Category
- Novel
- University Magazine
- சிறுவர் புத்தகம் ( Children Books )
- English Books
- Physics
- Poetry
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- கட்டுரை
- கணிதம்
- கதைகள்
- சிறுகதைகள்
- சிறுவர் புத்தகங்கள்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பொதுவுடைமை
- வானவியல்
- விவசாயம்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
Product categories
- English Books
- (Auto)Biography & Memoir
- Artificial Intelligence
- Astronomy
- Atheism & Agnosticism
- Biological Sciences
- Business
- Career & Success
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Environment & Nature
- Health & Nutrition
- History
- Humor
- Investment & Strategy
- Linguistics
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mathematics & Physics
- Medicine
- Mental Health
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Oil Politics
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Physics
- Poetry
- Politics
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Science
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- Venture Capital
- War
- Women Empowerment
- Novel
- University Magazine
- சிறுவர் புத்தகம் ( Children Books )
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- இயற்பியல்
- உத்வேகம் & ஊக்கம்
- உயிரியல்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கதைகள்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- கிளாசிக்ஸ்
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சமூகவியல்
- சினிமா
- சிறுகதைகள்
- சிறுவர் புத்தகங்கள்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- தொழில்முனைவு
- நாவல்
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- பங்குச்சந்தை
- பணம்
- பயணக்குறிப்பு
- புனைவு
- பொதுவுடைமை
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மன ஆரோக்கியம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- வானவியல்
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
- வேதியியல்
குழந்தை வளர்ப்பு அறிவியல்
Rs. 1,550.00

ஸ்டீவன் ருடால்ப்
குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.
* உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான?மதிப்பெண்கள் பெறுகிறார்களா?
* நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா?
* டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா?
* சொன்ன பேச்சைக் கேட்பதில்லையா?
இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் ருடால்ஃப் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார். இந்தியப் பெற்றோர்களுக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனைகளைப் பல்வேறு உண்மை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார். ஸ்டீவன் ருடால்ஃப், பழம் பெருமை மிகுந்த இந்திய வேதங்களில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன நியூரோ சயின்ஸ் வரையில் கல்வி சார்ந்த ஏராளமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஃபரிதாபாத்தில் இருக்கும் ஜீவா இன்ஸ்டிட்யூட்டின் கல்வி இயக்குநராகவும் ஜீவா பள்ளியின் நிறுவனராகவும் இருக்கிறார். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாகக் கல்வித்துறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். அதில் கிடைத்த அறிவையெல்லாம் திரட்டி இந்த நூலில் பத்து விதிகளாக ரத்தினச் சுருக்கமாகத் தந்திருக்கிறார்.
குழந்தைப் பருவத்தில் இருந்து இளம் பருவம் வரையில் குழந்தை வளர்ப்பு தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும்.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: குழந்தை வளர்ப்பு அறிவியல்
Author: Steven Rudolph / ஸ்டீவன் ருடால்ப்
Language: Tamil
Binding: Paperback
Pages: 208
Weight: 210g
Published Year: 2011
Publisher: Kizhakku
ISBN: 978-8184936056
Dimensions: 13.97 x 1.04 x 21.59 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
-
காதல் மொழிகள் ஐந்து
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreகேரி சேப்மேன்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
காதலின் மொத்த வெளிப்பாடாகத் தெரியும் ஒரு விஷயம் உங்கள் கணவருக்கோ அல்லது மனைவிக்கோ அர்த்தமற்ற ஒன்றாகப் படலாம். இல்லறத்தில் ஈடுபட்டுள்ள இருவரும் ஒருவர் மற்றொருவரின் பிரத்யேகத் தேவைகளைப் புரிந்து கொள்ளக் கடைசியாக இப்புத்தகத்தின் மூலம் ஒரு வழி பிறந்துள்ளது. உங்கள் துணைவருக்குப் புரிந்த மொழியை நீங்கள் பேசக் கற்றுக் கொண்டு அவரிடம் பேசிப் பாருங்கள், உங்கள் காதல் வாழ்க்கையில் ஒரு புதிய வசந்தம் வீசத் துவங்குவதைக் கண்டு மெய்சிலிர்ப்பீர்கள்!
-
ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withRead moreசைமன் சினெக்
தமிழில்: PSV குமாரசாமி
ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன?
ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
ஸ்டீவ் ஜாப்ஸ், ரைட் சகோதரர்கள், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்.
பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
-
என் சீஸை நகர்த்தியது யார்?
