Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- சிறுவர் புத்தகங்கள்
- பொதுவுடைமை
- வானவியல்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
(PDF) விற்பனைத் திறமையில் அற்புதம் சுருக்கம்
Rs. 599.00 Rs. 399.00
இந்த நூல் விற்பனையின் அடிப்படைகளைப் பற்றிப் பேசுகிறது – மக்களிடம் எப்படி விற்பது. பொருள்களைப் பற்றிய விவரங்களை எளிதாகப் பெற முடிகின்ற இந்த மின்னணு யுகத்தில், விற்பனைக்காக மக்களை அணுகுதல் என்ற கலை வேறெந்த காலத்தையும் விட இப்போது பொருத்தமாகிறது.
பல மில்லியன் கணக்கில் விற்பனையான ‘ஸ்கில் வித் பீப்பிள்’ போன்ற நூல்களின் ஆசிரியர், எதிர்வரும் சவால்களைக் குறைத்து, உங்கள் விற்பனை வானளாவி உயர்வதற்கு வழிமுறைகள் வழங்குகிறார்.
இது சுருக்கப்பட்ட புத்தகமாகும். விற்பனைத் திறமையில் அற்புதம் புத்தகத்தில் இருந்து சில முக்கியமான கருத்துகளை தேர்ந்தெடுத்து இந்த புத்தகத்தை ஒவ்வொரு வாசகரும் வாங்குவதற்கு முடியுமான வகையில் மிகக் குறைந்த விலைக்கு கிடைக்கச் செய்துள்ளோம்.
P.S – விற்பனைத் திறமையில் அற்புதம் புத்தகத்தில் பல முக்கியமான தலைப்புகள் உள்ளன மற்றும் எந்த வகையிலும் இந்த சுருக்கப்பட்ட பதிப்பு அனைத்தையும் உள்ளடக்காது. முழு புத்தகத்தில் இருந்து ஒரு துளி மட்டுமே இந்த சுறுக்கப்பட்ட புத்தகம். உங்களால் முடிந்தால் புத்தகத்தைப் பெற்றுப் படிக்குமாறு பரிந்துரைக்கிறோம்.
Title: Core Selling Skills / விற்பனைத் திறமையில் அற்புதம்
Author: Les Giblin / லெஸ் கிப்ளின்
Language: Tamil
File Size: 873 KB
Pages: 47
புத்தகத்தை வாங்குவதற்கு ‘Payhere’ஐ தெரிவு செய்யுங்கள்.
PDF’ஐ open செய்ய தேவையான ‘password’ உங்கள் மின்னஞ்சலுக்கு வரும்.
Note: Non-Refundable / திருப்பிச் செலுத்தப்படமாட்டாது
Related products
பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1)
Rs. 1,290.00Read moreசோம. வள்ளியப்பன்
பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்?
இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது. பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன
உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.அதிக ஆற்றல்வாய்ந்த மனிதர்களின் 7 பழக்கங்கள்
Rs. 4,690.00Rs. 4,390.00Read moreஸ்டீபன் ஆர். கவி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
தனிநபர் மாற்றத்திற்கான சக்தி மிக்க படிப்பினைகள் என, தனி மனித மேலாண்மைத் தத்துவங்களை விவரமாகத் தருகிறது. நான்கு பகுதிகளில் மேலாண்மைக் கருத்துகளைத் தெளிவாகக் கொடுத்துள்ளார் நூலாசிரியர் ஸ்டீபன் ஆர்.கவி. ஏழு பழக்கங்கள், தனி மனித வாழ்வையே வெற்றிகரமாக மாற்றியமைத்துவிடும் என்பதைப் பதிவு செய்கிறது. இதில், இவர் முதல் பழக்கமாக முன்வைப்பது, முன்யோசனையுடன் செயலாற்றுதல் என்பதை! பழக்கம் இரண்டு என இவர் குறிப்பிடுவது, முடிவை மனத்தில் வைத்துத் துவங்குதல் என்பதை! இதில் தனி மனித தலைமைத்துவம் குறித்த கொள்கைகள் இடம்பெற்றுள்ளன. அடுத்து மூன்றாவது பழக்கமாக, “முதலில் செய்ய வேண்டியவற்றை முதலில் செய்தல்’ என்பது. இதில் நிர்வாகம் குறித்தக் கருத்துகள் நிறைய உள்ளன.
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்
Rs. 1,690.00Read moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாயிபுகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.
பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை
Rs. 3,490.00Rs. 2,990.00Read moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
கியோஸாகி, ஹவாயில் வளர்ந்த விதம் மற்றும் கல்வி பெற்றுக் கொண்ட தன்மை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்தப் புத்தகம் பேசுகிறது. இரண்டு வேறுபட்ட வாழ்க்கைப் பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் பணம், வாழ்க்கை, வேலை என்ற விடயங்களை கையாண்ட முறைகளும் அந்த முறைகள் கியோசாகியின் வாழ்க்கையின் முக்கியமான தீர்மானங்களை எடுப்பதில் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பவற்றை விபரமாக இந்நூல் விபரிக்கிறது.
