கு உரிய இடங்கள் அவை. நம்மை விடுவிக்கும் திறன் கொண்டவையாக, இன்று நம் அன்றாட வாழ்க்கையில் இருக்கும் ஒரு சில ஈர்ப்புமிக்க கூறுகளுக்காக இன்று நாம் அறுபதுகளுக்கே கடன்பட்டுள்ளோம். மற்ற யாரைக் காட்டிலும் சேகுவேராதான் இந்த யுகத்தின் மனித வடிவமாகத் திகழ்கிறார்.
சத்திய சோதனை: மகாத்மா காந்தி சுயசரிதை ( Saththiya Sothanai )
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withRead moreமகாத்மா காந்தி
“இந்த உலகத்திற்கு நான் அறிவுறுத்த வேண்டியது எதுவுமில்லை. சத்தியமும் அகிம்சையும் மலைகளைப்போல பழமையானவை.”
“சத்திய சோதனை, என்ற அரிதான, அபூர்வமான சுயசரிதை மகாத்மா காந்தியின் மனத்தின் செயல்பாடுகளை வெளிக்காட்டும் ஒரு சாளரம், பலகணி – அவரது இதய உணர்வுகளை வெளிப்பபடுத்தும் சாளரம் – சாதாரணமாக இருந்த மனிதரை இந்திய நாட்டின் தந்தை என்ற உயர்ந்த நிலைக்கு, உன்னத நிலைக்கு எது உயர்த்தியது என்பதைப் புரிந்து கொள்வதற்கான தெளிவைக்காட்டும் பலகணி.
காந்தி சிறுவராக இருந்த காலத்திலிருந்து தொடங்கி இந்தியாவில் சுதந்திர இயக்கம் அதன் தொடக்க நிலையில் இருந்த காலம் வரையுள்ள அவரது வாழ்க்கையின் நிலைகளைக் காட்டுவது வரை அழைத்துச் சென்று அவரது பரிசோதனைகளையும் மனக்குமுறல்களையும் அவருடைய வாழ்க்கைத் தத்துவத்தை உருவாக்கிய சூழ்நிலைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். குழந்தைத் திருமணம், இங்கிலாந்தில் கல்வி தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில், அங்கே அவரது சத்தியாகிரகம் உள்ளிட்டலை இவற்றுள் அடங்கும்.
அவருக்கு சுயசரிதை எழுதும் நோக்கம் இல்லை. ஆனால் இனவெறி வன்முறை, காலனித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான அவருடைய போராட்டத்தால் முழுமையான சத்தியத்தைத் தேடிய தன்னுடைய சத்திய சோதனை அனுபவங்களை இதில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு ( Ilakkai Ettum Varai Idaividdathu Iyangu )
Rs. 2,190.00Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreகேரென் மெக்ரீடி
தமிழில்: எஸ். ராமன்
இலக்கை எட்டும் வரை இடைவிடாது இயங்கு’ என்னும் இந்த நூல், உலகில் தனி நபர் ஒருவரால் உருவாகிக்கொண்டிருக்கும் மாபெரும் நகரங்களில் ஒன்றான Greater Springfield என்னும் நகரை உருவாக்கி வரும் ஒரு தமிழரின் வாழ்க்கை விண்ணளவு உயர்ந்த கதை. 1992ல் குறைவான முதலீட்டுடன், உறுதியான மனத்தோடு 2860 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகச் சுமாரான நிலத்தை வாங்கினார். அடுத்த இருபது வருட காலத்தில் எண்ணிலடங்கா பின்னடைவுகள், ஏமாற்றங்கள் மற்றும் சவால்களைத் தாண்டி உலகமே வியக்கும் வண்ணம் இன்று மிகப்பெரிய நகரத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.
