Category
- Novel
- University Magazine
- சிறுவர் புத்தகம் ( Children Books )
- English Books
- Physics
- Poetry
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- கட்டுரை
- கணிதம்
- கதைகள்
- சிறுகதைகள்
- சிறுவர் புத்தகங்கள்
- நாவல்
- பயணக்குறிப்பு
- பொதுவுடைமை
- வானவியல்
- விவசாயம்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
Product categories
- English Books
- (Auto)Biography & Memoir
- Artificial Intelligence
- Astronomy
- Atheism & Agnosticism
- Biological Sciences
- Business
- Career & Success
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Education & Research
- Entrepreneurship
- Environment & Nature
- Health & Nutrition
- History
- Humor
- Investment & Strategy
- Linguistics
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mathematics & Physics
- Medicine
- Mental Health
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Oil Politics
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Physics
- Poetry
- Politics
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Science
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- Venture Capital
- War
- Women Empowerment
- Novel
- University Magazine
- சிறுவர் புத்தகம் ( Children Books )
- தமிழ் Books
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- இயற்பியல்
- உத்வேகம் & ஊக்கம்
- உயிரியல்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கதைகள்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- கிளாசிக்ஸ்
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சமூகவியல்
- சினிமா
- சிறுகதைகள்
- சிறுவர் புத்தகங்கள்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- தொழில்முனைவு
- நாவல்
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- பங்குச்சந்தை
- பணம்
- பயணக்குறிப்பு
- புனைவு
- பொதுவுடைமை
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மன ஆரோக்கியம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- வானவியல்
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
- வேதியியல்
மார்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்
Rs. 1,190.00

சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
சேல்ஸ் என்பதைத் தேவையற்றதாக ஆக்குவதுதான் மார்க்கெட்டிங். உங்கள் மார்க்கெட்டிங் திறமையால், உங்கள் பொருளையோ சேவையையோ மக்கள் தாங்களாகவே முன்வந்து வாங்கிக் குவிக்கவேண்டும். உங்கள் லாபம் மேன்மேலும் பெருகவேண்டும்.
மார்க்கெட்டிங் என்பது அற்புதக் கலை. இதனை சரியாகச் செய்து வெற்றிகளை ஈட்டியவர்கள் பலர். ஆனால் எண்ணற்ற நிறுவனங்கள் தினம் தினம் இதனைத் தவறாகச் செய்து கையைச் சுட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. மார்க்கெட்டிங்கில் எப்படிப்பட்ட தவறுகள் எல்லாம் நடக்கின்றன என்பதை மிக அழகாக நமக்கு விளக்குகிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி. சாதாரணத் தவறுகள் அல்ல இவை. மாபாதகங்கள். இந்தப் பாதகச் செயல்களைச் செய்வோருக்கு மீளாத பாவம் வந்துசேரும். இந்தத் தவறுகளால் அவர்களுடைய நிறுவனங்களுக்குக் கடுமையான நஷ்டம் ஏற்படலாம்.
ஏன், நிறுவனத்தின் எதிர்காலமே பாதிக்கப்படலாம். எனவே, இவற்றைத் தவிர்க்க முயல வேண்டும். இந்தப் பஞ்ச மாபாதகங்களைப் பற்றிப் புரிந்துகொண்டால், வெற்றி நிச்சயம் என்று சொல்லமுடியாது. குறைந்தபட்சம் தோல்வியைத் தவிர்க்கமுடியும் என்று சொல்லலாம். சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் முந்தைய நூல்களான ‘மார்க்கெட்டிங் மாயாஜாலம்’, ‘விளம்பர மாயாஜாலம்’ ஆகியவை இந்த நிர்வாகத் துறைகளில் தமிழில் வெளிவந்த முதல் நூல்கள். பல எம்.பி.ஏ கல்லூரிகளில் மாணவர்களுக்குப் பரிந்துரை செய்யப்படும் புத்தகங்களாக உள்ளன. இந்த நூலும் அதே வரிசையில் வைக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. அதே நேரம், மார்க்கெட்டிங் துறையில் வேலை செய்வோருக்கு ஒரு சிறந்த கையேடாக இருக்கும் என்பதிலும் ஐயம் இல்லை.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: மார்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள்
Author: Sathish Krishnamurthy / சதீஷ் கிருஷ்ணமூர்த்தி
Language: Tamil
Binding: Paperback
Pages: 80
Weight: 100g
Published Year: 2013
Publisher: Kizhakku
ISBN: 978-8184937626
Dimensions: 20 x 14 x 4 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
-
பிசினஸ் சைக்காலஜி
Rs. 850.00or 3 X Rs.283.33 withதெருவோரப் பெட்டிக்கடை முதல் உலகம் முழுக்கக் கிளைகளைக் கொண்டிருக்கும் பன்னாட்டு நிறுவனம் வரை அனைவரும் தெரிந்துகொள்ளவிரும்பும் விஷயம், பிசினஸ் சைக்காலஜி.
