Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: ஆரோக்கியம்

Showing all 7 results

  • இக்கிகய்

    Rs. 2,790.00

    ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

     

    ஒருநீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்!

     

    எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையை விட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
    உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை.  அவசரப் போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து,  உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும்.
    இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள்.

    Read more
  • உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி

    Rs. 1,690.00

    டாக்டர் ஜோஸப் மர்ஃபி

    தமிழில்: மாலதி கிருஷ்ணா

     

    உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மத்திரையில் படமாகப் பதியவைத்தால், உங்களால உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிறைந்துள்ள இப்புத்தகம், உங்களது ஆழ்மன சக்தியை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்தரைக்கிறது.

    Read more
  • காதல் மொழிகள் ஐந்து

    Rs. 2,390.00

    கேரி சேப்மேன்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது. உங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பேசக் கற்றுக் கொண்டு அவரிடம் பேசிப் பாருங்கள், உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வீசத் துவங்குவதைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள்!

    Read more
  • சக்தி (இரகசியம் #2) (Colour)

    Rs. 3,490.00

    ரோன்டா பைர்ன்

     

    நீங்கள் நினைப்பதை விட வாழ்க்கை வாழ்வதற்கு எளிதானதுதான். உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் சக்தியையும், வாழ்க்கை செயல்படும் விதத்தையும் நீகாள் புரிந்துகொள்ளும்போது வாழ்வின் மாயாஜாலத்தை நீங்கள் முழுமையாக அனுபவிப்பீர்கள்.அப்போது நீங்கள் ஓர் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள்.இக்கணத்தில் இருந்து உங்கள் வாழ்வின் அற்புதங்கள் அரங்கேறட்டும்.

    Read more
  • தொலையுணர்வு: ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் அதிசய

    Rs. 2,390.00

    டாக்டர் ஜோஸப் மர்ஃபி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்தச் சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.

    அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரச்சினைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுக்குள் இருக்கின்ற அசாதாரணமான சக்திகளை உடனடியாக முடுக்கிவிடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும்.

    Read more
  • நிரந்தர வெற்றிக்கு வழிவகுக்கும் சுயபேச்சு: உங்களுக்கு நீங்களே பேசிக் கொள்ளும்போது என்ன சொல்ல வேண்டும்?

    Rs. 1,390.00

    ஷாட் ஹெம்ஸ்டெட்டர், பிஹெச்.டி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நீங்கள் யார் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அவர்தான் நீங்கள்

     

    இப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள எளிய, நடைமுறைக்கு உகந்த சுயபேச்சு உத்திகள், உங்கள் வாழ்க்கைமீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்கவும் உங்கள் கனவுகளை நனவாக்கவும் உதவும்.

     

    தகவல்களை நமது மூளை எவ்வாறு பெறுகிறது, எப்படி அவற்றை ஏற்றுக் கொள்கிறது என்பது குறித்த நவீன அறிவியல் அடிப்படையில் கொள்கைகளின் அமைந்த ஒன்றுதான் சுயபேச்சு. இதில் கூறப்பட்டுள்ள புரட்சிகரமான உத்தியை உபயோகித்து, உங்கள் மூளையில் ஏற்கனவே பதிவாகியுள்ள எதிர்மறைப் பதிவுகளை ஒட்டுமொத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டு, அந்த இடத்தில் ஒரு துடிப்பான, நேர்மறையான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளத் தேவையான தகவல்களை எப்படி அரியணை ஏற்றலாம் என்பதை இப்புத்தகம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

    Read more
  • நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி: நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு

    Rs. 1,490.00

    நார்மன் வின்சென்ட் பீல்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.

    Read more

Cart

Your Cart is Empty

Back To Shop