Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

பணமே ஓடி வா

Rs. 790.00

or 3 installments of Rs.263.33 with

சோமா. வள்ளியப்பன்
 

சம்பாதிக்கத் தெரிந்த அளவுக்குச் சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை.நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமே கிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தகம்தான் ‘பணமே ஓடி வா’.’அள்ள அள்ளப் பணம்’ என்கிற பங்குச்சந்தை குறித்த புத்தக வரிசை எழுதி விற்பனையில் சாதனை படைத்த நூலாசிரியர் சோம.வள்ளியப்பன் குமுதத்தில் தொடராக எழுதிய நூல் இது. வாசகர்களால் பெரிதும் புகழப்பட்ட இப்புத்தகம் கால மாற்றத்துக்கு ஏற்ப சில புள்ளிவிவரங்கள், தகவல்கள், பின் இணைப்புகள் சேர்த்து, மேலும் சிறப்பாக உருவாகியிருக்கிறது. எக்ஸ்பிரஸ் வேகத்தில் பணம் உங்களைத் தேடி ஓடிவர இப்புத்தகம் உங்கள் பையில் இருந்தால் போதும்.

Out of stock

Notify me when stock available

About the author

 

BHEL, வேர்ல்பூல், பெப்சி, டாக்டர் ரெட்டீஸ் பவுண்டேஷன், நவியா, ஆகிய நிறுவனங்களில் 30 ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றியவர். BIM, IFMR, GLIM, AIMS போன்ற பல்வேறு மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் சிறப்பு சொற்பொழிவுகள் செய்பவர். அள்ள அள்ளப் பணம், இட்லியாக இருங்கள், ஆளப்பிறந்தவர் நீங்கள், உட்பட தமிழில் 50 புத்தகங்களும், You Vs you மற்றும் Bulls & Bears- all about shares என்ற தலைப்புகளில் இரண்டு ஆங்கிலப் புத்தகங்களும் எழுதியிருக்கிறார்.

தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு, நெய்வேலி புத்தக காட்சியின் சிறந்த எழுத்தாளர் பரிசு, ஏர்வாடி இராதாகிருஷ்ணன் பரிசு, கவிதை உறவு பரிசு மற்றும் ISTD பரிசு ( You Vs You புத்தகத்திற்கு) ஆகியவை இவர் எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரங்களில் சில. ஆனந்தவிகடன், குமுதம், நாணயம் விகடன், குமுதம் சினேகிதி, அமுதசுரபி, புதிய தலைமுறை, நமது நம்பிக்கை ஆகிய இதழ்களில் 19 தொடர்களும், தினமணியில் 40 க்கும் மேற்பட்ட நடுப்பக்க கட்டுரைகளும் எழுதியிருக்கிறார்.

தற்போது மேன்மை மேனேஜ்மெண்ட் கன்சல்டன்சி யின் தலைமை நிர்வாகியாக இருந்து பல்வேறு நிறுவனங்களுக்கும் கல்லூரிகளுக்கும் ஆலோசனைகள் மற்றும் மனிதவள மேம்பாட்டுப் பயிற்சி கொடுத்து வருகிறார்.

 

Book Specifications

Title: பணமே ஓடி வா
Author: Soma. Valliappan / சோமா. வள்ளியப்பன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 144
Weight: 300g
Published Year: 2017
Publisher: Kizhakku
ISBN: 978-9386737229
Dimensions: 13.97 x 0.86 x 21.59 cm
Print size: Please feel free to drop us a message.