Category
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- Children Books
- English Books
- Book Bundles
- Current Affairs
- Military & Intelligence
- Short Stories
- Fiction
- Poetry
- Environment & Nature
- Science
- Medicine
- Linguistics
- Atheism & Agnosticism
- (Auto)Biography & Memoir
- Business & Management
- Creativity
- Economics
- Education & Research
- Health & Nutrition
- History
- Humor
- Love & Relationships
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Politics
- War
- Psychology
- Religion & Spirituality
- Society & Culture
- Sports
- Travel & Adventure
- Technology & the Future
- True Crime
- Women Empowerment
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- சட்டம்
- இயற்கை
- கட்டுரை
- கணிதம்
- பயணக்குறிப்புகள்
- விவசாயம்
- அரசியல்
- ஆரோக்கியம்
- உளவியல்
- புனைவு
- காதல் மற்றும் உறவு
- சமூகவியல்
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பொருளாதாரம்
- போர்
- பணம்
- மதம் & ஆன்மீகம்
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- சினிமா
- கவிதைகள்
- குழந்தை வளர்ப்பு
- குற்றம்
- மருத்துவம்
- மொழி
Product categories
- Children Books
- English Books
- (Auto)Biography & Memoir
- Atheism & Agnosticism
- Book Bundles
- Business & Management
- Creativity
- Current Affairs
- Economics
- Education & Research
- Environment & Nature
- Fiction
- Health & Nutrition
- History
- Humor
- Linguistics
- Love & Relationships
- Medicine
- Military & Intelligence
- Parenting
- Personal Development
- Personal Finance
- Philosophy
- Poetry
- Politics
- Psychology
- Religion & Spirituality
- Science
- Short Stories
- Society & Culture
- Sports
- Technology & the Future
- Travel & Adventure
- True Crime
- War
- Women Empowerment
- University Magazines
- சிறுவர்களுக்கான புத்தகங்கள்
- தமிழ் Books
- Book Bundles ( தமிழ் )
- அரசியல்
- ஆரோக்கியம்
- இயற்கை
- உளவியல்
- கட்டுரை
- கணிதம்
- கவிதைகள்
- காதல் மற்றும் உறவு
- குற்றம்
- குழந்தை வளர்ப்பு
- சட்டம்
- சமூகவியல்
- சினிமா
- சுயசரிதைகள் மற்றும் நினைவுகள்
- சுயமுன்னேற்றம்
- தத்துவஞானம்
- தொழில்நுட்பம் & எதிர்காலம்
- பணம்
- பயணக்குறிப்புகள்
- புனைவு
- பொருளாதாரம்
- போர்
- மதம் & ஆன்மீகம்
- மருத்துவம்
- மொழி
- வணிகம் & மேலாண்மை
- வரலாறு
- விஞ்ஞானம் & பிரபல அறிவியல்
- விளையாட்டு
- விவசாயம்
நிமித்தம் / Nimiththam
Rs. 2,790.00

எஸ்.ராமகிருஷ்ணன்
நிராகரிப்பின், புறக்கணிப்பின் நஞ்சைவிட கசப்பான ஒன்று இந்த உலகில் இருக்க முடியுமா?
ஆனால் ஒவ்வொரு நாளும் இந்த நஞ்சை அருந்தியபடி எண்ணற்ற மனிதர்கள் தலைகவிழ்ந்து மௌனமாக நடந்து போகிறார்கள்.
இந்த மௌனத்தின் ஆழம் நம் இதயங்களைச் சில்லிடச் செய்வது.
இந்த நாவல் அந்த ரகசியப் பள்ளத்தாக்கைத்தான் எட்டிப்பார்க்கிறது.
புறக்கணிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒரு கதையை கொண்டிருக்கிறான்.
வலியாலும் வேதனையாலும் ததும்பும் அந்தக் கதை மனித துயரத்தின் சாட்சியம்.
நிமித்தம் அப்படி தொடர்ந்த அவமானத்திற்கும் ஏளனத்திற்கும் உள்ளான காதுகேளாத ஒருவனின் கதையை விவரிக்கிறது.
தேவராஜ் ஒரு கதாபாத்திரமில்லை. மாற்றுத்திறனாளிகளை நம் சமூகம் நடத்தும் அவலத்தின் அடையாளம். அவனது வாழ்க்கையின் இடைவெட்டாக தமிழ்ச்சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்கள் ஊடாடுகின்றன.
