Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
Category: உளவியல்
Showing all 22 results
-
பிறரிடம் சகஜமாகப் பேசுவது எப்படி: உரையாடல்களில் ஜொலிப்பதற்கான 92 சின்னஞ்சிறு உத்திகள் ( Piraridam Shajamaagap Pesuvathu Eppadi ) How to Talk to Anyone
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartலீல் லவுன்டெஸ்
தமிழில்: PSV குமாரசாமிவாழ்க்கையில் எல்லாவற்றையும் கைவசப்படுத்தியுள்ள வெற்றியாளர்களைக் கண்டு, அது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது என்று நீங்கள் வியந்ததுண்டா?
வணிகக் கூட்டங்களாகட்டும், சிறு சந்திப்புக்கூட்டங்களாகட்டும், அங்கு அவர்கள் அனைவருடனும் தன்னம்பிக்கையுடன் பேசுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்களைப் போன்ற நபர்கள்தாம் நல்ல வேலைகளையும், சிறப்பான வாழ்க்கைத் துணைவர்களையும், சுவாரசியமான நண்பர்களையும் பெற்றிருக்கின்றனர். அவர்கள் உங்களைவிட அதிக சாமர்த்தியமானவர்களாகவோ அல்லது அதிக வசீகரமானவர்களாகவோ இருப்பதால் அவர்கள் வெற்றியாளர்களாக இருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டியதில்லை.
பிறருடன் கலந்துரையாடுவதற்கும், அவர்களுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்குமான அதிக ஆற்றல்மிக்க ஒரு வழியை அவர்கள் அறிந்துள்ளனர், அவ்வளவுதான்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள உத்திகளில் இவையும் அடங்கும்:
- எடுத்த எடுப்பிலேயே உங்களைப் பற்றிய ஒரு சிறந்த அபிப்பிராயத்தைப் பிறரிடம் தோற்றுவிப்பது எப்படி?
- எந்தவொரு கூட்டத்திலும், அக்கூட்டம் தொடர்பான விஷய ஞானம் உங்களிடம் இருப்பதாகக் காட்டிக் கொள்வது எப்படி?
- உரையாடல்களின்போது எப்போது பிறருடைய அகங்காரத்திற்குத் தீனி போட வேண்டும், எப்போது போடக்கூடாது என்பதை அறிந்து கொள்வது எப்படி?
- உங்களுடைய அலைபேசியை ஒரு சிறந்த கருத்துப் பரிமாற்றக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி?
- உங்கள் முன் இருப்பவர்களை, கைதேர்ந்த ஓர் அரசியல்வாதியைப்போல உங்களுடைய பேச்சால் கட்டிப்போடுவது எப்படி?
-
பணம்சார் உளவியல் ( Panamsar Ulaviyal ) The Psychology of Money
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartமார்கன் ஹெளஸ்ஸேல்
பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
“மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்
“ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்
“மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்
பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.
“பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
-
கனவுகளின் விளக்கம் / Kanavukalin Vilakkam
Rs. 1,150.00or 3 X Rs.383.33 withAdd to cartசிக்மண்ட் பிராய்ட்
தமிழில்: நாகூர் ரூமி
ஒரு புத்தகத்தால் என்ன செய்யமுடியும்? இந்தக் கேள்விக்கு இந்த உலக வரலாறு கொடுத்த பதில் என்ன தெர்யுமா?
இந்த உலகத்தையே மாற்ற முடியும் என்பதுதான்.. ஆமாம். இந்த உலகத்தை மாற்றிய ஐந்து நூல்களில் உளவியல் மேதை சிக்மண்ட் பிராய்டின் ‘கனவுகளின் விளக்கம்’ என்ற நூலும் ஒன்று.
கனவுகள் நம்மை எப்போதுமே வசீகரிப்பவை. ஆனால் அவற்றின் அர்த்தம் புரியாமல் நாம் குழம்பிப் போகிறோம். ஆனால் இனிமேல் அப்படி இருக்க வேண்டியதில்லை. நாகூர் ரூமியின் இந்தத் தமிழாக்கம் உங்கள் கனவுகள் மீது ஒளி பாய்ச்சும்.
உங்கள் கனவுக்கு அர்த்தம் கேட்டு இனி நீங்கள் யாரிடமும் போகவேண்டியதில்லை.
