Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- சிறுவர் புத்தகங்கள்
- பொதுவுடைமை
- வானவியல்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
ரிச்சர்ட் பிரான்ஸன்
Rs. 1,190.00
என். சொக்கன்
பணி என்பது பணம் பண்ண மட்டுமே அல்ல. ரசித்து, அனுபவித்துச் செய்யுங்கள். நீங்கள் விரும்பிய அனைத்தும் உங்கள் பின்னால் வரும்! இதுதான் ரிச்சர்ட் பிரான்ஸனின் வெற்றிச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தைப் பயன்படுத்தி அவர் சென்ற உயரம் பிரம்மாண்டமானது.
ஆனால் அந்த உயரத்தை அவர் ஒன்றும் அநாயாசமாகத் தொட்டுவிடவில்லை. தடைகள் வந்தன. எதிர்ப்புகள் அணிவகுத்தன. முன்னேறும் பாதையில் முட்டுக்கட்டைகள் விழுந்தன. குறிப்பாக, வெர்ஜின் விமான சேவையைத் தொடங்கியபோது பெரும் பண முதலைகள் எல்லாம் அவரை அழுத்தப் பார்த்தன.
ஆனால் அனைத்தையும் நம்பிக்கையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொண்டார் பிரான்ஸன். ஆகவே, சாதித்தார். வர்த்தக உலகம் சந்தித்த மற்ற வெற்றியாளர்களிடம் இருந்து பிரான்ஸன் பல விஷயங்களில் வேறுபடுகிறார். காத்திரமான பண பலத்துடன் களத்தில் இறங்கவில்லை.
பரம்பரைப் பணக்காரரும் இல்லை. ஆனாலும் அவர் சாதனைகளின் உச்சத்தைத் தொட்டார். அது தான் சாமானியர்கள் பலரையும் பிரான்ஸனை நோக்கி ஈர்த்தது. ஈர்த்துக்கொண்டே இருக்கிறது.
தொழில் முனையும் ஆர்வம் உள்ள அத்தனை பேருக்கும் ரிச்சர்ட் பிரான்ஸன் ஆதர்சமாகத் தெரிகிறார். அது ஏன் என்பதை நுணுக்கமான ஆய்வின் வழியாக எடுத்துச் சொல்லியிருக்கிறார் என். சொக்கன்.
வர்த்தக வெற்றியாளர்கள் பலருடைய வாழ்க்கையையும் புத்தகமாகப் பதிவு செய்திருப்பவர் அவர் என்ற வகையில் இந்தப் புத்தகம் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: Richard Branson / ரிச்சர்ட் பிரான்ஸன்
Author: N. Chokkan / என். சொக்கன்
Language: Tamil
Binding: Paperback
Pages: 184
Weight: 250g
Published Year: 2013
Publisher: Sixth Sense Publication
ISBN: 9789382577720
Dimensions: 13.97 x 0.99 x 21.59 cm
Print size: Please feel free to drop us a message.
Related products
ஸ்டீவ் ஜாப்ஸ்
Rs. 2,990.00Read moreவால்டர் ஐசாக்ஸன்
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டீவ் ஜாப்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல்கள், அத்துடன் அவருடைய குடும்பத்தினர், நண்பர்கள், எதிரிகள், போட்டியாளர்கள் சக ஊழியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் நடத்திய உரையாடல்களையும் அடிப்படையாகக் கொண்டு உருவானது இந்தப் புத்தகம்.
இது பன்னாட்டளவில் பாராட்டப்பட்ட கண்டுபிடிப்பு தன்மையுள்ள ஓர் இறுதிச் சின்னத்தின் வாழ்க்கை வரலாறு. கச்சிதத்தின் மீதான ஆர்வம், ஆவேசம் மிக்க ஆற்றல் ஆகியவற்றால் ஸ்டீவ் ஜாப்ஸ் கணினிகள்,அனிமேசன் திரைப்படங்கள், இசை, கைபேசிகள், டாப்லெட் கணினிப் பயன்பாடு, டிஜிட்டல் பதிப்பு என ஆறு வெவ்வேறு தொழில்துறைகளில் பெறும் புரட்சியை உருவாக்கியவர்.
