Category
- University Magazine
- English Books
- Environment & Nature
- Science
- Investment & Strategy
- Medicine
- Linguistics
- Astronomy
- (Auto)Biography & Memoir
- Biological Sciences
- Business
- Career & Success
- Oil Politics
- Communication Skills
- Creativity
- Digital Marketing & E-commerce
- Economics
- Artificial Intelligence
- Education & Research
- Entrepreneurship
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Management & Leadership
- Marketing & Sales
- Mental Health
- Mathematics & Physics
- Mindfulness & Happiness
- Money & Investment
- Motivation & Inspiration
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Popular Science
- Productivity
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Venture Capital
- Women Empowerment
- தமிழ் Books
- இயற்கை
- இயற்பியல்
- உயிரியல்
- சிறுவர் புத்தகங்கள்
- பொதுவுடைமை
- வானவியல்
- வேதியியல்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உத்வேகம் & ஊக்கம்
- உற்பத்தித்திறன்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தலைமைத்துவம்
- தொழில் மற்றும் வெற்றி
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- பங்குச்சந்தை
- தொழில்முனைவு
- நெட்வொர்க் மார்க்கெட்டிங்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- சினிமா
- கவிதைகள்
- மன ஆரோக்கியம்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
- கிளாசிக்ஸ்
தேச செல்வங்களின் கதை
Rs. 1,990.00 Rs. 1,790.00
லியோ ஹுபர்மேன்
தமிழில்: க. மாதவ்
இந்தப் புத்தகம் ஐரோப்பிய நில உறவுகளை அலசுகிறது. சிலுவைப்போர்களுக்கும் வர்த்தக விரிவாக்கத்திற்கும் இருந்த தொடர்புகள், புதிய பொருள் உற்பத்திகளின் தேவைகள், புதிய வர்க்கங்களின் தோற்றம், முதலாளித்துவத்தின் வளர்ச்சி, நிலப்பிரபுத்துவம்-முதலாளித்துவத்தின் மோதல், தேசிய அரசுகளின் உருவாக்கம், அரசியல் அமைப்புகளின் தோற்றம்-வளர்ச்சி, தொழிற்புரட்சி, தொழிற்சாலை உற்பத்திமுறையின் தோற்றம், புதிய உலகங்களை கண்டுபிடித்தல், அடிமை வர்த்தகம், ஆரம்ப மூலதன குவியல், சந்தை விரிவாக்கம், மூலதன பரவல், ஏகாதிபத்திய வளர்ச்சி, சந்தைகள் பங்கீடு-மறுபங்கீடுக்கான யுத்தங்கள், தொழிலாளி வர்க்கத்தின் தோற்றம், தொழிலாளி வர்க்கத்தின் ஆட்சி அமைதல், பாசிசத்தின் வளர்ச்சி ஆகிய வரலாற்று நிகழ்வுகளை மத்திய யுக காலந்தொட்டு நவீனகாலம் வரையிலான பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் தக்க சான்றுகளுடன் தொகுக்கப்பட்டுள்ளன.
நாம் அறிந்த வரலாற்று பிரபலங்களின் உண்மை சொரூபம் இந்த வரலாற்று நிகழ்வுகளில் எவ்வாறு இருந்தது என்பதை இந்தப் புத்தகம் மிக சரியாக விளக்குகிறது. இந்தப் பிரபலங்களின் வர்க்க சார்பை மிகத் தெளிவாக சித்தரிக்கிறது.
இந்தப் புத்தகத்தின் பேசுபொருள் சிக்கலான சமூக, அரசியல், பொருளாதாரமாக இருந்தாலும், லியோ ஹூபர்மேன் அதை ஒரு கதைசொல்லியின் பாங்கில் கவித்துவமாக விளக்கியிருப்பதை வாசகர்கள் உணர்வார்கள்.
Out of stock
Notify me when stock available
Book Specifications
Title: Man’s Worldly Goods: The Story of the Wealth of Nations / தேச செல்வங்களின் கதை
Author: Leo Huberman / லியோ ஹுபர்மேன்
Translator: K. Madhav / க. மாதவ்
Language: Tamil
Binding: Paperback
Pages: 336
Published Year: 1936
Tamil Translation Published Year: 2016
Publisher: Chinthan Books
ISBN: 9789383359493
Print size: Please feel free to drop us a message.