ஏழ்மை சூழ்ந்த பிறப்பிலிருந்து இந்த அளவிற்கு இவரை உயர்த்தியது சுவாமி விவேகானந்தரின் பத்து கட்டளைகள். இந்தப் பத்து கட்டளைகள் எப்படி மஹாவின் கனவுகளுக்கு உயிரூட்டம் கொடுத்தன?….. படியுங்கள்
ஹிட்லர்: வாழ்வும் அரசியலும் ( Hitler: Vaazhvum Arasiyalum )
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreபா. ராகவன்
விதி, கலை உணர்ச்சியுடன் கட்டமைத்த ஒரு வில்லன், ஹிட்லர். அவரது இனவெறி, பதவி வெறி, மண் வெறி அனைத்துமே தனிப்பட்ட முறையில் அவருக்கு ஏற்பட்ட விரக்திகளாலும் ஏமாற்றங்களாலும் துயரங்களாலும் உருவானவை. அவர் பிறவி அரசியல்வாதி கிடையாது. தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அரசியல்தான் சரி என்று தீர்மானம் செய்து, அதைப் பிழைகளின் வழியாகவே பயின்றவர். பெரிய ராஜதந்திரி எல்லாம் இல்லை. சுண்டி இழுக்கும் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளால் மட்டுமே தனது ஆளுமையைக் கட்டமைத்துக்கொண்டவர்.
உலகுக்கு வெளிப்பட்ட நாள் முதல் மரணம் வரை அதிரடியாகவே ஓடி வாழ்ந்து மறைந்தவர். தமிழில் வெளிவந்திருக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறுகளில் மிக அதிகம் வாசிக்கப்பட்டதும் மிகவும் பாராட்டப்பட்டதும் பா. ராகவனின் இந்தப் புத்தகம்தான். ஹிட்லரின் செயல்பாடுகளில் இருந்த வேகமும் வெறித்தனமும் இந்நூலின் மொழிநடையாக மறு உருவம் கொண்டிருக்கின்றன.
எடிசன்: கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
Rs. 1,450.00or 3 X Rs.483.33 withRead moreஇலந்தை சு. இராமசாமி
99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார். தமது சொந்த சுகம் பற்றிக் கவலைப்படாது தெருவில் படுத்துத் தூங்கினார்.
எடிசனின் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகளில் நான்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம். ஒளிரும் இழை கொண்ட மின்சார விளக்கு; வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் முழுமையான மின் நிறுவனம். கடவுளுக்குப் பிறகு எடிசனால் உலகம் ஒளி பெற்றது.
சிமெண்ட் கலவையுடன் இரும்புக் கம்பிகளைச் சேர்த்து கான்கிரீட் தயாரித்து அதன்மூலம் வேகமாக பலமாடிக் கட்டடங்களைக் கட்டுதல். இன்று தெருவுக்குத் தெரு இந்தியாவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு முன்னோடி எடிசனின் கான்கிரீட் கலவை.
எடிசனின் அற்புதமான கண்டுபிடிப்பு ஃபோனோகிராஃப். பாட்டுப் பாடும் பெட்டி. ஓர் இயந்திரம் நாம் பேசுவதைப் திரும்பிப் பேசும், நல்ல பாடல்களை மீண்டும் மீண்டும் பாடும் என்று யாரால் அன்று யோசித்திருக்க முடியும்? எடிசன் யோசித்தது மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார்.
இன்று உலகிலேயே மிகப்பெரும் பணமும் புகழும் ஈட்டும் கலையாக விளங்கும் சினிமாவுக்குத் தந்தை எடிசன். முதலில் ஊமைப்படங்களை உருவாக்கி, பின் பேசும் படங்களையும் சோதனை முயற்சி மூலம் உருவாக்கினார்.
தந்தி, தொலைபேசியில் பேசு கருவி, பங்குச்சந்தை டிக்கர் கருவி…. ஏன், தானியங்கி வாக்களிக்கும் இயந்திரம் உள்பட எண்ணற்றவற்றைக் கண்டுபிடித்திருக்கும் இந்த மகத்தான மனிதரின் வாழ்க்கையைக் கூர்ந்து படித்தால் நீங்களும் கூட ஒரு கண்டுபிடிப்பாளர் ஆகலாமே?
