Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

வில்லாளன்

Rs. 1,650.00

or 3 installments of Rs.550.00 with

பாலோ கொயலோ

 

ஞானத்தைத் தேடி ஒரு முதியவரை நாடி வருகின்ற ஓர் இளைஞனையும், தன் தேடலின் ஊடாக அவன் கற்றுக் கொள்கின்ற பாடங்களையும் பற்றிய உத்வேகமூட்டும் ஒரு கதை இது!

 

இந்நூலில் நாம் சந்திக்கவிருக்கின்ற தெட்சுயா, ஒரு காலத்தில் தன்னுடைய வில் வித்தைக்குப் புகழ் பெற்றவராக இருந்து, பிறகு பொது வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெற்றுள்ளவர். பல கேள்விகளைச் சுமந்து கொண்டு ஓர் இளைஞன் அவரைத் தேடி வருகிறான். அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதன் வாயிலாக, வில் வித்தையின் நுணுக்கங்களையும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கைக்கான அறநெறிகளையும் தெட்சுயா அவனுக்கு விளக்குகிறார்.

Out of stock

Notify me when stock available

செயலுக்கும் ஆன்மாவுக்கும் இடையே ஒரு பிணைப்பு இல்லாமல் வாழ்வது மனநிறைவு தராது, நிராகரிப்பு குறித்த பயத்தாலும் தோல்வி குறித்த பயத்தாலும் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதில் எந்தப் பயனும் இல்லை; மாறாக, ஒருவர் சவாலான காரியங்களில் இறங்க வேண்டும், தன்னிடம் துணிச்சலை வளர்த்துக் கொள்ள வேண்டும், நம்முடைய தலைவிதி நமக்கு வழங்குகின்ற எதிர்பாராத பயணத்தை நாம் சுவீகரித்துக் கொள்ள வேண்டும் என்பதே இக்கதையின் சாராம்சமாகும்.
மகிழ்ச்சியையும் மனநிறைவையும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கைக்கான அடித்தளத்தைப் பாலோ கொயலோ இந்நூலில் நமக்கு வழங்கியுள்ளார். கடின உழைப்பு, ஆழ்விருப்பம், குறிக்கோள், அக்கறையுணர்வு, தோல்வியை ஏற்றுக் கொள்ளும் மனப்போக்கு, ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவதற்கான தூண்டுதல் ஆகியவையே அந்த அடித்தளம் என்று அவர் வலியுறுத்துகிறார்.

 

எழுத்தாளர் பற்றி

நம்முடைய காலகட்டத்தைச் சேர்ந்த, மிகுந்த தாக்கம் விளைவித்துள்ள எழுத்தாளர்களில் 
ஒருவரான பாலோ கொயலோ, 1947ல் பிரேசிலில் ரியோ டி ஜெனிரோ நகரில் பிறந்தார். 
விற்பனையில் உலகச் சாதனைகளைப் படைத்துள்ள பல நூல்களை அவர் எழுதியுள்ளார். 
அவருடைய நூல்கள் 81 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, 170க்கும் அதிகமான 
நாடுகளில் சுமார் 22.5 கோடிப் பிரதிகள் விற்பனையாகியுள்ளன. ‘பிரேசிலியன் அகாடமி ஆஃப் 
லெட்டர்ஸ்’ அமைப்பின் ஓர் உறுப்பினரான அவர், செவாலியே விருது பெற்றவர். 2007ல், 
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதித் தூதராக அவர் நியமிக்கப்பட்டார். பாலோ கொயலோவின் 
தலைசிறந்த நூலான ‘ரசவாதி’ ஏற்கனவே மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீட்டில் தமிழில் 
வெளிவந்துள்ளது.

Book Specifications

Title: The Archer / வில்லாளன்
Author: Paulo Coelho / பாலோ கொயலோ
Translator:
Language: Tamil
Binding: Hardcover
Pages: 158
Weight: 220g
Published Year: 2020
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House
ISBN: 9788195041510
Dimensions:
Print size: Please feel free to drop us a message.