விடைகள் உங்கள் கைகளிலேயே!
படித்துப் பாருங்கள்!
-
மனதெனும் குரங்கை வெல்லுங்கள் / Manathenum Kurangai Vellungal / Master The Mind Monkey Tamil
Rs. 1,590.00or 3 X Rs.530.00 withAdd to cartஆனந்த் பாட்கர்
மனதையும் அது நடத்தும் மாயங்களையும் புரிந்து கொள்ள, மெல்ல மெல்ல, மனதின் ஆழமான, மிக ஆழமான படிகளுக்கு உங்களை அழைத்துச் செல்லும் புத்தகம் மனதெனும் குரங்கை வெல்லுங்கள். (MASTER THE MIND MONKEY). எளிதில் புரிந்து கொள்ள முடியாத உண்மைகளை அது வெளிக் கொணரும் முறை ஒருவருடைய சொந்த வாழ்க்கையிலும் தொழில் நிலைகளிலும் அவைகளை எளிதாக கடைப்படிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நேரடியான மற்றும் தெளிவான உரையாடல் நடை நீங்கள் கடைமுடிவான அறிவாற்றல் எய்துவதை எளிதாக்குகிறது. ஓட்டத்தில் ஒரு இனிமையான மென்மை சொற்களில் இதயத்தைத் தொடும் எளிமை மேலும் வழக்கு சொற்களை விடுத்த வாக்கியங்களில் ஓர் புத்துணர்வு வீசுகிறது.
நீங்கள் எளிமையாகப் புரிந்து கொள்ளத்தக்க அருமையான உதாரணங்களும் நகைச்சுவை கலந்த உபகதைகளும் புத்தகம் முழுவதிலும் நிறைந்துள்ளன. நம்மைப் பாராட்டி சக்தியூட்டுகையில் பொய்ம்மையையும், மனச்சோம்பலையும் பழி சுமத்துவதையும் ஒப்பய பொறுப்பன்மையையும் ஓர் இரக்கபாவத்துடன் சாடுகிறது.
நம்மை மாற்றும் ஒர் தாக்கமுள்ள அனுபவமாக நம்முடைய அறிவாற்றலுக்கும் அதனால் எய்தக்கூடிய நிச்சயமான பலன்களுக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது இந்தப் புத்தகம்.
-
சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
Rs. 3,190.00or 3 X Rs.1,063.33 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.
உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிற்து. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.
-
ஃபிராய்ட் / Freud Tamil
Rs. 2,190.00or 3 X Rs.730.00 withAdd to cartஜோனத்தன் லியர்
தமிழில்: பேரா.ச.வின்சென்ட்மனிதர்கள் தங்களுக்குள் புதைத்து வைத்திருப்பதை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் பணியை நான் மேற்கொண்ட போது…
அவற்றைக் கொண்டு வருவது கனமானது என்று நினைத்தேன்.
மனிதர் யாரும் தங்கள் இரகசியத்தைக் காப்பாற்ற முடியாது என்பதைப் பார்க்க கண்ணுடையோரும், கேட்கச் செவியுடையோரும் உறுதிபடக் கூறுவார்கள்.
ஒருவனுடைய உதடுகள் பேசாவிட்டாலும், அவன் தன் விரல் நுனிகளைக் கொண்டு வாயடிக்கிறான். அவனுடைய ஒவ்வொரு சிறு துளையிலிருந்தும் ஏமாற்றுதல் கசிகிறது. – ஃபிராய்ட்
-
உருவாகும் உள்ளம் / Uruvaahum Ullam / The Emerging Mind Tamil
Rs. 1,090.00or 3 X Rs.363.33 withAdd to cartவிளையனூர் எஸ்.ராமச்சந்திரன்
நோபல் பரிசு பெறுவதற்கு வாய்ப்புள்ள இந்தியர்களில் ஒருவர் எனக் கருதப்படும் விளையனூர் எஸ். ராமச்சந்திரன்
மானுட உள்ளம் என்பது என்ன?
காத்திர உணர்வு என்பது எப்படி உருவாகின்றது?
கலை உணர்வு என்பதற்கான அடிப்படை என்ன?