அமரர் கல்கி
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withRead moreஅனுஷா வெங்கடேஷ்
“பொன்னியின் புதல்வர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்வையும் பணிகளையும் சுவையாகவும் எளிமையாகவும் அறிமுகப்படுத்தும் முக்கியமான நூல். ஓர் ஆளுமை குறித்த சித்திரமாக மட்டுமின்றி அவர் இயங்கிய காலத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஓர் ஆவணமாகவும் இந்நூல் திகழ்வது அதன் சிறப்பு. காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டது, சுதந்தரப் போராட்டத்தில் இணைந்துகொண்டது, பத்திரிகை உலகத்துக்குள் பிரவேசித்தது, புதிய எழுத்துப் பாணியை உருவாக்கியது, படிப்படியாக அந்த உலகின் கதாநாயகனாக மாறியது என்று கல்கியின் வாழ்வில் ஒவ்வொரு அத்தியாயமும் நம்மைத் திகைப்பில் ஆழ்த்துபவை. காலத்தில் என்றென்றும் நிலைத்திருக்கப்போகும் படைப்புகளை அருளியிருக்கும் ஒரு மகத்தான எழுத்தாளரை நெருக்கமாகத் தெரிந்துகொள்ள இந்நூல் உதவும்.”அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withRead moreநிவேதிதா லூயிஸ்
அம்மாக்கண்ணு யார்?
நீலனை ஏன் அவளுக்குப் பிடிக்காது?
அப்படி என்ன செய்துவிட்டான் அந்த நீலன்?
எதற்காக அம்மாக்கண்ணுவையும் அவள் குடும்பத்தையும் பிரிட்டிஷ் அரசு சிறையில் தள்ளவேண்டும்?
அந்தச் சின்னஞ்சிறு குழந்தையைத் தேடி எதற்காகச் சிறைக்கு வந்தார் காந்தி?
இந்திய சுதந்திரப் போராட்டம் பல்லாயிரம் பக்கங்களில் ஏற்கெனவே பதிவுசெய்யப்பட்டுவிட்டது உண்மைதான். ஆனால் அவற்றில் அம்மாக்கண்ணுவின் பெயர் நமக்கு உடனடியாகத் தட்டுப்படப்போவதில்லை. 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பல நல்ல தமிழ் நூல்களைக் கண்டறிந்து அச்சேற்றிய வா.வெ.சாஸ்த்ருலுவும் மறக்கடிக்கப்பட்டவர்தான். வ.உ.சியையே யார் என்று கேட்பவர்கள் இருக்கும்போது, தென்னிந்தியாவின் முதல் பயணிகள் கப்பல் சேவையைத் தொடங்கிய டாக்டர் தனகோடி ராஜுவை யாரேனும் அறிந்து வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கமுடியுமா? தமிழகப் பண்பாட்டு வரலாற்றின் மறைந்த போன பல பக்கங்களுக்கு இந்நூலில் உயிரூட்டியிருக்கிறார் நிவேதிதா லூயிஸ். நம் கவனத்தை ஈர்த்து, நம் சிந்தனைகளைக் கொள்ளை கொள்ளும் பல நிகழ்வுகளும் இதில் சேகரிக்கப்பட்டுள்ளன. அரசியல், சமூகம், பண்பாடு உள்ளிட்ட துறைகளில் ஆர்வமுள்ளவர்களுக்கு இந்நூல் ஒரு சிறு புதையல்.
