Opening Possibilities, Illuminating Potentials
Islandwide Free Delivery. 2-5 Days.
Contact Us 0764980321

நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்

Rs. 1,990.00

தீபக் பஜாஜ்

 

நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் தங்கள் கனவுகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்று நம்புவதாலேயே மக்கள் இத்தொழிலுக்குள் வருகின்றனர். ஆனால், பல ஆண்டுகள் அர்ப்பணிப்புடனும் ஊக்கத்துடனும் கடினமாக உழைத்தும்கூடப் பலரால் தங்களுடைய கனவு வருவாயையும் வாழ்க்கைமுறையையும் அடைய முடிவதில்லை.

 

வெற்றிக்குத் தேவையான சரியான தொழிலறிவும் திறமைகளும் உத்திகளும் கருவிகளும் அவர்களிடம் இல்லாததுதான் அதற்குக் காரணம். எந்தவொரு பொருளையும் எந்தவொரு வருவாய்த் திட்டத்தையும் கொண்ட எந்தவொரு நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிறுவனத்திலும் மேல்மட்ட சாதனையாளர்களில் ஒருவராக ஆவதற்கு உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அனைத்தையும் இந்த வழிகாட்டி நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.

Out of stock

Notify me when stock available

About the Author

தீபக் பஜாஜ் ஒரு நூலாசிரியர், ஊக்குவிப்புப் பேச்சாளர், தலைசிறந்த பயிற்றுவிப்பாளர் மற்றும் உச்சகட்டச் செயற்திறனை வளர்த்தெடுக்கும் தனிநபர் பயிற்றுவிப்பாளர். தீபக் 2007ல் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் குதித்தபோது அவர் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் ஒரு பிராந்திய மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் தன் தொழிலைச் சிறப்பாகக் கட்டியெழுப்புவதற்காகத் தன் வேலையை ராஜினாமா செய்தார். குறுகிய காலத்திற்குள்ளாகவே அவர் நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலில் மாபெரும் வெற்றி பெற்று, ஓர் ஆடம்பரமான வாழ்க்கையை வாழலானார். கடந்த பதினாறு வருடங்களில் ஏழு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அவர் பயிற்சி அளித்துள்ளார். சமூக ஊடகங்களில் வலம் வரும் அவருடைய வீடியோக்களை மாதத்திற்கு முப்பது லட்சம் பேர் பார்க்கின்றனர். நேரடி விற்பனைத் தொழிலில் பல ஆண்டுகளின் ஊடாகத் தான் உருவாக்கியுள்ள வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும் உத்திகளைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்து அவர்களையும் வெற்றியாளர்களாக ஆக்குவதை அவர் தன் வாழ்வின் லட்சியமாக வரித்துக் கொண்டுள்ளார்.

 

Book Specifications

Title: Be a Network Marketing Millionaire / நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடீஸ்வரராக ஆகுங்கள்
Author: Deepak Bajaj / தீபக் பஜாஜ்
Language: Tamil
Binding: Paperback
Pages: 388
Weight: 330g
Published Year: 2019
Publisher: Manjul Publishing House
ISBN: 9789389143140
Dimensions: 20 x 14 x 4 cm
Print size: Please feel free to drop us a message.