என்பது போன்ற மானுடம் பன்னெடுங்காலமாக கேட்டு வந்த வினாக்களுக்கு, மூளை நரம்பியல் அடிப்படையில் விளக்கம் அளிக்கின்றார்.
எளிய மொழியில், மெல்லிய நகைச்சுவை இழைந்தோட மானுட வாழ்வின் அடிப்படையான கேள்விகளை அறிவியல் பூர்வமாக அணுகி, அறிவியலுக்கும் சமூகவியலுக்கும் பாலம் அமைக்கிறார் டாக்டர் வி.எஸ். ராமச்சந்திரன்
-
குழந்தை வளர்ப்பு அறிவியல் ( Kulanthai Valarppu Ariviyal )
Rs. 1,550.00or 3 X Rs.516.67 withRead moreஸ்டீவன் ருடால்ப்
குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.
* உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான?மதிப்பெண்கள் பெறுகிறார்களா?
* நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா?
* டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா?
* சொன்ன பேச்சைக் கேட்பதில்லையா?இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் ருடால்ஃப் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார். இந்தியப் பெற்றோர்களுக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனைகளைப் பல்வேறு உண்மை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார். ஸ்டீவன் ருடால்ஃப், பழம் பெருமை மிகுந்த இந்திய வேதங்களில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன நியூரோ சயின்ஸ் வரையில் கல்வி சார்ந்த ஏராளமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஃபரிதாபாத்தில் இருக்கும் ஜீவா இன்ஸ்டிட்யூட்டின் கல்வி இயக்குநராகவும் ஜீவா பள்ளியின் நிறுவனராகவும் இருக்கிறார். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாகக் கல்வித்துறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். அதில் கிடைத்த அறிவையெல்லாம் திரட்டி இந்த நூலில் பத்து விதிகளாக ரத்தினச் சுருக்கமாகத் தந்திருக்கிறார்.
குழந்தைப் பருவத்தில் இருந்து இளம் பருவம் வரையில் குழந்தை வளர்ப்பு தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும்.
-
என் சீஸை நகர்த்தியது யார்?
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஸ்பென்சர் ஜான்சன், எம்.டி.
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
என் சீஸை நகர்த்தியது யார்? ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் எளிய நீதிக்கதை. ஒரு பிரமைக்குள் வாழும் நான்கு கதாபாத்திரங்களின் வேடிக்கையான மற்றும் அறிவொளி தரும் கதை, அவை வளரவும், மகிழ்ச்சியடையவும் சீஸ் தேடுகிறது. ‘சீஸ்’ என்பது ஒரு நல்ல வேலை, அன்பான உறவு, பணம் அல்லது உடைமை, ஆரோக்கியம் அல்லது ஆன்மீக மன அமைதியாக இருந்தாலும், நீங்கள் வாழ்க்கையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதற்கான ஒரு உருவகமாகும்.
-
கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி ( Kavalaiyai Viddolithu Magilchiyaga Vaazhvathu Eppadi ) How to Stop Worrying and Start Living
Rs. 1,890.00or 3 X Rs.630.00 withRead moreடேல் கார்னகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி” இந்த புத்தகம் வாழ்க்கையை மாற்றும். இப்புத்தகம் இடைவிடாத பிரச்சனையான கவலையை பற்றிச் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து பொய்யர்களிலும் பெரும்பாலான நேரங்களில் அது நமது சொந்த பயங்கள் மற்றும் கவலைகள் என்று அது கூறுகிறது. கவலை உங்கள் பிரச்சனைகளை நீக்காது, ஆனால் அது உங்கள் அமைதியை நீக்குகிறது, இது புத்தகத்தின் முக்கிய செய்தி.
கவலையின் பின்னணியில் உள்ள காரணங்களைத் தேடுவதன் மூலம், பல வழக்கு ஆய்வுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர் மிகவும் அறிவியல்பூர்வமாகத் தொடங்குகிறார். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதிலிருந்து வெளியே வர விரும்பினால் கண்டிப்பாக படிக்க வேண்டிய உன்னதமான புத்தகம் இது.
