Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: சுயமுன்னேற்றம்

Showing all 8 results

  • 21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்

    Rs. 1,690.00

    ராபர்ட் கியோஸாகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாயிபுகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.

    Read more
  • எடிசன்: கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்

    Rs. 990.00

    இலந்தை சு. இராமசாமி

     

    99% உழைப்பு 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை முன்வைத்து ஆயிரக்கணக்கான கண்டுபிடிப்புகளைச் செய்த கதாநாயகன் தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கையை விளக்குகிறது இந்நூல். முறையாகப் பள்ளியில் கல்வி பயிலாத எடிசன், தானே ஒரு பல்கலைக்கழகமானார். மனிதர்களுக்குப் பயன்படாத எதையும் தான் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று உறுதி பூண்டார். தமது சொந்த சுகம் பற்றிக் கவலைப்படாது தெருவில் படுத்துத் தூங்கினார்.

     

    எடிசனின் எக்கச்சக்கமான கண்டுபிடிப்புகளில் நான்கை மட்டும் முன்னிலைப்படுத்தலாம். ஒளிரும் இழை கொண்ட மின்சார விளக்கு; வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் முழுமையான மின் நிறுவனம். கடவுளுக்குப் பிறகு எடிசனால் உலகம் ஒளி பெற்றது.

     

    சிமெண்ட் கலவையுடன் இரும்புக் கம்பிகளைச் சேர்த்து கான்கிரீட் தயாரித்து அதன்மூலம் வேகமாக பலமாடிக் கட்டடங்களைக் கட்டுதல். இன்று தெருவுக்குத் தெரு இந்தியாவில் கட்டப்படும் கட்டடங்களுக்கு முன்னோடி எடிசனின் கான்கிரீட் கலவை.

     

    எடிசனின் அற்புதமான கண்டுபிடிப்பு ஃபோனோகிராஃப். பாட்டுப் பாடும் பெட்டி. ஓர் இயந்திரம் நாம் பேசுவதைப் திரும்பிப் பேசும், நல்ல பாடல்களை மீண்டும் மீண்டும் பாடும் என்று யாரால் அன்று யோசித்திருக்க முடியும்? எடிசன் யோசித்தது மட்டுமல்லாமல் செய்தும் காட்டினார்.

     

    இன்று உலகிலேயே மிகப்பெரும் பணமும் புகழும் ஈட்டும் கலையாக விளங்கும் சினிமாவுக்குத் தந்தை எடிசன். முதலில் ஊமைப்படங்களை உருவாக்கி, பின் பேசும் படங்களையும் சோதனை முயற்சி மூலம் உருவாக்கினார்.

     

    தந்தி, தொலைபேசியில் பேசு கருவி, பங்குச்சந்தை டிக்கர் கருவி…. ஏன், தானியங்கி வாக்களிக்கும் இயந்திரம் உள்பட எண்ணற்றவற்றைக் கண்டுபிடித்திருக்கும் இந்த மகத்தான மனிதரின் வாழ்க்கையைக் கூர்ந்து படித்தால் நீங்களும் கூட ஒரு கண்டுபிடிப்பாளர் ஆகலாமே?

    Read more
  • காதல் மொழிகள் ஐந்து

    Rs. 2,390.00

    கேரி சேப்மேன்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது. உங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பேசக் கற்றுக் கொண்டு அவரிடம் பேசிப் பாருங்கள், உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வீசத் துவங்குவதைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள்!

    Read more
  • சத்திய சோதனை: மகாத்மா காந்தி சுயசரிதை

    Rs. 1,490.00

    மகாத்மா காந்தி

     

    “இந்த உலகத்திற்கு நான் அறிவுறுத்த வேண்டியது எதுவுமில்லை. சத்தியமும் அகிம்சையும் மலைகளைப்போல பழமையானவை.”

     

    “சத்திய சோதனை, என்ற அரிதான, அபூர்வமான சுயசரிதை மகாத்மா காந்தியின் மனத்தின் செயல்பாடுகளை வெளிக்காட்டும் ஒரு சாளரம், பலகணி – அவரது இதய உணர்வுகளை வெளிப்பபடுத்தும் சாளரம் – சாதாரணமாக இருந்த மனிதரை இந்திய நாட்டின் தந்தை என்ற உயர்ந்த நிலைக்கு, உன்னத நிலைக்கு எது உயர்த்தியது என்பதைப் புரிந்து கொள்வதற்கான தெளிவைக்காட்டும் பலகணி.

     

    காந்தி சிறுவராக இருந்த காலத்திலிருந்து தொடங்கி இந்தியாவில் சுதந்திர இயக்கம் அதன் தொடக்க நிலையில் இருந்த காலம் வரையுள்ள அவரது வாழ்க்கையின் நிலைகளைக் காட்டுவது வரை அழைத்துச் சென்று அவரது பரிசோதனைகளையும் மனக்குமுறல்களையும் அவருடைய வாழ்க்கைத் தத்துவத்தை உருவாக்கிய சூழ்நிலைகளையும் எடுத்துக்காட்டியுள்ளார். குழந்தைத் திருமணம், இங்கிலாந்தில் கல்வி தென்னாப்பிரிக்காவில் வக்கீல் தொழில், அங்கே அவரது சத்தியாகிரகம் உள்ளிட்டலை இவற்றுள் அடங்கும்.