Related products
யாமம் (Yamam)
Rs. 2,890.00Add to cartஎஸ்.ராமகிருஷ்ணன்
இரவின் தாழ்வாரங்களில் நடந்து திரிந்து அதன் விசித்திரங்களை அறிந்த அப்துல்கரீமின் கதை புதினத்தின் முற்பகுதியைக் கட்டமைக்கிறது. இரவை சிருஷ்டிக்கும் சூட்சமம் விரல் வழியாக யாமம் என்னும் வாசனைத் திரவியம் ஆகிறது. யாமத்தின் பெரும் நிகழ்வுகள், போராட்டங்கள், துயரங்கள், களியாட்டங்கள் எல்லாவற்றையும் ஊடறுத்துக் கொண்டு பண்டாரமும் நாயும் ஒடிக் கொண்டிருக்கிறார்கள். பண்டாரமும் நாயும் மேற்கொள்ளும் பயணத்தின் வழியாக முதல் முதலாக ஒரு அசலான தமிழ்ப் பண்பாட்டுப் புனைவை புதினமொன்றில் படிக்கிறோம். — கவிஞர் சமயவேல்
பாலஸ்தீன இஸ்ரேல் போர்: ஒரு வரலாற்றுப் பார்வை
Rs. 1,590.00Read moreநாகேஸ்வரி அண்ணாமலை
‘…பாலஸ்தீனத்தில் நமக்குப் பேரழிவு நேர்ந்தால், அதற்கு முதல் பொறுப்பு பிரிட்டன். இரண்டாவதாக, அதற்குப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் நம்மிடையே தோன்றியிருக்கும் இம்மாதிரியான பயங்கரவாதிகள்…’ –விஞ்ஞானி ஐன்ஸ்டைன்
‘…பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது… அங்கு இப்போது நடப்பதை எந்தத் தர்மத்தின்படியும் நியாயப்படுத்த முடியாது…’ –மகாத்மா காந்தி
உலகம் போற்றும் ஐன்ஸ்டைனும் காந்தியும் இப்படித் தார்மீகக் கோபத்துடன் சாடும் பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை, உலகில் நீண்ட நாட்களாக நடக்கும் உரிமைப் போராட்டம். இது ஊடகங்களில் தினமும் செய்தியாகிரது, நியாயமான முடிவுகான இயலாத போராட்டமாக இது பரிணமித்திருக்கிறது, இதப் பற்றிய பார்வைகளும் கருத்துகளும் யூதைகளும் அறெபியர்களுக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ பிளவுபட்டிருக்கின்றன.
தமிழில் இதைப் பற்றிய எழுத்துக்கள் இதன் முழுப் பரிமானத்தையும் கொண்டுவரவில்லை, நாகேஸ்வரி அண்ணாமலையின் இந்த நூல் பிரச்சனையின் வரலாற்றையும் அரசியலையும் மனித அவலத்தையும் நீதி என்னும் கண்ணாடி வழியே பார்த்து முழுமையாக விளக்குகிறது. இதைப்படிப்பவர்கள் பாலஸ்தீனதில் ஏன் இவ்வளவு இரத்தம் சிந்தப்படுகிறது எனப் புரிந்து கொள்வார்கள். பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் நேரில் சென்று பார்த்து இருசாரிடமும் விவாதித்து, பிரச்சனை தொடர்பான பல பரிமான்ங்களைப் படித்து எழுதியுள்ளார். ஆசிரியரின் நேரடியான நடை இந்தச் சிக்கலான பிரச்சினையை வாசகர்களுக்கு எளிதாக விளங்கவைக்கும்.
கழுகு தரை இறங்கிவிட்டது
Rs. 1,190.00Read moreஜாக் ஹிக்கின்ஸ்
தமிழில்: கொரட்டூர் கே.என். ஸ்ரீனிவாஸ்
சரியாய் பகல் ஒரு மணிக்கு, ஜெர்மனியின் ராணுவத் தலைமைக்கு ஒரு சிறு தகவல் வந்து சேர்ந்தது. ‘கழுகு, தரையிறங்கிவிட்டது’.
எதிரி நாடுகளுக்குள் பாராசூட் கொண்டு இறங்கி சண்டை செய்ய பழக்கப்படுத்தப்பட்ட ஒரு ஜெர்மானிய வீரர்கள் குழு கர்னல் ஸ்டைனர் தலைமையில் இங்கிலாந்து நாட்டுக்குள் பத்திரமாக தரையிறங்கி விட்டது என்பதே இதற்கு அர்த்தம்.
