Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

மனிதகுலம்

Rs. 3,690.00

ருட்கர் பிரெக்மன்

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

“அருமை. பிரெக்மனின் வரலாற்று விவரிப்பு, மனித இயல்பு குறித்தப் புதிய புரிதலுக்கு இட்டுச் செல்கிறது. முன் எப்போதையும்விட இப்போதுதான் இது நமக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.”
— சூசன் கெயின்

“இந்நூலின் கருப்பொருள் மிக முக்கியமானது, இதன் வீச்சு பிரம்மாண்டமானது, கதை கூறும் விதம் வசீகரமானது. இது ஓர் அருமையான புத்தகம்.”
–டிம் ஹார்ஃபோர்டு

 

“மனிதகுலத்தை வெறுப்போரின் முழக்கங்களுக்கு இது சாவுமணி அடித்துள்ளது. கதிகலங்கிப் போயுள்ள உலகிற்கு நம்பிக்கையளிக்கின்ற ஒரு கலங்கரைவிளக்கமாக இந்நூல் திகழ்கிறது.”
–டேனி டோர்லிங்

 

“மனிதர்களின்” உள்ளார்ந்த நற்குணம் மற்றும் இயல்பான கண்ணியத்தின்மீதான அசாதாரணமான, ஆணித்தரமான நம்பிக்கைப் பிரகடனமாக இந்நூல் வெளிப்படுகிறது. நாம் நினைத்துக் கொண்டிருக்கின்ற அளவு நாம் காட்டுமிராண்டித்தனமான, மட்டுமீறிய பேராசையுடைய, வன்முறையான, எல்லாவற்றையும் அடித்துச் சாப்பிடுகின்ற மூர்க்கத்தனமான ஒரு விலங்கு அல்ல என்ற வாதத்தை ருட்கர் பிரெக்மன் ஆணித்தரமாகவும் நம்பத்தக்க விதத்திலும் இதில் எடுத்துரைக்கிறார்-சான்றுகள் இதற்கு நேரெதிராக இருக்கின்றபோதிலும்!”
— ஸ்டீபன் ஃபிரை, நடிகர்

 

“சில நூல்கள் நம்முடைய யோசனைகளுக்குச் சவால்விடுகின்றன. ஆனால், ‘மனிதகுலம்’ என்ற இந்நூல், அந்த யோசனைகள் எவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளனவோ, அந்த அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கிறது. இந்நூல் முன்வைக்கின்ற துணிச்சலான வாதம், நம்முடைய சமுதாயம், ஜனநாயகம், மனிதனின் அடிப்படை இயல்பு ஆகியவை குறித்து உங்களை மீண்டும் சிந்திக்க வைக்கும். மனிதன்மீதான நம்பிக்கை முற்றிலுமாக மறைந்துவிட்ட ஓர் ஆழ்கடலில், இவ்வுலகிற்கு இப்போது தேவைப்படுகின்ற, உறுதியான, மூழ்கடிக்கப்பட முடியாத, உயிர்காக்கும் படகாக இந்நூல் விளங்குகிறது.”
–டேனியல் எச். பிங், நூலாசிரியர்

 

“மனிதர்கள் அடிப்படையில் தன்னலவாதிகள், இனிமையற்றவர்கள் என்ற ஓர் எதிர்மறையான கண்ணோட்டத்தை உடைத்தெறிந்து, மனித இயல்பைப் பற்றிய ஒரு துல்லியமான, நமக்கு நம்பிக்கையூட்டுகின்ற ஓர் ஓவியத்தை இந்நூல் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது. நம்முடைய சிந்தனைக்குத் தீனி போடுகின்ற, நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த தலைசிறந்த சிந்தனையாளர்களில் ருட்கர் பிரெக்மனும் ஒருவர்.”
–ஆடம் கிரான்ட், நூலாசிரியர்

Out of stock

Notify me when stock available

மனிதர்கள் இயல்பிலேயே தன்னலவாதிகள் என்றும், தங்களுடைய சொந்த நலனுக்கு முன்னுரிமை கொடுத்தே அனைத்தையும் செய்பவர்கள் அவர்கள் என்றும் காலங்காலமாக நமக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு வந்துள்ளது. இடதுசாரிகளிலிருந்து வலதுசாரிகள்வரை, வரலாற்றியலாளர்களிலிருந்து எழுத்தாளர்கள்வரை, உளவியலாளர்களிலிருந்து தத்துவவியலாளர்கள்வரை அனைவரையும் ஒன்றிணைக்கின்ற ஒரு நம்பிக்கை அது. இந்த நம்பிக்கையின் வேர்கள் மாக்கியவெல்லியிலிருந்து ஹாப்ஸ்வரை, சிக்மண்ட் பிராய்டிலிருந்து டாக்கின்ஸ்வரை மேற்கத்தியச் சிந்தனைக்குள் ஆழமாக ஊடுருவியுள்ளன.