விளம்பர மாயாஜாலம்
Rs. 790.00Read moreசதீஷ் கிருஷ்ணமூர்த்தி
புதிய பொருள் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். அதனை மக்களிடம் எப்படி எடுத்துச்செல்லப் போகிறீர்கள்? உங்கள் பொருளை மக்கள் ஏன் வாங்கவேண்டும்? விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளையோ சேவையையோ மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்லக்கூட உங்களால் முடியாது. அதுவும் சரியான விளம்பரங்கள் இல்லையேல், உங்கள் பணம் வீண்தான்.
விளம்பரம் என்பது கலையும் அறிவியலும் கலந்த ஒரு தொழில்நுட்பம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும் அதனை அழகான விளம்பரமாக உருவாக்கத் தெரியாவிட்டால் பிரயோஜனம் இல்லை.
இன்று நாம் அனைவரும் விளம்பரங்கள் சூழ்ந்த ஓர் உலகில்தான் வசிக்கிறோம். வீட்டில் தொலைக்காட்சி, ரேடியோ, பத்திரிகைகள். வீதியில் இறங்கினால், விளம்பரத் தட்டிகள். விட்டால் நம் முதுகிலேயே விளம்பர போஸ்டரை ஒட்டிவிட்டுப் போய்விடு-வார்கள். இவ்வளவு லட்சம் விளம்பரங்களுக்கு இடையே, மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்கள் மனத்தில் பதியுமாறு விளம்பரம் செய்வது எப்படி?
விளம்பரம் என்றால் என்ன?
குறிப்பிட்ட ஒரு பொருள் அல்லது சேவைக்கான விளம்பரத் திட்டத்தை எப்படி முடிவுசெய்வது?
வெற்றிகரமான விளம்பரங்களை எப்படி உருவாக்குவது?
விளம்பர உத்திகளைக் கையாண்டு விற்பனையை அதிகப்படுத்துவது எப்படி?
விளம்பரங்களில் பெண்கள் அதிகம் தோன்றுவது ஏன்?
வர்த்தகர்களுக்கும் தொழில் முனைவோருக்கும் பயனளிக்கக்கூடிய நூல் இது.
போரின் கலை
Rs. 690.00Read moreஸுன் ஸு
“இந்த பண்டைய சீன உரை இன்னும் உலகெங்கிலும் உள்ள இராணுவ மற்றும் வணிகப் பள்ளிகளால் பயன்படுத்தப்படுகிறது … போர் கலை என்பது நம் காலத்தின் அத்தியாவசிய மூலோபாய வழிகாட்டியாகும்.” – டைம்-Time
“ஆர்வமுள்ள தலைவர்களுக்காக எழுதப்பட்ட மிகவும் பயனுள்ள மற்றும் முக்கியமான புத்தகம்.” – டொராண்டோ சன் டைம்ஸ் – Toronto Sun Times
“இராணுவக் கோட்பாடு இரண்டு வடிவங்களில் வருகிறது. முதலாவது போரின் தன்மை மற்றும் அரசியலுடனான அதன் தொடர்பைப் புரிந்துகொள்ளும் முயற்சி … இரண்டாவது மற்றும் மிகவும் பரவலான வடிவம் ‘அதை எப்படி செய்வது’ என்ற பிரிவில் வருகிறது … பெரும்பாலான இராணுவ வல்லுநர்கள் ஸுன் ஸுவின் தி ஆர்ட் ஆஃப் வார் முதலிடத்தில் இருப்பதை ஒப்புக் கொள்வார்கள், முன்னாள் பட்டியலில். ” – வாஷிங்டன் டைம்ஸ்-Washington Times
குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள்
Rs. 890.00Read moreஜான் சி. மேக்ஸ்வெல்
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
எவரொருவரும் எந்தவொரு குழவிலும் சிறப்பாகச் செயல்பட, தனிப்பட்ட முறையில் தன்னிடம் கொண்டிருக்க வேண்டிய 17 முக்கியப் பண்புகளைப் பற்றி ஜான் மேக்ஸ்வெல் இப்புத்தகத்தில் எடுத்துரைக்கிறார். அவரது விரிவான விளக்கங்களும் எளிய உதாரணங்களும் சுலபமாகப் புரிந்து கொள்ளக் கூடியவை. குடும்பம், அலுவலகம், விளையாட்டு அணி போன்ற எல்லா இடங்களிலும் அவை பொருந்தும் என்பது அவற்றின் சிறப்பு.
- குழுவில் இடம்பெற்றிருக்கும் எவரொருவருக்கும் அடுக்கடுக்காக வெற்றிகளை ஈட்டித்தரவல்ல பண்புநலன்களில் சில:
- தெளிந்த நோக்குடன் இயங்குதல்: எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் இலக்கு நோக்கியே இருத்தல்
- அரவணைத்துச் செல்லுதல்: பிறருடைய நலனில் கருத்தூன்றிச் செயல்படுதல்
- தன்னலமின்றிச் செயலாற்றுதல்: குழுவின் நலனுக்காக எந்த
வேலையையும் விருப்பத்துடன் ஏற்றுக்கொள்ளுதல் தளராத உறுதியுடன் இருத்தல்: பின்னடைவுகளை எதிர்கொள்ளும்போதும் நன்னம்பிக்கையுடன் கடினமாக உழைத்தல் .