மாயமும் யதார்த்தமும் மாறிமாறி பின்னப்பட்டு மாபெரும் கதையாடலாக விரிவுகொள்வதே இந்த நாவலின் தனிச்சிறப்பு.
Only 1 left in stock
About the Author
நவீன தமிழ் இலக்கியத்தின் மிக முக்கிய எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன். கடந்த 25 ஆண்டுகாலமாக சிறுகதைகள், நாவல், கட்டுரைகள், நாடகம், குழந்தைகள் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சினிமா, ஊடகம், இணையம் என்று பல்வேறு தளங்களிலும் தீவிரமாக இயங்கி வருகிறார்.
நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார் முழுநேர எழுத்தாளரான இவர் இந்தியா முழுவதும் சுற்றியலைந்து வாழ்வு அனுபவங்கள் கொண்ட தேசாந்திரி, உப பாண்டவம், நெடுங்குருதி, யாமம், உறுபசி, துயில், நிமித்தம், சஞ்சாரம் , இடக்கை, பதின் ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள் எனது இந்தியா, மறைக்கபட்ட இந்தியா போன்றவை இவரது முக்கிய வரலாற்று நூல்களாகும்
Book Specifications
Binding: Paperback
Pages: 410
Published Year: 2019
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
ISBN: 9789387484337
Related products
-
போரும் வாழ்வும் (3 பாகங்கள்) ( Porum Vaazhvum )
Rs. 18,150.00Rs. 16,490.00or 3 X Rs.5,496.67 withRead moreலியோ டால்ஸ்டாய்
தமிழில்: டி.எஸ்.சொக்கலிங்கம்
லியோ டால்ஸ்டாயின் முக்கியமான நாவல்கள் போரும் வாழ்வும் ஒன்று.
போரும் வாழ்வும் ரஷ்யாவின் ”இலியட், ஒடிசி” என்றுபோற்றப்படுகிறது. இந்த மாபெறும் நாவல் வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது.
போரும் வாழ்வும் படிக்கத் தொடங்கியபோது பின்னாட்களில் வெளிவந்த பெரு நாவல் முயற்சிகளுக்கு அது முன்னோடி என்றோ நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டது என்றோ எனக்குள் எதுவித எண்ணமும் உருவாகி இருக்கவில்லை. ஆங்கிலப் பிரதியில் சில அத்தியாயங்கள் படித்த பின்பு தமிழில் அந்நூலினை வாசிக்க வேண்டுமென்ற ஆவல் எழுந்தது. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களின் மொழிபெயர்ப்பு சில அத்தியாயங்களிலேயே வாசித்துக் கொண்டிருப்பது ஒரு மொழிபெயர்ப்பு நாவல் என்பதை மறக்கடித்துவிட்டது.
பிரெஞ்சு கலாச்சாரம் வலுவாக ஊடுருவிய ரஷ்ய உயர்குடியை பகடி செய்தவாறே நெப்போலியனுக்கு எதிராக ரஷ்யா நடத்தப் போகும் போருக்கான ஆயத்தங்களுடனும் போரில் கலந்து கொள்ளக் கூடிய உயர் வகுப்பு இளைஞர்களுடனும் அவர்களின் குடும்பங்களுடனும் தொடங்குகிறது. பீயரும் பால்கோன்ஸ்கிகளும் ராஸ்டோவ்களும் குராகின்களும் டோலாகாவும் விருந்துகளின் வழியாகவும் உரையாடல்கள் வழியாகவும் அறிமுகமாகின்றனர். அவர்கள் குறித்த ஒரு சித்திரம் உருவான பின்பு போர் நோக்கி நகர்கிறது.
இரண்டு படைப்பிரிவுகளாக பிரிந்து நின்று சண்டையிடும் வகைப் போர்களையே உருவகப் படுத்தியிருந்த மனதிற்கு டால்ஸ்டாய் அறிமுகம் செய்யும் போர்க்களம் அதிர்ச்சி தரவே செய்கிறது. தளபதியின் கட்டுப்பாட்டில் அனைத்தும் இருப்பதாக நம்பும் ஆண்ட்ரூ யுத்தம் செல்லும் போக்கிற்கு ஏற்றவாறு பாக்ரேஷன் அளிக்கும் உத்தரவுகளை கண்டு ஆச்சரியம் கொள்வதும் இளமைத் துடிப்பில் முன்னேறி காயம்படும் நிக்கலஸ் ஒற்றை பீரங்கிப் படையுடன் எதிர்த்து நிற்கும் டூஷின் வீரத்துடன் சண்டையிட்டு போரின் அன்றைய நாள் முடியும் போது தாங்கள் கைப்பற்றிய பதக்கங்களுடனும் உடுப்புகளுடனும் பதவி உயர்வுக்காக கெஞ்சும் வீரர்கள் என போர் குறித்த ஒவ்வொரு பிம்பத்தையும் சிதறடிக்கிறது முதற் போர்களம்.
