Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
Category
- English Books
- (Auto)Biography & Memoir
- Artificial Intelligence
- Astronomy
- Atheism & Agnosticism
- Biological Sciences
- Business
- Career & Success
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Environment & Nature
- Health & Nutrition
- History
- Humor
- Investment & Strategy
- Linguistics
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mathematics & Physics
- Medicine
- Mental Health
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Oil Politics
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Science
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- Venture Capital
- War
- Women Empowerment
- University Magazine
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- கிளாசிக்ஸ்
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- பங்குச்சந்தை
- பணம்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மன ஆரோக்கியம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
Category: தொழில்முனைவு
Showing 1–9 of 31 results
(PDF) விற்பனைத் திறமையில் அற்புதம் சுருக்கம்
Rs. 499.00Rs. 200.00Add to cartஇந்த நூல் விற்பனையின் அடிப்படைகளைப் பற்றிப் பேசுகிறது – மக்களிடம் எப்படி விற்பது. பொருள்களைப் பற்றிய விவரங்களை எளிதாகப் பெற முடிகின்ற இந்த மின்னணு யுகத்தில், விற்பனைக்காக மக்களை அணுகுதல் என்ற கலை வேறெந்த காலத்தையும் விட இப்போது பொருத்தமாகிறது.
பல மில்லியன் கணக்கில் விற்பனையான ‘ஸ்கில் வித் பீப்பிள்’ போன்ற நூல்களின் ஆசிரியர், எதிர்வரும் சவால்களைக் குறைத்து, உங்கள் விற்பனை வானளாவி உயர்வதற்கு வழிமுறைகள் வழங்குகிறார்.
இது சுருக்கப்பட்ட புத்தகமாகும். விற்பனைத் திறமையில் அற்புதம் புத்தகத்தில் இருந்து சில முக்கியமான கருத்துகளை தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தை ஒவ்வொரு வாசகரும் வாங்குவதற்கு முடியுமான வகையில் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கச் செய்துள்ளோம்.
P.S – விற்பனைத் திறமையில் அற்புதம் புத்தகத்தில் பல முக்கியமான தலைப்புகள் உள்ளன மற்றும் எந்த வகையிலும் இந்த சுருக்கப்பட்ட பதிப்பு அனைத்தையும் உள்ளடக்காது. முழு புத்தகத்தில் இருந்து ஒரு துளி மட்டுமே இந்த சுறுக்கப்பட்ட புத்தகம். உங்களால் முடிந்தால் புத்தகத்தைப் பெற்றுப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்
Rs. 4,690.00Rs. 4,390.00Read moreஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன.
ஆண்ட்ரு கார்னகி
Rs. 840.00Read moreஆண்ட்ரூ கார்னகி
தமிழில்: பி. உதயகுமார்
ஸ்காட்லாந்தில் பிறந்து வளர்ந்து, அமெரிக்காவின் சுதந்திர சூழலை விரும்பி, அமெரிக்கா வந்த ஒரு சாதனை மனிதனின் வாழ்க்கை வரலாறு இது. 1851 ஆம் ஆண்டில் இரண்டரை டாலர் வார சம்பளத்தில் தொடங்கிய அவரது வெற்றி வாழ்க்கை. படிப்படியாக உலகின் முதல் இரும்பாலை மகாராஜாவாக உயர்ந்தார். ரயில் பெட்டிகள் தயாரிப்பது, இரும்புப் பாலங்கள் கட்டுவது, தண்டவாளங்கள் செய்து அவற்றை நிறுவுதல் என்று, தான் தொழிலில் உயர்ந்தது மட்டுமல்லாது அமெரிக்காவையும் தொழிலில் முன்னேற்றமடைந்த நாடாக உயர்த்திய பெருமையாளர் ஆவார்.
ஆனால் எளிமையானவர்கூட அன்னாரின் சாதனைகளில் சில..
- கார்னகி மெலோன் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்த
- 1885-ஆம் ஆண்டில் 500,000 டாலர்கள் வழங்கி பிட்ஸ்பர் நூலகத்தை சிறப்புற நடத்தியது.
- இதைப்போல்…3000 நூலகங்களை உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவியது.
ஏன் நூலகங்களுக்கு இவ்வளவு முன்னுரிமை? விவரம் நூலில்.
