Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: தத்துவஞானம்

Showing all 13 results

 • ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் ( Zennum Motor Cycle Paramarippu Kazhaiyum )

  Rs. 2,690.00
  or 3 X Rs.896.67 with

  ராபர்ட் எம். பிர்சிக்

  தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் மற்றும் பேரா.ச.வின்சென்ட்

   

  ராபர்ட் மேனார்ட் பிர்சிக், மினஸோட்டாவில் உள்ள மினியபோலிஸில் 1928ல் பிறந்தவர். இவர் ஓர் எழுத்தாளர், மற்றும் தத்துவவாதி. ஒன்பது வயதில் இவருடைய ஐ.க்யூ. 170ஆக இருந்ததாலிவர் பல வகுப்புகள் படிக்காமல் 1943ல் உயர்நிலைக்கல்வி பட்டயம் பெற்றார். இந்தியாவில் உள்ள ப்னாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் கிழக்கத்திய தத்துவம் மற்றும் பண்பாடு பற்றி படிக்க வந்தவர் பட்டம் பெறாமலேயே இந்தியாவை விட்டுச் சென்றார்.

   

  அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1974ஆம் ஆண்டு இவருடைய முதல் புத்தகமான ‘ஜென்னும் மோட்டார் சைக்கிள் பராமரிப்புக் கலையும் – பண்புகள் பற்றிய விசாரணை’ வெளியானது. இன்று வரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல லட்சம் பிரதிகள் விற்பனையாகி இருக்கின்றன.

  or 3 X Rs. 896.67 with Koko Koko
  Add to cart
 • Kamaththilirundhu Kadavulukku Flashbookslk

  காமத்திலிருந்து கடவுளுக்கு

  Rs. 4,390.00
  or 3 X Rs.1,463.33 with

  ஓஷோ

   

  சிற்றின்பத்தில் இருந்து மனிதனை பிரிக்கமுடியாது என்பது மற்றொரு முக்கியமான கருத்து. காமம்தான் ஆரம்ப இடம்: மனிதன் அதில்தான் பிறந்துள்ளான். கடவுள் காமத்தைத்தான் படைப்பின் ஆரம்ப நிலையாக ஏற்படுத்தியுள்ளார். | கடவுளேகூட பாவச் செயல் என்று கருதாத ஒன்றை மிகப்பெரும் மனிதர்கள் பாவச்செயல் என்றழைக்கின்றனர். கடவுள் காமத்தை ஒரு பாவச்செயலாக கருதியிருப்பாரேயாகில் இந்த உலகில் கடவுளைத் தவிர மிகப்பெரிய பாவி வேறு யாரும் இருக்க முடியாது: இந்த பிரபஞ்சத்திலிலேயே அவரைவிட மிகப்பெரிய பாவி இருக்க முடியாது…”

  or 3 X Rs. 1,463.33 with Koko Koko
  Add to cart
 • தத்துவத்தின் தொடக்கங்கள் / Thathuvathin Thodakangal

  Rs. 1,190.00
  or 3 X Rs.396.67 with

  தேவிபிரசாத் சட்டோபாத்யாயா

  தமிழில்: இரா சிசுபாலன்

   

  தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்களே உன்னத இடம் பிடிக்கின்றன கருத்து முதல்வாதம், பொருள் முதல்வாதம் என்ற இரு தத்துவங்கள் பிரதானமானவை இந்த இரு தத்துவ கோட்பாடுகள் இந்திய மண்ணில் எப்படி இருந்திருக்கின்றன என நிறுவுவதே இந்த புத்தகத்தின் சாரம்.

   

  தத்துவ உலகில் கிரேக்க தத்துவங்கள் அறிமுகமாவதற்கு முன்பே இந்திய தத்துவங்கள் எப்படி கோலோச்சி இருக்கின்றன என்பதை யக்ஞவல்கியர், உத்தாலகர், புத்தர் போன்ற பொருள் முதல்வாதிகளின் தத்துவங்களை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்..