இத்தகையப் பண்புநலன்கள் குழு உறுப்பினர்கள் மீதும் குழுவின் வெற்றிமீதும் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை மேக்ஸ்வெல் இங்கு சித்தரித்துக் காட்டுகிறார். குழுவில் சிறப்பாகச் செயல்பட 17 முக்கியப் பண்புகள் எனும் இந்நூல் ஏதோ போகிற போக்கில் அறிவுரைகள் அள்ளித் தெளிக்கும் விதத்திலோ, வறட்டுச் சிந்தனையின் வடிவமாகவோ அமையவில்லை; மாறாக, இது குழுநலனை முன்னிறுத்தும் குழு உறுப்பினர்களின் மதிப்பை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட வலிமையிக்கச் செயல்பாடுகளை விவரிக்கின்றது.
பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் (அள்ள அள்ளப் பணம் – 3)
Rs. 1,290.00Read moreசோம. வள்ளியப்பன்
நீங்கள் ஓட்டல் நடத்துகிறீர்கள். சாம்பாருக்குக் கத்திரிக்காய் வேண்டும். இப்போது கிலோ விலை ரூ. 9.75. விலை மேலும் ஏறலாம் என்று நினைக்கிறீர்கள். காய்கறி விவசாயி ஒருவர் அடுத்த மூன்று மாதங்களுக்கு எது என்ன ஆனாலும் கிலோ ரூ. 10 என்ற கணக்கில் தருவதாக உறுதி கூறுகிறார். நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்கள்.
ஆனால் ஒரு சிக்கல். அடுத்த வாரமே தெருவில் கிலோ ரூ. 7&க்குக் கிடைத்தாலும் ரூ.10 என்ற கணக்கில் விவசாயிடமிருந்து பத்து கிலோவை வாங்கியே தீரவேண்டும். அதேபோல, சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.12க்குப் போனாலும் விவசாயி உங்களுக்கு ரூ. 10க்கே தந்தே தீரவேண்டும். இதுதான் ஃபியூச்சர்ஸ் (F). அதுவே, அந்த விவசாயியிடம் கிலோ ரூ.10 என்ற கணக்கில் வாங்கிக்கொள்ள முன்பணமாக கிலோவுக்கு ரூ.1 கொடுத்துவிடுகிறீர்கள். தெருவில் கிலோ ரூ.7&க்குக் கிடைத்தால், முன்பணம் போனால் போகட்டும் என்று விட்டுவிட்டு, தெருக் கத்திரிக்காயை வாங்கிக்கொள்ளலாம். அதுதான் ஆப்ஷன்ஸ் (O).
பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த F & O. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் என்று ஹாலிவுட் படத்துக்கு நிகரான பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்புற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்.
பிசினஸ் ஸ்கூல்
Rs. 1,990.00Read moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: க. சுப்பிரமணியன்
மிக அதிகமாக விற்பனையாகியுள்ள இந்நூலின் முதற்பதிப்பில், ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் எட்டு அனுகூலங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டாம் பதிப்பில், அவர் அவற்றை விரிவாக்கியுள்ளதோடு, கூடுதல் தகவல்களையும் இணைத்துள்ளார். சிறப்புப் பரிசாக, கிம் கியோஸாகி, ஷரோன் லெச்டர் மற்றும் டயான் கென்னடி ஆகியோர் நெட்வொர்க் மார்க்கெட்டிங்கிலுள்ள மேலும் மூன்று அனுகூலங்களைப் பற்றி இதில் எழுதியுள்ளனர்.
ராபர்ட் கியோஸாகி, நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலைக் கட்டியெழுப்புவதைப் பற்றி இவ்வாறு விளக்குகிறார்:
- இது செல்வத்தை அடைவதற்கான ஒரு புரட்சிகரமான வழி
- எவரொருவராலும் இதைப் பின்பற்ற முடியும்
- செயலூக்கம்,உறுதியான தீர்மானம், மற்றும் விடாமுயற்சி உள்ள எவருக்கும் இது சாத்தியம்
“நான் என்னுடைய பெருஞ்செல்வத்தை, நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலமாகச் சேர்க்காத காரணத்தால், அதைப் பற்றி என்னால் பாரபட்சமின்றி விளக்க முடியும். நெட்வொர்க் மார்க்கெட்டிங் தொழிலின் உண்மையான. பெரும்பணத்தை ஈட்டுவதற்கும் மேலான அனுகூலங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டங்களை இப்புத்தகம் எடுத்துரைக்கிறது. இதயம் உள்ள ஒரு தொழிலை நான் இறுதியாகக் கண்டறிந்துள்ளேன்.”
ரிச்சர்ட் பிரான்ஸன்
Rs. 1,190.00Read moreஎன். சொக்கன்
பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.
ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை. தடைகள் வந்தன. எதிர்ப்புகள் அணிவகுத்தன. முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.
ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன். ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார். காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.
பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார். அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது. ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.
தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார். அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.
வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.