Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- சிறுவர் புத்தகங்கள்
- பொதுவுடைமை
- வானவியல்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை
Rs. 1,340.00
ஹால் எல்ராட்
தமிழில்: PSV குமாரசாமி
நீங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் வாழ்க்கையை விரைவாக அடைய இதோ ஓர் எளிய வழி!
காலையில் நீங்கள் வழக்கமாக எழுந்திருப்பதைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு நடவடிக்கை என்ற கணக்கில் வெறும் ஆறு நடவடிக்கைகளை மட்டும் மேற்கெள்ளுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
Out of stock
Notify me when stock available
ஆனால் அது முற்றிலும் உண்மை. இந்நூலின் ஆசிரியர் ஹால் எல்ராடின் வாழ்க்கையே அதற்கு சாட்சி.
சாவின் விளிம்புவரை அவரை அழைத்துச் சென்ற ஒரு கோர விபத்து அவருடைய உடலையும் மூளையையும் பாதித்ததோடு மட்டுமல்லாமல் மனத்தளவிலும் அவரைப் படுகுழியில் தள்ளியது. இந்நூலில் நீங்கள் கற்றுக் கொள்ளவிருக்கும் அதே உத்திகளைப் பயன்படுத்தி அவர் தன்னுடைய மோசமான நிலையிலிருந்து மீண்டதோடு மட்டுமல்லாமல், குறுகிய காலத்திற்குள் சர்வதேசப் புகழ் பெற்ற ஒரு நூலாசிரியராகவும், ஓர் ஆலோசனையாளராகவும், ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் உயர்ந்துள்ளார். அந்த உத்திகளை இவ்வுலகிலுள்ள பிறருடன் பகிர்ந்து கொள்ளுவதற்காகவே அவர் இந்நூலை எழுதியுள்ளார்.
எழுத்தாளர் பற்றி
நம்முடைய பிரச்சனையிலிருந்து மீண்டு, நாம் கற்பனை செய்கின்ற அசாதாரணமான
வாழ்க்கையை உருவாக்குவதற்கான திறன் நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது
என்பதற்கான வாழும் ஆதாரமாக ஹால் திகழுகிறார். அவருக்கு இருபது வயதாக இருந்தபோது,
குடித்துவிட்டு லாரியோட்டி வந்த ஒருவர் அவர்மீது மோதியதில், ஹாலுக்குப் பதினோரு
எலும்புகள் முறிந்தன, அவருடைய மூளை நிரந்தரமாக பாதிப்படைந்தது. அவரால் இனி
ஒருபோதும் நடக்க முடியாது என்று அவருடைய குடும்பத்தாரிடம் கூறப்பட்டது. ஆனால் ஹால்
அதைப் பொய்யாக்கி, ஒரு தலைசிறந்த தொழிலதிபராகவும், மராத்தான் ஓட்டக்காரராகவும்,
பிரபலமான நூலாசிரியராகவும், சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளராகவும் ஆகியுள்ளார்.
மக்கள் தங்களுடைய ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த அவர்களுக்கு உதவுவதற்காக
ஹால் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார்.
Book Specifications
Title: The Miracle Morning / அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை
Author: Hal Elrod / ஹால் எல்ராட்
Translator: PSV Kumarasamy / PSV குமாரசாமி
Language: Tamil
Binding: Paperback
Pages: 228
Weight:
Published Year: 2012
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing House
ISBN: 978-93-89143-95-9
Dimensions:
Print size: Please feel free to drop us a message.
Related products
இலக்குகள்!
Rs. 2,790.00Read moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும்போது, ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது? இதற்கான விடை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்கிறார் பிரையன் டிரேசி. ஒருசில வெற்றியாளர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்த அந்த ரகசியங்களை இப்புத்தகத்தில் அவர் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இருபதாண்டுகால அனுபவத்தையும் நாற்பதாண்டுகால ஆராய்ச்சிகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ள இப்புத்தகம், இலக்குகளை நிர்ணாயிக்கவும் அவற்றை அடையவும் தேவையான, நடைமுறைக்கு உகந்த, நிரூபணமான உத்திகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கிறது. இப்புத்தகத்தினால் இதுவரை பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ள்னர்.