-
ஆண்களின் பூர்வீகம் செவ்வாய் பெண்களின் பூர்வீகம் சுக்கிரன் (Aangalin Poorveeham Sevvai Pengalin Poorveeham Sukkiran)
Rs. 3,090.00or 3 X Rs.1,030.00 withRead moreஜான் கிரே
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
இந்த புத்தகத்தில், ஆசிரியர் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அங்கீகரிப்பதன் மூலம் சிறப்பாக தொடர்புகொள்வதற்கு ஒரு தனித்துவமான, நடைமுறை மற்றும் நிரூபிக்கப்பட்ட வழியை வழங்குகிறார். மோதல்களை எவ்வாறு குறைப்பது என்பது குறித்த நடைமுறை ஆலோசனைகள், துணைவர்களின் நடத்தையை எவ்வாறு விளக்குவது மற்றும் புதிய உறவுகளை ஆக்கிரமிப்பதில் இருந்து உணர்ச்சிகரமான “கடந்த காலத்திலிருந்து குப்பைகளை” தடுக்கும் முறைகள் பற்றிய முக்கியமான தகவல்களுடன், இந்த புத்தகம் ஆழமான மற்றும் திருப்திகரமாக வளர விரும்பும் தம்பதிகளுக்கு ஒரு மதிப்புமிக்க கருவியாகும்.
-
வாழ்க்கை வாழ்வதற்கே! ( Vaazhkai Vaazhvadetke )
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withRead moreமேட் ஹெயிக்
தமிழில்: PSV குமாரசாமி
- Waterstones Book of the Year Nominee (2015)
மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்!
தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மனநோய்கள் தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், நம்முடைய அன்புக்குரியவர்களில் ஒருவரோ அல்லது நம்முடைய நண்பர்களில் ஒருவரோ அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மனத்தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தவர் என்ற முறையில் தன்னுடைய அனுபவங்கள் குறித்த, மேட் ஹெயிக்கின் வெளிப்படையான பேச்சு, மனநோயால் சின்னாபின்னமாகி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டும்; அதன் தீவிரத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருப்பவர்களின் கண்களைத் திறக்கும்.
-
விரும்பப்படாத ஒருவராக இருப்பதக்காண துணிச்சல் (The Courage to be Disliked) (virumbapadaadha oruvaraaha iruppadhatkaana thunichchal)
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withRead moreஇச்சிரோ கிஷிமி, ஃபூமிடாகா கோகா
PSV குமாரசாமி20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளை, இந்த நூல், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வாயிலாக எடுத்துரைக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள தத்துவஞானி, தன்னுடைய மாணாக்கனான அந்த இளைஞனிடம், நம்முடைய கடந்தகாலத் தளைகளிலிருந்தும், பிறர் நம்மிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு எப்படி நம்மால் நம்முடைய சொந்த வருங்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறார். இந்த விதமான சிந்தனை நமக்கு ஒரு விடுதலையுணர்வை அளிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் நாமும் நம்மீது திணிக்கின்ற வரம்பெல்லைகளை அலட்சியம் செய்வதற்கும், நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்குமான துணிச்சலை இந்நூல் நமக்கு அளிக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள கோட்பாடுகள் நடைமுறைக்கு உகந்தவையாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்கள் இந்நூலைப் படித்துப் பயனடைந்துள்ளனர்.
-
கவலை வேண்டாம் ( Don’t Worry )
Rs. 3,090.00or 3 X Rs.1,030.00 withRead moreஷுன்மியோ மசுனோ
தமிழில்: PSV குமாரசாமி
சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தைக் குவிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், தேவையற்றப் பதற்றத்திலிருந்து உங்களை உங்களால் விடுவித்துக் கொள்ள முடியும்; அதோடு, உங்கள் மனமும் அமைதியடையும்.
இப்புத்தகத்திலிருந்து நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
• ஒப்பிடுவதை நீங்கள் நிறுத்தும்போது, உங்களுடைய மாயைகளில் தொண்ணூறு சதவீதம் மாயமாய் மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
• உங்களுடைய உடைமைகளை உதறித் தள்ளுங்கள். அது உங்களுடைய மனத்தையும் உடலையும் லேசாக்கும்.
• அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். தினமும் ஒரு முறையாவது சிறிது நேரம் அசையாமல் நின்று கொண்டிருங்கள்.
