Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி (vitpanai thuraiyil adhalapaadhalathil irundhu vetri shiharathitku ennai uyarthikondadhu eppadi)

Rs. 1,490.00

or 3 installments of Rs.496.67 with

ஃபிராங்க் பெட்ஜர்

தமிழில்: நாகலட்சுமி சண்முகம்

 

“நான் இதுவரை படித்தப் புத்தகங்களிலேயே விற்பனைத்திறம் பற்றி எழுதப்பட்டுள்ள மிகவும் உதவிகரமான, உங்களை அபாரமாக ஊக்குவிக்கக்கூடிய தலைசிறந்த புத்தகம் இதுதான்.” – டேல் கார்னகி, ‘நண்பர்களை வெற்றி கொள்வதும் மற்றவர்களைக் கவர்ந்திழுப்பதும் எப்படி‘ என்ற நூலின் ஆசிரியர்

 

“இப்புத்தகம் எனக்குச் செய்துள்ள உபகாரங்களை அளவிட முடியாது. வெற்றிகரமாகத் திகழ வேண்டும் என்று விரும்புகின்ற எவரொருவரும் படித்தாக வேண்டிய ஒரு புத்தகம் இது.” –நார்மன் வின்சென்ட் பீல், ‘நேர்மறைச் சிந்தனையின் வியத்தகு சக்தி‘ என்ற நூலின் ஆசிரியர்

 

இப்புத்தகம் உங்களுக்கு இவற்றைக் கற்றுக் கொடுக்கும்:

  • உற்சாகத்தின் சக்தியால் எவற்றையெல்லாம் சாதிக்கலாம்
  • பயத்தை எவ்வாறு வெற்றி கொள்வது
  • உங்களது பொருட்களை சந்தேகக் கண்ணோடு பார்க்கும் வாடிக்கையாளரை உத்வேகத்துடன் வாங்க வைப்பது எப்படி
  • வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை விரைவாகப் பெறுவது எப்படி
  • ஒரு விற்பனையைச் சுருக்கமாக முடிப்பது எப்படி

Out of stock

Notify me when stock available

ஃபிராங்க் பெட்ஜருக்கு இருபத்தொன்பது வயதாக இருந்தபோது, அவர்
படுதோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த ஒரு காப்பீட்டு விற்பனையாளராக இருந்தார். ஆனால் அவருக்கு நாற்பது வயதானபோது அவருக்கென்று சொந்தமாக ஒரு பண்ணை வீடு இருந்தது. நினைத்திருந்தால் வேலையிலிருந்து ஓய்வு பெறக்கூடிய அளவு பணவசதியையும் அப்போது அவர் பெற்றிருந்தார்.

விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்த அவரால் எப்படி வெற்றிச் சிகரத்தை எட்ட முடிந்தது? அமெரிக்காவிலேயே மிக அதிக வருவாய் ஈட்டிய விற்பனையாளர்களில் ஒருவராகவும், ஆயிரக்கணக்கான விற்பனையாளர்களுக்கு உத்வேகம் ஊட்டிய ஒரு புகழ்பெற்றப் பேச்சாளராகவும் ஆவதற்குத் தளக்கு உதவிய ரகசியங்களை அவர் இப்புத்தகத்தின் வாயிலாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறார்.

இப்புத்தகம் நெடுகிலும் பரவிக் கிடக்கும் அவரது சொந்த அனுபவக் கதைகள், விற்பனைத்துறை இவ்வளவு சாகசம் நிறைந்த, சவால்கள் சூழ்ந்த, பணத்தைக் குவிக்க எண்ணற்ற வழிகளைக் கொண்டிருக்கின்ற ஒரு துறையா என்று உங்களை வியக்க வைக்கும். பெட்ஜரின் கொள்கைகளை நீங்கள் நடைமுறைப்படுத்தினால், நீங்கள் எதை விற்றுக் கொண்டிருந்தாலும் சரி, அதிகத் திறனுடையவராக, அதிக வருவாய் ஈட்டுபவராக, உங்கள் நிறுவனத்திற்கு யானை பலம் சேர்ப்பவராக ஆவீர்கள் என்பது உறுதி.

 

About the Author

ஃபிராங்க்ளின் லைல் (ஃபிராங்க்) பெட்ஜர் (1888-1981) ஒரு விற்பனையாளர் மற்றும் சுய உதவி எழுத்தாளர்.

 

Book Specifications

Title: How I Raised Myself from Failure to Success in Selling / விற்பனைத்துறையில் அதலபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி
Author: Frank Bettger / ஃபிராங்க் பெட்ஜர்
Translator: Nagalakshmi Shanmugam / நாகலட்சுமி சண்முகம்
Language: Tamil
Binding: Paperback
Pages: 288
Published Year: 1947
Tamil Translation Published Year: 2013
Publisher: Manjul Publishing House
ISBN: 9788183223874
Print size: Please feel free to drop us a message.