Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் ( Thadaikatkele Vettrikkaana Padikkattugal )

Rs. 2,090.00

or 3 installments of Rs.696.67 with

ரயன் ஹாலிடே

தமிழில்: PSV குமாரசாமி

 

தற்போதைய மற்றும் வருங்காலத் தலைவர்கள் ஒவ்வொருவரின் படுக்கைக்கு அருகில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஒரு நூல்.!”
–ராபர்ட் கிரீன் ‘த 48 லாஸ் ஆஃப் பவரி நூலின் ஆசிரியர்

 

“தத்துவத்தை வகுப்பறைகளிலிருந்து வெளிக்கொணர்ந்து, அது எங்கு இருக்க வேண்டுமோ அங்கு, அதாவது நம்முடைய அன்றாட வாழ்விற்குள் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் ரயன். வாழ்க்கைக்கான ஒருவிதமான கையேடான இதை நீங்கள் மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்த்து, எந்தவொரு தடையையும் தகர்க்கவும் எந்தவொரு சச்சரவையும் தீர்க்கவும் கற்றுக் கொள்ளுங்கள். எல்லோரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய ஒரு நூல் இது:
–ஜிம்மி லோனி ‘ரோம்ஸ் லாஸ்ட் சிட்டிசன்’ நூலின் ஆசிரியர்

 

“முதலில் மார்கஸ் ஆரீலியஸ் வந்தார். அதையடுத்து பிரஷ்ய நாட்டு இராணுவத் தலைவர் இரண்டாம் ஃபிரெடரிக் வந்தார். இப்போது ரயன் வந்துள்ளார். தடைகளையும் சவால்களையும் அரவணைத்துக் கொள்வதன் மூலம் உங்களால் எவ்வாறு ஓர் அற்புதமான வாழ்க்கையைச் செதுக்கிக் கொள்ள காட்டுகிறது.” முடியும் என்பதை இப்புத்தகம்
–கிரிஸ் கில்லபோ ‘த $100 ஸ்டாரிட்டப் நூலின் ஆசிரியர்

 

விரக்தி “இந்த சுவாரசியமான நூலில், ரயன், செம்மையாக வாழ்வதற்கும் சிறப்பாகத் தலைமையேற்று நடத்துவதற்கும். வழிகாட்டுகின்ற பாதையில் பிரகாசமான வெளிச்சத்தைப் பாய்ச்சியுள்ளார். தோல்விகள், தடைகள், போன்றவற்றை எப்படி நமக்குச் சாதகமாக மாற்றிக் கொள்வது என்பதைக் காட்டியுள்ளதன் மூலம், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய கனவுகளைப் பின்தொடர்ந்து செல்லத் தேவையான பல உத்திகளை அவர் நமக்கு அளித்துள்ளார். இதைப் படித்துப் பயன் பெறுங்கள்.”
–நான்சி எஃப் கொஹன், வரலாற்றியலாளர், ஹார்வர்டு பிசினஸ் ஸ்கூல்

 

“என் வாழ்க்கை தடைகளால் சூழப்பட்டிருந்தது. அவற்றைக் கடந்து வெற்றியை அடைவதற்குக் கடும் பயிற்சி தேவை. ரயனின் நூல் அதற்கான ஒரு சரியான வழிகாட்டி”
–ஜேம்ஸ் ஆல்டுசெர் ‘சூஸ் யுவர்செல்ஃப்’ நூலின் ஆசிரியர்

 

“ரயனின் இப்புத்தகம், பேரரசர் அலெக்சாண்டரிலிருந்து ஸ்டீவ் ஜாப்ஸ்வரை எண்ணற்றச் செயல்வீரர்களால் காலங்காலமாகக் கடைபிடிக்கப்பட்டு வந்த சுயஆளுமைக்கான உத்திகளைப் பிழிந்தெடுத்துச் சாறாகக் கொடுத்திருக்கிறது. நீங்கள் இந்த விதிமுறைகளைப் பின்பற்றினால், உங்களுடைய வாழ்க்கை ஒரு புரட்சிகரமான விதத்தில் மாறும்.”
–ஸ்டீவன் பிரெஸ்ஃபீல்டு, ‘த வார் ஆஃப் ஆர்ட்’ நூலின் ஆசிரியர்