வால்டர் ஐசாக்ஸன் இன்னூலில் விறுவிறுப்பூட்டும் நடையில் ஆக்க காலத்திறன் மிக்க ஒரு தொழில்முனைவரின் தீவிரம் பொதிந்த ஆளுமையையும் ஏற்ற இறக்கங்கள் மிகுந்த வாழ்க்கையின் கதையையும் விவரிக்கிறார்.
செல்வபுரிக்கான விரைவுப் பாதை: செல்வத்தைக் குவிப்பதற்கான புதிரை விடுவியுங்கள்!
Rs. 3,690.00Rs. 3,390.00Read moreஎம்ஜே டிமார்க்கோ
தமிழில்: PSV குமாரசாமி
“எனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த புத்தகம் என்றதால் அவரின் பரிந்துரைக்கு அமைய இப்புத்தகத்தை Flashbooks.lk இல் பெற்றுகொண்டேன். எமது வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ பணத்தை எமது கட்டுப்பாட்டிட்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் எனவும், அதற்காக டிமார்க்கோ கூறும் செயல்முறைக்கேற்ற உத்திகளும் first class. கட்டாயம் இப்புத்தகத்தை வாசியுஙகள்.” —சுரேஷ், நுவர எளிய, இலங்கை ( Suresh, Nuwara Eliya, Sri Lanka)
வணிகவியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் செலவழித்துக் கற்றுக் கொள்வதைவிட அதிகமாக இந்த நூலிலிருந்து இரண்டே நாட்களில் கற்றுக் கொள்ளலாம்!
நண்பர்களை எளிதாகப் பெறுவதும் மக்களிடம் செல்வாக்குடன் விளங்குவதும் எப்படி
Rs. 1,990.00Read moreடேல் கார்னகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
உலகில் இதுவரை வெளிவந்துள்ள ஊக்குவிப்புப் புத்தகங்களிலேயே மிகச் சிறந்த வெற்றியைப் பெற்றுள்ள புத்தகம் இது. உங்களுடைய தனிப்பட்ட உறவுகளைத் திறம்பட நிர்ணயிப்பதற்குக் காலத்தால் அழியாத அறிவுரைகளை டேல் கார்னகி இப்புத்தகத்தில் உங்களுக்கு வழங்குகிறார். அதோடு, கீழ்க்கண்டவற்றையும் உங்களுக்கு அவர் விளக்கிக் காட்டுகிறார்:
• உங்கள் கருத்துக்களைச் சாணக்கியத்துடனும் சாதுரியத்துடனும் பிறருக்கு எடுத்துரைப்பது எப்படி?
• மக்களை உங்கள்மீது விருப்பம் கொள்ள வைப்பது எப்படி?
பிறரிடம் வேலை வாங்கும் உங்கள் திறனை அதிகரித்துக் கொள்வது எப்படி?
உரையாடல் கலையில் சிறந்து விளங்குவது எப்படி?
• அதிகத் திறன்மிக்கத் தலைவராகப் பரிணமிப்பது எப்படி?
கடந்த 70 வருடங்களாக இப்புத்தகம் தொடர்ந்து அச்சில் இருந்து வருகிறது. இதுபோன்ற நூல்களில் இதுதான் முதலாவதும் முத்தாய்ப்பானதும் ஆகும். நீங்கள் வெற்றிப் பாதையில் பயணிக்க இந்த ஒரு புத்தகம் மட்டுமே உங்களுக்குத் தேவை!
என் சீஸை நகர்த்தியது யார்?
Rs. 1,390.00Read moreஸ்பென்சர் ஜான்சன், எம்.டி.
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
என் சீஸை நகர்த்தியது யார்? ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தும் எளிய நீதிக்கதை. ஒரு பிரமைக்குள் வாழும் நான்கு கதாபாத்திரங்களின் வேடிக்கையான மற்றும் அறிவொளி தரும் கதை, அவை வளரவும், மகிழ்ச்சியடையவும் சீஸ் தேடுகிறது. ‘சீஸ்’ என்பது ஒரு நல்ல வேலை, அன்பான உறவு, பணம் அல்லது உடைமை, ஆரோக்கியம் அல்லது ஆன்மீக மன அமைதியாக இருந்தாலும், நீங்கள் வாழ்க்கையில் என்ன விரும்புகிறீர்கள் என்பதற்கான ஒரு உருவகமாகும்.