‘மனிதகுலம்’ எனும் இந்நூல் ஒரு புதிய விவாதத்தை முன்வைக்கிறது. அடிப்படையில் மக்கள் நல்லவர்கள் என்று அனுமானிப்பது எதார்த்தமானதாகவும், அதே நேரத்தில் புரட்சிகரமானதாகவும் இருக்கிறது என்ற வாதம்தான் அது. மற்றவர்களோடு போட்டி போடுவதற்குப் பதிலாக அவர்களோடு ஒத்துழைப்பதற்கும், அவர்களைச் சந்தேகிப்பதற்குப் பதிலாக அவர்களை நம்புவதற்கும் நமக்கு ஏற்படுகின்ற உள்ளுணர்வு, பரிணாம அடிப்படையில் உருவான ஒன்று. மற்றவர்களைப் பற்றி மோசமாக நினைப்பது, நாம் அவர்களை எவ்வாறு பார்க்கிறோம் என்பதன்மீது மட்டுமல்லாமல், நம்முடைய அரசியல்மீதும் பொருளாதாரத்தின்மீதும் தாக்கம் ஏற்படுத்துகிறது.
சர்வதேச அளவில் விற்பனையில் சாதனை படைத்துள்ள நூல்களை எழுதியுள்ள ருட்கர் பிரெக்மன், இந்த முக்கியமான நூலில், உலகில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பிரபலமான ஆய்வுகளில் சிலவற்றையும், பிரபலமான வரலாற்று நிகழ்வுகளில் சிலவற்றையும் எடுத்து, அவற்றை மறுவடிவமைப்பு செய்து, கடந்த 2,00,000 ஆண்டுகால மனிதகுல வரலாற்றைப் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்குகிறார்.

மனித இனத்தின் இரக்க குணத்திலும், தன்னலம் பாராமல் பிறருடைய நலன்மீது அக்கறை கொள்கின்ற பண்பிலும் நம்பிக்கை கொள்வது எவ்வாறு நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றியமைக்கும் என்பதையும், அந்த நம்பிக்கை, நம்முடைய சமுதாயத்தில் உண்மையான மாற்றத்தை உருவாக்குவதற்கான அடித்தளமாக எவ்வாறு செயல்படும் என்பதையும் பிரெக்மன் இந்நூலில் காட்டுகிறார்.

 

About the Author

ருட்கர் பிரெக்மன், ஐரோப்பாவின் பிரபலமான இளம் வரலாற்றியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர். டச்சு மொழியில் எழுதப்பட்ட ‘உட்டோப்பியா ஃபார் ரியலிஸ்ட்ஸ்’ என்ற அவருடைய முந்தைய நூல், நியூயார்க் டைம்ஸ் மற்றும் சண்டே டைம்ஸ் பத்திரிகைகள் தொகுத்து வழங்குகின்ற, ‘மிகச் சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்ற நூல்கள்’ பட்டியலில் இடம்பெற்றது. அது 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ‘த கரெஸ்பான்டென்ட்’ என்ற இணைய இதழில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காக, மிகப் பிரபலமான ‘ஐரோப்பியப் பத்திரிகை விருது’க்கு இரண்டு முறை அவர் பரிந்துரைக்கப்பட்டார். வாஷிங்டன் போஸ்ட் மற்றும் கார்டியன் பத்திரிகைகளிலும் அவருடைய படைப்புகள் இடம்பெற்றுள்ளன. ‘ஏழ்மை என்பது பணப் பற்றாக்குறையே அன்றி, நடத்தைப் பற்றாக்குறை அல்ல’ என்ற தலைப்பில் அவர் ஆற்றிய ‘டெட்’ சொற்பொழிவை இதுவரை 36 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். ‘பிக் இஷ்யூ’ பத்திரிகை வெளியிட்ட, 2020 ஆம் ஆண்டில் ‘உலகில் மாற்றம் ஏற்படுத்திய 100 நபர்கள்’ பட்டியலில் ருட்கர் பத்தாவது இடத்தைப் பிடித்திருந்தார். அவர் நெதர்லாந்தில் வசித்து வருகிறார்.

 

Book Specifications

Title: Humankind: A Hopeful History / மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு
Author: Rutger Bregman / ருட்கர் பிரெக்மன்
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 516
Weight: 430g
Published Year: 2019
Tamil Translation Published Year: 2022
Publisher: Manjul Publishing House
ISBN: 978-9355430878
Dimensions: 14 x 21.6 x 0.6 cm
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop