Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: அரசியல்

Showing all 6 results

 • மூலதனம் ( Mooladhanam ) Das Capital (3 பாகங்கள்)

  Rs. 20,790.00
  or 3 X Rs.6,930.00 with

  கார்ல் மார்க்ஸ்

   

  “நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமாகவே நடைபெறும். இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கவேண்டிய அவசியமும், ஓரளவு சீராக நடைபெற்று வரும் கட்சி விவகாரங்களைக் கவனிப்பதற்கு குளிர்கால மாதங்களை, குறிப்பாக, ஆண்டின் முதல் மூன்று மாதங்களை ஒதுக்கிக் கொள்ளுமாறு என்னை நிர்ப்பந்தித்துள்ளன.

   

  பொதுவாக, ஒரு மனிதனின் வயது எழுபதைத் தாண்டியிருக்கும் போது, அவனது மூளையின் மெய்னெர்ட் இணைப்பு நரம்புகள் எரிச்சலூட்டக் கூடிய அளவில் மதமதப்புடன் செயல்படுகின்றன. இந்நிலையில், கையாளுவதற்குக் கடினமான மெய்யியல் சிக்கல்களில் அவ்வப்போது ஏற்படும் தடங்கல்களை அவன் முன்போல சுலபமாகவும் துரிதமாகவும் சமாளிப்பதில்லை. ஆகவே, ஒரு குளிர்காலத்தில் முடிக்கப்பட வேண்டிய பணி எதிர்பார்த்தபடி பூர்த்தியாகாவிட்டால், அடுத்த குளிர்காலத்தில் அதே பணியை பெரும்பாலும் புதிதாகத் தொடங்க வேண்டிய நிலைமையே ஏற்பட்டது.

   

  மூலதனம் நூலில் மிகமிகக் கடினமான ஐந்தாம் பகுதியைப் பதிப்பிப்பதில் நடந்தது இதுவே!”

   -எங்கெல்ஸ் முன்னுரையிலிருந்து

  or 3 X Rs. 6,930.00 with Koko Koko
  Add to cart
 • Sale!
  Out of Stock

  சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு ( Sapiens Tamil )

  Rs. 4,490.00
  or 3 X Rs.1,496.67 with

  யுவால் நோவா ஹராரி

  தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

   

  மனிதகுல வரலாறு குறித்த ஒரு சுவாரசியமான பதிவு இந்தூல். இதை படிக்கத் தொடங்கிவிடடால் கீழே வைக்கவே மனம் வராது” — பிBல் கேட்ஸ்

   

  சுவாரஸ்யமான மற்றும் ஆர்வத்தைத்துாண்டும் … இந்த பூமியில் நாங்கள் எவ்வளவு சுருக்கமான காலம் இருந்தோம் என்பதை இது உங்களுக்கு உணர்த்துகிறது – பBராக் ஒபாமா

   

  முதலிலிருந்து இருந்து கடைசி வரை ஆச்சர்யமூட்டும் … நான் படித்த சிறந்த புத்தகம் இதுவாக இருக்கலாம்- கிறிஸ் எவன்ஸ்

   

  வரலாறு மற்றும் நவீன உலகின் மிகப்பெரிய கேள்விகளைக் கையாளுகிறது … மறக்க முடியாத தெளிவான மொழியில் எழுதப்பட்டது – ஜாரெட் டயமண்ட்

   

  திடுக்கிடும் … இது உலகை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது – சைமன் மாயோ

   

  நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று … நம் இனங்கள் எவ்வாறு வளர்ந்தன என்பதைப் பற்றிய சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது – லில்லி கோல்

   

  உங்கள் மூளையிலிருந்து சக்தியையும் தெளிவையும் வெளிப்படுத்துகிறது, உலகத்தை விசித்திரமாகவும் புதியதாகவும் ஆக்குகிறது – சண்டே டைம்ஸ்

   

  சேபியன்ஸ் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படட சிந்தனைகளுக்கு மாற்றமாக மற்றும் ஆச்சரியமான உண்மைகளால் நிரம்பியுள்ளது. இந்த புதிரான, புராணத்தை உடைக்கும் புத்தகத்தை எந்த விவரத்திலும் சுருக்கமாகச் சொல்ல முடியாது; நீங்கள் அதை படிக்க வேண்டும் – ஜான் கிரே – பைfனான்சியல் டைம்ஸ்

  or 3 X Rs. 1,496.67 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  [RARE] விஞ்ஞான கம்யூனிசம் என்றால் என்ன? (Vinjaana Communism enral enna?)