புலனாய்வாளரின் குறிப்புகள் ( Pulanayvaalarin Kurippugal )
Rs. 590.00or 3 X Rs.196.67 withRead moreலெவ் ஷெய்னின்
தமிழில்: கே. சுப்பிரமணியன், முஹம்மத் செரீஃப்
…பல்வேறுபட்ட பாத்திரங்கள், சிக்கல்கள், துன்ப நிகழ்ச்சிகள் போன்றவற்றோடு புலனாய்வாளர் இடையறாது தொடர்பு கொள்ள நேர்கிறது. மறுநாளே தனது மேசைமீது எத்தகைய வழக்கு வந்து விழும் என்பதை எந்தப் புலனாய்வாளராலும் முன்கூட்டிக் கூற முடியாது. கொள்ளை, பொறாமையால் விளைந்த கொலை, கையாடல், லஞ்சம் என எதைப் பற்றிய வழக்காயினும் சரியே, குற்றம் இழைத்த மனிதர்களே அதில் எல்லாவற்றிலும் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவரவர் சுபாவம், உணர்வெழுச்சி, சூழல் போன்ற ஒவ்வொன்றும் தனித்தனியானவை. புலனாய்வாளர் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒவ்வொரு மனிதனின் உள்ளத்தின் ஆழத்திலும் புகுந்து பார்க்க வேண்டும். ஆகவேதான் ஓர் எழுத்தாளருக்கும் ஒரு புலனாய்வாளருக்கும் இடையே பொதுவானவை அதிகம் இருக்கின்றன…
– லெவ் ஷெய்னின்
மெயின் காம்ஃப் / Mein Kampf
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreஅடால்ஃப் ஹிட்லர்
“Mein Kampf” என்பது அடால்ஃப் ஹிட்லர் 1920 களின் முற்பகுதியில் சிறையில் இருந்த காலத்தில் எழுதிய புத்தகம். ஹிட்லரின் அரசியல் சித்தாந்தம் மற்றும் நம்பிக்கைகள், அவரது தீவிர யூத-விரோதக் கருத்துக்கள், ஆரிய இனத்தின் மேன்மை பற்றிய நம்பிக்கை மற்றும் ஜெர்மனியில் ஒரு சர்வாதிகார அரசை உருவாக்குவதற்கான அவரது விருப்பம் உள்ளிட்டவற்றை புத்தகம் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த புத்தகம் அதன் இனவெறி மற்றும் யூத-விரோத உள்ளடக்கம் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஆட்சி செய்த அட்டூழியங்களுடனான அதன் தொடர்பு காரணமாக மிகவும் சர்ச்சைக்குரிய மற்றும் புண்படுத்தும் படைப்பாக பரவலாகக் கருதப்படுகிறது. இது பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் பொதுவாக வெறுப்பு மற்றும் சகிப்புத்தன்மையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
கிளியோபாட்ரா: இரும்புப் பெண்மணி (Cleopatra)
Rs. 2,390.00or 3 X Rs.796.67 withRead moreஎஸ்.எல்.வி. மூர்த்தி
சர்வவல்லமை பொருந்திய ரோம சாம்ராஜ்ஜியத்தின் முதன்மை நாயகர்கள் ஜூலியஸ் ஸீைைரயும், மார்க் ஆன்ட்டனியையும் தன் சுண்டுவிரலில் சுழற்றியவர் கிளியோபாட்ரா. இதைத் தேசிய அவமானமாக நினைத்த ரோமன் வரலாற்று எழுத்தாளர்கள், உடல் சுவர்ச்சியை மூலதனமாக வைத்துப் பதவியாட்டம் ஆடியவராக அவரைச் சித்தரித்தார்கள். காலம் காலமாகத் தொடரும் இந்தப் பொதுஜன பிம்பத்தை ஆதாரபூர்வமாக எஸ். எல். வி. மூர்த்தி உடைத்தெறிகிறார்.
அவர் நிலைநிறுத்தும் கிளியோபாட்ரா ஒன்பது மொழிகளில் புலமை, கணிதம், வானியல், சோதிடம், மருத்துவம், தத்துவம், ரசவாதம் ஆகிய துறைகளில் தேர்ச்சி, நாடாளும் நிர்வாகத் திறமை, படை நடத்தும் ஆளுமை எனச் சகலகலா வல்லவர். துணிச்சலின் அவதாரம். தன்மானம் பாதிக்கப்பட்ட வேளையில் தயங்காமல் மரணத்தைத் தழுவிய இரும்புப் பெண்மணி.