எந்தவிதமான இலக்குகளாக இருந்தாலும் சரி, அவற்றை அடையத் தேவையான 12 அம்சத் திட்டம் ஒன்றை பிரையன் டிரேசி இந்நூலில் முன்வைக்கிறார். ஒருவருடைய வலிமைகளை எவ்வாறு அடையாளம் காண்பது, சுயமதிப்பையும் சுயதுணிச்சலையும் எவ்வாறு வளர்த்தெடுப்பது, எதிர்ப்படும் தடைகற்களை எவ்வாறு தகர்த்தெறிவது, சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது போன்றவற்றை அவர் இப்புத்தகத்தில் அறிவியற்பூர்வமான கண்ணோட்டத்துடன் அணுகுகிறார்.
இலக்குகள் குறித்து இனி நீங்கள் வேறு ஒரு புத்தகத்தைத் தேடி அலைய வேண்டியதில்லை.
தடையேதுமில்லை
Rs. 990.00Read moreசோம. வள்ளியப்பன்
‘வாசகர்களின் தோளில் கைபோட்டுப் பேசும் திறன் கொண்ட புத்தகம் இது. கடினமான விஷயங்களை மிக எளிமையாக எடுத்துச் சொல்லும் சோம. வள்ளியப்பனின் பாணி அபூர்வமானது.’ – பா.ராகவன்
புத்தகங்களை மட்டுமே படித்துவிட்டு எவரும் வெற்றியாளர் ஆகிவிடமுடியாது.வாழ்க்கையைவிடச் சிறந்த வாத்தியார் இந்த உலகில் இல்லை. எனவே அனுபவங்களிலிருந்தும் ஒருவர் கற்கவேண்டியிருக்கிறது.
ஆனால் அது அத்தனை சுலபமல்ல. எடுத்தோமா, படித்தோமா என்று கற்றுக்கொண்டுவிடமுடியாது. அனுபவத்தைப் புரிந்துகொள்ளவும் அதிலிருந்து முக்கியமான பாடங்களைக் கண்டுபிடித்து கிரகித்துக்கொள்ளவும் தனித்திறன் தேவைப்படுகிறது. திறந்த மனமும் தெளிவான சிந்தனையும் இருந்தால்தான் அனுபவப் பாடம் படிக்கமுடியும்.
சோம. வள்ளியப்பனின் இந்தப் புத்தகம் நம் வாழ்வை நாமே படித்துக்கொள்ள உதவும் ஒரு கைவிளக்காக இருக்கிறது. நம்மை முன்னேறவிடாமல் தடுக்கும் தடைக்கற்கள் எவையெவை என்பதை மிகத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தடைகளைத் தகர்த்து வெற்றிப் படிகளில் ஏறி உச்சத்தைத் தொட இந்தப் புத்தகம் உங்களுக்கு நிச்சயம் உதவும்.
செல்வந்தராக்கும் சுலப விஞ்ஞானம்
Rs. 590.00Read moreவாலஸ் டி வாட்டில்ஸ்
தமிழில்: பி. உதயகுமார்
ரோண்டா பைரனின் (Rhonda Byrne) அதிகம் விற்பனையாகும் புத்தகம் மற்றும் திரைப்படமான இரகசியம் (The Secret) ன் உத்வேகம் இந்தப் புத்தகம்தான். வாலஸ் வாட்டில்ஸ், செல்வம் பெறுவதற்கான வழியில் சிந்தனை மற்றும் மன உறுதியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை சுருக்கமாக காட்டுகிறது.
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி: நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு
Rs. 1,490.00Read moreநார்மன் வின்சென்ட் பீல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.
சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி
Rs. 3,190.00Rs. 2,990.00Read moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.