     

    அவருக்கு சுயசரிதை எழுதும் நோக்கம் இல்லை. ஆனால் இனவெறி வன்முறை, காலனித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான அவருடைய போராட்டத்தால் முழுமையான சத்தியத்தைத் தேடிய தன்னுடைய சத்திய சோதனை அனுபவங்களை இதில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

    Read more
  • சூப்பர் சேல்ஸ்மேன் ஆவது எப்படி: விற்பனையின் உளவியல்

    Rs. 2,290.00

    பிரயன் டிரேசி

    தமிழில்: வானமாமலை

     

    விற்பனை வெற்றிக்கு வழிகாட்டும் 10 முக்கிய குறிப்புகள்

     

    “உங்கள் கனவுகள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்றால் விற்பனை வழிமுறைக்கு பின்புலமான உளவியலைப் புரிந்து கொள்ள வேண்டியது முக்கியமானது. இந்தப் பத்தகம் அந்தப் புரிதலுக்கான திறவுகோல்.”

    — டாம் ஹாப்கின்ஸ், ஆசிரியர், ஹவ் டு மாஸ்டர் தி ஆர்ட் ஆஃப் செல்லிங்

     

    எந்தச் சந்தையிலும் உங்களின் விற்னையை இரண்டு அல்லது மூன்று மடங்கு ஆக்குங்கள்.

    நீங்கள் முன்னைவிட அதிகமான, துரிதமான மற்றும் எளிதான விற்பனை செய்ய உடனே பயன்படுத்தக்கூடிய யோசனைகள் வழிமுறைகள் மற்றும் உத்திகளை வழங்குவதே இந்நூலின் நோக்கம்.

    Read more
  • செல்வபுரிக்கான விரைவுப் பாதை: செல்வத்தைக் குவிப்பதற்கான புதிரை விடுவியுங்கள்!

    Rs. 3,390.00

    எம்ஜே டிமார்க்கோ

    தமிழில்: PSV குமாரசாமி
     

    “எனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த புத்தகம் என்றதால் அவரின் பரிந்துரைக்கு அமைய இப்புத்தகத்தை Flashbooks.lk இல் பெற்றுகொண்டேன். எமது வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோசமாகவும்  வாழ பணத்தை எமது கட்டுப்பாட்டிட்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் எனவும், அதற்காக டிமார்க்கோ கூறும் செயல்முறைக்கேற்ற உத்திகளும் first class. கட்டாயம் இப்புத்தகத்தை வாசியுஙகள்.” —சுரேஷ், நுவர எளிய, இலங்கை ( Suresh, Nuwara Eliya, Sri Lanka)
     

    வணிகவியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் செலவழித்துக் கற்றுக் கொள்வதைவிட அதிகமாக இந்த நூலிலிருந்து இரண்டே நாட்களில் கற்றுக் கொள்ளலாம்!

    Read more
  • பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை

    Rs. 2,990.00

    ராபர்ட் கியோஸாகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.

    Read more
  • பைப்லைனில் பணம்: உங்கள் வாழ்வில் தொடர்ச்சியாகப் பணம் பாய்ந்தோடி வந்து கொண்டேயிருக்க

    Rs. 990.00

    பர்க் ஹெட்ஜஸ்

     

    நாம் மிகச் செழிப்பான ஒரு பொருளாதாரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர், செலவுகளை ஈடுகட்டுவதற்காக மேன்மேலும் அதிக நேரம் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். ஏன்? ஏனெனில், அவர்கள் ஒரு தவறான திட்டத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றனர். ‘பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல்’ என்ற பொறிக்குள் அவர்கள் சிக்கியுள்ளனர்.

    பணத்திற்காக நேரத்தைப் பண்டமாற்று செய்தல் என்ற பொறியிலிருந்து எவ்வாறு தப்பிப்பது? தொடர்ச்சியாகவும் நிரந்தரமாகவும் பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்ற பைப்லைன்களை உருவாக்குவதன் மூலமாகத்தான்! பைப்லைனை உருவாக்கும் வேலையை நீங்கள் ஒருமுறை செய்கிறீர்கள், ஆனால் மீண்டும் மீண்டும் உங்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால்தான் ஒரே ஒரு பைப்லைன் ஓராயிரம் சம்பளக் காசோலைகளுக்கு சமம் என்று நான் கூறுகிறேன். பைப்லைன்கள் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும், ஒவ்வோர் ஆண்டும் தொடர்ந்து பணத்தைக் கொட்டிக் கொண்டே இருக்கின்றன – வேலை செய்வதற்கு நீங்கள் அங்கு இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி..

     

    Read more

Cart

Your Cart is Empty

Back To Shop