Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- சிறுவர் புத்தகங்கள்
- பொதுவுடைமை
- வானவியல்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
இரண்டாம் உலகப் போர்
Rs. 1,590.00
மருதன்
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.
Out of stock
Notify me when stock available
About the Author
மருதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய மருதன் இதுவரை பன்னிரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார். பிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம், சே குவேரா: வேண்டும் விடுதலை, ஹ்யூகோ சாவேஸ்: மோதிப்பார்! ஆகியவை அவற்றுள் புகழ் பெற்றவை.
கல்கி, நக்கீரன், ரிப்போர்ட்டர் இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த மருதன், 2006ம் ஆண்டு முதல் கிழக்கு பதிப்பக்கத்தில் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அப்பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ளார்.
Book Specifications
Title: இரண்டாம் உலகப் போர்
Author: Marudhan / மருதன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 328
Weight: 417g
Published Year: 2009
Publisher: Kizhakku Pathippagam
ISBN: 978-8184931419
Print size: Please feel free to drop us a message.
Related products
ஹிட்லர்
Rs. 1,090.00Read moreபா. ராகவன்
ஒரு தனி மனிதனால் உலகையே அச்சுறுத்த முடியும், உலக சரித்திரத்தையே புரட்டிப்போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் அடால்ஃப் ஹிட்லர். இத்தனைக்கும் நமக்கு மிகச் சமகாலத்தில் வாழ்ந்து மறைந்தவர்தான் ஹிட்லர். ஆனாலும், நம்மால் நினைத்தே பார்க்க முடியாத அசாதாரணமான வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார்.
இரண்டாம் உலகப் போரை ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைத்தவர் ஹிட்லர்தான். கண்மூடித் திறப்பதற்குள் ஐரோப்பாவைச் சுருட்டி தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டார்.
குரூரத்தின் உச்சகட்டத்தை அநாயாசமாகக் கடந்து சென்றவர் ஹிட்லர். கரப்பான் பூச்சிகளை அடித்துக் கொல்வதைப் போல் மக்களைக் கொன்று குவித்தார். இவரது உத்தரவின்படி, நாஜிப்படைகள் மொத்தம் பதினொரு மில்லியன் மக்களை விதவிதமான முறைகளில் சாகடித்தன. கொல்லப்பட்டவர்களில் யூதர்கள் மட்டும் ஆறு மில்லியன் பேர். வார்த்தைகளால் விவரிக்கவே முடியாத பெரும்சோகம் அது.
பதைபதைக்க வைக்கும் ஹிட்லரின் வாழ்க்கை வரலாறை அதே அழுத்தத்துடன் இந்நூலில் பதிவு செய்துள்ளார் பா.ராகவன்.
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார்
Rs. 1,790.00Read moreஹோல்கர் கெர்ஸ்டன்
தமிழில்: உதயகுமார்
இயேசு நாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பும் பின்பும் அவர் வாழ்க்கையில் திகழ்ந்த சம்பவங்கள் பற்றி புதிய தகவல்களைக் கூறும் நூல் இது.இதை எழுதியவர் மேல்நாட்டு வரலாற்று ஆய்வாளர் ஹோல்கர் கெர்ஸ்டன். “இயேசு இளம் வயதில் இந்தியாவுக்கு வந்து மதத்தையும் புத்த மதத்தையும் ஆராய்ந்து விட்டுத் திரும்பிச் சென்றார்.
இயேசுவின் அறியப்படாத வாழ்க்கையின் பக்கங்கள்! இயேசு இந்தியாவில் வாழ்ந்தது உண்மையா? கிறிஸ்த்துவ மதம் ; கிழக்கத்திய மதங்களுடன் இயேசுவுக்கு இருந்த தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் ? மதவியல் ஆய்வாளர் ஹோல்கர் கொர்ஸ்டன், இயேசு இந்தியாவுக்கு வந்ததையும் , வாழ்ந்ததையும் , மறைந்ததையும் ஆதாரபூர்வமாக இந்நூலில் பதிவு செய்திருக்கிறார் ! இயேசு இளம் வயதில் பட்டு வியாபாரப் பாதை ( SILK ROUTE ) வழியாக இந்தியா வந்து , இந்து மதத்தையும், புத்த மதத்தையும் ஆழ்ந்தறிந்து, அவற்றின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக் கொண்டு ஆன்மீக ஆசானாக உறுமாறினார்.
உங்களுக்குள் இருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க
Rs. 2,790.00Read moreஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நீங்கள் ஏற்கனவே ஜான் சி. மேக்ஸ்வெல்லின் குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் புத்தகத்தைப் படித்திருந்தால், உங்களுக்குள் ஒளிந்திருக்கும் தலைமைத்துவத்தை வளர்த்தெடுக்க என்னும் இப்புத்தகம் தலைமைத்துவம் குறித்த உங்களது செயற்பாட்டறிவைப் பெருக்கிக் கொள்ளப் பெரிதும் உதவும். வெறும் உணர்ச்சிகளுக்கு விலை வைக்கவா இந்த படைப்பு? இல்லை! நிச்சயமாக இல்லை!
