Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Tag: வணிகம்

Showing 1–9 of 13 results

  • இரகசியம்

    Rs. 3,390.00

    ரோன்டா பைர்ன்

     

    தமிழில்: PSV குமாரசாமி

     

    இரகசியத்தைப் படிப்படியாக நீங்கள் புரிந்து கொள்ளும்போது நீங்கள் விரும்பும் அனைத்தையும் பெறுவது எப்படி, வேண்டிய நிலைகளை அடைவது எப்படி? விரும்பியவற்றைச் செய்வது எப்படி என்பதை அறிந்து கொள்வீர்கள். உண்மையில் நீங்கள் யார் என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.  உங்களுக்காகக் காத்திருக்கும் பிரம்மாண்டத்தையும உணர்ந்து கொள்வீர்கள்.

    Read more
  • இலக்குகள்!

    Rs. 2,790.00

    பிரையன் டிரேசி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

     

    இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.

     

    எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.

     

    இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.

    Read more
  • உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க

    Rs. 2,790.00

    ஜான் சி. மேக்ஸ்வெல்

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நீங்கள்  ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு?  இல்லை! நிச்சயமாக இல்லை!

     

    ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும்.  அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும்.  அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன்.  இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால்  – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.

    Read more
  • உங்கள் ஆழ்மனதின் அற்புத சக்தி

    Rs. 1,690.00

    டாக்டர் ஜோஸப் மர்ஃபி

    தமிழில்: மாலதி கிருஷ்ணா

     

    உங்கள் ஆழ்மனதில் கட்டுண்டு கிடக்கும் அளவிடற்கரிய சக்தியை விடுவிப்பதற்கான திறவுகோல் இது. டாக்டர் மர்ஃபியின் புரட்சிகரமான, மனத்தை ஒருமுகப்படுத்தும் உத்திகள், சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமான, நடைமுறையில் எளிதாக பயன்படுத்தக்கூடிய இக்கொள்கையை அடிப்படையாக்க் கொண்டுள்ளது. நீங்கள் எந்தொரு இலட்சியத்தை அடைய வேண்டும் என்றாலும், அதன்மீது எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி ஆழமாக நம்பிக்கை வைத்து, அதை உங்கள் மத்திரையில் படமாகப் பதியவைத்தால், உங்களால உங்கள் ஆழ்மனத்தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து அதைச் சாதிக்க முடியும். வெற்றி தேவதையை முத்தமிட்டுள்ள சாதாரண மக்கள் பலரின் உண்மைக் கதைகளால் நிறைந்துள்ள இப்புத்தகம், உங்களது ஆழ்மன சக்தியை எவ்வாறு கட்டவிழ்த்துவிடுவது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்தரைக்கிறது.

    Read more
  • Free Shipping
    In Stock

    ஒரே ஒரு விஷயம்

    Rs. 2,290.00

    கேரி கெல்லர் & ஜே பாபசான்

     

    நாகலட்சுமி சண்முகம்

     

    ஒரே ஒரு விஷயம்: அற்புதமான விளைவுகளுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியகரமான உண்மைகள், 2013 ஆம் ஆண்டு எழுத்தாளர்கள் கேரி கெல்லர் மற்றும் ஜே பாபசான் ஆகியோரால் எழுதப்பட்டது. புத்தகம், தி ஒன் திங், நமது வெற்றியைத் தடுக்கும் பொய்கள், நம் நேரத்தைத் திருடி, நோக்கத்தில் நம் செறிவை அதிகரிக்கும் திருடர்கள் போன்ற தடைகளை சமாளிக்க நம் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான பழக்கத்தை எவ்வாறு இணைக்க முடியும் என்பதை விளக்குகிறது. இந்த புத்தகம் வணிகத்தில் ஈடுபடும் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றும் அவர்களின் வேலையின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது மற்றும் தடுக்கும் காரணிகளை நீக்குகிறது. புத்தகம் படிக்க எளிதானது மற்றும் அது தெரிவிக்கும் கருத்துக்களில் கணிசமானதாகும்.