ஜூயியஸ் ஸீஸர், நெப்போலியன், அலெக்சாண்டர், செங்கிஸ்கான் என எஸ். எல். வி. மூர்த்தி உருவாக்கியிருக்கும் சரித்திர நாயகர்கள் வரலாற்று வரிசையில் ஐந்தாம் படைப்பு. குதிரைப் பாய்ச்சல் நடை. வரிக்குவரி சுவாரஸ்யம்.
பரிசு: உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஈடித் எகர்
“ஈடித் எகரின் கதை என்னை அடியோடு மாற்றிவிட்டது” –ஓப்ரா வின்ஃபிரே
“ஈடித்தின் தனித்துவமான பின்புலம் அவருக்கு அற்புதமான உள்நோக்குகளை வழங்கியுள்ளது. கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய அவருடைய பரிந்துரைகள் மக்களுக்குப் பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன்.” –பில் கேட்ஸ்
8 மாபெரும் சாதனையாளர்களின் பண்புகள்
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withRead moreகேமரூன் சி. டெய்லர்
“அறிவுள்ள உலக உண்மைகள் இந்த புத்தகத்தில் அழகாகப் பரவியுள்ளன. அறுவடைச் சட்டங்களுக்கான ஒரு உண்மையான விளக்கம்”
டா. ஸ்டீபன் ஆர். கவி, அமெரிக்காவின் நம்பர் 1 ஆக விற்பனையாகும், தி 7 ஹேபிட்ஸ் ஆஃப் ஹைலி எஃபெக்டிவ் பீப்பிள் புத்தகத்தை எழுதியுள்ளார்.“வெற்றி, சந்தோஷம், ஆன்மீகம் மற்றும் நிதி சுதத்திரம் சிக்கலானது அல்ல, நான் ஏன் இப்படி நினைக்கிறேன் என்று கேமருன் சி. டெய்லரின் புத்தகத்தை படித்த பின்னர் நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
லூ ஹோல்ட்ஸ், நேஷனல் சேம்பியன் மற்றும் ஹெட் ஃபுட்பால் கோச், நாட்டர்டாம் பல்கலைக்கழகம், 1985-1996“நீங்கள் உங்களது வாழ்க்கையின் நடைமுறைப்படுத்தக்கூடிய காலங்கடந்த உண்மைகள் கொண்ட இது இதமான அற்புதமான புத்தகம்”
பிரெயன் டிரேசி, சிறப்பாக விற்பனையாகும் தி வேட்டு வெல்த் புத்தகத்தின் எழுத்தாளர்“இந்த புத்தகத்தை படிப்பவர்கள் இதில் உள்ள உறுதியான நெறிகளின் செல்வத்தின் மீது செயல்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்!’
ஜான் எம். ஹன்ட்ஸ்மேன் பில்லியனர், ஹன்ட்ஸ்மேன் கார்பரேஷனின் நிறுவனர்“புத்திசாலியான வர்கள் இந்த தகவலை பின்பற்றுவார்கள்!’
வில்லியம் டி. டான்கோ பிஎச்.டி., நம்பர் 1 ஆக விற்பனையாகும் தி மில்லினியர் நெக்ஸ்ட் டோர் புத்தகத்தை எழுதியவர்ஏ. பி. ஜே. அப்துல் கலாம்: ஒரு வாழ்க்கை வரலாறு ( Abdul Kalam – A Life )
Rs. 3,590.00or 3 X Rs.1,196.67 withRead moreஅருண் திவாரி
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. அவரோடு நெருங்கிப் பழகிய நூலாசிரியர், அப்துல் கலாமின் வாழ்க்கையை வெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்காமல், அந்த நிகழ்வுகளின் ஊடே அப்துல்கலாம் விட்டுச் சென்ற வாழ்க்கைப் பார்வையை நூல் முழுவதும் இழையோட விட்டிருக்கிறார். அப்துல்கலாமின் இளமைப் பருவம், ஒரு விமானியாக வேண்டும் என்று அவர் கண்ட கனவு நிறைவேறாமல் போனது, ஆனால் அதற்கும் மேலாக விண்வெளித்துறையில் அவர் சாதித்தவை, குடியரசுத்தலைவரான பின்பு மக்களால் நேசிக்கப்படும் தலைவராக அவர் மாறியது என இந்த வாழ்க்கை வரலாறு விரிகிறது.
