Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: தொழில்முனைவு

Showing 1–9 of 31 results

  • 21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்

    Rs. 1,690.00

    ராபர்ட் கியோஸாகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாயிபுகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.

    Read more
  • இக்கிகய்

    Rs. 2,790.00

    ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

     

    ஒருநீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்!

     

    எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையை விட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
    உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை.  அவசரப் போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து,  உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும்.
    இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள்.

    Read more
  • இச்சிகோ இச்சியே

    Rs. 2,590.00

    ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர்

    Read more
  • இரகசியம்

    Rs. 3,390.00

    ரோன்டா பைர்ன்

     

    தமிழில்: PSV குமாரசாமி

     

    இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.

    Read more
  • இலக்குகள்!

    Rs. 2,790.00

    பிரையன் டிரேசி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

     

    இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.

     

    எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.

     

    இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.

    Read more
  • உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க

    Rs. 2,790.00

    ஜான் சி. மேக்ஸ்வெல்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நீங்கள்  ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு?  இல்லை! நிச்சயமாக இல்லை!

     

    ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும்.  அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும்.  அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன்.  இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால்  – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.

    Read more
  • உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும்

    Rs. 2,790.00

    வில்லி ஜாலி

    தமிழில்: ஆலிரத் அசோக்குமார்

     

    “என்னுடைய வியாபாரத்தில் பாரிய நஷ்டம் ஏற்பட்டு நான் மனதளவில் மிகவும் சோர்வடைந்து இருந்த போது, Flash Books‘இன் சிபாரிசில், உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் புத்தகத்தை வாங்கி வாசித்தேன். 300 பக்கங்களுக்கு மேல் ஒரு நிமிடத்தில் வாசிக்க முடியுமானவாரு பல பாடங்கள் இருப்பதால் இலகுவாக வாசிக்கக்கூடியதாக இருந்தது. நான் மீண்டு வருவதற்கு தேவையான பாடங்கள் பல இருந்ததால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு ஆனால் புதிய மனிதனாக திரும்ப முடிந்தது. நண்றி”

    நிரன்ஞன் – வவுனியா, இலங்கை (Niranjan – Vavuniya, Sri Lanka)

     

    “இந்த நூல் உங்கள் வாழ்க்கையை மாற்றும்!” — லெஸ் பிரவுன்

     

    இந்த புத்தகத்தில் வில்லி ஜாலி உங்கள் எதிர்காலத்தை உருவாக்க உதவும் கருவிகளையும் வெற்றியின் கதவுகளைத் திறப்பதற்கான திறவுகோல்களையும் வழங்குகிறார். நீங்கள் வாழ விரும்பும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதற்குப் பதிலாக, அந்தக் கனவை நனவாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நேரம் இது. இந்த வழிகாட்டியில் 151 ஒரு நிமிட செய்திகள் உள்ளன. ஒவ்வொரு செய்தியும் ஒரு நிமிடம் மட்டுமே இருப்பதற்கான காரணம், உங்கள் வாழ்க்கையை மாற்ற ஒரே ஒரு நிமிடம் மட்டுமே ஆகும் என்று ஆசிரியர் நம்புகிறார். அறுபது வினாடிகளில், உங்கள் கனவுக்குப் பின் செல்ல நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்பதை நீங்கள் தீர்மானிக்கலாம். உங்கள் வாழ்க்கையை மாற்ற இது ஒரு நிமிடம் மட்டுமே எடுக்கும், அனைவருக்கும் ஒரு நாளைக்கு ஒரே மாதிரியான 1440 நிமிடங்கள் இருப்பதாக ஜாலி கூறுகிறார்.

     

    எனவே, இந்த விலைமதிப்பற்ற நிமிடங்களை அதிகம் பயன்படுத்துவதே முக்கியமான பகுதியாகும். ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மேலும் பலவற்றைச் செய்வது எப்படி என்று இந்தப் புத்தகம் கற்றுக்கொடுக்கிறது. இது உங்கள் வாழ்க்கையில் அதிக அன்பு, மகிழ்ச்சி மற்றும் சிரிப்பை கொண்டு வர உதவுகிறது. வெற்றிபெற, சாத்தியமற்றதைக் கனவு காண்பது அவசியம் என்று ஆசிரியர் கூறுகிறார். உங்கள் கனவு பெரியதாக இருக்கும் போது, ​​நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் சிறியதாக தோன்றும். தேர்வுகள் செய்யும்போது, ​​மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், செல்வந்தராகவும் இருப்பதைத் தேர்ந்தெடுப்பது உங்களுடையது என்று ஜோலி கூறுகிறார். வெற்றி என்பது அதிர்ஷ்டம் அல்லது வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல, மாறாக அது ஒரு தேர்வு என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

    Read more
  • என் சீஸை நகர்த்தியது யார்?

    Rs. 1,390.00

    ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி.

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    என் சீஸை நகர்த்தியது யார்? ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் எளிய நீதிக்கதை. ஒரு பிரமைக்குள் வாழும் நான்கு கதாபாத்திரங்களின் வேடிக்கையான மற்றும் அறிவொளி தரும் கதை, அவை வளரவும், மகிழ்ச்சியடையவும் சீஸ் தேடுகிறது. ‘சீஸ்’ என்பது ஒரு நல்ல வேலை, அன்பான உறவு, பணம் அல்லது உடைமை, ஆரோக்கியம் அல்லது ஆன்மீக மன அமைதியாக இருந்தாலும், நீங்கள் வாழ்க்கையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதற்கான ஒரு உருவகமாகும்.

    Read more
  • Free Shipping
    In Stock

    ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள்

    Rs. 2,590.00

    சைமன் சினெக்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    ஏன்‌ வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும்‌ தட்டிக்‌ கொண்டிருக்கிறாள்‌?

     

    ஏன்‌ ஒரு சில நிறுவனங்கள்‌ மட்டும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ மாபெரும்‌ சாதனைகளை நிகழ்த்திக்‌ கொண்டே இருக்கின்றன?

     

    ஏனெனில்‌, தனிப்பட்ட வாழ்க்கையிலும்‌ சரி, தொழில்வாழ்க்கையிலும்‌ சரி, நீங்கள்‌ என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்‌ என்பது முக்கியமல்ல. ஏன்‌ அதைச்‌ செய்து கொண்டிருக்கிறீர்கள்‌ என்பதுதான்‌ முக்கியம்‌.

     

    ஸ்டீவ்‌ ஜாப்ஸ்‌, ரைட்‌ சகோதரர்கள்‌, மார்ட்டின்‌ லூதர்‌ கிங்‌ ஜூனியர்‌, ஆகியோருக்கு இடையே ஓர்‌ ஒற்றுமை இருந்தது. அவர்கள்‌ அனைவரும்‌ ஏன்‌ என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்‌.

     

    பிறரை ஊக்குவிக்க வேண்டும்‌ என்று விரும்புகின்றவர்களுக்கும்‌ சரியான தலைவர்களை அடையாளம்‌ காண ஆசைப்படுகின்றவர்களுக்கும்‌ இந்நூல்‌ உறுதுணையாக இருக்கும்‌.

    Add to cart

Cart

Your Cart is Empty

Back To Shop