Opening Possibilities, Illuminating Potentials
Delivery in 1-5 business days. Island-wide Free Delivery for Purchase of Rs. 3990 or above.

Cart

Your Cart is Empty

Back To Shop
Contact Us 0764980321

Category: மொழி

Showing all 8 results

  • தமிழ் மொழி வரலாறு

    Rs. 2,390.00
    or 3 X Rs.796.67 with

    தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்

     

    இலக்கணத்திலும் மொழியியலிலும் ஒருங்கே புலமை பெற்ற தமிழ் அறிஞர் தெ. பொ. மீனட்சி சுந்தரனார், சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆய்வாளர்கள் முன் தமிழ் மொழி வரலாறு பற்றி அவர் ஆற்றிய உரைகளே இந்த நூல்; இன்று வரை ஈடும் இணையும் இல்லாத சிறந்த நூல்.  தமிழ் மொழி வரலாற்றில் அக்கறை கொண்டு அறிவு பெற விழையும் எல்லோர் கைகளிலும் இருக்க வேண்டிய நூல் இது.

    or 3 X Rs. 796.67 with Koko Koko
    Add to cart
  • வைரமுத்து கவிதைகள்

    Rs. 4,690.00
    or 3 X Rs.1,563.33 with

    வைரமுத்து

     

    இந்தக் கருப்பு மனிதனுக்குள்ளே இத்தனை நெருப்புப் பிழம்புகளா? இவன் கற்பனை ஊற்றுக்குள்ளே இத்தனை பனிமலைகளா? இவன் இதயப்பைக்குள்தான் எத்தனை கர்ப்பப் பைகள்! இவன் மூளைக்குள்ளேதான் எத்தனை ஆயிரம் விருட்சங்களுக்கான விதைகள்! தம்பீ! தமிழ்க் கவிதைத் தும்பீ! நீ புகழ்மலையின் உச்சிக்கே போய்விட்டாய். உன் அண்ணன் இதோ உன்னைக் கையசைத்து வாழ்க்கிறேன். — முத்தமிழறிஞர் முதல்வர் கலைஞர்

    or 3 X Rs. 1,563.33 with Koko Koko
    Add to cart
  • Out of Stock

    மாணவர்களுக்கான தமிழ்

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    என். சொக்கன்

     

    திருக்குறளில் என்னென்ன எண்கள் இடம்பெற்றிருக்கின்றன? வில்லுப்பாட்டு என்னும் பெயர் எப்படி வந்திருக்கும்? கீழை நாடுகள், மேலை நாடுகள் என்றெல்லாம் ஏன் அழைக்கிறோம்? விளம்பரம் என்னும் சொல்லின் கதை என்ன? வானத்தையும் மீனையும் சேர்த்து விண்மீன் என்று ஏன் அழைக்கிறார்கள்? இந்த இரண்டுக்கும் என்ன தொடர்பு?
     

    திருவாசகம் படித்தால் நாம் அழகாக மாறிவிடுவோமா? வள்ளல் என்று யாரை அழைக்கலாம்? அறநூல்கள் நமக்கு ஏன் தேவைப்படுகின்றன? வரலாற்றையும் கதையையும் ஒன்று கலந்து எழுதலாமா?
     

    சுவையான எடுத்துக்காட்டுகளோடு கதைப்போக்கில் அமைந்திருக்கும் இந்நூல் தமிழ் இலக்கணத்தை இனிக்க, இனிக்க அறிமுகப்படுத்துகிறது.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    திருவள்ளுவர்

    Rs. 2,490.00
    or 3 X Rs.830.00 with

    ஜெயமோகன்

     

    திருவள்ளுவர் யார்? கடலளவு ஆழமும் விரிவும் கொண்ட கேள்வி இது.
     

    இந்து, சைவர், வைணவர், பௌத்தர், சமணர், கிறிஸ்தவர், ஆன்மிகவாதி, வேத விற்பன்னர், வேத மறுப்பாளர், பிராமணர், முற்போக்காளர், பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல அடையாளங்கள் அவருக்கு.
     

