Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: உத்வேகம் & ஊக்கம்

Showing all 6 results

  • இச்சிகோ இச்சியே

    Rs. 2,590.00

    ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர்

    Read more
  • உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க

    Rs. 2,790.00

    ஜான் சி. மேக்ஸ்வெல்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நீங்கள்  ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு?  இல்லை! நிச்சயமாக இல்லை!

     

    ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும்.  அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும்.  அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன்.  இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால்  – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.

    Read more
  • Free Shipping
    In Stock

    கூட்டு விளைவு: உங்கள் வருமானத்தையும் உங்கள் வாழ்க்கையையும் உங்கள் வெற்றியையும் முடுக்கிவிடுங்கள்

    Rs. 2,390.00

    டேரன் ஹார்டி

    தமிழில்: PSV குமாரசாமி

     

    “நீங்கள் நினைத்துள்ளதைக் காட்டிலும் மேலான வெற்றியைச் சாதிப்பதற்குத் தேவையான யோசனைகளின் தங்கச் சுரங்கமாக இந்தூல் விளங்குகிறது”
    – பிரையன் டிரேசி, ‘விண்ணளவு சாதனை’ நூலின் ஆசிரியர், ஊக்குவிப்புப் பேச்சாளர்

    Add to cart
  • கோடீஸ்வரர்களின் சிந்தனை இரகசியங்கள்

    Rs. 2,290.00

    டி. ஹார்வ் எக்கர்

    தமிழில்: பி. எஸ். வி. குமாரசாமி

     

    #1 நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்டிரீட் ஜர்னல் & யுஎஸ்ஏ டுடே பத்திரிகைகள் தொகுக்கின்ற விற்பனைப் பட்டியல்களில் முதலிடம்

     

    “உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையும் நம்பி இதை இருப்பதாக எண்ணிக் கொண்டு இந்நூலைப் படியுங்கள். கண்டிப்பாக ஏமாற்றம் ஏற்படாது” –டோனி ராபின்ஸ், ஊக்குவிப்புப் பேச்சாளர்

     

    “காலாகாலத்திற்கும் நிற்கும் விதத்தில் நம்முடைய செல்வ மாளிகையைக் கட்டியெழுப்புவதற்கான வரைபடத்தையும் கருவிகளையும் ஹார்வ் எக்கர் இந்நூலில் நமக்கு வழங்கியுள்ளார்.” –டெனிஸ் வெயிட்லி, நூலாசிரியர்

     

    “எளிதாகக் கடைபிடிக்க முடிகின்ற விதத்தில் செல்வத்தை உருவாக்குவதற்கான பைபிள் இது. ஹார்வ் எக்கர், இந்நூலில், பணம் சேர்ப்பது தொடர்பான அனைத்து மாயைகளையும் உடைத்து நொறுக்கி, கோடீஸ்வரர்களின் இரகசியங்களை சாதாரண மனிதர்களுக்குக் கொண்டு சேர்க்கிறார். அவற்றை உடும்புப்பிடியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்:” –ஜில் லுப்லின், நூலாசிரியர்

     

    “இன்று உலகிலுள்ள தலைசிறந்த பயிற்றுவிப்பாளர்களில் ஹார்வ் எக்கரும் ஒருவர். அவருடைய உத்திகள் உங்களை ஒட்டுமொத்தமாக மாற்றிவிடும்.” –மார்க் விக்டர் ஹான்சன், நூலாசிரியர்

     

    “ஹார்வ் எக்கர் செல்வத்திற்கான இராஜபாட்டையை எளிதாக அமைக்கும் கலையில் வல்லவர். அவருடைய ஆற்றல்மிக்கக் கோட்பாடுகள் இந்த அருமையான நூல் வழியாக நமக்குக் கிடைத்துள்ளன.” –மார்சி சைமாஃப், நூலாசிரியர்

    Read more
  • செல்வபுரிக்கான விரைவுப் பாதை: செல்வத்தைக் குவிப்பதற்கான புதிரை விடுவியுங்கள்!

    Rs. 3,390.00

    எம்ஜே டிமார்க்கோ

    தமிழில்: PSV குமாரசாமி
     

    “எனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த புத்தகம் என்றதால் அவரின் பரிந்துரைக்கு அமைய இப்புத்தகத்தை Flashbooks.lk இல் பெற்றுகொண்டேன். எமது வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோசமாகவும்  வாழ பணத்தை எமது கட்டுப்பாட்டிட்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் எனவும், அதற்காக டிமார்க்கோ கூறும் செயல்முறைக்கேற்ற உத்திகளும் first class. கட்டாயம் இப்புத்தகத்தை வாசியுஙகள்.” —சுரேஷ், நுவர எளிய, இலங்கை ( Suresh, Nuwara Eliya, Sri Lanka)
     

    வணிகவியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் செலவழித்துக் கற்றுக் கொள்வதைவிட அதிகமாக இந்த நூலிலிருந்து இரண்டே நாட்களில் கற்றுக் கொள்ளலாம்!

    Read more
  • பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

    Rs. 2,990.00

    ராபர்ட் கியோஸாகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.

    Read more

Cart

Your Cart is Empty

Back To Shop