Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321
Sale!

சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு ( Sapiens Tamil )

Rs. 4,490.00

or 3 installments of Rs.1,496.67 with

யுவால் நோவா ஹராரி

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

மனிதகுல வரலாறு குறித்த ஒரு சுவாரசியமான பதிவு இந்தூல். இதை படிக்கத் தொடங்கிவிடடால் கீழே வைக்கவே மனம் வராது” — பிBல் கேட்ஸ்

 

சுவாரஸ்யமான மற்றும் ஆர்வத்தைத்துாண்டும் … இந்த பூமியில் நாங்கள் எவ்வளவு சுருக்கமான காலம் இருந்தோம் என்பதை இது உங்களுக்கு உணர்த்துகிறது – பBராக் ஒபாமா

 

முதலிலிருந்து இருந்து கடைசி வரை ஆச்சர்யமூட்டும் … நான் படித்த சிறந்த புத்தகம் இதுவாக இருக்கலாம்- கிறிஸ் எவன்ஸ்

 

வரலாறு மற்றும் நவீன உலகின் மிகப்பெரிய கேள்விகளைக் கையாளுகிறது … மறக்க முடியாத தெளிவான மொழியில் எழுதப்பட்டது – ஜாரெட் டயமண்ட்

 

திடுக்கிடும் … இது உலகை நீங்கள் பார்க்கும் விதத்தை மாற்றுகிறது – சைமன் மாயோ

 

நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த புத்தகங்களில் ஒன்று … நம் இனங்கள் எவ்வாறு வளர்ந்தன என்பதைப் பற்றிய சிறந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது – லில்லி கோல்

 

உங்கள் மூளையிலிருந்து சக்தியையும் தெளிவையும் வெளிப்படுத்துகிறது, உலகத்தை விசித்திரமாகவும் புதியதாகவும் ஆக்குகிறது – சண்டே டைம்ஸ்

 

சேபியன்ஸ் வழக்கமாக ஏற்றுக்கொள்ளப்படட சிந்தனைகளுக்கு மாற்றமாக மற்றும் ஆச்சரியமான உண்மைகளால் நிரம்பியுள்ளது. இந்த புதிரான, புராணத்தை உடைக்கும் புத்தகத்தை எந்த விவரத்திலும் சுருக்கமாகச் சொல்ல முடியாது; நீங்கள் அதை படிக்க வேண்டும் – ஜான் கிரே – பைfனான்சியல் டைம்ஸ்

Out of stock

Notify me when stock available

இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது. நம் இனத்தின் கதையை இவ்வளவு அழகாகவும், சுவாரசியமாகவும், விறுவிறுப்பாகவும், செறிவாகவும், சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் கூற முடியுமா? நம்மை மலைக்க வைக்கிறார் ஹராரி.
நம்மை மருள வைக்கின்ற எண்ணற்ற விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில:
• மனிதன் கண்டுபிடித்துள்ள மதங்களிலேயே வெற்றிகரமான மதம் முதலாளித்துவம்தான்.
• வரலாற்றில் இழைக்கப்பட்டுள்ள குற்றங்களிலேயே மிகக் கடுமையான குற்றம் நவீன வேளாண்மையில் விலங்குகள் நடத்தப்படுகின்ற விதம்தான்.
• தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை.
வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதே படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளத்தானே? நம் மூதாதையரின் தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் மனிதகுலத்திற்கு என்ன நிகழும் என்பதை எச்சரிக்கத் தவறவில்லை இந்நூலாசிரியர்.
அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!

 

ABOUT THE AUTHOR

முனைவர் யுவால் நோவா ஹராரி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றவர். அவர் இப்போது ஜெரூசலம் ஹீப்ரூ பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ‘உலக வரலாறு’ குறித்து அவர் தனித்துவமான ஆய்வுகள் நடத்தி வருகிறார். அவருடைய ஆய்வுகள், பின்வரும் பரந்த கேள்விகளுக்கு விடை காணுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன: வரலாற்றுக்கும் உயிரியலுக்கும் இடையேயான உறவு என்ன? வரலாற்றில் நியாயம் இருக்கிறதா? வரலாற்றின் ஊடாக மக்கள் அதிக மகிழ்ச்சி அடைந்தனரா? ஹராரி நடத்துகின்ற ‘மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’ என்ற தலைப்புக் கொண்ட இணையவழிப் பயிற்சி வகுப்பில் 65,000க்கும் அதிகமானோர் பங்கு கொண்டு பயின்று வருகின்றனர். ஹோமோ டியஸ் என்ற இந்நூல் உலகம் நெடுகிலும் வெற்றிகரமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. உலக அளவில் முப்பது மொழிகளில் இது பிரசுரிக்கப்பட்டுள்ளது. 2012ம் ஆண்டில் பேராசிரியர் ஹராரிக்குப் பொலோன்ஸ்கி விருது வழங்கப்பட்டது.

 

Book Specifications

Title: Sapiens: A Brief History of Humankind / சேப்பியன்ஸ்: மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு
Author: Yuval Noah Harari / யுவால் நோவா ஹராரி
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 512
Weight: 500g
Published Year: 2011
Tamil Translation Published Year: 2018
Publisher: Manjul Publishing House
ISBN: 978-93-87383-63-0
Dimensions: 15cm x 23cm x 3cm
Print size: Please feel free to drop us a message.