Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: தொழில்நுட்பம் & எதிர்காலம்

Showing all 9 results

  • Sale!
    Aatraliyal Inrum Naliyum flashbooks.lk

    [RARE] ஆற்றலியல் இன்றும் நாளையும் (Energy today and Tomorrow)

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    வி.அ . கிரீலின்

    தமிழில் கி. பரமேஸ்வரன்

     

    இந்நூலில், புகழ்பெற்ற சோவியத்து விஞ்ஞானியும் சோவியத்து விஞ்ஞானப் பேரவை உறுப்பினருமான வி. அ. கிரீலின் அவர்கள் 20 ஆம் நூற்றாண்டில் ஆற்றலியல் வளர்ந்த விதம், வெப்ப ஆற்றல், நீராற்றல், அணு ஆற்றல் போன்றவற்றிலிருந்து மின்னாற்றலைச் சேமித் துவைத்தல், மின்னாற்றலை ஓரிடத்திலிருந்து இன்னொரிடத்திற்கு அனுப்புதல் போன்றவற்றை எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார். மேலும் அவர் நாளைய ஆற்றலியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். இந்நூல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Add to cart
  • Out of Stock

    இஸ்ரோவின் கதை : வியப்பூட்டும் விண்வெளிப் பாய்ச்சல்

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    ஹரிஹரசுதன் தங்கவேலு

     

    இது இஸ்ரோவின் கதை. இது நம் தேசத்தின் கதை. நாம் ஒவ்வொருவரும் நம் இதயத்தில் பெருமிதத்தோடு ஏந்தி, கொண்டாடவேண்டிய ஒரு கதை. சோற்றுக்கே வழி இல்லாத ஒரு நாட்டுக்கு ஆகாயக் கனவுகளெல்லாம் தேவைதானா என்று இகழ்ந்தவர்கள் அனைவரும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போன கதையும்கூட. ஆனால், விண்வெளி, ராக்கெட், சாட்டிலைட், சந்திரயான் போன்றவற்றையெல்லாம் எல்லோரும் புரிந்துகொள்ள முடியுமா என்றொரு சந்தேகம் உங்களுக்குத் தோன்றினால் அதை முற்றாகக் களைந்துவிட்டு இதைப் படிக்க ஆரம்பியுங்கள். இதைவிடவும் சுவையான நடையில், இதைவிடவும் எளிமையாக இஸ்ரோவின் கதையை வேறு யாராலும் சொல்லிவிடமுடியாது.

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    மொசாட்: இஸ்ரேலிய இரகசியப் புலனாய்வு அமைப்பின் வீரதீர சாகசங்கள் (Mossad Tamil)

    Rs. 4,290.00
    or 3 X Rs.1,430.00 with

    மைக்கேல் பார்-ஜோகர் & நிசிம் நிஷால்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    இஸ்ரேலின் இரகசியப் பாதுகாப்பு அமைப்பான ‘மொசாட்’தான் உலகிலேயே தலைசிறந்த புலனாய்வு அமைப்பு என்பது பெரும்பாலானோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள ஓர் உண்மையாகும். அந்த அமைப்பின் அறுபதாண்டுகால வரலாற்றில், அந்த அமைப்பின் உறுப்பினர்கள் தங்கள் உயிர்களைப் பணயம் வைத்து மேற்கொண்ட, மிகவும் ஆபத்தான, நம்புதற்கரிய, மயிர்க்கூச்செறிய வைக்கின்ற பல்வேறு வகைப்பட்ட நடவடிக்கைகளை அப்படியே தத்ரூபமாக விவரிக்கின்ற இந்நூல், அவை தொடர்பாகத் திரைக்குப் பின்னால் நிகழ்ந்த சம்பவங்களையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது.