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartஸ்பென்சர் ஜான்சன், எம்.டி.
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
என் சீஸை நகர்த்தியது யார்? ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் எளிய நீதிக்கதை. ஒரு பிரமைக்குள் வாழும் நான்கு கதாபாத்திரங்களின் வேடிக்கையான மற்றும் அறிவொளி தரும் கதை, அவை வளரவும், மகிழ்ச்சியடையவும் சீஸ் தேடுகிறது. ‘சீஸ்’ என்பது ஒரு நல்ல வேலை, அன்பான உறவு, பணம் அல்லது உடைமை, ஆரோக்கியம் அல்லது ஆன்மீக மன அமைதியாக இருந்தாலும், நீங்கள் வாழ்க்கையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதற்கான ஒரு உருவகமாகும்.
-
நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி: நம் வாழ்வின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் நடைமுறைக் கையேடு
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withAdd to cartநார்மன் வின்சென்ட் பீல்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
பூரண திருப்தியுடன் கூடிய ஒரு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ இலட்சக்கணக்கான மக்களுக்கு இப்புத்தகம் வழிகாட்டியுள்ளது. தோல்வி மனப்பான்மையை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து, ஒருவருக்குள் உறங்கிக் கிடக்கும் சக்தியை விழித்தெழச் செய்து அற்புதமான வாழ்க்கையை வாழ இந்த புத்தகம் அறிவுரைகளை கூறுகிறது.
-
சாக்குப்போக்குகளை விட்டொழியுங்கள்! சுயஒழுங்கின் வியத்தகு சக்தி
Rs. 2,590.00or 3 X Rs.863.33 withAdd to cartபிரையன் டிரேசி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
நிரந்தர மகிழ்ச்சியையும் வெற்றியையும் அடைய 21 வழிகள்.
அதிர்ஷ்டத்தாலோ அல்லது அசாதாரணமான திறமையாலோ மட்டுமே வெற்றியை அடைய முடியுமென்று பெரும்பாலான மக்கள் நினைக்கின்றனர். ஆனால் பெரும் சாதனையாளர்கள் பலர் வெற்றியை அடைவதற்கு மிகச் சாதாரணமான ஒரு கருவியைத்தான் உபயோகித்துள்ளனர். அதுதான் சுயஒழுங்கு.
-
வாழ்க்கை வாழ்வதற்கே! ( Vaazhkai Vaazhvadetke )
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartமேட் ஹெயிக்
தமிழில்: PSV குமாரசாமி
- Waterstones Book of the Year Nominee (2015)
மனத்தளர்ச்சியால் துவண்டு போயிருப்பவர்களுக்கு ஊக்கத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கும் நூல்!
தன்னுடைய மனநோயின் காரணமாக, சாவின் விளிம்புவரை சென்ற மேட் ஹெயிக், அதனுடன் எப்படிப் போராடி வெற்றி பெற்று, மீண்டும் வாழ்க்கையைக் கொண்டாடக் கற்றுக் கொண்டார் என்பதைப் பற்றிய ஓர் உண்மைக் கதை இது. ஏதோ ஒரு வழியில் நம் ஒவ்வொருவருடைய வாழ்வையும் மனநோய்கள் தொட்டுவிட்டுத்தான் செல்கின்றன. அதிர்ஷ்டவசமாக, அதனால் நாம் பாதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில், நம்முடைய அன்புக்குரியவர்களில் ஒருவரோ அல்லது நம்முடைய நண்பர்களில் ஒருவரோ அதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும். மனத்தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தவர் என்ற முறையில் தன்னுடைய அனுபவங்கள் குறித்த, மேட் ஹெயிக்கின் வெளிப்படையான பேச்சு, மனநோயால் சின்னாபின்னமாகி இருப்பவர்களுக்கு நம்பிக்கை ஒளியூட்டும்; அதன் தீவிரத்தைப் பற்றி எதுவும் அறியாமல் இருப்பவர்களின் கண்களைத் திறக்கும்.