சிந்தனையை மாற்றுங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்
Rs. 1,690.00Read moreபிரையன் டிரேசி
தமிழில்: சி. ஆர். ரவீந்திரன்
உங்களுடைய எதிர்காலத்திற்கு உரிய வரைப்படத்தை உங்களுக்கு முன்னால் வைத்திருக்கிறீர்கள். வியக்கத் தகுந்த உங்களுடைய எதிர்காலத்தை நீங்களாகவே உருவாக்கிக் கொள்ள நீங்கள் செய்ய வேண்டியவை இவைதான். இந்தப் புத்தகத்தை நீங்கள் படிக்க வேண்டும். உங்களுடைய சொந்த வாழ்க்கையில் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். அதற்கு இந்த புத்தகம் உறுதுணையாக இருக்கும்.
உங்களைப் பற்றியும், உங்களுடைய ஆற்றலைப் பற்றியும் நீங்கள் கொண்டிருக்கும் சிந்தனைகளைப் படிப்படியாக மாற்றி, அதன் மூலம் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் மாபெரும் வெற்றி பெறுவது எப்படி என்பதை இப்புத்தகம் விளக்குகிற்து. நீங்கள் உங்களுக்காக நிர்ணயித்துக் கொள்ளும் இலக்கு எதுவானலும் அதை அடைய இந்த புத்தகம் வழிவகுக்கும்.
காலை எழுந்தவுடன் தவளை!
Rs. 1,690.00Read moreபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் (to-do list) உள்ள எல்லாவற்றிற்கும் போதுமான நேரம் இல்லை-அது எப்போதும் இருக்காது. வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. அவர்கள் மிக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவைகளை செய்து முடிப்பதை உறுதிசெய்கிறார்கள். அவர்கள் தங்கள் தவளைகளை சாப்பிடுகிறார்கள்.
ஒரு பழைய பழமொழி உள்ளது, நீங்கள் தினமும் காலையில் முதல் முறையாக ஒரு தவளை சாப்பிட்டால், நீங்கள் நாள் முழுவதும் செய்ய வேண்டிய மிக மோசமான காரியத்தை முடித்துவிட்டீர்கள் என்ற திருப்தி உங்களுக்கு கிடைக்கும். டிரேசியைப் பொறுத்தவரை, தவளை சாப்பிடுவது உங்கள் சவாலான பணியைச் சமாளிப்பதற்கான ஒரு உருவகமாகும் – ஆனால் உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். காலை எழுந்தவுடன் தவளை! ஒவ்வொரு நாளையும் எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டும் என்பதை காட்டுகிறது, இதனால் இந்த முக்கியமான பணிகளை நீங்கள் கச்சிதமாக செய்து அவற்றை திறமையாகவும் செயல் விளைவுடையதாகவும் நிறைவேற்ற முடியும்.
பிரையன் ட்ரேசி பயனுள்ள நேர மேலாண்மைக்கு என்ன முக்கியம் என்பதை துள்ளியமாக கூறுகிறார்: முடிவு, ஒழுக்கம் மற்றும் உறுதிப்பாடு. வாழ்க்கையை மாற்றும் இந்த புத்தகம், இன்று உங்கள் முக்கியமான பணிகளைச் செய்வதை உறுதி செய்யும்!
