Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

முதல் உலகப் போர் ( Mudhal Ulagap Por )

Rs. 2,790.00

or 3 installments of Rs.930.00 with

மருதன்

 

உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது. முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்?

 

ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா?

 

இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும், இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும், ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்றதற்குமான மூல காரணம், முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது, விளைவு. மருதனின் இந்தப் புத்தகம், முதல் உலகப் போரின் அரசியல், சமூக, ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.

Out of stock

Notify me when stock available

About the Author

மருதன் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய மருதன் இதுவரை பன்னிரண்டு நூல்கள் எழுதியிருக்கிறார். பிடல் காஸ்ட்ரோ: சிம்ம சொப்பனம், சே குவேரா: வேண்டும் விடுதலை, ஹ்யூகோ சாவேஸ்: மோதிப்பார்! ஆகியவை அவற்றுள் புகழ் பெற்றவை.

கல்கி, நக்கீரன், ரிப்போர்ட்டர் இதழ்களில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்த மருதன், 2006ம் ஆண்டு முதல் கிழக்கு பதிப்பக்கத்தில் பணியாற்றி வருகிறார். தற்சமயம் அப்பதிப்பகத்தின் ஆசிரியராக உள்ளார்.

 

Book Specifications

Title: முதல் உலகப் போர்
Author: Marudhan / மருதன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 328
Weight: 417g
Published Year: 2011
Publisher: Kizhakku Pathippagam
ISBN: 978-8184935875
Print size: Please feel free to drop us a message.