ஒரு விஷயம் பற்றி, ஒரு சில விஷயம் பற்றியாவது, ஒரு சின்னத்தீயாவது உங்களுக்குள் எரியத் துவங்க வேண்டும். அந்தச் சின்னத் ‘தீ’ உலகுக்கு ஒருநாள் விசால ஒளி காட்டும். அந்த விசால ஒளியால் மனிதம் பிறக்கும் – நம்பிக்கையில் எழுதுகோல் பிடித்துக்கொண்டு – வெள்ளைத்தாளின் பின்னே ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த என் ஓட்டத்திற்கு நீங்களும் துணை நின்றால் – நிச்சயம் வெற்றி நமக்குத்தான்.
[RARE] இந்தியாவின் வரலாறு (A History of India India) Part 1
Rs. 2,790.00Rs. 2,490.00Add to cartகொ.அ. அன்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின்
தமிழில்: பூ. சோமசுந்தரம், டாக்டர் இரா. பாஸ்கரன்
நூலாசிரியர்கள் பிரபல சோவியத் இந்திய இயல் வரலாற்றாளர்கள். இவர்கள் கடந்தகால மற்றும் நிகழ்கால இந்திய வரலாற்று ஆராய்ச்சியில் ஈடு பட்டுள்ளவர்கள்.
இந்நூலில் தொன்மைக் கால மற்றும் இடைக் கால இந்திய வரலாறு சுருக்கமான வடிவில் தரப்பட்டுள்ளது. 18ம் நூற்றாண்டின் நடுப் பகுதி வரை நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சி, அரசியல் வரலாறு, மதம், பண்பாடு ஆகியவற்றை நூலாசிரியர் கள் பகுப்பாய்வு சென்துள்ளனர்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
வால்காவிலிருந்து கங்கை வரை (Volgavilirundhu Gangai Varai)
Rs. 2,790.00Rs. 2,590.00Add to cartராகுல சாங்கிருத்தியாயன்
மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து- ஐரோப்பிய, இந்து- இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட ஒவ்வொரு, 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி! இந்தியாவின் அதிக வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மதவாதிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான புத்தகமும் கூட. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலின் 29 வது அழகிய செம்பதிப்பு இது.
கழுகு தரை இறங்கிவிட்டது
Rs. 1,190.00Read moreஜாக் ஹிக்கின்ஸ்
தமிழில்: கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ்
சரியாய் பகல் ஒரு மணிக்கு, ஜெர்மனியின் ராணுவத் தலைமைக்கு ஒரு சிறு தகவல் வந்து சேர்ந்தது. ‘கழுகு, தரையிறங்கிவிட்டது’.
எதிரி நாடுகளுக்குள் பாராசூட் கொண்டு இறங்கி சண்டை செய்ய பழக்கப்படுத்தப்பட்ட ஒரு ஜெர்மானிய வீரர்கள் குழு கர்னல் ஸ்டைனர் தலைமையில் இங்கிலாந்து நாட்டுக்குள் பத்திரமாக தரையிறங்கி விட்டது என்பதே இதற்கு அர்த்தம்.
கடற்கரையோரமாய் வார இறுதி நாட்களை அமைதியாக கழித்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்லை ஜெர்மனிக்கு கடத்திக்கொண்டு செல்ல, ரகசியத் திட்டத்துடன் வந்து இறங்கிய கூட்டமாகும்.
நாம் மறந்துபோன, ஆச்சரியமிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் உலகப் போரின் சரித்திர சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் மீண்டுமொருமுறை உங்களை 1943க்கே அழைத்துச்செல்லும்.
இந்த பரபரப்பான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது அதே ராணுவ நாட்களின் பரபரப்பு புத்தக வடிவில்…உங்கள் கைகளில்…
ஆழ்மனத்திற்கு அப்பாலுள்ள அதிசய சக்தி
Rs. 1,990.00Read moreஜேம்ஸ் ஜென்சன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
டாக்டர் ஜோசப் மர்ஃபி ஆழமன உளவியல் துறையின் முன்னோடிகளில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. 1963ல் ‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ என்ற அவருடைய நூல் வெளியானதிலிருந்து, ஆய்வுகள் மூலமாகப் பல கூடுதலான விஷயங்கள் ஆழ்மன உளவியல் துறையில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, இன்று நாம் வாழும் இவ்வுலகம், சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிடப் பெருமளவு மாறியுள்ளது.
டாக்டர் ஜோசப் மர்ஃபியின் மூல உரையைத் திருத்தியமைத்து, “ஆழ்மனத்தின் அற்புத சக்தி” என்ற அதன் தலைப்பிற்குக் கீழே வெறுமனே “புதிதாகத் திருத்தியமைக்கப்பட்டது” என்ற வார்த்தைகளுடன் அந்நூலை வெளிகொணரலாம் என்றுதான் முதலில் நான் நினைத்திருந்தேன்.
