Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: காதல் மற்றும் உறவு

Showing all 3 results

  • எமோஷனல் இன்டெலிஜென்ஸ் 2.0

    Rs. 1,090.00

    சோம. வள்ளியப்பன்

     

    அறிவாற்றலை அளவிடும் ஐகி முறையை இப்போது ஒருவரும் பயன்படுத்துவதில்லை.அறிவுத்திறன் இருந்தால்தான் வெற்றி பெறமுடியும், மாபெரும் சாதனைகள் புரியமுடியும் என்னும் நம்பிக்கையும்கூட பெருமளவில் தகர்ந்துவிட்டது. இப்போது உலகை ஆண்டுகொண்டிருப்பது EQ எனப்படும் எமோஷனல் இன்டெலிஜென்ஸ் மட்டுமே.

     

    உள்ளுணர்வுகளைத் துல்லியமாகப் புரிந்துகொண்டு அவற்றைச் சரியான முறையில் கையாளும் கலையை யார் திறன்படக் கற்கிறார்களோ அவர்களே இன்று வெற்றியாளர்களாக வலம் வருகிறார்கள். தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்ல படிப்பு, அலுவலகம், தொழில் என்று வாழ்வின் எந்த நிலையில் இருந்தாலும் EQ முக்கியமானதாக மாறுகிறது.

     

    தலைமைப் பதவியை வகிக்கவேண்டுமா? போட்டியாளர்களைச் சமாளிக்கவேண்டுமா? கனவுகளை நினைவாக்கவேண்டுமா? நீங்கள் இயங்கும் துறையில் முதன்மைச் சாதனையாளராகத் திகழவேண்டுமா? உங்கள் சிந்தனைகள், செயல்பாடுகள் இரண்டிலும் ஆச்சரியமூட்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டுமா? உங்களுடைய உகி திறனை மேம்படுத்திக்கொள்வதுதான் ஒரே அடிப்படை வழி.

     

    சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் IQ-வை விட ஏன் EQ முக்கியம் என்பதையும் அதை எப்படி வளர்த்துக்கொள்வது என்பதையும் முறைப்படி கற்றுக்கொடுக்கிறது.

     

    ‘குமுதம் சினேகிதி’ இதழில் வெளிவந்து ஏகோபித்த பாராட்டைப் பெற்ற வாழ்வியல் தொடரின் புத்தக வடிவம்.

    Read more
  • தொலையுணர்வு: ஆழ்மனத்தில் புதைந்து கிடக்கும் அதிசய

    Rs. 2,390.00

    டாக்டர் ஜோஸப் மர்ஃபி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    தொலையுணர்வு எனும் அதிசய சக்தி நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. நம்முள் மறைந்து கிடக்கும் இந்தச் சக்தியை எப்படி வெளிக்கொண்டு வருவது என்பதையும், அதைப் பயன்படுத்தி எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை அதிஅற்புதமான ஒன்றாக மாற்றியமைத்துக் கொள்வது என்பதையும் இப்புத்தகத்தில் ஜோசப் மர்ஃபி தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறார்.

    அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரச்சினைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். உங்களுக்குள் இருக்கின்ற அசாதாரணமான சக்திகளை உடனடியாக முடுக்கிவிடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும்.

    Read more
  • நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி

    Rs. 1,990.00

    டேல் கார்னகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:

     

    • உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?

    • மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?

    பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?

    உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?

    • அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?

     

    கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!

    Read more

Cart

Your Cart is Empty

Back To Shop