Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: குழந்தை வளர்ப்பு

Showing all 5 results

  • குழந்தை வளர்ப்பு அறிவியல் ( Kulanthai Valarppu Ariviyal )

    Rs. 1,890.00
    or 3 X Rs.630.00 with

    ஸ்டீவன் ருடால்ப்

     

    குழந்தை வளர்ப்புக் கலை தொடர்பாக இந்தியப் பெற்றோருக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்ட வழிமுறைகள்.

    * உங்கள் குழந்தைகள் தேர்வுகளில் குறைவான?மதிப்பெண்கள் பெறுகிறார்களா?
    * நொறுக்குத் தீனியாகத் தின்றுகொண்டே இருக்கிறார்களா?
    * டி.வி பார்த்துக் கொண்டேயிருக்கிறார்களா?
    * சொன்ன பேச்சைக் கேட்பதில்லையா?

    இது போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கான எளிய, புதுமையான தீர்வுகளைப் பிரபல அமெரிக்கக் கல்வியாளர் ஸ்டீவன் ருடால்ஃப் இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார். இந்தியப் பெற்றோர்களுக்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆலோசனைகளைப் பல்வேறு உண்மை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார். ஸ்டீவன் ருடால்ஃப், பழம் பெருமை மிகுந்த இந்திய வேதங்களில் ஆரம்பித்து இன்றைய அதி நவீன நியூரோ சயின்ஸ் வரையில் கல்வி சார்ந்த ஏராளமான கட்டுரைகள், நூல்களைப் படித்து அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதியுள்ளார். ஃபரிதாபாத்தில் இருக்கும் ஜீவா இன்ஸ்டிட்யூட்டின் கல்வி இயக்குநராகவும் ஜீவா பள்ளியின் நிறுவனராகவும் இருக்கிறார். சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாகக் கல்வித்துறையில் செயல்பட்டு வந்திருக்கிறார். ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். அதில் கிடைத்த அறிவையெல்லாம் திரட்டி இந்த நூலில் பத்து விதிகளாக ரத்தினச் சுருக்கமாகத் தந்திருக்கிறார்.

    குழந்தைப் பருவத்தில் இருந்து இளம் பருவம் வரையில் குழந்தை வளர்ப்பு தொடர்பாகச் சொல்லப்பட்டிருக்கும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால் உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் நிச்சயம் ஒளிமயமாகும்.

    or 3 X Rs. 630.00 with Koko Koko
    Add to cart
  • Out of Stock

    குழந்தைகளின் மனநலம் / kulanthaikalin Mananalam

    Rs. 1,190.00
    or 3 X Rs.396.67 with

    A. வினோத்குமார்

     
    சிலர் குழந்தைகளை வளர்க்கும் விதத்தைப் பார்த்தால், சர்க்கஸ் தான்நினைவிற்கு வருகிறது. மிருகங்களை அடித்து, துன்புறுத்தி, பார்வையாளர்களைமகிழ்விக்கும் ரிங் மாஸ்டரைப் போல குழந்தைகளை அடித்து, திருத்திவசப்படுத்துவது யாரை மகிழ்விக்க.. குழந்தையை நல்லா வளர்த்திருக்கிறாங்கஎன்று பிறரிடம் பாராட்டு பெறுவதற்காகவா? ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டால் படிக்காத குழந்தைகளை அடித்து வளர்த்தால்தானே ஒழுங்குக்கு வருவார்கள்? என்று கூறுவார்கள்.
     