 

“இந்நூல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் ஒவ்வொருவரும் இதைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
–கமல் ரவிகாந்த் ‘லிவ் யுவர் ட்ரூத்’ நூலின் ஆசிரியர்

Out of stock

Notify me when stock available

இவ்வுலகில் வாழ்ந்த மாபெரும் மனிதர்களிடம் அசாதாரணமான அதிர்ஷ்டமோ, திறமையோ அல்லது அனுபவமோ இருக்கவில்லை. அவர்கள் செய்ததெல்லாம், ஒரே ஒரு மெய்யுரையின்படி வாழ்ந்தது மட்டும்தான். அந்த மெய்யுரை இதுதான்: ‘உங்கள் வழியில் குறுக்கே நிற்பது உங்களுக்கான வழியாக மாறுகிறது.’

இந்த எளிய கொள்கையைச் சுற்றி உருவாக்கப்பட்டத் தத்துவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. அது கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து, போர்களிலும் பெருநிறுவன ஆலோசனைக்கூடங்களிலும் அது வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மறக்கப்பட்டுவிட்ட இந்த வெற்றிச் சூத்திரத்தை, உலகப் புகழ் பெற்ற நூலாசிரியரான ரயன் ஹாலிடே, இன்றைய உலகிற்குப் பொருந்துகின்ற விதத்தில் வேறு விதமாக மாற்றியமைத்துள்ளார்.

இந்நூலில் அவர் வெளிப்படுத்துகின்ற விஷயங்களில் இவையும் அடங்கும்:

ஜான் டி. ராக்கஃபெல்லர், பாதகமான சூழல்களில்கூட வாய்ப்புகளைக் கண்டுகொண்டு, பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்ட ஒரு காலகட்டத்தில் எவ்வாறு பெரும் பணத்தைக் குவித்தார்?

மகாத்மா காந்தி தன்னுடைய பலவீனங்களைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, ஆங்கிலேயப் பேரரசின் வலிமை வாய்ந்த இராணுவத்தை எவ்வாறு அதற்கு எதிராகவே திருப்பினார்?

ஸ்டீவ் ஜாப்ஸ் எவ்வாறு சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கினார்?

உங்களுடைய கண்ணோட்டங்களை முறையாகக் கையாளுங்கள். விஷயங்களை மாற்றுவதற்கு எழும் வாய்ப்புகளை உணர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய நடவடிக்கைகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு தடையையும் உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்ளக் கற்றுக் கொள்ளுங்கள்.

 

About the Author

ரயன் ஹாலிடே ஓர் எழுத்தாளர், ஊடக உத்தியாளர். அவர் தன்னுடைய 19வது வயதில் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, மிகப் பிரபலமான நூலாசிரியரான ராபர்ட் கிரீனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். அவர் சில காலம் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றிவிட்டு, தன்னுடைய சொந்த மார்க்கெட்டிங் நிறுவனத்தை நிறுவினார். பத்துக்கும் மேற்பட்ட நூல்களை அவர் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் 40க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 40 இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவர் தன் மனைவியுடனும் இரண்டு மகன்களுடனும் அமெரிக்காவிலுள்ள ஆஸ்டின் நகருக்கு வெளியே உள்ள ஒரு பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

 

Book Specifications

Title: The Obstacle is the way / தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள்
Author: Ryan Holiday / ரயன் ஹாலிடே
Translator: PSV Kumarasamy / PSV குமாரசாமி
Language: Tamil
Binding: Paperback
Pages: 232
Weight: 190g
Published Year: 2014
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House
ISBN: 978-9391242510
Dimensions: 13 x 20 x 0.6 cm
Print size: Please feel free to drop us a message.