Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.
Contact Us 0764980321

வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள் ( Vendre Theervom )

Rs. 3,190.00

or 3 installments of Rs.1,063.33 with

ரெய்னர் ஸிட்டல்மன்

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்

 

ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரண போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு, ஹாலிவுட்டில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார். கலிபோர்னியா மாநில கவர்னராகவும் ஆனார்.

 

ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாப்டின் பில்கேட்ஸ் உலகப் பெரும் பணக்காரர்களாக உயர்ந்தது எப்படி?

 

இந்த வெற்றி ரகசியங்களைப் பற்றி ரெய்னர் சிட்டல்மன் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகம் உலகப் புகழ் பெற்றது. அதை வென்றே தீருவோம் என்ற பெயரில், தமிழில் மொழிபெயர்த்துள்ளார் நாகலட்சுமி சண்முகம்.

 

வாழ்க்கையில் முன்னேற வேண்டும், வெற்றிச்சிகரத்தை அடையவேண்டும் என்று நினைப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

Out of stock

Notify me when stock available

ஆஸ்திரிய நாட்டில் ஒரு சாதாரணப் போலீஸ்காரருக்கு மகனாகப் பிறந்த அர்னால்டு ஸ்வார்ஷெனகர் அமெரிக்காவில் குடியேறி, பெரிய கோடீஸ்வரராகவும், ஏழு முறை மிஸ்டர் ஒலிம்பியா ஆணழகன் பட்டத்தை வென்றவராகவும், ஹாலிவுட்டில் கோடிக்கணக்கான டாலர்கள் சம்பளம் பெற்ற ஒரு சூப்பர் ஸ்டாராகவும், கலிபோர்னியா மாநில ஆளுனராகவும் எவ்வாறு உருவானார்?

ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ், மைக்ரோசாஃப்டின் பில் கேட்ஸ், விர்ஜின் ஏர்லைன்ஸின் ரிச்சர்டு பிரான்சன் ஆகியோரை உலகப் பெரும் பணக்காரர்களாக ஆக்கியது எது?

நவீன மேற்கத்திய இசையுலகின் முடிசூடா ராணியாக விளங்கி வரும் மடோனா, உலகப் புகழ் பெற்ற ஆடை வடிவமைப்பாளர் கோகோ சேனல், பார்பி பொம்மையை உருவாக்கி அதை உலகப் புகழ் பெற்ற வணிகச் சின்னமாக ஆக்கிய ருத் ஹேன்ட்லர் ஆகிய பெண்மணிகளின் வரலாறு காணாத வெற்றியின் ரகசியம் எது? மேற்குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் தங்கள் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து குவிய எந்த விதிகளைக் கடைபிடித்தனர், எந்த குணாம்சங்களை சுவீகரித்தனர், தங்களுக்கென்று எத்தகைய வெற்றிச் சூத்திரங்களை உருவாக்கினர் என்பதை இப்புத்தகத்தின் ஆசிரியர் மிக சுவாரசியமாக எடுத்துரைக்கிறார்.

இவர்களில் பலருக்குச் செல்வச் செழிப்பான பின்னணி ஏதும் இருக்கவில்லை. இவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியால் மட்டுமே கோடிகளைக் குவித்து அழியாப் புகழுக்கு அதிபதியானார்கள். அவர்களை வெற்றிச் சிகரத்திற்கு அழைத்துச் சென்ற கொள்கைகள் நம் ஒவ்வொருவராலும் எளிதாகப் பின்பற்றப்படக்கூடியவையே என்று இந்நூலாசிரியர் கூறுகிறார். அதன் அசைக்க முடியாத நிரூபணமாக அவரே திகழ்கிறார்.

படியுங்கள்! இக்கொள்கைகளை உங்கள் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அம்சங்களாக ஆக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் வெற்றி மேல் வெற்றி வந்து சேருவதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. நீங்கள் வென்றே தீருவீர்கள்!

 

Book Specifications

Title: Dare to be different and Grow Rich / வென்றே தீருவோம்: சாதனையாளர்களின் வெற்றி ரகசியங்கள்
Author: Dr. Rainer Zitelmann / ரெய்னர் ஸிட்டல்மன்
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 320
Weight:
Published Year: 2012
Tamil Translation Published Year: 2013
Publisher: Manjul Publishing House
ISBN: 978-81-8322-408-6
Dimensions: 20 x 14 x 4 cm
Print size: Please feel free to drop us a message.