• நேர்மறையாக எதிர்வினையாற்றுங்கள். மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்கள்தான்.
• தேவையற்றவற்றைத் தேடித் திரியாதீர்கள்.
• போட்டியிலிருந்து தூரச் செல்லுங்கள், எல்லாம் தானாகவே சரியாகும். -
சின்னஞ்சிறு பழக்கங்கள் Sinnanjiru Palakkangal ( Atomic Habits )
Rs. 2,690.00or 3 X Rs.896.67 withRead moreஜேம்ஸ் கிளியர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கடுகளவு மாற்றங்களை, கற்பனைக்கெட்டா விளைவுகள்.
நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.
-
நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி
Rs. 1,690.00or 3 X Rs.563.33 withRead moreடேல் கார்னகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:
• உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?
• மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?
பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?
உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?
• அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?
கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!
-
மக்களைக் கையாளும் கலை ( Makkalaik Kaiyaalum Kazhai )
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreஆலன் ஃபாக்ஸ்
தமிழில்: குமாரசாமி
- NEW YORK TIMES BESTSELLER!
மற்றவர்களுடன் நன்றாகப் பழகுவதுதான் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் உண்மையான ரகசியம். பல்லாயிரக்கணக்கான வகுப்பறைகளில் நாம் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண்கணிதம் ஆகியவற்றைக் கற்பிக்கிறோம், ஆனால் மனித உறவுகளின் உலகளாவிய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை சோதனை மற்றும் பிழை மூலம் கண்டுபிடிக்க வேண்டும். சோதனை வேதனையானது மற்றும் பிழை விலை உயர்ந்தது.
மக்கள் கருவிகள்: உறவுகளை கட்டியெழுப்புவதற்கான 54 உத்திகள், மகிழ்ச்சியை உருவாக்குதல் மற்றும் செழிப்பைத் தழுவுதல், சிறந்த, மகிழ்ச்சியான, அதிக வெற்றிகரமான வாழ்க்கையை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய நேரம் நிரூபிக்கப்பட்ட நுட்பங்களை வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள தீர்வுகளைத் தேடும் பிஸியான மக்களுக்கு இது சரியான ஆதாரமாகும்.
ஒவ்வொரு பக்கத்திலும் நடைமுறை ஞானம்
-
ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுக்க ( Aarokiyamaana Kulanthaikalai Vazharthedukka )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreடாக்டர் புரூஸ் மில்லர்
தமிழில்: குமாரசாமி
இன்று, குழந்தைகளின் உணவு, அடிப்படையில் புதிய முழு உணவாக இருந்து, அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட, கிரீஸ்-ஊறவைக்கப்பட்ட, இரசாயனத்தால் இயக்கப்படும், சர்க்கரை மற்றும் உப்பு நிரப்பப்பட்ட மற்றும் ஊட்டச்சத்து கேள்விக்குரிய உணவுத் தேர்வுகளுக்கு மாறிவிட்டது. உட்கார்ந்த வாழ்க்கை முறையுடன் இணைந்து, உங்கள் விலைமதிப்பற்ற குழந்தைகள் ஒரு புதிய வாழ்க்கை முறை மற்றும் நீரிழிவு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற உணவு தொடர்பான நோய்களை எதிர்கொள்கிறார்கள், இவை அனைத்தும் கிருமிகளுடன் தொடர்பில்லாதவை.
உங்கள் குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை நீங்கள் கற்பிக்க வேண்டும், நோய்கள் உருவாகும்போது, அது ஒரே இரவில் தொடங்குவதில்லை. தடுப்பு என்பது உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதாகும், அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வரை அல்ல. ஆரோக்கியம் என்பது பணத்தைப் போன்றது, அதை இழக்கும் வரை அதன் மதிப்பைப் பற்றிய உண்மையான எண்ணம் நமக்கு இருக்காது. எளிதில் புரியும் மொழியில், உணவு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடும் பொருட்டு, குழந்தைகளின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் பெற்றோர்கள் இளம் வயதிலேயே மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது; நீங்கள் நோயற்ற குழந்தைகளை வளர்க்க விரும்பினால்.