எதையும் சாதிக்க வேண்டும் என்ற வேகத்துடன் செயல்பட்ட கலாம், இளைஞர்களுக்குத் துணிச்சல் வேண்டும் என்று விரும்பினார். ” சாத்தியமில்லாதவற்றைக் கண்டுபிடிப்பதற்கான துணிச்சல், பயணிக்கப்பட்டிராத ஒரு பாதையில் பயணிப்பதற்கான துணிச்சல், எட்டப்பட முடியாதவற்றை எட்டுவதற்கான துணிச்சல், பிரச்னைகளைச் சந்தித்து வெற்றி பெறுவதற்கான துணிச்சல்’ ஆகியவை இளைஞர்களுக்கு வேண்டும் என விரும்பிய கலாமின் வாழ்க்கை முழுவதுமே துணிச்சலான செயல்களால் நிரம்பியிருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
கலாமின் வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதன் மூலம், ‘நான் என்ன செய்ய வேண்டும்?’, ‘நான் ஏன் இங்கு இருக்கிறேன்?’, ‘வாழ்க்கை என்பது எதைப் பற்றியது?’, ‘என் வாழ்வின் நோக்கம் என்ன?’ போன்ற தங்களுடைய சொந்தக் கேள்விகளுக்கான விடைகளை வாசகர்கள் தங்களுக்குத் தாங்களே கண்டுபிடித்துக் கொள்வார்கள் என்று முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது உண்மை.
சுபாஷ்: மர்மங்களின் பரம பிதா ( Subash: Marmangalin Parama Pitha )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreமருதன்
இந்திய சுதந்தரப் போராட்டத் தலைவர்களிலேயே அதிகம் சர்ச்சைகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளானவர் சுபாஷ் சந்திரபோஸ். இவரைப் போல் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர் வேறு யாருமில்லை. ஒட்டுமொத்த தேசமும் காந்தியின் தலைமையில் அறவழியில் போராடிக் கொண்டிருந்தபோது, ஆயுதப் போராட்டம்தான் ஒரே தீர்வு என்று, இந்தியாவை விட்டு ரகசியமாக வெளிர்படும் வகையில் வெளிநாட்டில் இருந்த படியே தனி ஆயுதப்படையையும், தனி அரசாங்கத்தையும் அவரால் உருவாக்க முடிந்தது.
போஸ், விமான விபத்தில் இறந்து போனார் என்று பரவலாகச் சொல்கிறார்கள். இல்லை, அவர் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்கிறார்கள் சிலர். சீனாவில் அவரை நேரில் பார்த்துப் பேசியதாகச் சிலர் சாட்சியம் அளித்திருக்கிறார்கள். மாறுவேடத்தில் அவர் இந்தியாவில் சுற்றிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. போஸ் விவகாரத்தை ஆராய அமைக்கப்பட்ட ஒவ்வொரு கமிஷனும், ஒவ்வொரு விதமான முடிவை முன்வைக்கிறது. இந்த நிமிடம் வரை போஸ் ஒரு புதிர். புலப்படாத மர்மம். இந்திய சுதந்தரப் போராட்ட வரலாற்றில் சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை, தீரமும் விடுதலை வேட்கையும் கொண்ட தனி ஒரு பாகம்.