    குழந்தைகளை கையாள்வது எப்படி.. பொதுவாக குழந்தைகள் எல்லாவற்றையும் பரிசோதித்துப் பார்க்க விரும்புவார்கள்.அனுபவத்தில் முதிர்ந்தவர்கள் தான் எது சரி எது தவறு என்று சொல்லிக் கொடுக்கவேண்டும். சேட்டை என்றால் என்ன? நாம் சந்தோஷமாக இருக்கும் போதுகுழந்தை நமது மூக்கில் விரலை வைத்து ஆட்டினால் கூட சிரித்து மகிழ்கிறோம். நாம் வேறு மனநிலையில் இருக்கும்போது குழந்தை சாதாரணமாக மண்ணைத் தொட்டால் கூட குழந்தையை அடித்து கண்படி திட்டுவார்கள். விதிகளை குழந்தை மீறும்போது நிச்சயமாக கண்டிக்கவேண்டும்.
     
    தண்டிப்பது குழந்தையை மனஅழுத்தத்திற்கு ஆளாக்கி, பிற்காலத்தில் தவறான பாதைக்கு இழுத்துச் சென்றுவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை தண்டிப்பதால், அவர்கள் ஒருவித எதிர்மறையான எண்ணங்களை குடும்ப உறுப்பினர் மீது ஏற்படுத்திக்கொண்டு, மறைமுகமான தீய பழக்கங்களுக்கு ஆட்கொண்டு விடுவார்கள். அன்போடும் ஆதரவோடும் புரியவைத்தால், எதிர்காலத்தில் குழந்தைகள் நல்ல மனிதர்களாக வலம்வருவார்கள். நன்றி;நக்கீரன்

    or 3 X Rs. 396.67 with Koko Koko
    Read more
  • Out of Stock

    குழந்தைகளை வளர்க்காதீர்கள் வளரவிடுங்கள்

    Rs. 2,090.00
    or 3 X Rs.696.67 with

    எஸ். குருபாதம்

     

    குழந்தைப் பருவத்தில் மனதளவில் ஏற்படும் சிறிய பாதிப்புகள் கூட அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்ற அடிப்படையில் குழந்தை வளர்ப்பை இந்நூல் அணுகுகிறது. எனவே குழந்தைகளுக்கு உரிய மரியாதை கொடுத்து, அவர்களின் இயல்பறிந்து எவ்வாறு பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளிடம் எப்படிப் பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பிரச்னைகளை எப்படி அணுக வேண்டும்? என்பதை இந்நூல் விளக்குகிறது.

     

    குழந்தைகளிடம் எதிர்மறையாக எதையும் பேசாதிருப்பது, எதையும் செய்யாதே என்று ஆணையிடுவதற்குப் பதிலாக, இதைச் செய்தால் என்ன பயன்? இதைச் செய்தால் என்ன தீங்கு? என்று அவர்களுக்கு விளக்கிக் கூறுவது என பல விஷயங்களை நூலாசிரியர் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறார்.

     

    குழந்தைகளின் அறிவுத்திறனை மேம்படுத்த எவ்விதமாக அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும்? என்பதையும் விளக்குகிறார். சிறப்பாக வளரக் கூடிய சூழல்களை ஏற்படுத்தினாலே போதும்; அந்தச் சூழல்களில் குழந்தைகள் தாமாகவே சிறப்பாக வளர்வார்கள் என்கிறார் நூலாசிரியர்.

     

    காலங்காலமாக அனுபவஅறிவு சார்ந்ததாக இருந்த குழந்தை வளர்ப்பை, அறிவியல் அடிப்படையில் மாற்றியமைக்க வழிகாட்டுகிறது இந்நூல்.

    or 3 X Rs. 696.67 with Koko Koko
    Read more
  • Raising Disease Free Kids Tamil flashbooks.lk
    Out of Stock

    ஆரோக்கியமான குழந்தைகளை வளர்த்தெடுக்க ( Aarokiyamaana Kulanthaikalai Vazharthedukka )

    Rs. 1,390.00
    or 3 X Rs.463.33 with

    டாக்டர் புரூஸ் மில்லர்

    தமிழில்: குமாரசாமி

     