· வாடிக்கையாளர்களை எப்படி ஈர்ப்பது?· அவர்களை எப்படித் தக்கவைத்துக்கொள்வது?
· அவர்களுடைய எண்ணிக்கையை எப்படி அதிகரிப்பது?
பொருள், சேவை என்று நீங்கள் விற்க விரும்புவது எதுவாக இருந்தாலும் உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும்.
வாடிக்கையாளரின் மனதுக்குள் நுழைந்து, அவர்களுடைய உளவியலைத் தெரிந்துகொண்டால்தான் உங்களால் அவர்களுடைய தேவைகளைத் துல்லியமாகப் பூர்த்தி செய்யவேண்டும். அதேபோல் உங்களுடைய போட்டியாளரின் உளவியலையும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களைவிடச் சிறப்பாக உங்கள் பொருளை அல்லது சேவையை நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவேண்டும்.
இந்தப் புத்தகம் உங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பிசினஸ் சைக்கலாலஜியை மிக எளிமையாக, மிகவும் ஜாலியாகக் கற்றுக்கொடுக்கிறது.
ஏராளமான எடுத்துக்காட்டுகளையும் வெற்றி ஃபார்முலாக்களையும் இது உள்ளடக்கியிருக்கிறது. உங்களிடம் இந்தப் புத்தகம் இருந்தால் உங்கள் துறையில் நீங்கள்தான் வெற்றியாளர்.
-
தொட்டதெல்லாம் பொன்னாகும்
Rs. 1,390.00or 3 X Rs.463.33 withRead moreசோம. வள்ளியப்பன்
சொந்தத்தொழில் செய்பவரா நீங்கள்?
வேலை கேட்காமல், வேலை கொடுப்பவரா நீங்கள்?
சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முதலாளியா நீங்கள்?
பெற்றிருக்கும் வியாபார வெற்றியை உறுதிசெய்துகொள்ள முயற்சிக்கிறீர்களா?
பெறும் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா?வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெற்றவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் போன்றவை மட்டுமல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது, ஊழியர்களை எப்படி ஊக்கப்படுத்துவது, போட்டியாளர்களை எப்படிப் பார்ப்பது, வியாபரத்தை எப்படிப் பெருக்குவது என்பது போன்ற, வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும், எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்கவேண்டிய புத்தகமாக, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுடன் விரிவும் செறிவும் செய்யபட்ட புதிய பதிப்பாக வருகிறது, பல ஆயிரம் பிரதிகள் விற்ற சோம வள்ளியப்பனின் வெற்றிப் புத்தகம்.
-
பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (அள்ள அள்ளப் பணம் – 3) ( Pangusanthai: Futures and Options )
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withAdd to cartசோம. வள்ளியப்பன்
நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்து கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F). அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O).
பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
-
போரின் கலை
Rs. 790.00or 3 X Rs.263.33 withAdd to cartஸுன் ஸு
“இந்த பண்டைய சீன உரை இன்னும் உலகெங்கிலும் உள்ள இராணுவ மற்றும் வணிகப் பள்ளிகளால் பயன்படுத்தப்படுகிறது … போர் கலை என்பது நம் காலத்தின் அத்தியாவசிய மூலோபாய வழிகாட்டியாகும்.” – டைம்-Time
“ஆர்வமுள்ள தலைவர்களுக்காக எழுதப்பட்ட மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான புத்தகம்.” – டொராண்டோ சன் டைம்ஸ் – Toronto Sun Times
“இராணுவக் கோட்பாடு இரண்டு வடிவங்களில் வருகிறது. முதலாவது போரின் தன்மை மற்றும் அரசியலுடனான அதன் தொடர்பைப் புரிந்துகொள்ளும் முயற்சி … இரண்டாவது மற்றும் மிகவும் பரவலான வடிவம் ‘அதை எப்படி செய்வது’ என்ற பிரிவில் வருகிறது … பெரும்பாலான இராணுவ வல்லுநர்கள் ஸுன் ஸுவின் தி ஆர்ட் ஆஃப் வார் முதலிடத்தில் இருப்பதை ஒப்புக் கொள்வார்கள், முன்னாள் பட்டியலில். ” – வாஷிங்டன் டைம்ஸ்-Washington Times
-
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்
Rs. 1,990.00or 3 X Rs.663.33 withRead moreதீபக் பஜாஜ்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் தங்கள் கனவுகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்புவதாலேயே மக்கள் இத்தொழிலுக்குள் வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடனும் ஊக்கத்துடனும் கடினமாக உழைத்தும்கூடப் பலரால் தங்களுடைய கனவு வருவாயையும் வாழ்க்கைமுறையையும் அடைய முடிவதில்லை.