  Rs. 990.00
  or 3 X Rs.330.00 with

  எல். செலிஸ்னியோவ்
  வி. ஃபிதிசவ்

   

  * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

  இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

  ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

  or 3 X Rs. 330.00 with Koko Koko
  Read more
 • Sale!
  Out of Stock

  [RARE] சோஷலிசம் என்றால் என்ன? ( Socialism Enral Enna? )

  Rs. 990.00
  or 3 X Rs.330.00 with

  டி. கிளிமேன்தியெவ்
  தி. வசீலியெவா

   

  * 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.

  இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.

  ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.

  or 3 X Rs. 330.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  பயங்கரவாதம்: நேற்று – இன்று – நாளை ( Payangaravaatham Nettru Inru Naalai )

  Rs. 1,890.00
  or 3 X Rs.630.00 with

  பி. ராமன்

   

  இன்றைய உலகம் எதிர்கொள்ளும் சவால்களுள் முக்கியமானது, பயங்கரவாதம். இன்னொரு 9/11 நடைபெறாமல் தடுக்க வேண்டுமானால், பயங்கரவாத நிகழ்வுகளை எதிர்பார்க்கவும், அதனை எதிர்கொள்ளவும் நம்மை நன்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இனம், கருத்தியல், மதம் போன்ற காரணங்களுக்காகப் பயங்கரவாத வழிமுறையைத் தேர்வு செய்தது அந்தக் காலம். இன்று, புதிய வகை பயங்கரவாதிகள் சாத்தியமுள்ள அத்தனை வழிகளையும் பயன்படுத்தி பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

   

  இவர்கள் ஜிஹாதி பயங்கரவாதிகள் என்றழைக்கப்படுகின்றனர். மனிதர்களைக் கொல்வது மட்டுமல்லாமல், பொருளாதார, தொழில்நுட்ப, சமூகக் கட்டமைப்புகளையும் இவர்கள் சீர்குலைக்கின்றனர். மத உரிமை, சமூகக் கடமை என்றெல்லாம் மயக்கும்படி பேசி, இளைஞர்களை இவர்கள் ஈர்க்கிறார்கள். மதத்தையும் அதன் லட்சியங்களையும் பாதுகாக்கிறோம் என்னும் பெயரில், நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி அப்பாவி சிவிலியன்களைக் கொல்கிறார்கள். பயங்கரவாதத்தின் வேர்களையும் கிளைகளையும் தேடிச் செல்லும் இந்நூல் இந்தியாவின் தலையாயப் பிரச்னையான மாவோயிஸ்டுகள் தொடங்கி உலகளவில் அச்சுறுத்தல் ஏற்படுத்திவரும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் வரை அனைத்தையும் நுணுக்கமாக ஆராய்கிறது.

  or 3 X Rs. 630.00 with Koko Koko
  Read more
 • Out of Stock

  நெல்சன் மண்டேலா ( Nelson Mandela )

  Rs. 1,790.00
  or 3 X Rs.596.67 with

  தா.பாண்டியன்

   

  நெல்சன் மண்டேலாவின் வாழ்க்கை வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறன்று. ஒரு நாட்டின் வரலாறுகூட அன்று. மனித சமுதாயத்தின் நீண்ட வாழ்வில்,இன, நிறவெறி ஆதிக்கத்தினர் தம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்ள நடத்திய போரின் இறுதி அத்தியாயம்: உண்மையான மனிதநேயவாதிகள் கறுப்பு மாநிறம், வெள்ளை என்ற நிறம் கடந்து நின்று எதிர்த்துப் போராடி வென்ற வரலாறு. கவிதை வடிவில் காவியமாகப் படைக்கப்படும் பரிமாணம் கொண்டது.

   

  திரு. பா.பாண்டியன் அவர்கள் நல்ல தமிழில், எளிய நடையில், ஒரு வரலாற்று இலக்கியத்தைப் படைதிருக்கிறார். தமிழகம் வரவேற்கும்; படித்துப் பயன்பெறும்.

  or 3 X Rs. 596.67 with Koko Koko
  Read more