-
கவலை வேண்டாம் ( Don’t Worry )
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withRead moreஷுன்மியோ மசுனோ
தமிழில்: PSV குமாரசாமி
சில நேரங்களில் நீங்கள் ஒரு விஷயம் குறித்துப் பெரிதும் கவலை அடைந்திருப்பீர்கள். ஆனால் திடீரென்று, அது எவ்வளவு முக்கியத்துவமற்றது என்ற பிரக்ஞை உங்களுக்கு ஏற்படும். அப்போது உங்களுக்கு ஏற்படுகின்ற ஆசுவாச உணர்வைக் கண்டு நீங்களே வியப்பீர்கள். இக்கணத்தில் உங்களுடைய கண்களுக்கு முன்னால் இருக்கின்ற விஷயங்களில் உங்களுடைய கவனத்தைக் குவிப்பதில்தான் சூட்சுமம் இருக்கிறது. அப்படிச் செய்வதன் மூலம், தேவையற்றப் பதற்றத்திலிருந்து உங்களை உங்களால் விடுவித்துக் கொள்ள முடியும்; அதோடு, உங்கள் மனமும் அமைதியடையும்.
இப்புத்தகத்திலிருந்து நீங்கள் கீழ்க்கண்டவற்றைக் கற்றுக் கொள்வீர்கள்:
• ஒப்பிடுவதை நீங்கள் நிறுத்தும்போது, உங்களுடைய மாயைகளில் தொண்ணூறு சதவீதம் மாயமாய் மறைந்துவிடுவதை நீங்கள் காண்பீர்கள்.
• உங்களுடைய உடைமைகளை உதறித் தள்ளுங்கள். அது உங்களுடைய மனத்தையும் உடலையும் லேசாக்கும்.
• அவசர அவசரமாக எதையும் செய்யாதீர்கள். தினமும் ஒரு முறையாவது சிறிது நேரம் அசையாமல் நின்று கொண்டிருங்கள்.
• நேர்மறையாக எதிர்வினையாற்றுங்கள். மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா இல்லையா என்பதைத் தீர்மானிக்கப் போவது நீங்கள்தான்.
• தேவையற்றவற்றைத் தேடித் திரியாதீர்கள்.
• போட்டியிலிருந்து தூரச் செல்லுங்கள், எல்லாம் தானாகவே சரியாகும். -
விரும்பப்படாத ஒருவராக இருப்பதக்காண துணிச்சல் (The Courage to be Disliked)
Rs. 2,990.00or 3 X Rs.996.67 withAdd to cartஇச்சிரோ கிஷிமி, ஃபூமிடாகா கோகா
PSV குமாரசாமி20ஆம் நூற்றாண்டின் உளவியல் ஜாம்பவான்களாகத் திகழ்ந்த சிக்மன்ட் ஃபிராய்டுக்கும் கார்ல் யுங்கிற்கும் இணையாக விளங்கிய மற்றொரு தலைசிறந்த, அதிகமாக அறியப்படாத உளவியலாளரான ஆல்ஃபிரெட் அட்லரின் உளவியல் கோட்பாடுகளை, இந்த நூல், ஒரு தத்துவஞானிக்கும் ஓர் இளைஞனுக்கும் இடையே நடக்கின்ற விவாதங்களின் வாயிலாக எடுத்துரைக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள தத்துவஞானி, தன்னுடைய மாணாக்கனான அந்த இளைஞனிடம், நம்முடைய கடந்தகாலத் தளைகளிலிருந்தும், பிறர் நம்மிடம் கொண்டுள்ள எதிர்பார்ப்புகள் மற்றும் சந்தேகங்களிலிருந்தும் விடுபட்டு எப்படி நம்மால் நம்முடைய சொந்த வருங்காலத்தை அமைத்துக் கொள்ள முடியும் என்பதை ஆணித்தரமாக விளக்குகிறார். இந்த விதமான சிந்தனை நமக்கு ஒரு விடுதலையுணர்வை அளிக்கிறது. நம்மைச் சுற்றியுள்ளவர்களும் நாமும் நம்மீது திணிக்கின்ற வரம்பெல்லைகளை அலட்சியம் செய்வதற்கும், நம் வாழ்க்கையை மாற்றிக் கொள்வதற்குமான துணிச்சலை இந்நூல் நமக்கு அளிக்கிறது. முக்கியத்துவம் வாய்ந்த இப்புத்தகத்திலுள்ள கோட்பாடுகள் நடைமுறைக்கு உகந்தவையாக இருப்பது இதன் தனிச்சிறப்பு. உலகெங்கிலுமுள்ள இலட்சக்கணக்கான மக்கள் இந்நூலைப் படித்துப் பயனடைந்துள்ளனர்.