மேலும் நடக்காதவற்றை நடந்ததாக நம்பி அதனையே உண்மையாக ஏற்று அதை மேலும் பெருக்கிச் சொல்லுவதையும் நுண்மையாக பகடி செய்கிறது.
சார் மன்னர் அலெக்சாண்டரை ஒரு பரிதாபமான சூழலில் நிக்கலஸ் பார்ப்பதும் மனோகரமான இயற்கைக்கு முன் அதுவரை பேருருவமாக ஆண்ட்ரூ மதித்த நெப்போலியன் சிறுத்துப் போவதும் மனதில் எஞ்சியிருந்த பிம்பங்கள் குறித்த கற்பனையையும் இல்லாமல் ஆக்குகின்றன.
– சுரேஷ் பிரதீப்
-
கடல் புறா (மூன்று பாகங்கள்) ( Kadal Pura – 3 Parts )
Rs. 7,260.00Rs. 6,790.00or 3 X Rs.2,263.33 withRead moreசாண்டில்யன்
கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணையோடு எவ்வாறு முறியடித்தான் என்பதிலிருந்து கதை தொடங்குகிறது. அகூதாவின் உதவியால் கடற்போரின் நுணுக்கங்களை அறிந்து, அகூதாவிடம் பரிசாகப் பெற்ற கப்பலை, தனக்கேற்றவாறு மாற்றி கடல் புறாவை உருவாக்குகிறான்.கடல்புறாவின் உதவியால் கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து சோழ நாட்டு வணிகர்களை காப்பாற்றுகிறான். கடல் மோகினித்தீவில் மஞ்சளழகியை சந்திக்கிறான். மஞ்சளழகி அவனிடம் காதல் வயப்படுகிறாள். தன் கடமையை முன்னிட்டும், காஞ்சனாவின் நினைவாலும் மஞ்சளழகியை ஏற்க முடியாமல் விலகுகிறான். ஆனாலும் அவளை மறக்க முடியாமல் வருந்துகிறான்.பின் தற்செயலாக காஞ்சனாவை கடல் கொள்ளைக்காரர்களிடமிருந்து காப்பாற்றுகிறான். ஸ்ரீவிஜயத்தைக் கைப்பற்றி சோழப் புலிக்கொடியை பறக்கவிடுகிறான். போரில் தோற்ற ஜெயவர்மனின் வேண்டுகோளின் பேரில் வீரராஜேந்திரசோழர் மஞ்சளழகியையும் கருணாகர பல்லவனுக்கு மணமுடித்து வைக்கிறார்.
-
விலங்குப் பண்ணை ( The Animal Farm )
Rs. 860.00or 3 X Rs.286.67 withRead moreஜார்ஜ் ஆர்வெல்
லெனினுக்குப் பிந்தைய கம்யூனிஸ்ட ரஷ்யாவின் அரசியலை இந்த நாவல் மிகக் கடுமையாக விமர்சிக்கிறது. ஆனால் மறைபொருள் வடிவத்தில் ஆகவே இதை ஓர் உருவக நாவல் என்று சொல்லலாம். ஆனால் இந்த நூலை எழுதிய ஜார்ஜ் ஆர்வெல் ஒரு சோஷலிஸ்டு. கம்யூனிஸத்திற்கு எதிரானவர் அல்ல. ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டு விழா தொடங்கியிருக்கிற இந்தத் தருணத்தில் ‘விலங்குப் பண்ணை’யின் அரசியல் நம்மை அதிர்ச்சியுறச் செய்கிறது; ஆழ்ந்து கவனிக்க வைக்கிறது. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த நாவலை ஒரு தற்கால இலக்கியமாகவே பார்க்கத் தோன்றுகிறது.
