Opening Possibilities, Illuminating Potentials
Island-wide Free Delivery

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4)

Rs. 1,190.00

சோம. வள்ளியப்பன்

 

    பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார்.
    பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.

Out of stock

Notify me when stock available

பங்குச்சந்தைக்கு ஒருவர் வருவதற்கான முக்கிய நோக்கம், பணம் பண்ணுவதற்குத்தானே! கொண்டு வருகிற பணத்தைவிடக் கூடுதல் பணத்தை இங்கிருந்து எடுக்க வேண்டு மல்லவா? பெரும்பாலானவர்களுக்கு அது நேருவதில்லை என்பதைத் தெரிந்து கொண்ட போது அதிர்ச்சியாக இருந்தது. அதற்கான நிச்சய வழியை விரிவாகத் தெரிவிப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

 

About the Author

சோம. வள்ளியப்பன் ஒரு இந்திய எழுத்தாளர், பேச்சாளர், பயிற்சியாளர் மற்றும் மனித வள மேலாண்மை, ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் ஆகிய துறைகளில் நிபுணர் ஆவார். சுய மேம்பாடு, பங்குச் சந்தை, உணர்ச்சி நுண்ணறிவு, நேர மேலாண்மை, விற்பனை, தலைமைத்துவம் மற்றும் ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 60 புத்தகங்களை எழுதியுள்ளார்.

 

Title: Portfolio Muthaleedugal / பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4)
Author: Soma. Valliyappan / சோம. வள்ளியப்பன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 150
Weight: 140g
Published Year: 2009
Publisher: Kizhakku Pathippagam
ISBN: 9788184930641
Print size: Please feel free to drop us a message.

Cart

Your Cart is Empty

Back To Shop