Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

தாயம் ( Thaayam )

Rs. 1,990.00

or 3 installments of Rs.663.33 with

மஹாத்ரயா ரா

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

இது மஹாத்ரயா எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு. இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கடிதமும், வாழ்க்கை, வேலை, சூழல்கள் மற்றும் மனப்போக்குகள் தொடர்பான பல ஆழ்ந்த பிரதிபலிப்புகளை வெளிப்படுத்துகின்றன. எளிய படிப்பினைகள் மற்றும் கொள்கைகள், நடைமுறைக்குகந்த யோசனைகள் ஆகியவற்றை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.

 

இதில் கூறப்பட்டுள்ளவற்றைக் கடைபிடித்தால், வாழ்க்கை மன நிறைவுடையதாக இருக்கும், சவாலான சூழல்களைச் சந்திப்பது சுலபமானதாக இருக்கும். ஓர் அகரீதியான முரண்பாடு, ஓர் உறவுச் சிக்கல், தொழில்ரீதியான ஓர் இக்கட்டான நிலை, ஒரு திட்ட மதிப்பீடு, நேர நிர்வாகப் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு இங்கு தீர்வுகள் இருக்கின்றன.
:”எந்தப் பக்கத்தை வேண்டுமானாலும் விரியுங்கள். தேடுபவனுக்கு அங்கு ஒரு விடை காத்துக் கொண்டிருக்கும்.”
‘தாயம்’ என்ற இந்நூலில் தங்களுக்கான விடையை பலர் கண்டுபிடித்துள்ளனர்.

 

வெற்றி பெரிய பெரிய விஷயங்களில் இருக்கிறது.

மகிழ்ச்சி சின்னச் சின்ன விஷயங்களில் இருக்கிறது.

தியானம் வெறுமையில் இருக்கிறது.

கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார்.

அதுதான் வாழ்க்கை.

 

“குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. நான் பல புத்தகங்களைப் படித்துள்ளேன். ஆனால் ‘தாயம்’ புத்தகம்தான் நான் படித்ததிலேயே மிக அருமையான புத்தகம்.” –ஆர். சி. லஹோட்டி, முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி

 

“…மிகப் பெரிய விஷயங்கள் இவ்வளவு எளிய வார்த்தைகளில் வடிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கமும் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு பக்கமும் எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கிறது. நீங்கள் சோகமாக இருந்தாலும் சரி, மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீங்கள் வெற்றிகரமானவராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இதை நீங்கள் படிக்கும்போது சிறப்பாக உணர்வீர்கள். அறிவுப் பொக்கிஷமாக, அக ஒளி வழிகாட்டியாகத் திகழும் இந்நூல்தான் என் இதயத்தைத் தொட்ட ஒரே ஆன்மீகப் புத்தகம். நான் இதைப் பற்றி எண்ணற்றோரிடம் பேசியிருக்கிறேன்.” — சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் மற்றும் பாடகர்

Out of stock

Notify me when stock available

“நாள் இரவு வேளைகளில் ஏதாவது ஒரு கட்டுரையை வாசிப்பது வழக்கம். அக்கணத்தில் எனக்குத் தேவைப்படும் தெளிவைக் கொடுக்கும் அற்புதமான, சுருக்கமான முன்னோக்குகள் இதில் உள்ளன. என் மனத்தில் அக்கணத்தில் தோன்றும் எக்கேள்விக்கும் ‘கூகிள்’ போன்றது இது. ஆனால் இங்கு விடைகள் நான் மிகவும் நேசிக்கும் மஹாதிரயாவிடம் இருந்து வருகின்றன.” –ஜி.ஆர். ‘ஆனந்த்’ அனந்தபத்மநாபன், ஜி.ஆர்டி குழுமம்

 

About the Author

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, உலகெங்குமுள்ள இலட்சக்கணக்கானோர், பூரண அபரிமிதத்தோடுகூடிய வாழ்க்கையை வாழ அருளியுள்ளார். மஹாத்ரயாவையும் அவருடைய ஞானத்தையும் அனுபவிப்பது என்பது வாழ்க்கையையே மாற்றக்கூடிய ஒன்றாகும். அது மக்கள், ஆரோக்கியம், செல்வம், அன்பு, பேரானந்தம், ஆன்மிகப் பிணைப்பு ஆகியவை தொடர்பாகத் தங்களிடம் படிந்து போயுள்ள நம்பிக்கை அமைப்பு முறைகளை மீறி வர அவர்களுக்கு உதவுகிறது.
தொழிலதிபர்களிடமிருந்து, ஃபோர்ப்ஸ் பத்திரிகை தொகுத்து வழங்குகின்ற செல்வந்தர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்ற தொழில்முனைவோர்கள், மக்களுடைய அபிப்பிராயங்களில் தாக்கம் ஏற்படுத்துகின்றவர்கள், விருதுபெற்ற இசைக் கலைஞர்கள், பிரபலமான விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள்வரை எண்ணற்றோர் மேம்பட வழிகாட்டியுள்ளார்.
அனுபவபூர்வமானதாகவும், சமகாலத்தியமானதாகவும், நகைச்சுவை தூவப்பட்ட ஒன்றாகவும் விளங்குகின்ற அவருடைய கற்பிக்கும் முறை, ஒருவருடைய வயது, சமூ அந்தஸ்து, புவியியல் எல்லைகளை அனைத்தையும் தாண்டி அனைவருக்கும் உத்வேகம் ஊட்டுகின்ற ஒன்றாகும். மனத்திற்கும் இதயத்திற்கும் அறைகூவல் விடுத்து, வாழ்க்கையின் முரண்பாடுகள் மற்றும் மர்மங்களுக்குப் பின்னாலுள்ள ‘ஏன்’ என்பதற்கு விளக்கமளித்து, ஓர் உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்தி, ‘வாழ்க்கை அழகானது’ என்பதை நூற்றுக்கணக்கான நிறுவனங்களும் இலட்சக்கணக்கான தனிநபர்களும் அனுபவரீதியாக உணர அவர் உதவியுள்ளார்.
மஹாத்ரயா வாழ்க்கையையும் தன்னையும் எப்போதும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருப்பவர். அவர் பாதையை முறிப்பவராக இருப்பதாலேயே புதிய பாதையைக் கண்டுபிடிப்பவராகவும் விளங்குகிறார். அவர் ஒரு சகாப்தம் . . . .

 

Book Specifications

Title: Unposted Letter / தாயம்
Author: Mahātria Rā / மஹாத்ரயா ரா
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 256
Weight: 290g
Published Year: 2011
Tamil Translation Published Year: 2011
Publisher: Manjul Publishing House
ISBN: 9788183222334
Dimensions: 20 x 14 x 4 cm
Print size: Please feel free to drop us a message.