-
கோபல்ல கிராமம் ( Gopalla Kiramam )
Rs. 1,580.00or 3 X Rs.526.67 withRead moreகி. ராஜநாராயணன்
பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.
-
வின்சன்ட் வான் கோ: மஞ்சள் வீடு (Vincent Van Gogh: Manjal Veedu)
Rs. 3,290.00or 3 X Rs.1,096.67 withRead moreபட்டுக்கோட்டை ராஜா
இடுங்கும் குளிர் நவம்பர் மாதத்தில் ஒருநாள் வின்சென்ட் மங்காசுக்கு நடந்தான். அவனது கையிலோ, மனதிலோ எதுவுமில்லை. நடந்தவன், சுரங்கச் சுவருக்கு வெளியே இருந்த இரும்புச் சக்கரத்தில் உட்கார்ந்து கொண்டான். மனம் விச்ராந்தியாய் இருந்தது.
அப்போது வயதான ஒரு சுரங்கத் தொழிலாளி வாசல் வழியே வெளியேறி வந்தான்…
கறுப்புத் தொப்பி, கரிபடிந்த சீருடை – கைகள் பேண்ட் – பாக்கெட்டில் இருந்தன. முழங்கால்கள் பேண்ட்டின் வெளியே முட்டித் தெரிந்தன. அந்த உருவமும், அவனது நடையும் வின்சென்ட்டின் மனதில் என்னவோ கிளர்ச்சி செய்தன.
தனது சட்டைப் பைக்குள் கைவிட்டபோது, அப்பா எழுதிய கடிதமும், ஒரு பென்சிலும் கிடைத்தன. கடித உறையின் மேலே, விரல்களின் நடுவே பென்சில் நர்த்தனம் புரிந்தது. உடனே அந்த வயதான தொழிலாளியின் உருவம் அங்கே ஓவியமாய்ப் பதிந்துவிட்டது!
சில நிமிடங்களுக்குப் பிறகு இளைஞன் ஒருவன் வெளிப்பட்டான். அவன் நல்ல உயரமாய் – திடமாய் இருதான். அதே சீருடை. தனது கையில் வின்சென்ட் வைத்திருந்த கடிதத்தின் மறுபக்கம் வெறுமையாக இருந்தது. மீண்டும் விரல்கள் பென்சிலைப் பிடித்தன. கோட்டோவியமாய் அந்த இளைஞனின் உருவம் அங்கே பதிவானது!
அனிச்சையாகவே அந்தச் செயல் நடந்தது. அவர்களை வரைய வேண்டுமென வின்சென்ட் நினைக்கவில்லை. உள்ளிருந்த ஏதோ ஒரு உந்துசக்தி அவனைச் செயல்படுத்தியது.
வின்சென்ட் தனக்குள்ளிருந்த ஓவியனை அடையாளம் கண்ட நாள் அதுதான்!
-
கரமசோவ் சகோதரர்கள் (2 பாகங்கள்) ( Karamazov Sagothararkal )
Rs. 11,550.00Rs. 10,490.00or 3 X Rs.3,496.67 withRead moreஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
தமிழில்: கவிஞர் புவியரசு
உலக இயக்கத்தில் மிகச்சிறந்த நாவலாசிரியர் என்ற புகழுக்கு உரியவர், ரஷ்ய இலக்கிய மேதை டாஸ் டாவ்ஸ்கி.ஏழை மக்கள், மரணம் அடைந்தவர்களின் வீடு, முட்டாள், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் என்ற ஐந்துபடைப்புகள் மிகச் சிறந்தவை. இவற்றில் குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய இரண்டு நாவல்களும் கலையின் சிகரங்கள்.அவருடைய நாவல்களை, அவ்வளவு சுலபமாக படித்துவிட முடியாது. மிகவும் கவனமாக, நிறுத்தி, நிதானத்துடன் தான் படிக்க முடியும். அழுத்தமும், கனமும் கூடிய அற்புதப் படைப்புகள் அவை என்பார் புலவர். கோ. தேவராசன்.1880ம் ஆண்டு வெளிவந்த நாவல் இது.