1919-ஆம் ஆண்டில் கார்னகியின் மறைவின் போது, அவர் நேரடியாக வழங்கிய தர்மங்களின் மொத்தத் தொகை 350 கோடி டாலர். இது தவிர தொண்டு நிறுவனங்களுக்கு இவர் வழங்கியது 30 கோடி டாலர்.
இந்நூல் இந்த சாதனை மேதையின் கையால் எழுதப்பெற்ற சுயசரிதம்.
எடிசன்: கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்
Rs. 1,190.00Rs. 990.00Read moreஇலந்தை சு. இராமசாமி
99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார். தமது சொந்த சுகம் பற்றிக் கவலைப்படாது தெருவில் படுத்துத் தூங்கினார்.
எடிசனின் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகளில் நான்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம். ஒளிரும் இழை கொண்ட மின்சார விளக்கு; வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் முழுமையான மின் நிறுவனம். கடவுளுக்குப் பிறகு எடிசனால் உலகம் ஒளி பெற்றது.
சிமெண்ட் கலவையுடன் இரும்புக் கம்பிகளைச் சேர்த்து கான்கிரீட் தயாரித்து அதன்மூலம் வேகமாக பலமாடிக் கட்டடங்களைக் கட்டுதல். இன்று தெருவுக்குத் தெரு இந்தியாவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு முன்னோடி எடிசனின் கான்கிரீட் கலவை.
எடிசனின் அற்புதமான கண்டுபிடிப்பு ஃபோனோகிராஃப். பாட்டுப் பாடும் பெட்டி. ஓர் இயந்திரம் நாம் பேசுவதைப் திரும்பிப் பேசும், நல்ல பாடல்களை மீண்டும் மீண்டும் பாடும் என்று யாரால் அன்று யோசித்திருக்க முடியும்? எடிசன் யோசித்தது மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார்.
இன்று உலகிலேயே மிகப்பெரும் பணமும் புகழும் ஈட்டும் கலையாக விளங்கும் சினிமாவுக்குத் தந்தை எடிசன். முதலில் ஊமைப்படங்களை உருவாக்கி, பின் பேசும் படங்களையும் சோதனை முயற்சி மூலம் உருவாக்கினார்.
தந்தி, தொலைபேசியில் பேசு கருவி, பங்குச்சந்தை டிக்கர் கருவி…. ஏன், தானியங்கி வாக்களிக்கும் இயந்திரம் உள்பட எண்ணற்றவற்றைக் கண்டுபிடித்திருக்கும் இந்த மகத்தான மனிதரின் வாழ்க்கையைக் கூர்ந்து படித்தால் நீங்களும் கூட ஒரு கண்டுபிடிப்பாளர் ஆகலாமே?
எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0
Rs. 1,090.00Read moreசோம. வள்ளியப்பன்
அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.
உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.
தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.
சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது.
‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.
கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட்
Rs. 3,790.00Rs. 3,390.00Add to cartராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.”
சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்திரத்தைக் கைவசப்படுத்தக் கற்றுக் கொள்கின்றனர் என்பதைப் பணக்காரத் தந்தையின் கேஷ்ஃபுளோ குவாட்ரன்ட் திரைவிலக்குகிறது.
பின்வரும் கேள்விகளை நீங்கள் உங்களிடம் எப்போதேனும் கேட்டதுண்டா?
• பெரும்பாலான முதலீட்டாளர்களால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படாமல் மட்டுமே பார்த்துக் கொள்ள முடியும்போது, சில முதலீட்டாளர்கள் மட்டும் எப்படி மிகக் குறைவான ஆபத்தை எதிர்கொண்டு அதிகப் பணம் ஈட்டுகின்றனர்?
• சில ஊழியர்கள் தங்களுடைய வேலையைவிட்டு விலகிச் சொந்தமாகத் தொழில் சாம்ராஜ்ஜியங்களைக் கட்டியெழுப்பும்போது, பெரும்பாலான ஊழியர்கள் ஏன் தொடர்ந்து ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலைக்குத் தாவிக் கொண்டே இருக்கின்றனர்?
• தொழில் யுகத்திலிருந்து தகவல் யுகத்திற்கான மாற்றம் உங்கள்மீதும் உங்களுடைய குடும்பத்தின்மீதும் எத்தகைய தாக்கம் ஏற்படுத்தப் போகிறது?
கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்
Rs. 2,290.00Read moreடி. ஹார்வ் எக்கர்
தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி
#1 நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல் & யுஎஸ்ஏ டுடே பத்திரிகைகள் தொகுக்கின்ற விற்பனைப் பட்டியல்களில் முதலிடம்
“உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நம்பி இதை இருப்பதாக எண்ணிக் கொண்டு இந்நூலைப் படியுங்கள். கண்டிப்பாக ஏமாற்றம் ஏற்படாது” –டோனி ராபின்ஸ், ஊக்குவிப்புப் பேச்சாளர்
“காலாகாலத்திற்கும் நிற்கும் விதத்தில் நம்முடைய செல்வ மாளிகையைக் கட்டியெழுப்புவதற்கான வரைபடத்தையும் கருவிகளையும் ஹார்வ் எக்கர் இந்நூலில் நமக்கு வழங்கியுள்ளார்.” –டெனிஸ் வெயிட்லி, நூலாசிரியர்
“எளிதாகக் கடைபிடிக்க முடிகின்ற விதத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கான பைபிள் இது. ஹார்வ் எக்கர், இந்நூலில், பணம் சேர்ப்பது தொடர்பான அனைத்து மாயைகளையும் உடைத்து நொறுக்கி, கோடீஸ்வரர்களின் இரகசியங்களை சாதாரண மனிதர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார். அவற்றை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்:” –ஜில் லுப்லின், நூலாசிரியர்
“இன்று உலகிலுள்ள தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஹார்வ் எக்கரும் ஒருவர். அவருடைய உத்திகள் உங்களை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும்.” –மார்க் விக்டர் ஹான்சன், நூலாசிரியர்
“ஹார்வ் எக்கர் செல்வத்திற்கான இராஜபாட்டையை எளிதாக அமைக்கும் கலையில் வல்லவர். அவருடைய ஆற்றல்மிக்கக் கோட்பாடுகள் இந்த அருமையான நூல் வழியாக நமக்குக் கிடைத்துள்ளன.” –மார்சி சைமாஃப், நூலாசிரியர்
சிந்தனையை ஒருமுகப்படுத்தி செல்வத்தைக் குவியுங்கள்
Rs. 2,190.00Read moreநெப்போலியன் ஹில்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நெப்போலியன் ஹில் 20 வருடங்கள் அயராது பாடுபட்டு, 500க்கும் மேற்பட்ட கோடீஸ்வரர்கள் உட்பட, 2500க்கும் மேற்பட்ட மக்களை நேரடியாகப் பேட்டி கண்டு, அவர்களுடைய வெற்றி மற்றும் செல்வச் செழிப்பின் ரகசியத்தைத் தொகுத்து இம்மகத்தான புத்தகத்தைப் படைத்துள்ளார்.
இப்புத்தகம் வேறு எந்தப் புத்தகத்தைகயும் விட அதிகமான கோடீஸ்வரர்களை உருவாக்கியுள்ளது. நவீன சுயமுன்னேற்றப் புத்தகங்கள் அனைத்திற்கும் மூலாதரமான நூல் இது தான். இதில் இடம் பெற்றுள்ள பல சாதனையாளர்களின் உண்மைக் கதைகள் இந்நூல் முன்வைக்கும் கொள்கைகளுக்கு வலு சேர்க்கின்றன.
சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி: விற்பனையின் உளவியல்
Rs. 2,290.00Read moreபிரயன் டிரேசி
தமிழில்: வானமாமலை
விற்பனை வெற்றிக்கு வழிகாட்டும் 10 முக்கிய குறிப்புகள்
“உங்கள் கனவுகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் விற்பனை வழிமுறைக்கு பின்புலமான உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. இந்தப் பத்தகம் அந்தப் புரிதலுக்கான திறவுகோல்.”
— டாம் ஹாப்கின்ஸ், ஆசிரியர், ஹவ் டு மாஸ்டர் தி ஆர்ட் ஆஃப் செல்லிங்
எந்தச் சந்தையிலும் உங்களின் விற்னையை இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆக்குங்கள்.
நீங்கள் முன்னைவிட அதிகமான, துரிதமான மற்றும் எளிதான விற்பனை செய்ய உடனே பயன்படுத்தக்கூடிய யோசனைகள் வழிமுறைகள் மற்றும் உத்திகளை வழங்குவதே இந்நூலின் நோக்கம்.