    சில ஏடுகளில் வள்ளுவரின் பிறப்பிடம் தேவலோகமாகவும் இன்னும் சிலவற்றில் மயிலாப்பூராகவும் இருக்கிறது. அவர் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்தவர் என்பதையாவது சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவிவிட்டோமா என்றால் அதுவுமில்லை. இருந்தும் பல்கலைக்கழகம், சிலை, கோட்டம், கோயில், விருது, பீடம், மாநாடு அனைத்தும் அமையப் பெற்றவராக வள்ளுவர் திகழ்கிறார். தமிழின் முகமும் தமிழரின் இதயமும் அவரே.
     

    வள்ளுவரையும் குறளையும் குறித்து இதுவரை மேற்கொள்ளப்பட்ட அத்தனை ஆய்வுகளையும், பொருட்படுத்தத்தக்க அத்தனை விவாதங்களையும், அவற்றிலிருந்து உருதிரண்ட அனைத்துக் கருத்துகளையும் மாற்றுக் கருத்துகளையும் இந்நூல் திறன்பட தொகுத்து அளிக்கிறது. பரிமேலழகர், உ.வே.சா, மறைமலையடிகள், அயோத்திதாசர், மு. வரதராசனார், வையாபுரிப் பிள்ளை, கிருபானந்த வாரியார், பெரியார், அண்ணா, கருணாநிதி, ஜி.யு. போப், எல்லீஸ், கால்டுவெல் என்று வள்ளுவர் மீதும் குறள் மீதும் அக்கறை கொண்டிருந்த அனைவரும் இந்நூலில் கவனம் பெறுகிறார்கள்.

    or 3 X Rs. 830.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    தமிழ் நாட்டுப்புறவியல்

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    டி. தருமராஜ்

     

    வாய்மொழி வழக்காறுகள், நாட்டார் இலக்கியம், கைவினைக் கலைகள், நிகழ்கலைகள், கிராமத்துக் கடவுள்கள், பழமரபுகள், வழிபாட்டு முறைகள் என்று நாட்டுப்புறவியலில் நீங்கள் என்னவெல்லாம் எதிர்பார்ப்பீர்களோ அவை அனைத்தும் இதில் உள்ளன. ஆனால், எந்தவொரு இடத்திலும் ‘நான் உங்களுக்கு ஒரு கலைச்சொல்லை விளக்கப்போகிறேன்’, ‘ஒரு முக்கியமான கருத்துருவாக்கத்தை நீங்கள் தெரிந்துகொண்டாகவேண்டும்’ என்கிற தொனியோடு தருமராஜ் நம்மை அணுகுவதில்லை.
     

    ‘நான் ஒருமுறை பாவைக்கூத்தொன்றைக் கண்டபோது என்ன நடந்தது தெரியுமா?’, ‘எனக்குத் தெரிந்த ஒரு கதையைச் சொல்லட்டுமா?’, ‘நான் அனுமானிப்பதை உங்களோடு பகிர்ந்துகொள்ளவா?’ என்று போகிறபோக்கில் உரையாடலைத் தொடங்கி வைக்கிறார். அந்த உரையாடலில் அவர் பார்த்த காட்சிகளை நாம் காண்கிறோம், அவர் படித்ததை நாம் படிக்கிறோம், அவர் வந்தடையும் முடிவுகளை நாம் அசைபோடுகிறோம். எல்லாமே மிக இயல்பாக நிகழ்கின்றன.
     

    ‘அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை’, ‘நான் ஏன் தலித்தும் அல்ல?’ ஆகிய நூல்களைத் தொடர்ந்து வெளிவரும் டி. தருமராஜின் முக்கியமான படைப்பு இது.

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Out of Stock

    அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்

    Rs. 3,690.00
    or 3 X Rs.1,230.00 with

    தரம்பால்
    பி. ஆர். மகாதேவன்

     

    ‘இந்தியர்களுக்கு முறைப்படி கல்வியை அறிமுகப்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்களே; அவர்கள் வருகைக்கு முன்பு இந்தியா இருண்டு கிடந்தது. உயர் சாதியினர் ஒருசிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் கல்லாதவர்களாக இருந்தனர். இவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்த கல்வியை வழங்கி அறிவொளியைப் பரவலாக்கியது பிரிட்டிஷ் ஆட்சியே.’ காலனியாதிக்கவாதிகள் மட்டுமல்ல இந்தியர்களிலேயே பெரும் பகுதியினர் இதை உண்மை என்றே கருதி வருகின்றனர்.
     