ஏன் என்ற கேள்வியில் இருந்து துவக்குங்கள்
Rs. 2,590.00Add to cartசைமன் சினெக்
தமிழில்: PSV குமாரசாமி
ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன?
ஏனெனில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, தொழில்வாழ்க்கையிலும் சரி, நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. ஏன் அதைச் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.
ஸ்டீவ் ஜாப்ஸ், ரைட் சகோதரர்கள், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், ஆகியோருக்கு இடையே ஓர் ஒற்றுமை இருந்தது. அவர்கள் அனைவரும் ஏன் என்ற கேள்வியிலிருந்து துவக்கினர்.
பிறரை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களுக்கும் சரியான தலைவர்களை அடையாளம் காண ஆசைப்படுகின்றவர்களுக்கும் இந்நூல் உறுதுணையாக இருக்கும்.
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ்
Rs. 1,690.00Read moreராபர்ட் கியோஸாகி
தமிழில்: நாகலட்சுமி சண்முகம்
21ம் நூற்றாண்டுக்கான பிசினஸ் இன்றைய பொருளாதார சூழ்நிலை பெரும்பாலான மக்களுக்குக் கடும் நெருக்கடிகளை உருவாகிக் கொண்டிருக்கிறது என்பது நிஜம்தான். ஆனால், தொழில் முனைவோர்களைப் பொருத்தவரை இது அளப்பரிய வாயிபுகளுக்கான காலம். உங்களுகென்று சொந்தமாக ஒரு தொழிலை துவக்க மிகச் சரியான தருணம் இதுதான். இன்னும் சொல்லப் போனால், இதை விடச் சிறப்பான ஒரு தருணத்தை உங்களால் கண்டு பிடிக்கவே முடியாது.
தொட்டதெல்லாம் பொன்னாகும்
Rs. 1,390.00Read moreசோம. வள்ளியப்பன்
சொந்தத்தொழில் செய்பவரா நீங்கள்?
வேலை கேட்காமல், வேலை கொடுப்பவரா நீங்கள்?
சிறிய அளவிலோ பெரிய அளவிலோ, முதலாளியா நீங்கள்?
பெற்றிருக்கும் வியாபார வெற்றியை உறுதிசெய்துகொள்ள முயற்சிக்கிறீர்களா?
பெறும் வெற்றிகளை பெருக்க ஆசைப்படுபவரா?வியாபாரம் என்றால் என்ன? வெற்றி பெற்றவர்கள் எப்படியெல்லாம் செய்தார்கள்? அவர்களுடைய குணாதிசயங்கள் என்ன? அவர்கள் மாற்றங்களை எப்படி எதிர்கொள்கிறார்கள், தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் போன்றவை மட்டுமல்ல. லாபத்தை எப்படி கணக்கிடுவது, ஊழியர்களை எப்படி ஊக்கப்படுத்துவது, போட்டியாளர்களை எப்படிப் பார்ப்பது, வியாபரத்தை எப்படிப் பெருக்குவது என்பது போன்ற, வியாபாரத்தின் ஒவ்வொரு முக்கியப் பகுதியையும், எளிமையாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.
எந்த வியாபாரம் செய்பவர்களும் படிக்கவேண்டிய புத்தகமாக, தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்களுடன் விரிவும் செறிவும் செய்யபட்ட புதிய பதிப்பாக வருகிறது, பல ஆயிரம் பிரதிகள் விற்ற சோம வள்ளியப்பனின் வெற்றிப் புத்தகம்.
பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ முதலீடுகள் (அள்ள அள்ளப் பணம் – 4)
Rs. 1,190.00Read moreசோம. வள்ளியப்பன்
- பங்குச்சந்தை ஏறும், இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலிபிடிக்கும். “அய்யோ, இவ்வளவு பணத்தை இழக்கிறோமே” என்று மனம் பதைபதைக்கும். ஆனால், பங்குச்சந்தையில் பணம் பண்ண மிக முக்கியமான வழி, உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுக்காமல், அறிவுபூர்வமாக முடிவுகள் எடுப்பது. டிரேடிங், யூக வணிகம் என்று அலையாமல், நீண்டகால முதலீடுகளைச் செய்து நிறைவான செல்வம் பார்ப்பது. அது மட்டும் போதாது. எந்தப் பங்குகளில் முதலீடு செய்யவேண்டும் என்பதை அறிவியல்பூர்வமாகத் தேர்ந் தெடுக்கலாம். அதைத்தான் சோம. வள்ளியப்பன் இந்தப் புத்தகத்தில் சொல்லிக்கொடுக்கிறார்.