கடவுள் இரும்பு என்னும் தத்துவத்தை வலியுறுத்தும் நாவல். கரமசோவ் சகோதரர்கள்… கதை அம்சம் என்று பார்த்தால் சாதாரண துப்பறியும் நாவல் போன்றதுதான். ஆனால், அற்புதமான குணச் சித்திரப் படைப்புகள்… இதில் வரும் கேரக்டர்கள்!மூன்று புதல்வர்களின் தந்தையான கரமசோவ் பணத்திற்காக எத்தகைய இழிந்த செயலையும் செய்யத் துணிபவன், மோசடிகளைத் துணிந்து செய்யக் கூடியவன், மண்டைக் குழப்பம் உள்ளவன், கேடு கெட்டவன் என்று அறிமுகப்படுத்துவார். இந்த பாவலோவிச் கரமசோவ்தான் கொல்லப்படுகிறான்….. நீரோட்டம் போன்ற தெளிவான நடையில் மொழி பெயர்த்திருக்கும். புவியரசன் போற்றப்பட வேண்டியவர்.
-
தாய் ( Thaai )
Rs. 3,630.00Rs. 3,390.00or 3 X Rs.1,130.00 withAdd to cartமாக்ஸிம் கார்க்கி
தமிழில்: தொ. மு. சி. ரகுநாதன்
படிக்காதவன் உலகம் அறியாதவன் தொழிலாளியின் மனைவி குடிபழக்கத்துக்கு ஆட்பட்ட கணவனால் நிறைய ஆட்ய் உதைபட்டு அழைக்கழிக்கப்பட்டவள். இவளே பிற்காலத்தில் புரட்சிப் புயலான தாய் ஆகிறாள். இந்நாவல் மக்சீய கார்க்கியின் ஒப்புயர்வர்ற அரிய படைப்பு. ரஷ்ய மொழியில் இருநூறுக்கும் மேற்பட்ட பதிப்புகளும் 127 வேற்று மொழிகளில் நூற்றுக்கணக்கான பதிப்புகளும் இதுவரை வெளிவந்திருப்பதே இந்நூலின் சிறப்பைப் பறைசாற்றும்.
-
ஸீரோ டிகிரி ( Zero Degree )
Rs. 2,650.00or 3 X Rs.883.33 withRead moreசாரு நிவேதிதா
ஸீரோ டிகிரி கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒப்பாய்வுப் பாடதிட்டத்திலும், கோட்டயம் மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் உயர்னிலைப் பட்டப்படிப்பிலும் பாடமாக வைக்கப்பட்ட நாவல். இந்தியாவின் 50 மிகச் சிறந்த புனைக்கதைகளில் ஒன்றாக Harper Collins பதிப்பகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவல். Jan Michalski சர்வதேச விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாவல். இந்திய மொழிகளில் எழுதப்பட்ட ஒரே liopgrammatic நாவல்.
அகதி முகாம்கள் உட்பட இன்று உலகளாவி பரந்து கிடக்கிறது தமிழ்ச் சமூகம். அதற்கும், ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் அளிக்கப்பட்ட கொடையே ஸீரோ டிகிரி. ஆனால் இந்நாவலைப் பங்களிப்பென ஏற்பதோ சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தும் கழிவுப் பொருளாக ஒதுக்கித் தள்ளுவதோ சமூகத்தின் பிரச்னையே தவிர என்னுடையது அல்ல. என் மூலமாக இக்காரியம் நடந்திருப்பதென்பது ஒரு தற்செயல் நிகழ்வு மட்டுமே. இதில் நான் ஒரு கருவியாகச் செயல்பட்டிருக்கிறேன் என்று சிறு உவகை மட்டுமே என்னளவில் மிஞ்சக் கூடியது. ஸீரோ டிகிரி நாவலின் முதல் பதிப்பு வெளிவந்தபோது சில ‘பொதுநல விரும்பிகள்’ இதைத் தடை செய்ய வேண்டுமென தவளைச் சத்தம் எழுப்பினார்கள். அந்த வேளையில் அன்பான சில உள்ளங்கள் எனக்கு அளித்த தார்மீக ஆதரவும் அன்பும் என்னால் மறக்க இயலாதது. ஸீரோ டிகிரி ஒரு Lipogrammatic நாவல். சர்வதேச அளவிலேயே ஒன்றிரண்டு நாவல்கள் மட்டுமே இந்த முறையில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நாவலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்த்தைகளைத் தவிர்த்து விட்டு எழுதுவது லிப்போக்ராமடிக் எழுத்து. ஸீரோ டிகிரியில் ஒரே ஒரு அத்தியாயத்தைத் தவிர வேறு எந்த இடத்திலும் ‘ஒரு’ ‘ஒன்று’ என்ற இரண்டு வார்த்தைகளும், கமா, கேள்விக்குறி போன்ற நிறுத்தற்குறிகளும் பயன்படுத்தப்படவில்லை. – சாரு நிவேதிதா