இது தொடர்பாக நான் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, இக்காலத்தியத் தகவல்கள் மிக அதிக அளவில் இருந்ததை நான் கண்டறிந்தேன். இதன் விளைவாக உருவானதுதான் இந்நூல். திருத்தியமைக்கப்பட்ட இப்புதிய பதிப்பின் மூலமாக இத்துறை தொடர்பான புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் வாசகர்களுக்கு வழங்க நான் முயற்சித்துள்ளேன். இதன் மூலம் நூலில் இடம்பெற்றிராத “ எப்படி செய்ய வேண்டும் “ என்பது போன்ற விஷயங்களையும் நாம் இந்நூலில் சேர்த்திருக்கிறேன். — ஜேம்ஸ் ஜென்சன்
அனைத்தையும் குறித்த சுருக்கமான வரலாறு: மனித அறிவுத் தேடலின் முழுக்கதை
Rs. 2,790.00Read moreபில் பிரைசன்
ப்ரவாஹன்
அறிவியல்… அது கசப்பான பாடங்களில் ஒன்று. ஆனால் அறிவியல் சாதனைகள் கசப்பானவையா? இல்லையே! அப்புறம் எப்படி பாடங்கள் மட்டும் கசப்பானவையாக இருக்கிறது என்றால், அதனைக் கற்பிக்கும் முறைதான் அதற்குக் காரணம். அறிவியலை எளிமையாகச் சொன்னால், அதைவிட த்ரில் வேறு எதிலும் இல்லை. அப்படி எழுதப்பட்ட புத்தகங்களில் முதன்மையானது இது. அதனால்தான் பில்பிரைசனின் இந்தப் புத்தகம் உலகிலேயே அதிகமாக விற்பனை ஆன புத்தகங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.
ஆரம்ப கால ஆதி மனிதர்கள் குறித்த இரண்டு அத்தியாயங்களை எழுதுவதற்காக 19 ஆயிரம் கி.மீ.தூரம் பயணம் செய்தார் பில்பிரைசன்…. உலகில் வாழும் 2,000 விஞ்ஞானிகளை நேரில் சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு ஒரு புத்தகம் எழுதினார். அதுதான் இது… அறிவியலை, நமக்கு அருகாமையில் கொண்டுவந்து நிறுத்தவும் செய்கிறது. — Junior Vikadan
தேச செல்வங்களின் கதை
Rs. 1,990.00Rs. 1,790.00Read moreலியோ ஹுபர்மேன்
தமிழில்: க. மாதவ்
இந்தப் புத்தகம் ஐரோப்பிய நில உறவுகளை அலசுகிறது. சிலுவைப்போர்களுக்கும் வர்த்தக விரிவாக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், புதிய பொருள் உற்பத்திகளின் தேவைகள், புதிய வர்க்கங்களின் தோற்றம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, நிலப்பிரபுத்துவம்-முதலாளித்துவத்தின் மோதல், தேசிய அரசுகளின் உருவாக்கம், அரசியல் அமைப்புகளின் தோற்றம்-வளர்ச்சி, தொழிற்புரட்சி, தொழிற்சாலை உற்பத்திமுறையின் தோற்றம், புதிய உலகங்களை கண்டுபிடித்தல், அடிமை வர்த்தகம், ஆரம்ப மூலதன குவியல், சந்தை விரிவாக்கம், மூலதன பரவல், ஏகாதிபத்திய வளர்ச்சி, சந்தைகள் பங்கீடு-மறுபங்கீடுக்கான யுத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் தோற்றம், தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி அமைதல், பாசிசத்தின் வளர்ச்சி ஆகிய வரலாற்று நிகழ்வுகளை மத்திய யுக காலந்தொட்டு நவீனகாலம் வரையிலான பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் தக்க சான்றுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
நாம் அறிந்த வரலாற்று பிரபலங்களின் உண்மை சொரூபம் இந்த வரலாற்று நிகழ்வுகளில் எவ்வாறு இருந்தது என்பதை இந்தப் புத்தகம் மிக சரியாக விளக்குகிறது. இந்தப் பிரபலங்களின் வர்க்க சார்பை மிகத் தெளிவாக சித்தரிக்கிறது.
இந்தப் புத்தகத்தின் பேசுபொருள் சிக்கலான சமூக, அரசியல், பொருளாதாரமாக இருந்தாலும், லியோ ஹூபர்மேன் அதை ஒரு கதைசொல்லியின் பாங்கில் கவித்துவமாக விளக்கியிருப்பதை வாசகர்கள் உணர்வார்கள்.
ஹோமோ டியஸ்: வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
Rs. 2,890.00Read moreயுவால் நோவா ஹராரி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
Wellcome Book Prize Nominee for Longlist (2017)
“மனிதர்கள் கடவுளரைக் கண்டுபிடித்தபோது வரலாறு தொடங்கியது. மனிதர்களே கடவுளராக மாறும்போது வரலாறு முடிவுக்கு வந்துவிடும்.”
– யுவால் நோவா ஹராரி