   

  இந்தியா பொருள் முதல்வாத தத்துவங்களின் நாடு என இந்த நூல் சொல்கிறது இந்திய தத்துவ மரபிற்கு ஒரு கொடையாகவே இந்த நூல் பார்க்கபடுகிறது..

  or 3 X Rs. 396.67 with Koko Koko
  Add to cart
 • மகிழ்ச்சியாக இருப்பதற்கான துணிச்சல் ( Magilchiyaaga Iruppathatkaana Thunichal ) The Courage To Be Happy

  Rs. 3,190.00
  or 3 X Rs.1,063.33 with

  இச்சிரோ கிஷிமி and ஃபூமிடாகா கோகா

    தமிழில்: PSV குமாரசாமி

   

  • சர்வதேச அளவில் விற்பனையில் சக்கைப்போடு போட்டிருந்த ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ என்ற நூலின் தொடர்ச்சி இது.

   

  நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படிப்பட்ட முறையில் வாழ வேண்டும் என்பதற்கான ஆழமான முன்னோக்குகளை இந்நூல் எளிமையான முறையில் எடுத்துரைக்கிறது. ‘விரும்பப்படாத ஒருவராக இருப்பதற்கான துணிச்சல்’ நூலைப் போலவே இந்நூலும், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வடிவில் அமைந்திருக்கிறது. மகிழ்ச்சியான, மனநிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கான சூட்சமம், 20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளில் மறைந்துள்ளது என்று இதில் வருகின்ற தத்துவஞானி நம்புகிறார்.

   

  ஆனால், அவரோடு மல்லுக்கு நிற்கின்ற இளைஞனோ, வெறுமனே உங்களுடைய சிந்தனையை மாற்றுவதன் மூலம் உங்களால் உங்களுடைய வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று வாதிடுகிறான். அந்தத் தத்துவஞானி பொறுமையாக, அட்லருடைய “துணிச்சலின் உளவியலின்” சாராம்சத்தை விளக்கி, மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அடைவதற்குத் தேவைப்படுகின்ற படிப்படியான வழிமுறைகளையும், அந்த மாற்றங்கள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற விதத்தில் எத்தகைய பிரம்மாண்டமான நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் எடுத்துரைக்கிறார்.

   

  இது உண்மையிலேயே ஒருவருடைய வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றக்கூடிய சக்தியைக் கொண்டிருக்கின்ற ஓர் படைப்பாகும். இது அனைத்து விதமான பின்புலங்களைக் கொண்டிருப்பவர்களுக்கும் பொருத்தமாக இருப்பது இதன் தனிச்சிறப்பு.

  or 3 X Rs. 1,063.33 with Koko Koko
  Add to cart
 • ரசவாதி ( Rasavathi ) The Alchemist

  Rs. 2,690.00
  or 3 X Rs.896.67 with

  பாலோ கொயலோ

   

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  உங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவதைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை

   

   

  • Grand Prix des lectrices de Elle for roman (1995)
  • Premio Grinzane Cavour for Narrativa Straniera (1996)
  • Corine Internationaler Buchpreis for Belletristik (2002)
  • 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்

   

  “ஒருவரின் விதியை நிறைவேற்றுவதற்கான தேடல்.” அந்தோனி ராபின்ஸ்

   

  “உலகளாவிய ஞானத்தின் ஒரு தொழில்முனைவோர் கதை, நம் சொந்த வாழ்க்கையின் வணிகத்திற்கு நாம் உபயோகிக்கலாம்.” ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி

   

  “இது என் முழு வாழ்க்கையையும் மாற்றியது. என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சதி செய்த அனைத்து மக்களையும் நான் உணர்ந்தேன். ஃபாரல் வில்லியம்ஸ், இசைக்கலைஞர்

   

  or 3 X Rs. 896.67 with Koko Koko
  Add to cart
 • Out of Stock

  பித்தன் The Prophet (Piththan)

  Rs. 850.00
  or 3 X Rs.283.33 with

  கலீல் ஜிப்ரான்

   

  கலீல் கிப்ரான்( Kahlil Gibran ) – என்ற ஞானி லெபனான் நாட்டவர். இவர் 1882 இல் பிறந்து 1931 இல் மறைந்தவர். இவருடைய தாய்மொழி அரபி. ஆனால், ஆங்கில மொழியிலும் சிறந்த புலமை உடையவர், ”THE PROPHET” என்னும் மிகச் சிறந்த நூலை இவர் ஆங்கிலத்தில் இயற்றினார். இதை ஸ்ரீஅருண்  தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். மூலநூலின் சாரம் பெரும்பாலும் இத் தமிழாக்கத்தின் மூலம் தமிழிலும் இறங்கி விட்டது என்று சொல்லலாம்.

  or 3 X Rs. 283.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பேசும் அமைதி ( Stillness Speaks )