-
அன்னா கரீனினா 2 பாகங்கள் ( Anna Karenina )
Rs. 9,900.00Rs. 8,900.00or 3 X Rs.2,966.67 withRead moreலியோ டால்ஸ்டாய்
தமிழில்: நா. தர்மராஜன்
அன்னா கரீனினா அதன் எல்லா அம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு. நாவலின் மைய வினா என்பது காதலுக்கும் குடும்பம் என்ற அமைப்புக்கும் இடையேயான உறவென்ன என்பதுதான். காதல் இல்லாத திருமணத்தை கடமைக்காகச் சுமக்க வேண்டுமா? காதலுக்காக ஒருவன் அல்லது ஒருத்தி உறவுகளை இழக்க முடியுமா? அப்படி இழக்குமளவுக்குத் தகுதி கொண்டதுதானா காதல்? உண்மையான தீவிரமான நேசம் என்பது ஒழுக்கக் கேடு என்று எதிர்மறையாக மதிப்பிடப்படுவது சரியா? காதலும் காமமும் எங்கே முயங்குகின்றன, எங்கே பிரிகின்றன? இவ்வாறு அந்த மையக்கேள்வியை தல்ஸ்தோய் விரித்துக்கொண்டே செல்கிறார்.
மிகச்சரளமாக வாசிக்கும்படியாகவும், அதேசமயம் முழுமையாகவும் இந்த மொழியாக்கத்தைச் செய்திருக்கிறார் நா.தர்மராஜன் அவர்கள். அவர் ருஷ்யாவில் பல காலம் இருந்தவராதலால் நுண்தகவல்கள் எல்லாம் சீராக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. தல்ஸ்தோய்யின் நாவல்கள் வெறும் மானுடசித்திரங்கள் மட்டுமல்ல. அவை ருஷ்யப் பண்பாட்டின், ருஷ்ய நிலத்தின், ருஷ்ய வரலாற்றின் பதிவுகளும்கூட. அவை முழுமையான நாவல்கள். வாசகனுக்கு ருஷ்யாவில் வாழ்ந்து மீண்ட அனுபவத்தை அளிப்பவை. அந்த அனுபவத்தை அளிப்பதாக உள்ளது இந்த மொழியாக்கம்.
-
இரண்டாவது தாலி ( Irandavathu Thaali )
Rs. 1,450.00or 3 X Rs.483.33 withRead moreராஜேஷ்குமார்
சுபமதி, செல்லமாக வளரும் பணக்கார வீட்டுப் பெண். அப்பா தொழிலதிபர்.அம்மா இல்லாததால் சுதந்திரம் கொடுத்து பாசமாக வளர்க்கும் அப்பா. பல விஷயங்களில் கண்டிப்பானவர். அதனால் அவளுக்கு அப்பாவிடம் பயம் கலந்த மரியாதை.
ஒரு சமயத்தில் தன் உயிரை காப்பற்றியதால் சுபமதி ,புவனேந்திரன் எனும் இளைஞனிடம் மனதை பறிக் கொடுக்கிறாள். இதற்கிடையில் அவளின் அப்பா தன்னுடனே இருக்கும் அக்கா பையன் சுந்தரத்தை சுபமதிக்கு திருமணம் செய்ய ஆயுத்தம் செய்கிறார்.
காதலன் வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறான்.அவ்வளவு இலகுவாக அப்பாவிற்கும் சுந்தரத்துக்கும் துரோகம்செய்ய அவளுக்கு மனம் வரவில்லை.
குழப்பத்தில் ஆழ்கிறாள் சுபமதி.ஆனால் அவள் ஒரு முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். அந்த முடிவு அவள் வாழ்க்கையை மட்டுமல்ல அவள் சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் புரட்டிப் போடுகிறது.
கதையில் வரும் வசனங்களும் நிகழ்வுகளும் உங்கள் மனதை வருடவும் செய்யும், நெகிழவும் செய்யும்.
பிறகு, கதைக்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்று கேட்கிறீர்களா? அறிய படியுங்கள்,ராஜேஷ்குமாரின் விறுவிறுப்பான நடையில் இரண்டாவது தாலி.
Reviews
There are no reviews yet.