Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

மாற்றம் எனும் மந்திரம்

Rs. 1,290.00

or 3 installments of Rs.430.00 with

சைமன் பெய்லி

 

உங்கள் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நீங்கள் தயாரா? நீங்களோ அல்லது உங்கள் நிறுவனமோ சந்தையில் நிகழ்ந்துள்ள மாற்றங்களால் திக்குமுக்காடிப் போயிருக்கிறீர்களா? அல்லது நாட்டில் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சூழல்களை எப்படிச் சமாளிப்பது என்ற கவலை உங்களை அரித்துக் கொண்டிருக்கிறதா? அல்லது புதிய விடிவெள்ளிக்காக நீங்கள் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? ‘ஐயோ! மீண்டும் திங்கட்கிழமை வந்துவிட்டது!’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? அல்லது எல்லாமே சிறப்பாகச் சென்று கொண்டிருப்பதாகப் பாசாங்கு செய்து கொண்டு கழுத்துவரை இழுத்து மூடிக் கொண்டு தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா?

 

கவலைப்படாதீர்கள். இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை. வருங்காலம் குறித்த பயமும். மாறிக் கொண்டிருக்கும் பொருளாதாரச் சூழ்நிலைகள் குறித்த அச்சமும் எல்லா இடங்களிலும் படமெடுத்து ஆடிக் கொண்டிருப்பதால், நன்னம்பிக்கை மனோபாவம் தேய்பிறையாக ஆகிக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

நன்னம்பிக்கை மனோபாவத்திற்கு மாறவும், நமக்காக ஒரு சிறப்பான வருங்காலத்தைப் படைக்கவும் துடித்துக் கொண்டிருக்கும் உங்களையும் என்னையும் போன்றவர்களுக்காகத்தான் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில்முறை வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தி, நம்முள் ஒளிந்திருக்கும் அளவற்ற ஆற்றலை அறுவடை செய்ய இப்புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும். இன்றைய சவாலான சூழலில், தங்களை மாற்றிக் கொண்டு, மாற்றத்திற்கான கிரியாஊக்கியாகத் தங்களை ஆக்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்திருக்கின்ற ஊழியர்கள், மேலாளர்கள், வணிகத் தலைவர்கள் ஆகியோருக்கானதுதான் இந்நூல். உங்களுடைய வாழ்க்கையில் நீண்டகால நோக்கில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த உங்களுக்குக் கண்டிப்பாகத் தேவைப்படும் ஊக்குவிப்பு, உள்நோக்கு, தெளிவான வழிகாட்டுதல் ஆகியவற்றை நீங்கள் இப்புத்தகத்தில் காண்பீர்கள்.

Out of stock

Notify me when stock available

About the Author

சைமன் பெய்லி, பள்ளிப் படிப்பிற்குப் பின் நேராக ஓர் உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். கடின உழைப்பின் மூலம் அத்துறையில் விரைவாக வளர்ந்த அவர், உலகப் புகழ் பெற்ற வால்ட் டிஸ்னி இன்ஸ்டிடியூட்டில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து அதன் விற்பனை இயக்குனராக ஆனார்.

உலகிலுள்ள ஆறு கண்டங்களிலும் உள்ள 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் அவர் பேசியுள்ளார். பெரிதும் விரும்பி அழைக்கப்படுகின்ற முதல் 25 பேச்சாளர்களில் சைமனும் ஒருவர் என்று ‘ஸ்பீக்கர்’ பத்திரிகை கூறியுள்ளது. ‘அமெரிக்கன் சிட்டி பிசினஸ் ஜர்னல்’ என்ற பத்திரிகைக்கு அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அதை ஒரு கோடிக்கும் அதிகமானோர் படித்து வருகின்றனர்.

சைமன் ஏழு புத்தகங்களை எழுதியுள்ளார். அவரது ‘ரிலீஸ் யுவர் பிரில்லியன்ஸ்’ என்ற புத்தகம் அமெரிக்க வணிக உலகம் படிக்கும் நூறு புத்தகங்களில் பதினேழாவதாக இடம்பெற்றிருந்தாக 800ceoread.com தெரிவிக்கிறது.

 

Book Specifications

Title: Shift Your Brilliance / மாற்றம் எனும் மந்திரம்
Author: Simon T. Bailey / சைமன் பெய்லி
Translator:
Language: Tamil
Binding: Paperback
Pages: 176
Weight: 220g
Published Year: 2014
Tamil Translation Published Year: 2015
Publisher: Embassy Books
ISBN:‎ 978-9385492389
Dimensions: 20.3 x 25.4 x 4.7 cm
Print size: Please feel free to drop us a message.