    காந்தியவாதியும் தனித்துவமான ஆய்வாளருமான தரம்பாலின் இந்நூல் இந்த மாயையை உடைத்து நொறுக்குவதோடு இந்தியாவின் பெருமிதத்துக்குரிய பாரம்பரியக் கல்வியின் வரலாற்றை ஏராளமான தரவுகளோடும் மறுக்கமுடியாத ஆதாரங்களோடும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது.
     

    18ம் நூற்றாண்டு பாரம்பரியக் கல்வி குறிப்பிட்ட சிலருக்கானதாக இல்லாமல் அனைவரையும் அரவணைத்துக்கொள்ளும் நோக்கில் இருந்தது என்பதோடு இன்றும் நம்மை ஆச்சரியப்படுத்தும் அளவுக்குச் செழுமையானதாக இருந்தது என்று வாதிடுகிறார் தரம்பால். கல்வி என்றால் என்னவென்பதை பிரிட்டனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவில்லை. மாறாக, நம்முடைய கல்வி அமைப்பிலிருந்து பிரிட்டன்தான் நிறைய கற்றுக்கொண்டது என்கிறார் அவர்.

    or 3 X Rs. 1,230.00 with Koko Koko
    Read more
  • Out of Stock

    ரேபிடெக்ஸ் ஆங்கிலம் பேசும் பாடநெறி (RAPIDEX English Speaking Course)

    Rs. 1,690.00
    or 3 X Rs.563.33 with

    ஆர்.கே குப்தா / R.K Gupta

     

    “Rapidex English For Tamil Speakers என்பது சரளமாக ஆங்கிலம் பேச விரும்பும் தமிழ் பேசும் நபர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சொற்கள், இலக்கணம் ஆகியவற்றில் குழப்பம் காரணமாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை இல்லாத தமிழர்களுக்கு இது ஏற்றது.

     

    இந்தப் புத்தகம் தமிழ் பேசும் நபர்கள் தமிழ் மூலம் ஆங்கிலத்தை திறமையாக கற்கவும், சிக்கலான வாக்கியங்கள் மற்றும் உச்சரிப்புகளை எளிதாக நினைவில் வைக்கும் உத்திகள் மூலம் எளிமையாக்கவும் உதவுவதை நோக்கமாகக் கொண்டது. மற்ற மொழி புத்தகங்களிலிருந்து தனித்து நிற்கும் தனித்துவமான அம்சங்களை வழங்குகிறது.”

    or 3 X Rs. 563.33 with Koko Koko
    Read more
  • Sale!
    Out of Stock

    விகடன் 1000 ( Vikatan 1000 )

    Original price was: Rs. 6,590.00.Current price is: Rs. 5,990.00.
    or 3 X Rs.1,996.67 with

    விகடன் பிரசுரம்

     

    வாசகர்களிடையே அமோக வரவேற்பு பெற்று, பல பதிப்புகள் கண்டது விகடன். இதோ, கண் மூடிக் கண் திறப்பதற்குள் மேலும் 18 ஆண்டுகள் ஓடிவிட்டன. தாய்ப் பத்திரிகையான ஆனந்த விகடன் தவிர, ஜூனியர் விகடன், அவள் விகடன், சக்தி விகடன், சுட்டி விகடன், நாணயம் விகடன், பசுமை விகடன், மோட்டார் விகடன், டாக்டர் விகடன், விகடன் தடம் என, பல்வேறு ரசனைகள் கொண்ட வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பிரத்யேக பத்திரிகைகளை வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம்.
     

    ஆனந்த விகடன் உள்ளிட்ட விகடன் குழுமப் பத்திரிகைகள் அனைத்திலிருந்தும் அற்புதமான கட்டுரைகளைத் தொகுத்து வாசகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்ததில், ஆயிரம் பக்கங்கள் கொண்ட மெகா புத்தகமாக கன கம்பீரமாக மலர்ந்துவிட்டது.

    or 3 X Rs. 1,996.67 with Koko Koko
    Read more