Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: தொழில் மற்றும் வெற்றி

Showing 1–9 of 35 results

  • 21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்

    Rs. 1,690.00

    ராபர்ட் கியோஸாகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாயிபுகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.

    Read more
  • அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்

    Rs. 4,390.00

    ஸ்டீபன் ஆர். கவி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன.

    Read more
  • அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை

    Rs. 1,340.00

    ஹால் எல்ராட்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கையை விரைவாக அடைய இதோ ஓர் எளிய வழி!

     

    காலையில் நீங்கள் வழக்கமாக எழுந்திருப்பதைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு நடவடிக்கை என்ற கணக்கில் வெறும் ஆறு நடவடிக்கைகளை மட்டும் மேற்கெள்ளுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

    Read more
  • ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி

    Rs. 1,990.00

    ஜேம்ஸ் ஜென்சன்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது.

     

    டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து, “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே “புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது” என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிகொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன்.

     

    இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன். இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல். திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன். இதன் மூலம் நூலில் இடம்பெற்றிராத “ எப்படி செய்ய வேண்டும் “ என்பது போன்ற விஷயங்களையும் நாம் இந்நூலில் சேர்த்திருக்கிறேன். — ஜேம்ஸ் ஜென்சன்

    Read more
  • இக்கிகய்

    Rs. 2,790.00

    ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

     

    ஒருநீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர் அருமையான நூல்!

     

    எல்லோருக்கும் ஓர் இக்கிகய் இருக்கிறது, அதாவது, தினமும் காலையில் படுக்கையை விட்டு உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான ஒரு காரணம் இருக்கிறது, என்று ஜப்பானியர்கள் நம்புகின்றனர்.
    உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் திகழ்கின்ற இந்நூல், உங்களுடைய தனிப்பட்ட இக்கிகய்யைத் திரைவிலக்குவதற்கான கருவிகளை உங்களுக்கு வழங்கும். உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய வல்லமை வாய்ந்தவை அவை.  அவசரப் போக்கைக்கை விட்டுவிட்டு, உங்கள் வாழ்வின் நோக்கத்தைக் கண்டறிந்து,  உங்களுடைய நட்புகளை வளர்த்தெடுத்து, உங்கள் ஆழ்விருப்பங்களுக்கு உங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்கு விளக்கிக்காட்டும்.
    இக்கிகய்யின் துணையுடன் ஒவ்வொரு நாளும் உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தத்தையும் ஆனந்தத்தையும் கொண்டு வாருங்கள்.

    Read more
  • இச்சிகோ இச்சியே

    Rs. 2,590.00

    ஹெக்டர் கார்சியா & பிரான்செஸ்க் மிராயியஸ்

    தமிழில்: PSV குமாரசாமி

     

    வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது! நம்முடைய வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற கணங்கள் ஒவ்வொன்றும் ஒரே ஒரு முறைதான் நிகழும் என்பதால் அதை நாம் நழுவ விட்டுவிட்டால், அதை நாம் என்றென்றைக்குமாக இழந்துவிடுவோம். இதை ஜப்பானியர்கள் இச்சிகோ இச்சியே என்று அழைக்கின்றனர். ஒருவரை சந்திக்கும்போதும் சரி, அவரிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளும்போதும் சரி, குறிப்பிட்ட அந்த சந்திப்பு தனித்துவமானது என்பதை எடுத்துரைக்கும் வகையில் ஒருவருக்கொருவர் இச்சிகோ இச்சியே என்று கூறிக் கொள்கின்றனர்

    Read more
  • இரகசியம்

    Rs. 3,390.00

    ரோன்டா பைர்ன்

     

    தமிழில்: PSV குமாரசாமி

     

    இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.

    Read more
  • உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க

    Rs. 2,790.00

    ஜான் சி. மேக்ஸ்வெல்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நீங்கள்  ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு?  இல்லை! நிச்சயமாக இல்லை!

     

    ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும்.  அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும்.  அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன்.  இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால்  – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.

    Read more
  • உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி

    Rs. 1,690.00

    டாக்டர் ஜோஸப் மர்ஃபி

    தமிழில்: மாலதி கிருஷ்ணா

     

    உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மத்திரையில் படமாகப் பதியவைத்தால், உங்களால உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிறைந்துள்ள இப்புத்தகம், உங்களது ஆழ்மன சக்தியை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்தரைக்கிறது.

    Read more

Cart

Your Cart is Empty

Back To Shop