-
காதலில் இருந்து திருமணம் வரை
Rs. 990.00or 3 X Rs.330.00 withRead moreசோம வள்ளியப்பன்
கனவு. கவலை. பயம். திருமணம் என்றதும் இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து நம்மைப் பிய்த்து தின்ன ஆரம்பிக்கின்றன. காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா? என் தகுதிக்கும் திறமைக்கும் கனவுக்கும் ஒத்துவரும் துணையை எங்கே எப்படித் தேடுவது? கண்டுகொண்டபின், எனக்கு ஏற்ற துணைதானா என்பதை எப்படிச் சரிபார்ப்பது? இந்தக் கனவு, கவலை, பயம் மூன்றும் நியாயமானதே. காரணம், திருமணம் என்பது வாழ்நாள் கமிட்மெண்ட். அடித்து எழுதுவதற்கும் திருத்தி மாற்றுவதற்கும் இங்கே இடமில்லை. அனைத்துத் திருமணங்களுமே சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன. ஆனால் திருமணத்துக்குப் பிறகு அவசியம் பூமிக்கு இறங்கி வரவேண்டியிருக்கிறது.
காரணம், நாம் வாழப்போவது இங்கேதான். எனவே, நம்மைத் தயார் செய்துகொள்ளவேண்டியிருக்கிறது. திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும். உங்கள் திருமணத்துக்கு நீங்கள் பெறப்போகும் பரிசுகளில் முதன்மையானது இதுவே
-
பணம்சார் உளவியல் (The Psychology of Money)
Rs. 1,950.00or 3 X Rs.650.00 withAdd to cartமார்கன் ஹெளஸ்ஸேல்
பணத்தைச் சிறப்பாகக் கையாள்வது என்பது, நீங்கள் எவ்வளவு அறிந்திருக்கிறீர்கள் என்பதை மட்டுமே பொறுத்து அமைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது, நீங்கள் எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அத்தகைய குணாதிசயத்தைக் கற்றுத்தருவது என்பது, மிகுந்த அறிவாளிகளுக்கே அரிதான செயல்.
“மார்கன் ஹௌஸ்ஸேல் போல் ஒருசிலரால் மட்டுமே, பொருளாதாரம் குறித்த இத்தகைய தெளிவைத் தரவியலும்.” — டேனியல் எச். பிங்க், “நியூயார்க் டைம்ஸ்’ -ஆல் மிக அதிக அளவில் விற்கப்படும் நூல் என்று குறிப்பிடப்பட்ட, ‘வென், டு செல் இஸ் யூமன், and டிரைவ்’ என்ற நூலின் ஆசிரியர்
“ஹௌஸ்ஸேல்-இன் கணிப்புகள் குறைந்தது இருமுறைகளாவது தினம் நிகழும்; அதற்கு முன்னர் குறிப்பிடப்படாதவற்றை அவை கோடிட்டுக்காட்டும். அவை ஒத்துக்கொள்ளக் கூடியனவாகவும் இருக்கும்.” –ஹோவர்ட் மார்க்ஸ், இணை நிறுவனர், இணை-மேலாளர், ஓக்டிரீ கேப்பிடல் மேனேஜ்மென்ட்
“மிகவும் சிக்கலான தத்துவங்களை. ஈர்க்கக்கூடிய வகையிலும், எளிதாகப் புரிந்துகொள்ளக்கூடிய விதத்திலும் சொல்லக்கூடிய எழுத்தாளர்.” –– ஆனி டியூக், ‘திங்கிங் இன் பெட்” என்ற நூலின் ஆசிரியர்
பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும். அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை. பொதுவாக, இரவு உணவை உண்ணும் நேரத்திலோ, நிறுவனங்களில் நடக்கும் கூட்டங்களின் மத்தியிலே அவர்கள் அத்தகைய முடிவுகளை எடுக்கின்றனர். அத்தகைய நிலையில், தங்கள் சொந்த அனுபவங்கள், உலகு குறித்த தங்கள் தனிப்பார்வை, கர்வம், தானெனும் அகம்பாவம், சந்தையாக்கத் திட்டங்கள், கிடைக்கப்போகும் சில சலுகைகள் இவை யாவும் எடுக்கும் அந்த முடிவுக்கான காரணிகளாக அமைகின்றன.
“பணம்சார் உளவியல்” என்னும் இந்நூலில், ஆசிரியர், பல்வேறு மக்கள், எப்படியெல்லாம் வித்தியாசமான முறைகளில் பணம் குறித்து யோசிக்கிறார்கள் என்பதை, 19 கதைகளின் மூலம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். மேலும் ஒரு மனிதனுக்கு, வாழ்க்கையில் மிக முக்கியமான முடிவுகளைக் குறித்து எப்படியான புரிதல் இருத்தல் அவசியம் என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.