    இன்று, குழந்தைகளின் உணவு, அடிப்படையில் புதிய முழு உணவாக இருந்து, அதிகப்படியான பதப்படுத்தப்பட்ட, கிரீஸ்-ஊறவைக்கப்பட்ட, இரசாயனத்தால் இயக்கப்படும், சர்க்கரை மற்றும் உப்பு நிரப்பப்பட்ட மற்றும் ஊட்டச்சத்து கேள்விக்குரிய உணவுத் தேர்வுகளுக்கு மாறிவிட்டது. உட்கார்ந்த வாழ்க்கை முறையுடன் இணைந்து, உங்கள் விலைமதிப்பற்ற குழந்தைகள் ஒரு புதிய வாழ்க்கை முறை மற்றும் நீரிழிவு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய் போன்ற உணவு தொடர்பான நோய்களை எதிர்கொள்கிறார்கள், இவை அனைத்தும் கிருமிகளுடன் தொடர்பில்லாதவை.

     

    உங்கள் குழந்தைகள் வளரும் ஆண்டுகளில் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையை நீங்கள் கற்பிக்க வேண்டும், நோய்கள் உருவாகும்போது, அது ஒரே இரவில் தொடங்குவதில்லை. தடுப்பு என்பது உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கும் போது நடவடிக்கை எடுப்பதாகும், அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வரை அல்ல. ஆரோக்கியம் என்பது பணத்தைப் போன்றது, அதை இழக்கும் வரை அதன் மதிப்பைப் பற்றிய உண்மையான எண்ணம் நமக்கு இருக்காது. எளிதில் புரியும் மொழியில், உணவு தொடர்பான நோய்களை எதிர்த்துப் போராடும் பொருட்டு, குழந்தைகளின் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறைகளில் பெற்றோர்கள் இளம் வயதிலேயே மாற்றங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை இந்தப் புத்தகம் எடுத்துரைக்கிறது; நீங்கள் நோயற்ற குழந்தைகளை வளர்க்க விரும்பினால்.

    or 3 X Rs. 463.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    குடும்பத் தலைமை பற்றிய மெய்யறிவு ( Family Wisdom Tamil )

    Rs. 1,890.00
    or 3 X Rs.630.00 with

    ராபின் ஷர்மா

    தமிழில்: முனைவர் கௌரி சிவராமன்

     

    உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய ‘தி மாங்க் ஹூ சோயட ஹிஸ் ஃபெராரி எழுதிய தலைமைப்பண்பு குரு ராபின் ஷர்மா இந்த நூலில் உங்கள் குழந்தைக்குள் மறைந்திருக்கும் இயற்கையான தலைமைப் பண்பினை எப்படி வெளிக் கொண்டுவருவது என்பது பற்றியும் உங்களுக்கும் ஒரு வளமான பலன் தரும் வாழ்வினை அமைத்து கொள்வது பற்றியும் செயலாற்றல் உடைய வழியினை காட்டுகிறார்.

     

    ஆழமான கண்ணோட்டத்துடன் உங்களுக்கு குடும்பத்தலைவருக்கான ஐந்து ஆளுமைகளையும் செயல்முறை படுத்தக்கூடிய பாடங்களையும் கற்றுத்தருகிறார்;

     

    • உங்கள் குழந்தைகளின் திறன்களையும் உயர் ஆற்றல்களையும் திறந்திட

     

    • நீங்கள் தேசிக்கும் மனிதர்களுடன் உங்கள் உறவு முறையை ஆழப்படுத்திட

     

    • உறுதியான குணநலனும் அறிவார்ந்த மனமும் குழந்தைகளுக்கு வளர்த்திட

     

    • வாழ்க்கையை அதிக எளிமை, மகிழ்ச்சி மற்றும் மன நிம்மதியுடன் வாழ்வதற்கும்

     

    • வாழ்க்கையில் எது முக்கியமானதோ அதை திரும்பப்பெற்று, அதன் பலன்களை அனுபவித்திடவும்

    or 3 X Rs. 630.00 with Koko Koko
    Read more