     

    கொடூரமான நாஜி கொலைகாரன் அடால்ஃப் ஐக்மேனின் கடத்தலில் தொடங்கி, சமீபத்தில் நிகழ்ந்த முக்கிய ஈரானிய அணுசக்தி அறிவியலறிஞர்களின் களையெடுப்புவரை, இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ள, அசாத்தியமான உண்மைக் கதைகள், ஹாலிவுட் திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகின்ற அதிரடி சாகசக் கதைகளை விஞ்சி நிற்கின்றன. சர்வதேச உளவு, இரகசியப் புலனாய்வு, திரைமறைவுப் போர்கள் போன்றவை உங்களுக்குக் குதூகலமும் பிரமிப்பும் ஊட்டும் என்றால், இப்புத்தகம் உங்கள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் என்பது உறுதி.

    or 3 X Rs. 1,430.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

    Rs. 2,690.00
    or 3 X Rs.896.67 with

    தரம்பால்
    பி. ஆர். மகாதேவன்

     

    காலனியம் விடைபெற்றுச் சென்று பல ஆண்டுகள் கழிந்த பிறகும் அதன் தாக்கம் இன்றுவரை இங்கே செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஊடகங்களிலும் காலனியப் புனைவுகளே வரலாறாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன.
     
    இந்தப் பின்னணியில் தரம்பாலின் ஆய்வுகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. 18-ம் நூற்றாண்டு இந்தியா உண்மையில் எப்படி இருந்தது என்பதை பிரிட்டிஷார் ஆவணங்களில் இருந்து தரம்பால் வெளிப்படுத்தும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.
     

    · வானவியலில் மிகப் பழங்காலத்திலேயே மகத்தான சாதனைகள் படைத்தவர்கள் இந்தியர்கள்.
     
    · கிரேக்கர்களைவிடவும் இந்துக்கள் அல்ஜீப்ராவில் சிறந்து விளங்கி இருக்கின்றனர்.
     
    · இந்துஸ்தானின் எஃகு ஐரோப்பிய எஃகைவிட மிக உயர் தரத்தில் இருந்திருக்கிறது.
     
    · இந்திய இரும்புத் தொழிலின் எளிமை, சிக்கனம், செய் நேர்த்தி, உயர் தரம் ஆகியவை
    அன்றைய ஐரோப்பியத் தொழில் நுட்பத்தைவிட மேலானதாக இருந்திருக்கிறது.
     
    · இந்துஸ்தானின் விதைக் கலப்பை தொழில்நுட்பமானது ஐரோப்பிய கலப்பைத்
    தொழில்நுட்பத்தைவிடச் சிறந்தது .
     
    · அம்மை நோய்க்கான இந்திய தடுப்பு சிகிச்சை முறையின் மருத்துவ அறிவியல் அம்சங்கள்,
    உணவுப் பத்தியம் ஆகியவை பிரிட்டிஷாரின் மருத்துவத்தைவிட மிகச் சிறந்ததாக
    இருந்திருக்கிறது.

    or 3 X Rs. 896.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள் (21 Aam Nutraanditkaana 21 Paadangal)

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    யுவால் நோவா ஹராரி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நம்முடைய இனத்தை ஒருங்கிணைப்பதற்காக நாம் கட்டுக் கதைகளை உருவாக்கினோம்.  நம்மை சக்திமிக்கவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நாம் இயற்கையை அடிபணிய வைத்தோம்.  நம்முடைய விநோதமான கனவுகளை நனவாக்குவதற்காக உயிரினங்களை இப்போது நாம் மறுவடிவமைப்பு செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் நாம் யார் என்பதை இனியும் நாம் அறிந்திருக்கிறோமா? அல்லது நம்முடைய கண்டுபிடிப்புகள் நம்மை உதவாக்கரைகளாக ஆக்கிவிடப் போகின்றவா?

     

    இன்று நம்முடைய இனத்தைப் பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற, இது போன்ற மிக முக்கியமான பிரச்சனைகளின் ஊடாக ஒரு சாகசப் பயணத்தில் யுவால் நோவா ஹராரி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச்செல்கிறார்.  நம்மை நிலைதடுமாறச் செய்கின்ற தொடர்ச்சியான மாற்றத்தை இன்று நாம் எதிர்கொண்டுள்ள நிலையில்,  தனிப்பட்ட முறையிலும் கூட்டாகவும் நம்முடைய கவனத்தைத் தக்கவைத்துக் கொள்வது ஒரு மாபெரும் சவாலாக இருக்கிறது. நாம் உருவாக்கிவைத்துள்ள உலகத்தைப் புரிந்து கொள்வதற்கான திறன் இனியும் நமக்கு இருக்கிறதா?.