ரசவாதி
Rs. 2,590.00Read moreபாலோ கொயலோ
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உங்கள் கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லுவதைப் பற்றிய ஒரு கற்பனைக் கதை
- Grand Prix des lectrices de Elle for roman (1995)
- Premio Grinzane Cavour for Narrativa Straniera (1996)
- Corine Internationaler Buchpreis for Belletristik (2002)
- 8.5 கோடிப் பிரதிகள் விற்றுச்சாதனை படைத்துள்ள நூல்
“ஒருவரின் விதியை நிறைவேற்றுவதற்கான தேடல்.” — அந்தோனி ராபின்ஸ்
“உலகளாவிய ஞானத்தின் ஒரு தொழில்முனைவோர் கதை, நம் சொந்த வாழ்க்கையின் வணிகத்திற்கு நாம் உபயோகிக்கலாம்.” — ஸ்பென்சர் ஜான்சன், எம்.டி
“இது என் முழு வாழ்க்கையையும் மாற்றியது. என்னை இந்த இடத்திற்கு அழைத்துச் செல்ல சதி செய்த அனைத்து மக்களையும் நான் உணர்ந்தேன். — ஃபாரல் வில்லியம்ஸ், இசைக்கலைஞர்
நினைவாற்றல்: வளர்ப்பது, பயிற்சியளிப்பது மற்றும் பயன்படுத்துவது எப்படி
Rs. 1,790.00Read moreவில்லியம் வாக்கர் அட்கின்சன்
“நான் வாசித்துள்ள புத்தகங்களிலேயே மிகவும் முக்கியமானது இந்தப் புத்தகம் தான். நினைவாற்றல் எவ்வளவு முக்கியமானது என்பதில் தொடங்கி, எமது மனதை மற்றும் உடலை பயன்படுத்தி நினைவாற்றலை வளர்ப்பதை பற்றி, புத்தகங்களில் இருந்து வாழ்க்கையில் பயன்படுத்த விடயங்களை பெறுவது முதல் அனைத்தும் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு முக்கிய புத்தகம்.” — நிர்மலா – யாழ்ப்பாணம், இலங்கை ( Nirmala – Jaffna, Sri Lanka )
“எல்லா அறிவும் நினைவு மட்டுமே.” நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஏராளமான தகவல்கள் நம்மை நோக்கி வீசப்படுகின்றன. நமது அன்றாடச் செயல்பாடுகளில் இருந்து முக்கியமான சிறிய விவரங்களை நினைவில் வைத்துக்கொள்வது வரை, நமது தொழில் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அவசியமான தரவுகளை மனப்பாடம் செய்வது வரை, நமது மனத் திறன்களின் செயல்திறனை முடிவில்லாமல் நம்புகிறோம்.
ஆனால் சில சமயங்களில் நாம் விரும்புவது போல் அது திறமையாக இருக்காது. ஒரு விளக்கக்காட்சியை வழங்குவதை மறந்துவிட்டு, புள்ளிவிவரங்களை நினைவில் கொள்ள முடியாத சூழ்நிலைகளில் நாம் நம்மைக் காண்கிறோம். நாங்கள் முன்பு சந்தித்த ஒருவரைச் சந்திக்கிறோம், ஆனால் இப்போது அவர்களின் பெயர் என்னவென்று தெரியவில்லை, நினைவில் இல்லை. நம் நினைவாற்றல் கூர்மையாக இருக்க வேண்டும், அதனால் விஷயங்களை நொடியில் நினைவுபடுத்த முடியும். நினைவாற்றலில் வில்லியம் வாக்கர் அட்கின்சன், அதை எவ்வாறு உருவாக்குவது, பயிற்சி செய்வது மற்றும் பயன்படுத்துவது, நமது நினைவகத்தை மேம்படுத்த, வளர்ப்பதற்கு மற்றும் பயிற்சியளிக்க எளிதான மற்றும் பொருந்தக்கூடிய முறைகளை வழங்குகிறது.
இந்தப் புத்தகம், மற்றவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தவும், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளவும் பயனுள்ள தகவல்களைத் தரும்; விரைவாகவும், முயற்சியில்லாமலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும் வழிகாட்டி.
ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி
Rs. 1,990.00Read moreஜேம்ஸ் ஜென்சன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது.
டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து, “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே “புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது” என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிகொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன்.
இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன். இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல். திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன். இதன் மூலம் நூலில் இடம்பெற்றிராத “ எப்படி செய்ய வேண்டும் “ என்பது போன்ற விஷயங்களையும் நாம் இந்நூலில் சேர்த்திருக்கிறேன். — ஜேம்ஸ் ஜென்சன்