வெற்றிக்குத் தேவையான சரியான தொழிலறிவும் திறமைகளும் உத்திகளும் கருவிகளும் அவர்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம். எந்தவொரு பொருளையும் எந்தவொரு வருவாய்த் திட்டத்தையும் கொண்ட எந்தவொரு நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனத்திலும் மேல்மட்ட சாதனையாளர்களில் ஒருவராக ஆவதற்கு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அனைத்தையும் இந்த வழிகாட்டி நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
-
பிசினஸ் ஸ்கூல்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartராபர்ட் கியோஸாகி
தமிழில்: க. சுப்பிரமணியன்
மிக அதிகமாக விற்பனையாகியுள்ள இந்நூலின் முதற்பதிப்பில், ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் எட்டு அனுகூலங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டாம் பதிப்பில், அவர் அவற்றை விரிவாக்கியுள்ளதோடு, கூடுதல் தகவல்களையும் இணைத்துள்ளார். சிறப்புப் பரிசாக, கிம் கியோஸாகி, ஷரோன் லெச்டர் மற்றும் டயான் கென்னடி ஆகியோர் நெட்வொர்க் மார்க்கெட்டிங்கிலுள்ள மேலும் மூன்று அனுகூலங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளனர்.
ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைக் கட்டியெழுப்புவதைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார்:
- இது செல்வத்தை அடைவதற்கான ஒரு புரட்சிகரமான வழி
- எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும்
- செயலூக்கம்,உறுதியான தீர்மானம், மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்
“நான் என்னுடைய பெருஞ்செல்வத்தை, நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலமாகச் சேர்க்காத காரணத்தால், அதைப் பற்றி என்னால் பாரபட்சமின்றி விளக்க முடியும். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் உண்மையான. பெரும்பணத்தை ஈட்டுவதற்கும் மேலான அனுகூலங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டங்களை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இதயம் உள்ள ஒரு தொழிலை நான் இறுதியாகக் கண்டறிந்துள்ளேன்.”
-
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்
Rs. 2,290.00or 3 X Rs.763.33 withAdd to cartராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாயிபுகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.
-
ரிச்சர்ட் பிரான்ஸன்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withRead moreஎன். சொக்கன்
பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.
ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை. தடைகள் வந்தன. எதிர்ப்புகள் அணிவகுத்தன. முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.
ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன். ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார். காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.
பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார். அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது. ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.
தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார். அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.
வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
-
விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி
Rs. 1,490.00or 3 X Rs.496.67 withAdd to cartஃபிராங்க் பெட்ஜர்
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
“நான் இதுவரை படித்தப் புத்தகங்களிலேயே விற்பனைத்திறம் பற்றி எழுதப்பட்டுள்ள மிகவும் உதவிகரமான, உங்களை அபாரமாக ஊக்குவிக்கக்கூடிய தலைசிறந்த புத்தகம் இதுதான்.” – டேல் கார்னகி, ‘நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி‘ என்ற நூலின் ஆசிரியர்
“இப்புத்தகம் எனக்குச் செய்துள்ள உபகாரங்களை அளவிட முடியாது. வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற எவரொருவரும் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இது.” –நார்மன் வின்சென்ட் பீல், ‘நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி‘ என்ற நூலின் ஆசிரியர்
இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:
- உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
- பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
- உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
- வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
- ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி
-
தள்ளு : மோட்டிவேஷன்
Rs. 1,190.00or 3 X Rs.396.67 withAdd to cartசோம. வள்ளியப்பன்
ஒருவரது செயல்திறனை மதிப்பீடு செய்வது எப்படி? சுமாராக பணியாற்றுபவர்கள் மேம்படுத்துவது எப்படி? ‘ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பைப் பெறுவது எப்படி? வேறுப்ட்ட மனநிலையில் இருக்கும் ஊ‘ழியர்களை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பது எப்படி? வேலைக்கு ஏற்ற தகுதிகளை வளர்த்துக்கொள்வது எப்படி? தகுதிக்கு ஏற்ற பணிகளைத் தேர்வு செய்வது எப்படி? ஊழியர்கள் தாங்கள் செய்யும் பணியில் எந்த அளவுக்கு மனநிறைவு பெற்றிருக்கிறார்கள் என்பதை எப்படிக் கண்டறிவது.?
ஒவ்வொரு ஊழியரும் அதிகபட்ச செயல்திறனை வெளிப்படுத்தி ஊக்கத்துடன் பணியாற்றினால்தான் நிறுவனத்தோடு சேர்ந்து நாமும் அடுத்த்தடுத்த கட்டங்களுக்கு முன்னேற முடியும். செயல்திறன் அதிகரிக்க ஊக்கம் தேவை. வெளியில் இருந்து மட்டுமல்ல. உள்ளுக்குள் இருந்தும். உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும் மோட்டிவேஷன் தியரிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நுணுக்கமான தகவல்கள், அவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கபட்ட முறைகள் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம். உங்கள் மேன்மைக்கும், உங்களுடன் பணிபுரிபைவர்களின் மேன்மைக்குமான புத்தகம் இது.