கடற்கரையோரமாய் வார இறுதி நாட்களை அமைதியாக கழித்துக் கொண்டிருக்கும் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்லை ஜெர்மனிக்கு கடத்திக்கொண்டு செல்ல, ரகசியத் திட்டத்துடன் வந்து இறங்கிய கூட்டமாகும்.
நாம் மறந்துபோன, ஆச்சரியமிக்க ராணுவ ரகசியங்கள் மற்றும் உலகப் போரின் சரித்திர சம்பவங்களின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் மீண்டுமொருமுறை உங்களை 1943க்கே அழைத்துச்செல்லும்.
இந்த பரபரப்பான உண்மை நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஆங்கிலத் திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
இப்போது அதே ராணுவ நாட்களின் பரபரப்பு புத்தக வடிவில்…உங்கள் கைகளில்…
செங்கிஸ்கான்
Rs. 1,090.00Read moreமுகில்
உலகையே கட்டியாளப் போகிறேன் என்று கிளம்பியவர்கள் சிலர். அதில் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. அவர்களில் முதன்மையானவர் மங்கோலியப் பேரரசர் செங்கிஸ்கான்.
சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான மிரட்சியும் ஆச்சரியமும் அச்சமும் குறையாமலிருப்பதற்கான காரணம், உயிரை உலுக்கும் போர்த் தந்திரங்கள் மட்டுமல்ல. அவரது ஆளுமைத் திறனும்தான்.
ஒரு சாதாரண மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில் செங்கிஸ்கான் பிறந்தபோது, மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. செங்கிஸ்கான் ஒரு கனவு கண்டார். சிதறிக் கிடக்கும் இனக்குழுக்களை ஒன்று சேர்க்க வேண்டும். புத்தம் புதிய தேசத்தை உருவாக்கவேண்டும். உலகமே அண்ணாந்து பார்த்து வியக்கும் வகையில் ஒரு மகா பேரரசைக் கட்டியமைக்கவேண்டும்.
அசாதாரணமான கனவு. ஆனால் அதை நிறைவேற்றுவதற்கான துடிதுடிப்பும் துணிச்சலும் உத்வேகமும் உக்கிரமும் செங்கிஸ்கானிடம் இருந்தது. கடுமையும் கல்பாறை மனமும் கொண்டவராகத் தன்னை உருமாற்றிக் கொண்டார். எதிரிகளை அழித்தொழிப்பதற்கான சூத்திரங்களை மட்டுமல்ல, கனவுகளைச் சாத்தியமாக்குவதற்கான கலையையும் செங்கிஸ்கானிடம் இருந்தே கற்றுக்கொண்டது உலகம். செங்கிஸ்கான் பற்றி தமிழில் வெளிவரும் முதல் நூல் இது.
முதல் உலகப் போர்
Rs. 1,590.00Read moreமருதன்
உலக வரைபடத்தை மாற்றியமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரை கண்டிராத பேரழிவைக் கொண்டு வந்த போரும்கூட. நூற்றாண்டுகால சாம்ராஜ்ஜியங்கள் உதிர்ந்து சரிந்தன. பிரிட்டனின் சகாப்தம் முடிவுக்கு வந்தது. புரட்சி மூலம் ரஷ்யா முடியாட்சியைத் துறந்தது. போரின் சாம்பலில் இருந்து அமெரிக்கா, ஒரு புதிய வல்லரசாக உயிர் பெற்று எழுந்தது. முதல் உலகப் போர் ஐரோப்பாவில் மையம் கொண்டது ஏன்?
ஆஸ்திரிய இளவரசர் ஒருவரை, செர்பிய பிரஜை ஒருவன் சுட்டுக்கொன்றான் என்பதற்காக முழு ஐரோப்பாவும் போரில் குதிக்குமா? ஐந்து கோடி சிப்பாய்களைக் களத்தில் இறக்கி, ஒரு கோடி பேரை பலி வாங்குமா? ஒரு தலைமுறை இளைஞர்களை முற்றிலுமாகத் துடைத்து அழித்த இந்தப் போரைத் தவிர்த்திருக்கவே முடியாதா?
இந்த நிமிடம் வரை மேற்கு ஆசியா பிரச்னைக்குரிய ஒரு பிரதேசமாக நீடிப்பதற்கும், இத்தாலியில் முசோலினி பாசிசத்தை வளர்த்தெடுத்ததற்கும், ஜெர்மனியில் ஹிட்லர் எழுச்சி பெற்றதற்குமான மூல காரணம், முதல் உலகப் போரில் இருக்கிறது. இரண்டாம் உலகப் போர் என்பது முதல் உலகப் போரின் தொடர்ச்சி. அல்லது, விளைவு. மருதனின் இந்தப் புத்தகம், முதல் உலகப் போரின் அரசியல், சமூக, ராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.
இரண்டாம் உலகப் போர்
Rs. 1,590.00Read moreமருதன்
மனித குலம் அறிந்திராத பயங்கரங்களை அநாயசமாக நிகழ்த்திக்காட்டியது இரண்டாம் உலகப்-போர். போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய பேரழிவும் நாசமும் உலகம் முழுவதையும் உலுக்கி எடுத்தது. சிலருக்கு இது ஆக்கிரமிப்புப் போர். சிலருக்குத் தற்காப்பு யுத்தம். சிலருக்கு, பழிவாங்கல். சிலருக்கு விடுதலைப் போர். இன்னும் சிலருக்கு, இது ஒரு லாபம் கொழிக்கும் வியாபாரம். திடீரென்று ஒரு நாள் வெடித்துவிட்ட யுத்தமும் அல்ல. மிகக் கவனமாகத் தயாரிக்கப்பட்டு, தெளிவாகத் திட்டமிடப்பட்டு, தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம். அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தில் இரண்டாம் உலகப் போரை விரிவாக விவரித்து, அலசுகிறார் மருதன்.
[RARE] ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சிறுகதைகளும் குறுநாவல்களும்
Rs. 2,290.00Rs. 1,990.00Add to cartஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
மக்கள் நலன்களும் ஆளும் வர்க்கங்களது நலன்களும் எதிரும் புதிருமாய் அமைந்து முட்டி மோதிக் கொள்வதை அவர் ஒத்துக் கொள்ள மறுத்தார். வர்க்கங்களுக்கு எல்லாம் “அப்பாற்பட்டவையாய்த்” தாம் கருதிய தேசிய இலட்சியம் என் பதன் பெயரால் சமுதாயப் போராட்டத்தை அவர் எதிர்க்க முயன்றார். தஸ்தயேவ்ஸ்கியிற்கும் ஜனநாயக முகாமுக்கும் ஆழ்ந்த கருத்து வேற்றுமைகள் தோன்ற இவையே காரணம்.
தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் மலிந்திருக்கும் கொலைகளும் கொடூரங்களும் வாசகருக்குப் பரபரப்பூட்டுவதற்காக விவரிக்கப்படும் கற்பனை சிருஷ்டிகள் அல்ல, குரூர அனுபவங்க களால் வதைபட்ட ஓர் இதயத் தின் அடியாழத்திலிருந்து வெடித்தெழும் குமுறல்கள் அவை.கொலை புரிந்தோரும் கற்பழித்தோரும் வன்மனத்தோரும் சிறைச்சாலையில் அவருடன் இருந்தனர், மற்றும் பழி பாவம் அறியாத எத்தனையோ பேர் விதிவசத்தாலோ, ஜாராட்சியின் கண்மூடித்தனத்தாலோ, நீதித்துறையாரின் தவறுகளாலோ இவர்கள் மத்தியில் தள்ளப்பட்டிருந்தனர்.
* 70களிலும் 80களிலும் வெளிவந்த பிரபல்யமான புத்தகங்கள். மிகவும் அரிதான புத்தகங்கள்.
இவை பாவிக்கப்படாத புத்தகங்கள். ஆனால் அச்சிடப்பட்டு 30 வருடங்களுக்கு மேல் கிடங்கில் இருந்ததால் சில புத்தகங்களில் கரையான் அறிப்பு, பக்கங்களின் நிறம் மாறுதல் போன்ற சிறிய சேதங்கள் இருக்கலாம்.
ஆனால் முழுமையாக வாசிக்க முடியுமாக இருக்கும்.