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    சர்வைவா ( Surviva )

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    அதிஷா

     

    ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல’ என்பதற்கேற்ப, புதிய புதிய மாற்றங்கள்தாம் பழைய பூமியை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளன. கற்களை உரசி ஆதி மனிதன் கண்டுபிடித்த நெருப்பில் இருந்து தொடங்கிய புதிய கண்டுபிடிப்பு தாகம் மனித இனத்துக்கு இன்னும் தணியவே இல்லை. அப்படி மனிதன் கண்டுபிடித்த மின்சாரமும் தகவல் தொழில்நுட்பமும் பூமியின் முகத்தையே மாற்றின. அயல் கிரக ஆராய்ச்சிகள், நானோ, ரோபோ என மனிதனின் தொழில்நுட்பத் தேடல்கள் பல வகைகளில் பல தளங்களில் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இப்போது உலக நாடுகள் எல்லாம் பல துறைகளில் பயன்படுத்த, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தீவிரம் காட்டிக்கொண்டிருக்கின்றன.
     

    புதிய புதிய தொழில்நுட்பங்கள் பற்றி ‘சர்வைவா’ எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் டெக்னோ தொடர் கட்டுரைகள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றன. அவற்றின் தொகுப்பு நூல் இது! ‘தொழில்நுட்பங்கள் மனிதனைக் கடவுள்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. கடவுளைப்போன்ற சக்திகளை நாம் பெறத்தொடங்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட சக்தியை வைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம் என்கிற கேள்வியில்தான் இருக்கிறது நம் எதிர்காலம்’ என்று நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப்போல, மாற்றங்களை ஏற்றுக்கொள்வது அவசியம் என்றாலும் அந்த மாற்றங்களால் மனித குலம் செழிக்கவேண்டும், பூமியில் அமைதி பூக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] நெஞ்சை ஈர்க்கும் வானவியல் ( Nenjai Eerkum Vaanaviyal ) This Fascinating Astronomy

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    வி. கொமரோவ்

    தமிழில்: ஏ. நடராஜன்

     

    இந்நூல் இயற்பியல் மற்றும் வானியல் தத்துவங்களை அலசி ஆராய்கிறது. பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ளத் துடிக்கும் அறிவியல் ஆர்வலர்கள் ஊன்றிப் படிக்க வேண்டிய விவரங்கள் ஏராளம் உண்டு. வானியலில் ஆர்வம் உள்ளவர்கள் இதைப் படிக்கும் போது நாமும் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். படிக்கும் ஒவ்வொருவரும் வானியலின் பிரமாண்டத்தை உணர முடியும். வானியல் மற்றும் இயற்பியலாளர்களின் கொள்கைகள் எவ்வாறு பரிணாமம் பெற்று வளர்ந்து வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கேற்ற அற்புதமான நூல்.

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    [RARE] மகிழ்வூட்டும் மின்னணுவியல் (Entertaining Electronics)

    Rs. 2,190.00
    or 3 X Rs.730.00 with

    இ . செடோவ்

    தமிழ் எஸ் . சுந்தர சீனிவாசன்

     

    * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

    இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

    ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

     

     

    or 3 X Rs. 730.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் ( Aazhamaana Kelvikal Arivarntha bathilkal )

    Rs. 2,990.00
    or 3 X Rs.996.67 with

    ஸ்டீபன் ஹாக்கிங்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொடர்பான ஆழமான கேள்விகளுக்குத் தன்னுடைய அறிவார்ந்த கருத்துக்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

     

    பிரபஞ்சத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை விரிவுபடுத்தவும், அதன் மாபெரும் புதிர்கள் சிலவற்றை முடிச்சவிழ்க்கவும் ஹாக்கிங் தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார். கருந்துளைகள், காலநேரம், பிரபஞ்சத்தின் துவக்கம் ஆகியவற்றைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள் விண்வெளிக்கு அப்பால் அவருடைய மனத்தைக் கூட்டிச் சென்றபோதிலும், பூமியின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணுவதில் அறிவியல் ஓர் இன்றியமையாத பங்காற்றுவதாக அவர் நம்பினார். அதனால், பருவநிலை மாற்றம், அணுவாயுதப் போர் குறித்த அச்சுறுத்தல், அதிக ஆற்றல் படைத்தச் செயற்கை நுண்ணறிவு போன்ற, மனிதகுலத்தைத் தற்போது அச்சுறுத்திக் கொண்டிருக்கும் அவசரமான விவகாரங்களை நோக்கி ஹாக்கிங் தன் கவனத்தைத் திருப்புகிறார்.

    or 3 X Rs. 996.67 with Koko Koko
    Read more