  Rs. 790.00
  or 3 X Rs.263.33 with

  எக்கார்ட் டோலே
  ந. முரளிதரன்

   

  எக்கார்ட் டோலே, ‘இப்போழுது’ மற்றும் ‘இப்பொழுதின் சக்தியைப் பயன்படுத்துதல்’ என்ற இரண்டு நூல்களின் ஆசிரியர். இந்த இரண்டு தமிழ் வாசகர்களின் மிகுந்த பாராட்டைப் பெற்றவை ! உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பெற்றவை. இந்நூலில் நமக்கு உள்ளே இருக்கும் அமைதியினைத் தொடர்பு கொள்கிறபோது, மனநிலைக் கடந்து செல்கிறோம். அங்கே ஒர் ஆழமான அமைதி கிடைக்கிறது

  or 3 X Rs. 263.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  மிர்தாதின் புத்தகம் ( The Book of Mirdad )

  Rs. 1,690.00
  or 3 X Rs.563.33 with

  மிகெய்ல் நைமி

   

  உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது “மிர்தாதின் புத்தகம்!”

   

  இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகமிது…
  மிகுந்த தனிச்சிறப்புக் கொண்டது!

   

  நீண்ட நெடிய காலத்திற்குப் பிறகு, மாபெரும் வகையில்

  உருவாக்கப்பட்டுள்ள, மிகச் சிறந்த நூல் இது!

   

  பல்லாயிரம் முறை படிக்க வேண்டிய

  தகுதி படைத்த புத்தகம்!

   

  நைமி, இந்த நூற்றாண்டின் மாபெரும் எழுத்தாளர்

  மட்டுமல்லர். எல்லா நூற்றாண்டுகளிலும் இவரே

  மாபெரும் எழுத்தாளர்!

   

  நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன்.

  எதுவுமே இதற்கு ஈடாகாது!

   

  ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய

  விலை மதிக்க முடியாத புத்தகம் இது!
    —– ஓஷோ

  or 3 X Rs. 563.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  வெற்றிக்கு ஏழு ஆன்மீக விதிகள்

  Rs. 490.00
  or 3 X Rs.163.33 with

  தீபக் சோப்ரா

  தமிழில்: M. சீனிவாசன்

   

  இதை வெற்றியுள்ள வாழ்க்கைக்கு ஏழு ஆன்மிக வழிகள் என்றும் சொல்லலாம். ஏனென்னறால் இந்த விதிகளை வைத்துத்தான் இயற்கை ஒவ்வொரு ஸ்தூலப் பொருளையும் உருவாக்கி இருக்கிறது. வாழ்க்கையில் நீடித்து நிற்கும் சந்தோஷத்தையே வெற்றி என்று விளக்கமாக கூறலாம். அர்த்த புஷ்டியான இலக்குகளை தொடர்ந்து அடைந்து கொண்டிருப்பதையே வாழ்க்கையின் வெற்றி என்று விளக்கலாம். வெற்றிக்கு எத்தனயோ முகங்கள் உண்டு. பொருட்செல்வம் என்பது அவற்றுள் ஒன்றுதான். அத்துடன் நில்லாமல், வெற்றி என்பது ஒரு பிரயாணம். ஒரு முடிவு எல்லையல்ல. அல்லது நாம் அடைந்து விடும் முடிவான இடம் அல்ல. புத்தகங்களோ கணக்கிலடங்காதவை. காலம் மிகக்குறுகியது. ஆகவே எது மிகவும் முக்கியமோ அதை உடனே எடுத்துக் கொள்வதுதான் அறிவின் ரகசியம். அதை எடுத்துக் கொண்டு அதன்படி வாழ முயற்சியுங்கள்.

  or 3 X Rs. 163.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  எனக்குப் பிடித்த புத்தகங்கள் / Enakku Pidiththa Puthakangal

  Rs. 1,690.00
  or 3 X Rs.563.33 with

  ஓஷோ
  தமிழில்: ம்.ச. ஆனந்த்

   

  ஒரு மிகச் சிறந்த புத்தகம் ஒரு மிகச் சிறந்த தருணத்தில் எழுதப் பெற்றது. ஓஷோவால் பேசப்பெற்று 600 நூல்களாக மாற்றம் பெற்றது. அவர் மிகவும் விரும்பிய 168 நூல்கள் பற்றி எனக்குப் பிடித்த புத்தகங்களில் ஓஷோ சொல்கிறார்.