கள்ளிக்காட்டு இதிகாசம் (Kallikattu Ithikasam)
Rs. 2,190.00Rs. 1,990.00Read moreவைரமுத்து
‘கவிஞர் வைரமுத்து படைத்த நூல்கள் பல, அவற்றுள் எனக்கு மிகவும் பிடித்தது கள்ளிக்காட்டு இதிகாசம்’ —அந்நாள் இந்தியக் குடியரசுத் தலைவர், டாக்டர். ஆ.ப.ஜெ. அப்துல்கலாம், 26 மார்ச் 2003
வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் பூர்வகதைதான் கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத் தன்மை கொண்ட அந்த நாவல் 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது.
வால்காவிலிருந்து கங்கை வரை (Volgavilirundhu Gangai Varai)
Rs. 2,790.00Rs. 2,590.00Add to cartராகுல சாங்கிருத்தியாயன்
மனித சமுதாயத்தின் தோற்றம், வளர்ச்சி, நாகரிகம் பற்றி தத்துவரீதியாக விளக்கும் மகத்தான சிருஷ்டி இந்தப் புத்தகம். ஆரம்ப நிலை வாசகரும் புரிந்து கொள்ளும்படியான எளிமையான 20 கதைகள். இந்து- ஐரோப்பிய, இந்து- இராணிய சாதிகளின் வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட ஒவ்வொரு, 8,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 20ம் நூற்றாண்டு வரைக்குமான, மனித சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு படி! இந்தியாவின் அதிக வாசகர்களால் மிகவும் விரும்பிப் படிக்கப்பட்டது மட்டுமல்லாமல் மதவாதிகளால் அதிகம் தாக்குதலுக்கு உள்ளான புத்தகமும் கூட. தமிழகத்தில் சிந்தனைப் புரட்சிக்கு வித்திட்ட அறிவார்ந்த நூலின் 29 வது அழகிய செம்பதிப்பு இது.
பிரபல கொலை வழக்குகள்
Rs. 1,290.00Read moreஎஸ். பி. சொக்கலிங்கம்
எம்ஜிஆரைச் சுட்டுவிட்டுத் தன்னையும் சுட்டுக்கொண்டார் எம்ஆர் ராதா. இருவரும் உயிர் பிழைத்தது எப்படி? எம்ஜிஆர் கொலை முயற்சி வழக்கு எப்படி நடத்தப்பட்டது?
இறந்துபோன ஜமீன் இளவரசர் ஒருவர் பல்லாண்டுகள் கழித்து, சந்நியாசியாகத் திரும்பிவந்தபோது, ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் அவர்மீது திரும்பியது. அவர் உண்மையிலேயே இளவரசரா அல்லது ஜமீனின் சொத்துகளை அபகரிக்க வந்தவரா? இந்தச் சிக்கலை விடுவிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளும் உண்மையை நிரூபிக்கத் தொடுக்கப்பட்ட வழக்கும் மர்ம நாவலைவிடவும் விறுவிறுப்பானவை. திடுக்கிடச் செய்யும் விசாரணை விவரங்கள்.
ஜின்னா, ஒரு கொலை வழக்கில் வாதாடியதும் அதில் தோற்றுப்போனதும் தெரியுமா?
தமிழகத்தை உலுக்கிய விஷ ஊசிக் கொலைகள் எப்படி முடிவுக்கு வந்தன? குற்றவாளிகள் எப்படிப் பிடிபட்டனர்?
சென்னை எழும்பூரிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில், ஒரு டிரங்குப் பெட்டியில், தலையில்லாத மனித உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. பின்னாட்களில், தூர்தர்ஷனில் தொடர் நாடகமாக மாறி பார்வையாளர்களைக் கிடுகிடுக்க வைத்தது இந்தக் கொலைச்சம்பவம். முழு விவரங்கள் உள்ளே.
க்ரைம் நாவல்களைவிடவும் சுவாரஸ்யமான, விறுவிறுப்பான?பல பிரபலமான கொலை வழக்குகளும் பின்னணி விசாரணைத் தகவல்களும் இந்நூலில் விரிவாக இடம்பெற்றுள்ளன. இந்த வழக்குகளை வழக்கறிஞர் S.P.சொக்கலிங்கம் பதைபதைக்கச் செய்யும் எழுத்து நடையில் நமக்கு அறிமுகம் செய்கிறார்.