Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

செல்வபுரிக்கான விரைவுப் பாதை: செல்வத்தைக் குவிப்பதற்கான புதிரை விடுவியுங்கள்! ( Selvapurikkana Viraivup Paathai )

Rs. 2,990.00

or 3 installments of Rs.996.67 with

எம்ஜே டிமார்க்கோ

தமிழில்: PSV குமாரசாமி

 

“எனது நண்பர் ஒருவரின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த புத்தகம் என்றதால் அவரின் பரிந்துரைக்கு அமைய இப்புத்தகத்தை Flashbooks.lk இல் பெற்றுகொண்டேன். எமது வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோசமாகவும்  வாழ பணத்தை எமது கட்டுப்பாட்டிட்குள் வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் எனவும், அதற்காக டிமார்க்கோ கூறும் செயல்முறைக்கேற்ற உத்திகளும் first class. கட்டாயம் இப்புத்தகத்தை வாசியுஙகள்.” —சுரேஷ், நுவர எளிய, இலங்கை ( Suresh, Nuwara Eliya, Sri Lanka)

 

வணிகவியல் கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் செலவழித்துக் கற்றுக் கொள்வதைவிட அதிகமாக இந்த நூலிலிருந்து இரண்டே நாட்களில் கற்றுக் கொள்ளலாம்!

Out of stock

Notify me when stock available

 

வழக்கமான 9-5 வேலையைத் தூக்கியெறியுங்கள்! சராசரிக்கும் கீழான வாழ்க்கையிலிருந்து தப்பித்துக் கொள்ளுங்கள்! செல்வபுரிக்கான பாதையில் 40 ஆண்டுகளை மிச்சப்படுத்துங்கள்!

செல்வத்தைக் குவிப்பதற்கான விரைவுப் பாதை ஒன்று உள்ளது. அதில் பயணம் செய்தால், நீங்கள் இளமையாக இருக்கும்போதே ஒரு செல்வந்தராகிவிடலாம். ஆனால், உங்கள் கனவுகளை நிர்மூலமாக்குகின்ற மெதுவான பாதையில் நீங்கள் பயணிப்பதையே நிதி ஆலோசகர்களும், பணத்தைக் குவிப்பதைப் பற்றி எழுதுகின்ற நூலாசிரியர்களும் ஊக்குவிக்கின்றனர், அத்தகைய பயணத்தைப் பற்றியே அவர்கள் போதித்து வருகின்றனர்.

நீங்கள் உங்களுடைய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு வேலையில் சேர்ந்து, மிகச் சிக்கனமாக வாழ்க்கை நடத்திப் பணத்தை மிச்சப்படுத்தி, அதை ஓர் ஓய்வூதியத் திட்டத்தின் மூலமாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, நாற்பது ஆண்டுகள் கழித்து அதன் பலனை அறுவடை செய்து, தள்ளாத வயதில் செல்வந்தராக ஆவதுதான் அந்த மெதுவான பாதைத் திட்டம்.
இவ்விரண்டு பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது புத்திசாலித்தனமானது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இந்நூல் கீழ்க்கண்டவற்றுக்கு பதிலளிக்கிறது:
40 ஆண்டுகால வேலை, ஓய்வூதியத் திட்டங்கள், பரஸ்பர நிதி முதலீடு, பெரும் சிக்கனம் போன்ற உத்திகள் ஏன் உங்களை ஒருக்காலும் பணக்காரராக ஆக்காது?
‘செல்வத்தைக் குவிப்பது எப்படி’ என்பதை விளக்குகின்ற நூல்கள், அந்த நூலாசிரியர்களைத்தான் பணக்காரர்களாக ஆக்குமே அன்றி, உங்களை அல்ல.
பங்குச் சந்தையில் கிடைக்கும் 8 சதவீத இலாபத்திற்கு பதிலாக, உங்களுடைய சொத்தின் நிகர மதிப்பை 400 சதவீதமாக அதிகரித்துக் கொள்வது எப்படி?

 

எழுத்தாளர் பற்றி

எம்ஜே டிமார்க்கோ சுயமாக உருவான ஒரு கோடீஸ்வரர், தொழிலதிபர், முதலீட்டாளர், மற்றும் 
நூலாசிரியர். இவர் தன்னுடைய முப்பதுகளிலேயே ஓய்வு பெற்றுவிட்டார். இவர் 
அரிசோனாவிலுள்ள ஃபீனிக்ஸ் நகரில் ஓர் அழகான மலையடிவாரத்தில் வசித்து வருகிறார். 
மிக விரைவாகச் செல்கின்ற கார்கள், கட்டுக்கோப்பான உடல், விரைவுப் பாதை ஈட்டித் 
தருகின்ற பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றின்மீது தீவிர வேட்கை கொண்டவர் இவர். 
இளமையிலேயே செல்வந்தர்களாக ஆவதற்கு மக்களுக்கு உதவும் நோக்கத்துடனேயே இவர் 
இந்நூலை எழுதியுள்ளார்.


Book Specifications

Title: The Millionaire Fastlane / செல்வபுரிக்கான விரைவுப் பாதை: செல்வத்தைக் குவிப்பதற்கான புதிரை விடுவியுங்கள்!
Author: MJ DeMarco / எம்ஜே டிமார்க்கோ
Translator:PSV Kumarasamy / PSV குமாரசாமி
Language: Tamil
Binding: Paperback
Pages: 448
Weight:
Published Year: 2010
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House
ISBN: 9789390085910
Dimensions:
Print size: Please feel free to drop us a message.