   

  என்ன ஒரு ஞாபக சக்தி!! என்ன ஒரு கவனம்!!

   

  தன்னைப் பாதித்த எழுத்தாளர்களைப் பற்றியும் நம்மைப் பாதிக்கும் எழுத்தாளர்களையும் அவர்களது நூல்களையும் நமக்கு அளிக்கிறார். உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள ஞானிகளையும் நீட்சே போன்ற மேற்கத்திய தத்துவ அறிஞர்களையும் அவர்களது நூல்களையும் உங்கள் ஞானக்கண் முன் கொண்டு வருகிறார்.

  or 3 X Rs. 563.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  தாயம் ( Thaayam )

  Rs. 1,990.00
  or 3 X Rs.663.33 with

  மஹாத்ரயா ரா

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  இது மஹாத்ரயா எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கடிதமும், வாழ்க்கை, வேலை, சூழல்கள் மற்றும் மனப்போக்குகள் தொடர்பான பல ஆழ்ந்த பிரதிபலிப்புகளை வெளிப்படுத்துகின்றன. எளிய படிப்பினைகள் மற்றும் கொள்கைகள், நடைமுறைக்குகந்த யோசனைகள் ஆகியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

   

  இதில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைபிடித்தால், வாழ்க்கை மன நிறைவுடையதாக இருக்கும், சவாலான சூழல்களைச் சந்திப்பது சுலபமானதாக இருக்கும். ஓர் அகரீதியான முரண்பாடு, ஓர் உறவுச் சிக்கல், தொழில்ரீதியான ஓர் இக்கட்டான நிலை, ஒரு திட்ட மதிப்பீடு, நேர நிர்வாகப் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இங்கு தீர்வுகள் இருக்கின்றன.
  :”எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் விரியுங்கள். தேடுபவனுக்கு அங்கு ஒரு விடை காத்துக் கொண்டிருக்கும்.”
  ‘தாயம்’ என்ற இந்நூலில் தங்களுக்கான விடையை பலர் கண்டுபிடித்துள்ளனர்.

   

  வெற்றி பெரிய பெரிய விஷயங்களில் இருக்கிறது.

  மகிழ்ச்சி சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது.

  தியானம் வெறுமையில் இருக்கிறது.

  கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார்.

  அதுதான் வாழ்க்கை.

   

  “குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. நான் பல புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் ‘தாயம்’ புத்தகம்தான் நான் படித்ததிலேயே மிக அருமையான புத்தகம்.” –ஆர். சி. லஹோட்டி, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

   

  “…மிகப் பெரிய விஷயங்கள் இவ்வளவு எளிய வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு பக்கமும் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீங்கள் வெற்றிகரமானவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதை நீங்கள் படிக்கும்போது சிறப்பாக உணர்வீர்கள். அறிவுப் பொக்கிஷமாக, அக ஒளி வழிகாட்டியாகத் திகழும் இந்நூல்தான் என் இதயத்தைத் தொட்ட ஒரே ஆன்மீகப் புத்தகம். நான் இதைப் பற்றி எண்ணற்றோரிடம் பேசியிருக்கிறேன்.” — சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் மற்றும் பாடகர்

  or 3 X Rs. 663.33 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழமைகள்

  Rs. 1,950.00
  or 3 X Rs.650.00 with

  மிட்ச் ஆல்பம்

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  ‘மிகவும் அருமையாக எழுதப்பட்டுள்ள இந்நூல், வாழ்க்கையின் சிக்கல்களைக் கடந்த எளிமையையும் ஞானத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது.”
  –எம். ஸ்காட் பெக், எம்.டி. நூலாசிரியர்

   

  இந்நூல் ஒரு வியத்தகு பொக்கிஷம். இறப்பு நிச்சயம் என்ற உணர்வு நம்முடைய மாபெரும் ஆசானாகவும் ஞானத்தின் மூலாதாரமாகவும் திகழ்கிறது. இந்நூலைப் படித்து முடித்ததும் நான் சிரித்தேன், பிறகு அழுதேன். என்னுடைய குழந்தைகளுக்காக நான் உடனடியாக இதன் ஐந்து பிரதிகளை வாங்கினேன்.”
  –பெர்னி எஸ். சீகல், எம்.டி, நூலாசிரியர்

   