     

    ஒருவருடைய வழியில் வரும் குழப்பமான கவனச்சிதறல்களை எவ்வாறு தவிர்ப்பது என்பதை மையமாகக் கொண்டது இந்த புத்தகம். இதைச் செய்வதன் மூலம், அவர்கள் அந்த நேரத்தில் மிக முக்கியமான ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தலாம்.

     

    இந்த புத்தகம் தினசரி வாழ்க்கை மன அழுத்தத்தை குறைக்கவும், அவர்களின் குறிக்கோள்களை இலக்காகக் கொண்டு அவர்களின் செயல்களில் ஆர்வத்துடன் ஈடுபடவும், பெரும் நிகழ்வுகளால் ஏற்படும் சோர்வு உணர்வை சமாளிக்கவும் மற்றும் ஒரு சிறந்த காலப்பகுதியில் சிறந்த முடிவுகளை அடையவும் உதவுகிறது.

     

    உங்கள் வாழ்க்கை – வேலை, தனிப்பட்ட, குடும்பம் மற்றும் ஆன்மீகம் என்றால் ஒன் திங் ஒவ்வொரு பகுதியிலும் அசாதாரண முடிவுகளை அளிக்கிறது.

    Add to cart
  • கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி

    Rs. 1,890.00

    டேல் கார்னகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    “கவலையை விட்டொழித்து மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி” இந்த புத்தகம் வாழ்க்கையை மாற்றும். இப்புத்தகம் இடைவிடாத பிரச்சனையான கவலையை பற்றிச் சொல்கிறது. உலகில் உள்ள அனைத்து பொய்யர்களிலும் பெரும்பாலான நேரங்களில் அது நமது சொந்த பயங்கள் மற்றும் கவலைகள் என்று அது கூறுகிறது. கவலை உங்கள் பிரச்சனைகளை நீக்காது, ஆனால் அது உங்கள் அமைதியை நீக்குகிறது, இது புத்தகத்தின் முக்கிய செய்தி.

     

    கவலையின் பின்னணியில் உள்ள காரணங்களைத் தேடுவதன் மூலம், பல வழக்கு ஆய்வுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர் மிகவும் அறிவியல்பூர்வமாகத் தொடங்குகிறார். புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால், அதிலிருந்து வெளியே வர விரும்பினால் கண்டிப்பாக படிக்க வேண்டிய உன்னதமான புத்தகம் இது.

    Read more
  • சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி

    Rs. 2,990.00

    பிரையன் டிரேசி

     

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.

    அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.

    Read more
  • சின்னஞ்சிறு பழக்கங்கள்

    Rs. 1,990.00

    ஜேம்ஸ் கிளியர்

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    கடுகளவு மாற்றங்களை, கற்பனைக்கெட்டா விளைவுகள்.

     

    நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற விரும்பினால் நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்க வேண்டும் என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பழக்கங்களைப் பற்றி விரிவாக ஆய்வு செய்து அதில் உலகப் புகழ்பெற்ற நிபுணர்களில் ஒருவராகத் திகழ்கின்ற ஜேம்ஸ் கிளியர் அதற்கு வேறொரு வழியைக் கண்டுபிடித்துள்ளார். தினமும் காலையில் ஐந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்திருத்தல், ஒரு பதினைந்து நிமிடங்கள் மெதுவோட்டத்தில் ஈடுபடுதல், கூடுதலாக ஒரு பக்கம் படித்தல் போன்ற நூற்றுக்கணக்கான சிறிய தீர்மானங்களின் கூட்டு விளைவிலிருந்துதான் உண்மையான மாற்றம் வருகிறது என்று அவர் கூறுகிறார். இந்தக் கடுகளவு மாற்றங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையைப் பெரிதும் மாற்றக்கூடிய விளைவுகளாக உருவெடுக்கின்றன என்பதை ஜேம்ஸ் இப்புத்தகத்தில் தெளிவாக வெளிப்படுத்துகிறார்.

    Read more
  • நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி

    Rs. 1,990.00

    டேல் கார்னகி

    தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

     

    உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:

     

    • உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?

    • மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?

    பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?

    உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?

    • அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?

     

    கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!

    Read more

Cart

Your Cart is Empty

Back To Shop