- பரஸ்பர நிதிகள் எப்படி தங்கள் போர்ட்ஃபோலியோவை உருவாக்க பங்குகளைத் தேர்ந்தெடுக்கிறார்களோ, அதேபோல, அவர்களையும் மிஞ்சும் அளவு நமது போர்ட்ஃபோலியோவுக்கான பங்குகளை நாமே தேர்ந்தெடுக்கலாம். அதற்கான வழிமுறைகள் எளிமையானவை. இந்தப் புத்தகம் அந்த வழிமுறைகளை அழகாகச் சொல்லித் தருகிறது.
மியூச்சுவல் ஃபண்ட் (அள்ள அள்ளப் பணம் – 6)
Rs. 790.00Read moreசோம. வள்ளியப்பன்
எதிர்காலத் தேவைகளைக் கணக்கில் கொண்டே ஒவ்வொருவரும் முதலீடு செய்கிறார்கள். அந்த முதலீடு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முதல் எதிர்பார்ப்பு. நல்ல முறையில் பெருகி செழிக்க வேண்டும் என்பது இரண்டாவது எதிர்பார்ப்பு. இரண்டும் நிறைவேறுவதற்கு ஒரு நல்ல முதலீட்டுத் திட்டம், மியூச்சுவல் ஃபண்ட்.
மியூச்சுவல் ஃபண்ட் என்பது என்ன? எத்தனை வகைகள் உள்ளன? எது நமக்கானது? எந்த எந்த திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்வது? எங்கிருந்து தொடங்குவது? முன் அனுபவம் அவசியமா? ஒன்றுக்கும் மேற்பட்ட முதலீடுகள் செய்வது சரியான அணுகுமுறையா? பண வீக்கம், பொருளாதார மந்தநிலை போன்றவற்றை எப்படிக் கவனத்தில் கொள்வது? முதலீட்டுக்கு எதைத் தேர்வு செய்ய வேண்டும், எவ்வளவு முதலீடு செய்யவேண்டும், அதை எவ்வளவு காலத்துக்கு விட்டுவைக்கவேண்டும்? இப்படி அடிப்படைகள் தொடங்கி அனைத்தையும் விரிவாகவும் எளிமையாகவும் விளக்குகிறது இந்நூல்.
வேறெதையும்விட மியூச்சுவல் ஃபண்டில் கூடுதல் வருமானம் ஈட்டுவது சாத்தியம். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கு மியூச்சுவல் ஃபண்ட் மிகவும் உகந்தது.
பங்குச்சந்தை அடிப்படைகள் (அள்ள அள்ளப் பணம் – 1)
Rs. 1,290.00Read moreசோம. வள்ளியப்பன்
பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்? எங்கெல்லாம் தவறு செய்ய முடியும்? எதைச் செய்தால் ரிஸ்க் அதிகம்? அதைச் செய்யாமல் தப்பிப்பது எப்படி? எங்கெல்லாம் கவனமாக இருக்க வேண்டும்? யாரிடம் ஆலோசனை பெறலாம்? யாரிடம் ஆலோசனை கேட்கக் கூடாது? எங்கெல்லாம் பணம் செய்ய முடியும்? எப்படியெல்லாம் பணத்தைப் பெருக்கமுடியும்?
இப்படியொரு முக்கியமான விஷயம் பற்றித் தமிழில் வெளிவரும் முழுமையான முதல் நூல் இது. பங்குச்சந்தை பற்றிய அத்தனை அடிப்படை விஷயங்களையும் சின்னச் சின்ன
உதாரணங்களோடு எடுத்துச் சொல்லியிருக்கிறார் பங்குச் சந்தை நிபுணர் சோம. வள்ளியப்பன். பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்.