  “அருமையான, இதயத்தை நெகிழ வைக்கின்ற இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் தயக்கமில்லாத அன்பின் கதகதப்பால் ஒளிர்கிறது.”
  –யூத மதகுரு ஹெரால்டு குஷ்னர், நூலாசிரியர்

   

  “தன்னுடைய வழிகாட்டியின்மீது அன்பைப் பொழிகின்ற ஒரு மனிதனின் கதை இது. வாழ்க்கைக்குச் செறிவூட்டுகின்ற ஒப்புயர்வில்லா நேர்மை இதில் இழையோடுகிறது.”
  –ராபர்ட் பிளை, நூலாசிரியர்

   

  “மிட்ச் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து பெற்ற ஓர் அற்புதமான பரிசை, இந்நூலின் வாயிலாக ஒரு வழிகாட்டியாகவும், ஒரு நமக்கும் வழங்குகிறார். மனிதாபிமானியாகவும், ஓர் ஆன்மிகவாதியாகவும் விளங்கிய பேராசிரியர் மோரி, வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதற்கு ஒரு முழுநீள வகுப்பை நடத்தியுள்ளார்.”
  — ஏமி டேன் நூலாசிரியர்

   

  “நெஞ்சைக் கொள்ளை கொள்ளும் விதத்திலும் துடிப்புடனும் எழுதப்பட்டுள்ள இந்நூல், அன்பு மற்றும் இரக்கத்தின் ஊடாக ஒருவரோடு ஒருவர் ஒரு பிணைப்பை உருவாக்கிக் கொள்வதுதான் மிக முக்கியமான வாழ்க்கைப் பாடம் என்பதில் பேராசிரியர் மோரி கொண்டிருந்த ஆணித்தரமான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அப்பாடத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டிருப்பதன் மூலம் மிட்ச் தன்னுடைய குருவுக்கு ஒரு மாபெரும் பரிசை வழங்கியுள்ளார்.”
  –டாக்டர் ஜேன் கிரீர் நூலாசிரியர்

   

  “சில சமயங்களில், நீங்கள் உங்களைச் சுற்றிலும் உங்கள் பார்வையை மீண்டும் ஒரு முறை ஓடவிட்டால், நாமெல்லாம் தேவதைகளின் நடுவே இருப்பதை உங்களால் கண்டுகொள்ள முடியும். தன்னுடைய சொந்த இறப்பை எதிர்கொண்டிருக்கின்ற அதே நேரத்தில், எப்படி வாழ வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்க மோரி போன்ற ஒரு மனிதரால்தான் முடியும். அவர் ஒரு ஞானி என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலைப் படித்து முடித்தப் பிறகு, வகுப்பு இன்னும் முடியவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.”
  –ஜெஃப் டேனியல்ஸ்

  or 3 X Rs. 650.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  நிறைவான வாழ்க்கைக்கான நான்கு சுயஉடன்படிக்கைகள் (Niraivaana Vazkaikana Naangu Suya Udanpadikkaihal)

  Rs. 1,290.00
  or 3 X Rs.430.00 with

  டான் மிகெல் ரூஸ்

  தமிழில்: PSV குமாரசாமி

   

  40 மொழிகளில் 60 லட்சம் பிரதிகள் விற்றுச் சாதனை படைத்துள்ள, உலகப் பிரசித்தி பெற்ற நூல்.

   

  “டான் மிகெல் ரூஸின் புத்தகம் தனிமனித சுதந்திரம் மற்றும் சுயவிழிப்புணர்வுக்கான சிறந்த வழிகாட்டி.”
  –டாக்டர் தீபக் சோப்ரா, சர்வதேசப் புகழ்பெற்ற நூலாசரியர், பேச்சாளர்

   

  “ஏராளமான படிப்பினைகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மிகச் சிறந்த ஊக்குவிப்புப் புத்தகம்.”
  –வெயின் டயர், பிரபல நூலாசிரியர், ஊக்குவிப்புப் பேச்சாளர்

   

  “கார்லோஸ் காஸ்டனேடாவின் பாரம்பரிய வழியில் டோல்டெக் ஞானத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் மக்களுக்குக் கொண்டு செல்வதில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் டான் மிகெல்.”
  –டேன் மில்மேன்,புகழ்பெற்ற சுயமுன்னேற்றப் புத்தக நூலாசிரியர்

  or 3 X Rs. 430.00 with Koko Koko
  Read more