Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.
Contact Us 0764980321

பாலஸ்தீன இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை ( Palestine – Israel Por: Oru Varalaatrup Paarvai )

Rs. 1,790.00

or 3 installments of Rs.596.67 with

நாகேஸ்வரி அண்ணாமலை

 

‘…பாலஸ்தீனத்தில் நமக்குப் பேரழிவு நேர்ந்தால், அதற்கு முதல் பொறுப்பு பிரிட்டன். இரண்டாவதாக, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் நம்மிடையே தோன்றியிருக்கும் இம்மாதிரியான பயங்கரவாதிகள்…’ –விஞ்ஞானி ஐன்ஸ்டைன்

 

‘…பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது… அங்கு இப்போது நடப்பதை எந்தத் தர்மத்தின்படியும் நியாயப்படுத்த முடியாது…’ –மகாத்மா காந்தி

 

உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது ஊடகங்களில் தினமும் செய்தியாகிரது, நியாயமான முடிவுகான இயலாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது, இதப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதைகளும் அறெபியர்களுக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ பிளவுபட்டிருக்கின்றன.

 

தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் இதன் முழுப் பரிமானத்தையும் கொண்டுவரவில்லை, நாகேஸ்வரி அண்ணாமலையின் இந்த நூல் பிரச்சனையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது. இதைப்படிப்பவர்கள் பாலஸ்தீனதில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்து கொள்வார்கள். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து இருசாரிடமும் விவாதித்து, பிரச்சனை தொடர்பான பல பரிமான்ங்களைப் படித்து எழுதியுள்ளார். ஆசிரியரின் நேரடியான நடை இந்தச் சிக்கலான பிரச்சினையை வாசகர்களுக்கு எளிதாக விளங்கவைக்கும்.

Out of stock

Notify me when stock available

About the Author

தமிழ்நாட்டின் கடைக்கோடி பகுதியொன்றில் பிறந்த நாகேஸ்வரி, பெரிய மொழி ஆளுமையான அண்ணாமலையின் மனைவி. இள வயதிலேயே கணவரோடு அமெரிக்கா சென்றவர். தன் குடும்பம், பிள்ளைகளின் எதிர்காலம் என்று அவர் காலத்துப் பெண்கள் பலரையும்போல ஒரு சின்ன வட்டத்துக்குள் அடைத்துக்கொண்டிருக்க வேண்டியவர். தன்னுடைய 60-வது வயதுக்குப் பிறகு, திடீரென எழுதத் தொடங்கினார்.

‘அமெரிக்காவில் முதல் வேலை’, ‘அமெரிக்க அனுபவங்கள்’, ‘அமெரிக்காவின் மறுபக்கம்’ என்று அமெரிக்கா பற்றி அவர் எழுதிய புத்தகங்கள் அமெரிக்க வாழ்வு, கலாச்சாரம் சம்பந்தமான தமிழின் முக்கியமான வரவுகளாக அமைந்தன. தொடர்ந்து, ‘ஐந்து தலைமுறை நாடார் பெண்களின் கதைகள்’, ‘பாலஸ்தீன இஸ்ரேல் போர்’, ‘போப் பிரான்சிஸ்’ ஆகிய புத்தகங்களை எழுதினார். அமெரிக்கா தொடர்பாக இங்கு நிலவும் பொது பிம்பத்தை உடைப்பவை நாகேஸ்வரியின் புத்தகங்கள்.

 

Book Specifications

Title: Palestine-israel Por / பாலஸ்தீன இஸ்ரேல் போர்
Author: Nageswari Annamalai / நாகேஸ்வரி அண்ணாமலை
Language: Tamil
Binding: Paperback
Pages: 283
Published Year: 2017
Publisher: Adaiyaalam Pathippagam
ISBN: 9788177202229
Print size: Please feel free to drop us a message.