-
தனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர் ( Thanathu Manaiviyai Thoppiyaaga Ninaiththukonda Manithar )
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஆலிவர் சேக்ஸ்
தமிழில்: பேரா. ச. வின்சென்ட்
‘ஆலிவர் சேக்ஸ் உலகின் மிகப் பிரபலமான நரம்பியல் வல்லுநர். உடைந்துபோன மனங்கள் பற்றிய அவரது நிகழ்வு அறிக்கைகள் நனவுநிலையின் புதிர்களுக்குச் சிறப்பான உள்ளொளி தருகின்றன.’
– கார்டியன்
‘
உள்ளொளியுடன் கருணையுள்ளத்தையும் காட்டுகிறது; மனத்தை நெகிழச்செய்கிறது… திறமைமிக்க கதை சொல்லியின் தெளிவுடனும் ஆற்றலுடனும் இந்த வரலாறுகளைத் தருகிறார்… மருத்துவம் தொடர்பான நூலில் இது ஒரு மகத்தான படைப்பு.’
– நியூ யார்க் டைம்ஸ்
இந்த அபூர்வமான புத்தகத்தில் டாக்டர் ஆலிவர் சேக்ஸ் நரம்புச் சீர்குலைவின் விசித்திரமான உலகத்தில் தங்களைச் சமாளித்துக்கொள்ளப்போராடும் நோயாளிகளின் கதையைச் சொல்கிறார். இவை நினைத்துப் பார்க்கமுடியாதவாறு விநோதமாக இருக்கின்றன; ஒளிமிக்க இக்கதைகள் மனிதராக இருப்பதன் பொருள் என்ன என்பதை வெளிச்சமிட்டுக்காட்டுகின்றன.
-
பரிசு: உங்கள் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான 12 பாடங்கள்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreஈடித் எகர்
“ஈடித் எகரின் கதை என்னை அடியோடு மாற்றிவிட்டது” –ஓப்ரா வின்ஃபிரே
“ஈடித்தின் தனித்துவமான பின்புலம் அவருக்கு அற்புதமான உள்நோக்குகளை வழங்கியுள்ளது. கடினமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய அவருடைய பரிந்துரைகள் மக்களுக்குப் பெரிதும் உதவும் என்று நான் நம்புகிறேன்.” –பில் கேட்ஸ்
-
அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள் ( Athikamaha Sinthippathai Niruthungal ) Stop Overthinking Tamil
Rs. 1,850.00or 3 X Rs.616.67 withRead moreநிக் டிரென்டன்
தமிழில்: PSV குமாரசாமி
நீங்களே சுயமாக உருவாக்கிக் கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக் கொண்டு வெளியேறுங்கள்! அதிகமாகச் சிந்திப்பதும், முடிவில்லா எண்ணச் சுழலுக்குள் சிக்கிக் கொள்வதும்தான் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள். உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும், பதற்றம் மற்றும் மனஅழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்கள் மனத்தின்மீதான கட்டுப்பாட்டை இழக்கிறீர்கள் என்பதை இந்நூலாசிரியர் நிக் டிரென்டன் புரிந்து வைத்துள்ளார்.
உங்களுடைய மூளையை மீள்உருவாக்கம் செய்வதற்கும், உங்களுடைய எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும், உங்களுடைய மனப் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை நிக் இதில் விளக்குகிறார். அவற்றில் கீழ்க்கண்ட விஷயங்களும் அடங்கும்:
- எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி
- உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி
- ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி
- மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி
- மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி
- உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி
-
காதலில் இருந்து திருமணம் வரை ( Kadhalil Irunthu Thirumanam Varai )
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreசோம வள்ளியப்பன்
கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக் கனவு, கவலை, பயம் மூன்றும் நியாயமானதே. காரணம், திருமணம் என்பது வாழ்நாள் கமிட்மெண்ட். அடித்து எழுதுவதற்கும் திருத்தி மாற்றுவதற்கும் இங்கே இடமில்லை. அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவசியம் பூமிக்கு இறங்கி வரவேண்டியிருக்கிறது.
காரணம், நாம் வாழப்போவது இங்கேதான். எனவே, நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும். உங்கள் திருமணத்துக்கு நீங்கள் பெறப்போகும் பரிசுகளில் முதன்மையானது இதுவே